The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by leakkha98, 2022-05-10 01:55:11

SEJARAH T6 SJKT (SEMAKAN 2017)

SEJARAH T6 SJKT (SEMAKAN 2017)

KURIKULUM STANDARD SEKOLAH RENDAH (SEMAKAN 2017)

PENULIS / ஆசிரியர் PENGURUS PROJEK / ஒருங்கிணைப்பாளர்

Ahmad Salehee bin Abdul Wan Mohammad Afifi bin Wan Zainudin
Sharifah Afidah binti Syed Hamid Raba’ah binti Jaffar
Ishak bin Saidoo
PEREKA GRAFIK / வடிவமைப்பாளர்
EDITOR / பதிப்பாசிரியர்
Rahimah binti Badulu
Tamil Arasi Sinnasamy Mogan Kumar Raju

PENTERJEMAH / ம�ொழிபெயர்ப்பாளர் ILUSTRATOR / ஓவியர்

Kadiravan Perinan Rosli bin Husin
Pama Periasamy Ali Seteria bin Has

Dewan Bahasa dan Pustaka
Kuala Lumpur
2021

No. Siri: 0043 PENGHARGAAN

KK 959-221-0106041-49-3321-20101 Penerbitan buku teks ini melibatkan kerjasama
banyak pihak. Sekalung penghargaan dan terima
ISBN 978-983-49-3321-0 kasih ditujukan kepada semua pihak yang terlibat:

Cetakan Pertama 2021 Pakar Rujuk Kurikulum Sejarah dan Buku Teks
Sejarah, Kementerian Pendidikan Malaysia
© Kementerian Pendidikan Malaysia 2021 • Prof. Dr. Ishak bin Saat (Pengerusi)
• Prof. Datin Dr. Mahani binti Awang@Musa
Hak Cipta Terpelihara. Mana-mana bahan dalam • Prof. Dr. Sivamurugan Pandian
buku ini tidak dibenarkan diterbitkan semula, • Prof. Dr. Ismail bin Ali
disimpan dalam cara yang boleh dipergunakan • Prof. Madya Dr. Neilson Ilan anak Mersat
lagi, ataupun dipindahkan dalam sebarang • Prof. Madya Dr. Zuliskandar bin Ramli
bentuk atau cara, baik dengan cara bahan • Dr. Ho Hui Ling
elektronik, mekanik, penggambaran semula
mahupun dengan cara perakaman tanpa Jawatankuasa Penyemakan Pruf Muka
kebenaran terlebih dahulu daripada Ketua Surat dan Naskhah Sedia Kamera, Bahagian
Pengarah Pendidikan Malaysia, Kementerian Sumber dan Teknologi Pendidikan,
Pendidikan Malaysia. Perundingan tertakluk pada Kementerian Pendidikan Malaysia.
perkiraan royalti atau honorarium.
Bahagian Sumber dan Teknologi Pendidikan,
Diterbitkan untuk Kementerian Pendidikan Kementerian Pendidikan Malaysia.
Malaysia oleh:
Bahagian Pembangunan Kurikulum,
Dewan Bahasa dan Pustaka, Kementerian Pendidikan Malaysia.
Jalan Dewan Bahasa,
50460 Kuala Lumpur. Jawatankuasa Peningkatan Mutu,
No. Telefon: 03-2147 9000 (8 talian) Dewan Bahasa dan Pustaka.
No. Faksimile: 03-2147 9643
Laman Web: http://www.dbp.gov.my Jawatankuasa Pembaca Luar,
Dewan Bahasa dan Pustaka.
Reka Letak dan Atur Huruf:
Attin Press Sdn. Bhd. Arkib Negara Malaysia
No. 8, Jalan Perindustrian PP4, Kementerian Luar Negeri Malaysia
Taman Perindustrian Putra Permai, Jabatan Kebudayaan dan Kesenian Negara
Bandar Putra Permai,
43300 Seri Kembangan, Selangor. (JKKN)
Jabatan Kemajuan Orang Asli (JAKOA)
Muka Taip Teks: Azim Lembaga Kemajuan Negeri Sabah (LKNS)
Saiz Taip Teks: 13 poin Pejabat Setiausaha Kerajaan Negeri
Bahagian Hal-Ehwal Sabah dan Sarawak
Dicetak oleh:
Tihani Cetak Sdn. Bhd., Jabatan Perdana Menteri (BHESS)
Lot 532, Jalan Perusahaan 3, Semua pihak yang terlibat secara langsung
Bandar Baru Sungai Buloh,
47000 Sungai Buloh, atau tidak langsung dalam usaha
Selangor Darul Ehsan. menjayakan penerbitan buku ini.

ப�ொருளடக்கம்

லகு அ அஅ 2 லகு அ அஅ 20
34 50
1 2

மலேசிய மலேசிய
உருவாக்கம் மாநிலங்கள்

லகு லகு

3 4

தேசியக் க�ோட்பாடு மலேசிய இனங்கள்

லகு லகு 92
124
5 6

சமயமும் நம்பிக்கையும் 76 மலேசிய
மக்களின்
அஅ லகு 106 பண்டிகைகள்அஅ

7 லகு

மலேசியத் தலைவர்கள் 8

மலேசியப்
ப�ொருளாதார வளர்ச்சி

லகு 142 லகு 160

9 10 177

மலேசியாவின் உலக அரங்கில் iii
பெருமைமிகு மலேசியா
விளையாட்டுகள்
துணைநூல்
பட்டியல்

முன்னுரை

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஆறாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல் மலேசியக்
கல்வி அமைச்சின் த�ொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டம்
(KSSR) சீராய்வு 2017க்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது. இப்பாடநூல் பண்புநெறி,
நாட்டுப்பற்று, குடியியல், குடியுரிமை ஆகிய கூறுகளை வலியுறுத்துகின்றது. இவை
மலேசியக் குடிமகன் எனும் வகையில் நாட்டின் மீது பற்றையும் நேசத்தையும்
உருவாக்கும் தூய சிந்தனைமிகு ப�ோட்டியிடும் ஆற்றல் க�ொண்ட மாணவர்களை
உருவாக்குவது ஆகும்.

இப்பாடநூலின் உள்ளடக்கமானது பல்வகைக் கற்றல் கற்பித்தல்
அணுகுமுறைகளை வலியுறுத்துவத�ோடு, கண்டறிதல் அடிப்படையிலான கற்றல்,
எதிர்காலவியல், சூழமைவு, விடய ஆய்வு, தகவல் த�ொடர்புத் த�ொழில் நுட்பத் திறன்
மற்றும் 21ஆம் நூற்றாண்டுக் கல்வித் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

வரலாறு கற்றலை மேலும் மகிழ்வுறச் செய்ய மாணவர்கள் ஆய்வு, ஆக்கம், புத்தாக்கம்
நிறைந்த வரலாற்றுச் சிந்தனையை உருவாக்கிட உயர்நிலைச் சிந்தனைத் திறனும்
(KBAT) மனமகிழ் கூறுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே மாணவர்கள்
தகவல் திரட்டும் வகையில் சுயமாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் உண்டு.
இந்த ஆய்வுகளின்வழி மாணவர்கள் ஆழமான பட்டறிவையும் திறன்களையும் பெற
இயலும். மாணவர்கள் வரலாற்றை உய்த்துணர்வதன் மூலம் திடமான தன்னெறிமிகு
வெளிப்படையான சிந்தனைமிக்கவர்களாக உருவாகிட இயலும்.

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டுக்கான இப்பாடநூல் ஐந்தாம்
ஆண்டுப் பாடநூலின் த�ொடர்ச்சி ஆகும். ஆறாம் ஆண்டுக்கான வரலாறு நாட்டின்
சுபிட்சம் என்னும் கருப்பொருளில் பின்வருமாறு மூன்று முக்கியத் தலைப்புகளில்
வழங்குகிறது.

தலைப்பு 10: மலேசிய நாடு

இந்த அலகு மலேசிய உருவாக்கம் த�ொடர்பான நிகழ்வுகளையும் ஈடுபட்ட தலைவர்கள்
பற்றியும் விவாதிக்கின்றது. இத்தலைப்பு நாட்டின் மாநிலப் பெயர்களின் த�ோற்றம்
த�ொடர்பான பூர்வீகத்தை விவரிக்கின்றது. இத்தகவல்களின்வழி மாணவர்களிடத்தில்
நாட்டின்மீது பெருமையையும் ப�ோற்றும் உணர்வையும் ஏற்படுத்துவது
ந�ோக்கமாகும். அதேவேளையில் தன்னெறி, ஒற்றுமை, ப�ொறுப்புணர்வுமிக்க
மாணவர்களை உருவாக்குதல் ஆகியவற்றை எதிர்பார்ப்பாகக் க�ொண்டுள்ள தேசிய
க�ோட்பாட்டையும் ந�ோக்கங்களையும் உய்த்துணரச் செய்வதாகும்.

தலைப்பு 11: நாம் மலேசிய மக்கள்

இத்தலைப்பு நாட்டின் பல்வேறு இன சமூகத்தினரைப் பற்றி விவரிக்கின்றது.
அத்தோடு, மலேசியச் சமூகத்தினர் கடைப்பிடிக்கும் பல்வேறு பண்பாடு, கலைகளை
வெளிப்படுத்துகின்றது. பல்வகை பண்பாடு விவரிப்பின்வழி சகிப்புத்தன்மை, வேற்று

iv

இனத்தவர் பண்பாடு, கலாச்சாரம், கலையை மதித்தல் ஆகியன மாணவர்களிடத்தும்
நாட்டிலும் ஒற்றுமையை உருவாக்க முடியும்.

தலைப்பு 12: நாட்டின் அடைவுநிலையும் பெருமையும்

இத்தலைப்பு நாட்டின் அடைவையும் பெருமையையும் ப�ொருளாதார மேம்பாடு,
விளையாட்டில் அடைவு, நாட்டின் தலைவர்கள், அனைத்துலக அமைப்புகளில்
மலேசியாவின் ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு துறைகளைத்
தெளிவுபடுத்துகின்றது. தலைவர்களின் பங்கேற்பு, மக்களின் ஒத்துழைப்பு ஆகியன
இதனை வெற்றிபெறச் செய்வதானது, மாணவர்கள் நாட்டின் தலைவர்கள் மீதும்
நாட்டின் தலைவர்களின் சேவையைப் ப�ோற்றவும் தூண்டவும் பல்லின மக்களிடையே
மதித்தல் உணர்வை விதைக்கவும் இயலும். அனைத்துலக நிலைகளில் நாட்டின்
ஈடுபாட்டையும் நலன்களையும் மாணவர்கள் அறிய உதவுகிறது. இத்தலைப்பை
விளங்கி, உய்த்துணர்வதன்வழி பள்ளிப் பருவத்திலே மாணவர்களிடையே
நாட்டுணர்வையும் திடமான குடியுரிமையையும் ஏற்படுத்த இயலும். ஆசிரியர்களும்
மாணவர்களும் இந்நூலை எளிய வகையில் கையாள, சில அடையாளங்கள்
பயன்படுத்தப்படுள்ளன.

சாரம் அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்

ஒவ்வோர் அலகின் கற்றல் மாணவர்கள் வரலாற்றுச் சிந்தனைத்
த�ொடர்பான ப�ொதுவான திறன் அடிப்படையில் வரலாற்று
கண்ணோட்டம். AKPS நிகழ்வுகளைச் சுயமாக அடிப்படை
வரலாற்றுக் கூறுகள், காலக்

கருத்துரு, காலநிரலும் மாறுதல்களும்,

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? தெளிவான சான்று, கற்பனை,
சிக்கல் மற்றும் முந்தைய சிக்கல்கள்,

நேரடியாகவும் மறைமுகமாகவும் முந்தைய கால ஒப்பீடு மூலம் அறிதல்

விளக்கம், கேள்விகள், ஆகியவற்றின் மூலம் ஆய்வுசெய்ய

நடவடிக்கைகள்வழி இக்கூறு வகைசெய்யப்பட்டுள்ளது.

வெளிப்படுகின்றது. KBAT

குடியியல் நெறி வரலாற்று நிகழ்வுகள் த�ொடர்பான
சிந்தனையைத் தூண்ட மாணவர்களிடையே
மாணவர்களுக்கு ஊட்டப்படுகிற உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகள்
முகாமையான நற்பண்புகள். கேட்கப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா ச�ொற்களஞ்சியம்

ஒன்றை விரிவாகவும் ஆழமாகவும் மாணவர்கள் புரிந்து
தெரிந்துக�ொள்ள க�ொடுக்கப்பட்டுள்ள க�ொள்வதற்கான கடினமான
கூடுதல் விவரங்கள். ச�ொற்களின் ப�ொருள்
விளக்கப்படுகிறது.

v

அருங்காட்சியகக் கற்றல் நடவடிக்கை
வாயிலாக நாட்டின் வரலாற்று
களஞ்சியங்கள் மீது ஆர்வத்தையும் சுயக்கற்றலும் வகுப்பறைக்கு
நேசத்தையும் ஏற்படுத்துதல். வெளிக்கற்றலுக்குமான
நடவடிக்கைகளைக்
விரைந்து பதிலளி க�ொண்டுள்ளன. ஐ-திங், விடய
ஆய்வு, எதிர்காலவியல், 21ஆம்
வரலாற்று நிகழ்வுகளின் புரிதல் அடிப்படையில் நூற்றாண்டுக் கற்றல், தகவல்
மாணவர்கள் பதிலளிக்கக்கூடிய கேள்விகளைக் த�ொடர்புத் த�ொழில் நுட்பம்
க�ொண்டிருத்தல், சுருக்கமாகவும் மிதமாகவும் ஆகும்.
கேள்விகளைத் த�ொடுத்தல்.

12.4.3 கற்றல் தரமும் ஆசிரியர் குறிப்பு
K12.4.7 குடியியல் கூறும்
ஒவ்வோர் அலகின் கற்றல்
ஒருசில தலைப்புகளில் மாணவர்களின் கற்பித்தலையும் மிகச் சிறப்பாக
கற்றலையும் அடைவு நிலையையும் குறிக்கும் நடத்துவதற்குத் துணை புரிகிறது.
தரக்குறியீடு ஆகும். இது நேரிடையாகவ�ோ
மறைமுகமாகவ�ோ, உரைநடை, கேள்வி என்னை இதன்வழி மேலும்
அல்லது பல்வகைகள்வழி வெளிப்படுகிறது. வருடுக தகவல்களைக் காண�ொலி
அல்லது ஏனைய
ஆவணங்களில் பெற முடியும்.

சிந்தித்துப் பதிலளி மீட்டுணர்வோம்

கற்றல் அலகுகள் மாணவர்கள் தாங்கள் கற்ற
உள்ளடக்கத்தைய�ொட்டிய, புரிதலை தலைப்புகளை மீட்டுணர
மதிப்பீடு செய்ய பல்வேறு வகையான உதவும் வகையில் ஒவ்வோர்
பயிற்சிகள் தயாரித்தல். அலகின் இறுதியிலும்
க�ொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை நேசிப்போம்

நெறி, நாட்டுப்பற்று, உறுதிப்பாடு ஆகிய திறன்பேசியில் ப�ொருத்தமான
மூன்று கூறுகள் வலியுறுத்தப்படுகின்றன. செயலியைக் க�ொண்டு AR
அலகில் கற்றதை மீண்டும் மதிப்பிட்டு ந�ோக்குக் குறியீட்டின்வழி
தன்மீதும் சமுதாயத்தின் மீதும் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள
நாட்டின் மீதுமான நடவடிக்கைகளைத் விவரத்தைப் பெறுதல்.
த�ொடர்புபடுத்துவர். தனித்த தேசிய
அடையாளத்தைக் க�ொண்ட மலேசியன் அல்லது
என்று மாணவர்கள் பெருமிதம் க�ொள்வர்.
Google Play Store App Store

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஆறாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல்
மாணவர்களின் வரலாற்று அறிவு மேம்பட, மகிழ்வூட்டும் வகையில் கற்றல்
கற்பித்தல் மேற்கொள்ளத் துணை புரியும். மாணவர்கள் அறிவாற்றல், திறன்
ஆகியவற்றைப் பெறுவத�ோடு பண்புநெறிகளை அமல்படுத்தும் தன்னெறிமிக்க
மலேசியக் குடிமகன் எனும் வகையில் நாட்டின் மீது பாசத்தையும் நேசத்தையும்
உருவாக்க உதவும்.

vi

1

தலைப்பு 10: மலேசிய நாடு

1அலகு மலேசிய உருவாக்கம்

மாட்சிமை தாங்கிய மாமன்னர் மெர்டேக்கா அரங்கில் சுதந்திரப் பிரகடனத்தை
வாசிக்க, துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் பார்வையிடுகிறார்.

மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்

சாரம்

மலேசிய உருவாக்கம் என்பது கூட்டரசு மலாயா, சரவாக், சபா, சிங்கப்பூர்
ஆகியவற்றின் இணைப்பில் உள்ளடக்கிய கூட்டரசு முறையாகும். இந்த
அலகு உள்ளூர்த் தலைவர்கள், பிரிட்டிஷார் ஆகிய�ோரின் மலேசிய
உருவாக்கத்தின் சிந்தனையையும் காரணங்களையும் விளக்குகின்றது.
மேலும், மலேசிய உருவாக்கத்தின் படிமுறைகள், தலைவர்கள் த�ொடர்புடைய
மாநிலங்கள், எதிர்நோக்கிய சவால்கள் ஆகியவற்றையும் விவரிக்கின்றது.

ல�ோர்ட் கேமரன் க�ோப�ோல்ட் (Lord Cameron துங்கு அப்துல் ரஹ்மான் மலேசியா
Cobbold - இடம்) இரண்டு பிரிட்டிஷ் த�ொடர்பான பேச்சு வார்த்தை முடிந்து
ஆணையக் குழு உறுப்பினர்களுடன். லண்டனிலிருந்து திரும்பியப�ோது.

2

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?

1 மலேசிய உருவாக்கச் சிந்தனையும் காரணங்களும்.
2 மலேசிய உருவாக்கத்தை ந�ோக்கிய படிமுறைகள்.
3 மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களும்

மாநிலங்களும்.
4 மலேசிய உருவாக்கத்தை ந�ோக்கிய சவால்கள்.

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்

1 மலேசிய உருவாக்கக் காரணங்களையும்
AKPS விளைவுகளையும் ஆராய்தல்.

2 மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட
தலைவர்களுடைய சான்றுகளின் நம்பகத்
தன்மையை ஆராய்தல்.

3 மலேசிய உருவாக்கத்தில் சந்தித்த
சவால்களைக் கற்பனை செய்து பார்த்தல்.

குடியியல் நெறி

• அன்புடைமை
• மதித்தல்

ஐக்கிய நாடுகள் சபை (சபா குழு). துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
சுதந்திரப் பிரகடனத்தின்போது ஏழு முறை
‘மெர்டேக்கா’ என முழங்குதல்.

மூலம்: Ghazali Shafie, 2015. Memoir Ghazali Shafie: Penubuhan
Malaysia. Bangi: Penerbit Universiti Kebangsaan Malaysia.

3

மலேசிய உருவாக்கச் சிந்தனையும் காரணங்களும்

மலேசிய உருவாக்கத் த�ொடக்கச் சிந்தனையைப் பரிந்துரைத்தவர்கள் உள்ளூர்த்
தலைவர்களும் பிரிட்டிஷாரும் ஆவர். இச்சிந்தனை கூட்டரசு மலாயா, சரவாக்,
சபா, சிங்கப்பூர், புருணை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு ஆகும்.

மலேசிய உருவாக்கச் சிந்தனை

1 மலேசிய உருவாக்கச் சிந்தனை
உள்ளூர்த் தலைவர்களையும்
பிரிட்டிஷாரையும் உள்ளடக்கியது
என்பது உங்களுக்குத்
தெரியுமா? பல்வேறு மூலங்களின்
அடிப்படையில், மலேசிய
உருவாக்கத் த�ொடக்கச்
சிந்தனையைப் பற்றி ஒவ்வொரு
மாணவரும் குறிப்பிடும்படி கேட்டுக்
க�ொள்கிறேன்.

6 நீங்கள் அனைவரும் மிகச் சரியான
பதில் அளித்ததற்காக நான் பெருமிதம்
க�ொள்கிறேன். மலேசிய உருவாக்கத்
த�ொடக்கச் சிந்தனையை வழங்கிய
தலைவர்களின் திறமையை நாம்
உள்ளபடியே ப�ோற்ற வேண்டும்.

5 ஐயா, 1955ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின்
முதலமைச்சர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா
அல்ஹாஜ் இந்த இணைப்புக்கான சிந்தனையை
முன்வைத்தார். அவர் சிங்கப்பூர், சரவாக், சபா,
புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில்
இணையப் பரிந்துரைத்தார்.
4

2 ஐயா, 1887ஆம் ஆண்டு வட ப�ோர்னிய�ோ
பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர் ல�ோர்ட்
பிராஸ்சே மலேசிய உருவாக்கத் த�ொடக்கச்
சிந்தனையைப் பரிந்துரைத்தார். அவர் சரவாக்,
சபா, மலாய் மாநிலங்கள், த�ொடுவாய்க்
குடியேற்ற மாநிலங்கள் ஆகியவற்றை
ஒருங்கிணைக்கப் பரிந்துரை செய்தார்.

3 1938ஆம் ஆண்டு உள்ளூர்த்
தலைவர்களான இப்ராஹிம் ஹஜி
யாக்கோப், ஹருண் அமினுராஷிட்
ஆகிய�ோர் 'மெலாயு ராயா' எனும்
கருத்துருவில் இந்த இணைப்புச்
சிந்தனைக்குப் ப�ோராடினர்.

உங்களுக்குத் தெரியுமா

'மெலாயு ராயா' (Melayu Raya)
மலாயா, சிங்கப்பூர்,
கலிமந்தான் முழுவதும்,
பிலிப்பைன்ஸ் தீவுகள்,
இந்தோனேசியா தீவுகள்
ஆகியவற்றின் இணைப்பின்
கருத்துருவாகும்.

4 ஐயா, 1951ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டிஷ்
தலைமை ஆளுநர் ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட்
இந்தச் சிந்தனையைக் க�ொண்டிருந்தார். இவ்விணைப்புத்
த�ொடர்பாக அவர் கூட்டரசு மலாயா, சரவாக், சபா,
சிங்கப்பூர் தலைவர்களிடையே பல கலந்துரையாடல்களை
மேற்கொண்டார்.

10.1.1 ஆசிரியர் குறிப்பு 5

மலேசிய உருவாக்கச் சிந்தனைகளைக் கூறச் செய்து காலநிரலுக்கு ஏற்ப
வரிசைப்படுத்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மலேசிய உருவாக்கக் காரணங்கள்

மலேசிய உருவாக்கத்திற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாட்டின்
பாதுகாப்பை உறுதி செய்தல், இனங்களுக்கிடையே சமன்நிலைப்படுத்துதல்,
சுதந்திரத்தை விரைவுபடுத்துதல், சமூகப் ப�ொருளாதாரத்தை மேம்படுத்துதல்
ஆகியன அவற்றுள் அடங்கும்.

நாட்டின் பாதுகாப்பை இனங்களுக்கிடையே
உறுதி செய்தல் சமன்நிலைப்படுத்துதல்

• சிங்கப்பூர் எதிர்நோக்கிய • கூட்டரசு மலாயாவுடன்
கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தல், சிங்கப்பூரை மட்டுமே
கூட்டரசு மலாயாவின் இணைப்பது
பாதுகாப்பை நிலைகுலையச் இனங்களுக்கிடையே
செய்யும். சமன்நிலையற்ற நிலையை
• சிங்கப்பூரைத் தவிர்த்து உருவாக்கும்.
சரவாக்கும் கம்யூனிஸ்ட்டு
அச்சுறுத்தலை எதிர்நோக்கியது.

• கம்யூனிஸ்ட்டு அச்சுறுத்தலை • கூட்டரசு மலாயாவுடன்
மலேசிய உருவாக்கத்தின் சரவாக், சபா,
வாயிலாகத் தடுக்க இயலும். புருணை ஆகியவற்றை
கூட்டரசு மலாயா கம்யூனிஸ்ட்டு இணைப்பதன் வாயிலாக
அச்சுறுத்தலை எதிர்நோக்கிய இனங்களுக்கிடையிலான
அனுபவத்தைக் க�ொண்டுள்ளது. மக்கள் எண்ணிக்கையைச்
சமன்நிலைப்படுத்த இயலும்.

மூலம்: Mohd bin Samsudin, 2016. Persekutuan Malaysia 1961-1966: Penubuhan
dan Cabaran. Bangi: Universiti Kebangsaan Malaysia.

21ஆம் நூற்றாண்டுக் தங்கமீன் பாத்திரம் (Goldfish Bowl)
கற்றல் திறன்

1. மலேசிய உருவாக்கக் காரணங்களுக்கேற்ப நான்கு குழுக்களை அமைத்தல்.
2. ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பு, காரணம்,

நன்மை த�ொடர்பான கூடுதல் தகவல்களைத் திரட்டுதல்.
3. தலைவர்களின் சேவையையும் திறமையையும் மதிப்பதன் அவசியத்தைக்

கலந்துரையாடுதல். தத்தம் தரவுகளைப் படைத்தல்.

6 K10.1.6

சுதந்திரத்தை சமூகப் ப�ொருளாதாரத்தை
விரைவுபடுத்துதல் மேம்படுத்துதல்

• மலேசிய உருவாக்கம் • மலேசிய உருவாக்கம்
சரவாக், சபா, அடிப்படை வசதி,
சிங்கப்பூர், புருணை சமூகம், ப�ொருளாதாரம்
ஆகியவற்றின் ஆகியவற்றின் மேம்பாட்டை
சுதந்திரத்தை விரைவுபடுத்தும்.
விரைவுபடுத்தவல்லது.

• இதற்கு அனைத்துத் • இந்த இணைப்பு நம் நாட்டு
தரப்பினரின் ஒருமைப்பாடும் மக்களின் வாழ்க்கைத்
ஆதரவும் தேவை. தரத்தை உயர்த்தும்.

மலேசிய உருவாக்கச் சிந்தனையை மிக நீண்ட காலமாகவே உள்ளூர்த்
தலைவர்களும் பிரிட்டிஷாரும் முன்வைத்துள்ளனர். அக்காலச் சூழலும் சவாலும்
இச்சிந்தனை த�ோன்றியதற்கான காரணங்களாகும். எனவே, இச்சிந்தனையைத்
தூண்டிய தலைவர்களின் விவேகத்தையும் சேவையையும் நாம் ப�ோற்றவேண்டும்.

10.1.1 ஆசிரியர் குறிப்பு 7

மலேசிய உருவாக்கக் காரணங்களைப் பல்வேறு கூறுகளின்வழி
விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மலேசிய உருவாக்கத்தை ந�ோக்கிய படிமுறைகள்

மலேசிய உருவாக்கத்தை வெற்றி பெறச் செய்ய தலைவர்கள் பல்வேறு
படிமுறைகளை மேற்கொண்டனர். இதில் உள்ளடங்கிய மாநிலங்களுக்கு வருகை
மேற்கொள்ளுதல், செத்தியா காவான் மலேசியச் செயற்குழுவை (Jawatankuasa
Setia Kawan Malaysia - JSKM) அமைத்தல், க�ோப�ோல்ட் ஆணையம் அமைத்தல்,
கருத்து வாக்கெடுப்பு மேற்கொள்ளுதல், அரசுகளுக்கு இடையிலான செயற்குழு
(Jawatankuasa Antara Kerajaan - JAK) அமைத்தல் ஆகியனவும் அடங்கும்.

1 துங்கு அப்துல் ரஹ்மான் 3 சரவாக், சபா 5 க�ோப�ோல்ட் ஆணையம் அந்த
தலைவர்களுக்கு எண்ணத்தைப் பிரதிபலிக்கும்
மலேசிய உருவாக்கப் நம்பிக்கையூட்டும் அறிக்கையைப் பிரிட்டிஷாரிடமும்
பரிந்துரையைச் சிங்கப்பூர் ந�ோக்கில் செத்தியா கூட்டரசு மலாயாவிடமும்
அடல்பி விடுதியில் காவான் மலேசியச் வழங்கியது. இவ்வறிக்கையின்வழி
அறிவித்தார். செயற்குழு (JSKM) சரவாக், சபா மக்களுள் மூன்றில்
அமைக்கப்பட்டது. இரண்டு பகுதியினர் மலேசிய
உருவாக்கத்தை ஆதரிக்கின்றனர்
என அறியப்பட்டது.

27 மே ஜூலை 23 ஜூலை 17 ஜனவரி 21 ஜூன்

1961 1961 1961 1962 1962

2 துங்கு அப்துல் ரஹ்மான் மலேசிய 4 சரவாக், சபா மக்களின்
உருவாக்கம் த�ொடர்பாக
உள்ளூர்த் தலைவர்களுக்கு எண்ணத்தை அறிய
விளக்கம் அளிக்க சரவாக்கிற்கு க�ோப�ோல்ட் ஆணையம்
வருகை மேற்கொண்டார். அமைக்கப்பட்டது.

மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்

விரைந்து பதிலளி

க�ோப�ோல்ட் ஆணையம்
அமைக்கப்பட்டதன்
ந�ோக்கம் என்ன?

என்னை க�ோப�ோல்ட் ஆணைய உறுப்பினர்கள் இடமிருந்து
வருடுக துன் முகமட் கசாலி ஷாபியி, டான் வ�ோங்
பாவ் நீ, ல�ோர்ட் க�ோப�ோல்ட், சர் டேவிட்
மலேசிய உருவாக்க இயங்கலைக் கண்காட்சி வாதெர்ஸ்தோன், சர் அந்தோணி அபெல்
8 மூலம்: Memorial Negarawan, மலேசியப் பழஞ்சுவடிக்

காப்பகம்

9 ஜூலை 1963இல் லண்டனில் நடந்த மலேசிய

உடன்படிக்கை கைய�ொப்பமிடும் நிகழ்ச்சி.

மூலம்: Memorial Negarawan, மலேசியப் பழஞ்சுவடிக்

காப்பகம் க�ோலாலம்பூரில் நடைபெற்ற செத்தியா

அரசுகளுக்கு இடையிலான காவான் மலேசியா செயற்குழு
செயற்குழு தயார் நிலைக்
6 கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் கூட்டம்.

பிரிட்டிஷ், கூட்டரசு மலாயா, மூலம்: Memorial Negarawan, மலேசியப்
பழஞ்சுவடிக் காப்பகம்

சரவாக், சபா நிகராளிகள் 8 10 க�ோலாலம்பூர், கூச்சிங்,
அரசுகளுக்கு இடையிலான சரவாக், க�ோத்தா கினபாலு,
செயற்குழுவில் அங்கத்துவம் மலேசிய உடன்படிக்கை சபா, சிங்கப்பூரிலுள்ள நகர
பெற்றிருந்தனர். இச்செயற்குழு லண்டன், மால்புர�ோ மண்டபம் ஆகியவற்றில்
சரவாக், சபா நலன்களைக் இல்லத்தில் மலேசியப் பிரகடனம்
காக்கும் சட்டத்தை (Malborough House) பிரகடனப்படுத்தப்பட்டது.
வடிவமைக்கும் ந�ோக்கில் கையெழுத்திடப்பட்டது.
அமைக்கப்பட்டது.

30 ஆகஸ்ட்டு 1 செப்டம்பர் 9 ஜூலை 12 ஆகஸ்ட்டு 16 செப்டம்பர்
1963
1962 1962 1963 1963

7 கூட்டரசு மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் 9 சரவாக், சபா மக்களின்
இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒப்புதலை உறுதிப்படுத்தும்
இதன்வழி வாக்கெடுப்பு (Referendum) வகையில் மலேசியப்
பணிக்குழுவைத் (UNMM)
சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. இந்தக் த�ோற்றுவித்தது.
கருத்து வாக்கெடுப்பு மூலம் சிங்கப்பூர்
மக்கள் மலேசிய உருவாக்கத்திற்கு ஒப்புக்
க�ொண்டனர் என அறியப்பட்டது.

மலேசிய உருவாக்கம் நமக்குப் பல
படிப்பினையைக் க�ொடுத்தது. எல்லாத்
தரப்பினரின் முழு முயற்சி, ஒருமைப்பாடு,
அக்கறை ஆகியன நாட்டிற்கு வளப்பத்தையும்
சுபிட்சத்தையும் ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீட்டுப் பேராளர்கள்.

ஆசிரியர் குறிப்பு மூலம்: Memorial Negarawan, மலேசியப் பழஞ்சுவடிக்
காப்பகம்

10.1.2 மலேசிய உருவாக்கப் படிமுறைகளைக் காலநிரலுக்கேற்ப விளங்கிக்கொள்ள 9
K10.1.5 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களும்
மாநிலங்களும்

தலைவர்களுக்கிடையிலான ஒருமைப்பாடு மலேசிய உருவாக்கத்தின் வெற்றிச்
சுடராக அமைந்தது. எல்லாத் தரப்பினரின் முனைப்பும் ஒத்துழைப்பும் மலேசிய
உருவாக்கத்தின் வெற்றிக்கு இட்டுச் சென்றது.

மலேசிய உருவாக்கத் திலகங்கள்

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா துன் அப்துல் ரசாக் உசேன் துன் தெமெங்கோங் ஜூகா
அல்ஹாஜ் (Tun Abdul Razak Hussein) அனாக் பரியெங்

(Tunku Abdul Rahman • தேசிய மலாய்க்காரர் (Tun Temenggung Jugah
Putra Al-Haj) கூட்டமைப்பின் (UMNO) anak Barieng)
தலைவர்.
• தேசிய மலாய்க்காரர் • பெசாகா அனாக் சரவாக்
கூட்டமைப்பின் (UMNO) • கூட்டரசு மலாயாவின் கட்சியின் (PESAKA)
தலைவர். துணைப்பிரதமர். தலைவர்.

• கூட்டரசு மலாயாவின் • அரசுகளுக்கு • ‘செத்தியா காவான்
பிரதமர். இடையிலான மலேசியா' செயற்குழுவில்
செயற்குழுவில் (JAK) (JSKM) உறுப்பியம் வகித்தவர்.
• லண்டனில் நடைபெற்ற பங்காற்றியவர்.
மலேசிய உடன்படிக்கையில் • 1963ஆம் ஆண்டு
கூட்டரசு மலாயாவின் லண்டனில் நடைபெற்ற
பிரதிநிதிகளுக்குத் மலேசிய உடன்படிக்கையில்
தலைமையேற்றவர். கையெழுத்திட்டவர்களுள்
ஒருவர்.

21ஆம் நூற்றாண்டுக் வல்லுநர் இருக்கை (Hot Seat)
கற்றல் திறன்

1. மேற்காணும் குறிப்புகளை வாசித்த பின்னர் மேற்கொள்ளும் த�ொடர்
நடவடிக்கைகள்.
2. ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யப்பட்டுள்ள இருக்கையில்
அமரச் செய்தல். மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட திலகங்களில் ஒருவராகப்
பாகமேற்கப் பணித்தல்.
3. அத்திலகம் பிற மாணவர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தல்.
4. மலேசிய உருவாக்கத்தில் காணப்படும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும்
அம்மாணவரைக் கூறச் ச�ொல்லுதல்.
5. வல்லுநர் இருக்கை விளையாட்டை வேறு ஒரு மாணவரைத்
திலகமாகக் க�ொண்டு த�ொடரச் செய்தல்.
10 K10.1.5

துன் டத்து முஸ்தாப்பா லீ குவான் யூ டான் டத்தோ அமார்
டத்து ஹருண் (Lee Kuan Yew) ஸ்டீபன் கால�ோங் நிங்கான்
(Tan Sri Datuk Amar Stephen
(Tun Datu Mustapha • மக்கள் செயல் கட்சியின்
Datu Harun) (PAP) தலைவர். Kalong Ningkan)

• சபா தேசியக் • சிங்கப்பூரில் • சரவாக் தேசியக்
கூட்டமைப்பின் (USNO) கம்யூனிஸ்ட்டு கட்சியின் (SNAP)
தலைவர். சித்தாந்தத்தை தலைவர்.
முடக்குவதற்காக
• சபா மக்களுக்கு மலேசிய மலேசிய உருவாக்கச் • சரவாக் கூட்டணி
உருவாக்கம் த�ொடர்பாக சிந்தனைக்கு ஆதரவு உருவாக்கத்தில் முக்கியப்
விளக்கம் அளித்தவர். அளித்தவர். பங்காற்றியத�ோடு
மலேசிய உருவாக்க
முயற்சியை ஆதரித்தவர்.

11

ட�ோனால்ட் ஸ்டீபன்ஸ் டத்து பண்டார் அபாங் ஹஜி துன் முகமட் கசாலி ஷாபியி
(துன் முகமட் புவாட் முஸ்தாப்பா (Tun Muhammad Ghazali
Shafie)
ஸ்டீபன்ஸ்) (Datu Bandar Abang Haji
Donald Stephens (Tun Mustapha) • தேசிய மலாய்க்காரர்
Muhammad Fuad Stephens) கூட்டமைப்பின் (UMNO)
• பார்ட்டி நெகாரா சரவாக் தலைவர்.
• தேசியக் கடசான் (PANAS) தலைவர்.
கூட்டமைப்பின் (UNKO) • க�ோப�ோல்ட்
தலைவர். • மலேசிய உருவாக்கத்தை ஆணையத்தில்
ஆதரித்தவர். உறுப்பியம் வகித்தவர்.
• மலேசிய உருவாக்கத்தை
வெற்றி பெறச் செய்ய • 1963ஆம் ஆண்டு • வெளியுறவு அமைச்சின்
'செத்தியா காவான் லண்டனில் மலேசிய நிரந்தரத் தலைமைச்
மலேசியா' செயற்குழுவை உடன்படிக்கையில் செயலாளராகப் பதவி
(JSKM) அமைக்க கையெழுத்திட்டவர்களுள் வகித்தப�ோது மலேசிய
முன்மொழிந்தவர். ஒருவர். உருவாக்கத்தில் முக்கியப்
பங்காற்றியவர்.

12

டான் வ�ோங் துன் வீ.தி. சம்பந்தன்
பாவ் நீ (Tun V. T. Sambanthan)

(Tan Sri Wong Pow Nee) • மலேசிய இந்தியர்
காங்கிரசின் (MIC)
• மலேசிய சீனர் தலைவர்.
சங்கத்தின் (MCA)
தலைவர். • கூட்டரசு மலாயா
அமைச்சரவைக்
• க�ோப�ோல்ட் குழுவ�ோடு சேர்ந்து
ஆணையத்தின் கூட்டரசு க�ோப�ோல்ட் ஆணையத்
மலாயா நிகராளி. திட்ட அறிக்கையைக்
கருத்தூன்றி ஆய்ந்தவர்.
• மலேசிய உருவாக்கம்
த�ொடர்பாகச் சரவாக்,
சபா மக்களை
நேர்காணல் செய்து
க�ோரிக்கை மனுவை
ஆய்ந்தவர்.

நடவடிக்கை விடய ஆய்வு 'ஒற்றுமையே பலம்'. இது
ப�ோன்ற பழம�ொழிகளை
(Kajian Kes) மலேசிய உருவாக்கத்
தலைவர்களின் முயற்சிய�ோடு
மலேசிய உருவாக்கத்தில் த�ொடர்புபடுத்துக.
நற்சேவை ஆற்றிய திலகங்கள்
பற்றிய விடய ஆய்வு தயாரித்திடுக.

10.1.3 ஆசிரியர் குறிப்பு 13

மலேசிய உருவாக்கத் திலகங்களைப் பற்றி ஆழமாகத் தெரிந்துக�ொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

ஆவண ஆய்வு

கீழ்க்காண்பன மலேசியப் பிரகடன ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தை
ஆய்வு செய்து கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.

Pemasyhuran Malaysia

M mYSb NKPNdTh NbDaaaaeeaiaeaeeaepDDBnnrrhlrggglnbmaaseaaaaigaaieegewinrbnyhnhpnsMMrArtatsuauaiiauegbMblnaiuMljlwkStnan,uaaaauhheiynd,eNannhhyjhabaluaaalaNgsaeaaaamJiMTimnayagweknwuuhkbnumupaNeggelahaaaaay,luredeiawsdasaihiaUAarrgaanaadTatkaailnBaenuelnanwaSodisahmrylrdtynaehileeebagauaeeSatlunrdmaniaanhnYiunnlohghannaoKgbdeglesgaseiglknaiaandeeannaedewhognjgahrpgdQaknarriankiab,auMdaduPrukseinurloNkpk,eipeeaeiaraalukmeaNrareeakhssaanharnadngehea,esennssaalmegaBekdiuanuaMdareuolkapapdbnaiinduurtsrtnietaiumPiehnayulertkankKuaaeDlaelakeaalunaerhnkaoduupnlhambu-dnhtlaegrpUlikTuuaaaadnYriat,ikkhttmrahjtghaiauagenuamNasam,inrutnaasnheniaekMNaggkjaheligs,easaMNaetdatMneaSneyMwngd-aheadarmatrahealtiageailaagrahmauyrraaletPmkaiaaiMyraspwdrekldJysapaibMnaeoaraapdiuhulShuagdnhniunkeisalaagaoduyldm,ridbsbhdajasriahmaaNn,uaaaaaisnnplBnNaaantehekilteghiaaje-mtgaign,mesaguSamgrajgeamNbiaanNenninnprehuredkyaieiegby,idreaaagiagnniiPaaasartjbtneaSu:tegluepgneaaQrej:ral“gpuiagimaritMmuannaarjhSSuutabeAdydleaaabanP,eauarPLanbrijemslanAugni.paatnerwYanagunassthbaiSkgeeaa,ijk,auniIl-kmaadnNNNukAtgpuna,keeett”bubtee.ddggDuglijkaallliaaaeaaeaeauiggthrnrrnhnnanliiiiii
cymMb aaaaeDrngahnagiagbnmgmeMbareeuaplnamlhaijakaarpklgwRiuamaananjeysaknkaa-e:eRnisaaRyemjaalaajaaomsnleeyaarhattnaankngehdraabhaknaen-rkahkp-aephekmaerlarkeelsemsdamrbaasbiaandagnakgaendaauianktdenadbamyaelaanabnmaaygnsaMt-aneknagreslusaebetybaeksurmaditalaaiiatasusnaendrrbaikDaaakdugynalaai-dkitDaedkunmealrisnoayYkjbaaaraaranagsngtii
rpMo aleeetDrulhlaaesynmesuunbbaaaadtmhguaaanpwuaunnalPdusiaatahurnnltiigypmg-aaaeud.onnaldeaeUhnnnkagietmeryadabnneaKglaipnsedgrhidlleuaomlrmui sbbkauamglnaaanakoanSleeyhptaetenlPamgahrbtleimebrrseeetrnabjahulPuatennitrlusaseehtkeruilbaktuuhuaasdnteismaTkaubhnaiklaaasanhn
amsaNNNpdhMdYDSA eankHaueaeeeBuEeMratnnlrngggMADltamuiinaggaeeeHUrhYAbeaaYkrrradb,LSuiiikalaninstieYPSehlPKni-aRegdgdHarePkaeegaAngaearuberUrMdasaHdan,lraaSTaaRktalgaMehaueMkhmKp,shanrapeAk,NuAdbauaaneaatnNlNaaeNtelunaaMnnmgnmnMNehjymaaPbugeagkeeNsbmldUalrseaaneiigneieaaiagTbrpaaatPrgiReiGesanSderAeyJtArpaebenaairiolrdalbilardibhihahSMhisaAnusSuueahioP,agnnLaaaannnkN-arrYg,nlhriHikoadaaaemausbNerAyudngwempinumeneskJgaerNuaelingiaiaaear.nbrMgIkeigetansBuBagParkadrd,MNaiRaureenheseYagaaISlaraedanaanieiblndmnaugnugAdMmiSidunygaaulLebaPaualgbMsnnmmaiirTnrliniiaaaaeAkYliaaoazpwahnrdhNRitknbnueninnaHarelr,agtrragyaanaksdgtU,hNgaasemtaedNMausiihedtrniduMeawse-ugieyPjnagSknaeuaneYaPetneUerahigananHarihmrLanantmaghisTiKeujgnMumAaaMrneaedalnmNeldannedahamigpnlaignineanA-,sAuiedkgePrktegdlamBpakaeMaNuAroeDanersri,hpelEbnitk,llirUpNuaNkhgeugkatNaaaLhaeireeG,gttdnegnrniaYlIRaHNgiaageiaaShka,aAegerTYnnseabeigMebirarTganSbniaarIekyImbikeauSTHtnerrDaaueenaselmgaAsnrargATlbandHauSRUmgllabpaasaaantAaaNweeupnadgubmLmnrlKraIalaoaaaataduiMaUnnrnnahhst,,i,

மலாய்மொழி ஜாவி எழுத்துகளில் மலேசியப் பிரகடன ஆவணம் இலத்தீன்
மலேசியப் பிரகடன ஆவணம் எழுத்துகளில் (tulisan Rumi) ம�ொழிபெயர்ப்பு

மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்

நடவடிக்கை ஆவண ஆய்வு
இந்த ஆவணத்தை வாசிக்கவும்.
(i) இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டவர் யார்?
(ii) இந்த ஆவணம் கையெழுத்திடப்பட்ட தேதி என்ன?
(iii) மலேசிய உருவாக்கத்தில் உள்ளடங்கிய மாநிலங்களைக் குறிப்பிடுக.
(iv) மலேசியாவில் சுபிட்சத்தையும் ஒற்றுமையையும் நிலைப்படுத்த வேண்டியதன்

அவசியத்தை விவரித்திடுக.

14 K10.1.7

மலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலங்கள்
கூட்டரசு மலாயா, சரவாக், சபா, சிங்கப்பூர் இணைந்ததன் விளைவாக
16 செப்டம்பர் 1963இல் மலேசியா உருவாக்கப்பட்டது.

சபா

கூட்டரசு மலாயா சரவாக்

தென் சீனக் கடல்

சிங்கப்பூர்

மலேசிய உருவாக்கத்தின்வழி இன்றுவரை நாட்டின்
சுபிட்சம் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16ஆம்
நாளை மலேசிய நாளாகக் க�ொண்டாடி வருகிற�ோம்.
மலேசியர்களின் ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமையின்
அடையாளத்திற்கும் நன்றி கூறும் வகையில்
இந்நாள் க�ொண்டாடப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா ஒவ்வோர் ஆண்டும் நீ
மலேசியாவில் இணைவதைப் புருணை எவ்வாறு மலேசிய நாளைக்
நிராகரித்தது. 1965ஆம் ஆண்டு க�ொண்டாடுவாய்?
சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து
பிரிந்தது.

10.1.3 ஆசிரியர் குறிப்பு 15

மலேசிய உருவாக்கத்தில் உள்ளடங்கிய மாநிலங்களை அறிந்துக�ொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மலேசிய உருவாக்கத்தில் எழுந்த சவால்கள்

மலேசிய உருவாக்கம் பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது. மலேசிய
உருவாக்க ந�ோக்கத்தை விவரிக்கும் முயற்சி த�ொடங்கி இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்தது வரை விவரிக்கின்றது.

துங்கு அப்துல் ரஹ்மானும் நம் நாட்டுத்
தலைவர்களும் மலேசிய உருவாக்கத்தின்
ந�ோக்கத்திற்கு மக்களிடையே நம்பிக்கையூட்டும்
முயற்சிகளை மேற்கொண்டனர்.

சரவாக் மக்கள் கூட்டமைப்புக் கட்சி (SUPP)
சுயமாகப் புருணை, சரவாக், வட ப�ோர்னிய�ோ
ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசை உருவாக்கும்
'செத்தியா காவான் மலேசியா' ந�ோக்கில் மலேசிய உருவாக்கத்தை நிராகரித்தது.
(JSKM) மூன்றாவது செயற்குழு
கூட்டத்தின் ப�ோது துங்கு அப்துல்
ரஹ்மான்.
மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்.

மலேசிய உருவாக்கம் தன் நாட்டின் பெரித்தா ஹரியான், 18 செப்டம்பர் 1963.
நிலைக்கு அச்சுறுத்தலாக அமைவதாகக் மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்
கருதிய இந்தோனேசியா 1963ஆம் ஆண்டு
முதல் 1966ஆம் ஆண்டுவரை, மலேசியா
மீது எதிர்ப்புப் ப�ோராட்டத்தைப் (konfrontasi)
பிரகடனப்படுத்தியது.

அடுத்த சவால் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்தது. சபாவைத் தன்
நாட்டின் ஒரு பகுதி என உரிமை க�ோரியது.

பல சவால்கள் இருப்பினும் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் இடையிலான
இறுக்கமான உறவு இறுதியில் வழக்க நிலைக்குத் திரும்பியது. இவ்வுறவின் விரிசல்
அந்நாட்டுத் தலைவர்களின் ஒருமைப்பாட்டினால் களையப்பட்டது. சுபிட்சத்திற்கும்
வட்டார ஒற்றுமைக்கும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு சவால்களைக் கடந்து 16 செப்டம்பர் 1963இல் மலேசியா
உருவாக்கப்பட்டது. மலேசிய மக்களாகிய நாம் மலேசிய உருவாக்கத்தின்
வெற்றிக்குப் பங்காற்றிய ஒவ்வொரு குடிமகனின் முழு ஈடுபாட்டையும் எண்ணி
அவசியம் பெருமிதம் க�ொள்ள வேண்டும்.
ச�ொற்களஞ்சியம்

நடவடிக்கை க�ொன்புர�ோந்தாசி
மலேசிய உருவாக்க முயற்சியில் (Konfrontasi) எனப்படுவது
எழுந்த ஏனைய சவால்களைப் பல்வேறு ஒரு தரப்புக்கு எதிரான
மூலங்களிலிருந்து திரட்டுக. எதிர்ப்புப் ப�ோராட்டம் ஆகும்.

ஆசிரியர் குறிப்பு 10.1.4
16 மலேசிய உருவாக்கத்தில் எழுந்த பிற சவால்களைத் திரட்ட

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மீட்டுணர்வோம்

மலேசிய உருவாக்கச் சிந்தனையும் காரணங்களும்

• பிரிட்டிஷார், உள்ளூர் தலைவர்களிடமிருந்தும் த�ோன்றிய சிந்தனை

• மலேசியா உருவாக்கத்திற்கான காரணங்கள்: சுதந்திரத்தை விரைவுபடுத்துதல்

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தல்
இனங்களுக்கிடையே சமன்நிலைப்படுத்துதல் சமூகப் ப�ொருளாதாரத்தை
மேம்படுத்துதல்

மலேசிய உருவாக்கத்தை ந�ோக்கிய படிமுறைகள்

• துங்கு அப்துல் ரஹ்மான் மலேசிய • அரசாங்கங்களுக்கு இடையிலான
உருவாக்கப் பரிந்துரையை அறிவித்தார் செயற்குழு அமைத்தல்
• கூட்டரசு மலாயாவிற்கும்
• சரவாக்கிற்கு வருகை சிங்கப்பூருக்கும் இடையிலான

மேற்கொள்ளுதல் பேச்சுவார்த்தை

• செத்தியா காவான் மலேசியா • லண்டனில் மலேசிய உடன்படிக்கை

செயற்குழு அமைத்தல்
• க�ோப�ோல்ட் ஆணையம் அமைத்தல் • மலேசியப் பணிக்குழுவை அமைத்தல்
• க�ோப�ோல்ட் ஆணையம் பிரிட்டிஷ் • 16 செப்டம்பர் 1963இல் மலேசியப்
அரசிடமும் கூட்டரசு மலாயாவிடமும் பிரகடனம்

அறிக்கை சமர்ப்பித்தல்

மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட
திலகங்களும் இடம் பெற்ற மாநிலங்களும்

1. ஈடுபட்ட திலகங்கள்: • ட�ோனால்ட் ஸ்டீபன்ஸ் (துன் முகமட்
• துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா புவாட் ஸ்டீபன்ஸ்)
அல்ஹாஜ்
• துன் அப்துல் ரசாக் உசேன் • டத்து பண்டார் அபாங் ஹஜி முஸ்தாப்பா
• துன் தெமெங்கோங் ஜூகா அனாக் • துன் முகமட் கசாலி ஷாபியி
பரியெங் • டான் வ�ோங் பாவ் நீ
• துன் டத்து முஸ்தப்பா டத்து ஹருண் • துன் வீ.தி. சம்பந்தன்

• லீ குவான் யூ 2. கூட்டரசு மலாயா, சரவாக், சபா, சிங்கப்பூர்

• டான் டத்தோ அமார் ஸ்டீபன் ஆகியன மலேசிய உருவாக்கத்தில் இடம்

கால�ோங் நிங்கான் பெற்றுள்ள மாநிலங்கள்.

மலேசிய உருவாக்கத்தில் எழுந்த சவால்கள்
உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் எழுந்த சவால்கள்.

இந்த அலகு மலேசிய உருவாக்கத்தின் காரணங்கள், படிமுறைகள், இடம்பெற்ற
மாநிலங்கள், எழுந்த சவால்கள் ஆகியவற்றை விவாதிக்கின்றது. மாணவர்கள்
நாட்டின் வரலாற்றைப் ப�ோற்ற மலேசிய உருவாக்கத்தைச் செயல்படுத்த
முனைப்புக் காட்டிய திலகங்களைப் பற்றி விவரிக்கிறது. அடுத்த அலகில் மலேசிய
மாநிலங்களை மேலும், ஆழமாக அறிந்து க�ொள்ள இஃது உதவும்.
17

சிந்தித்துப் பதிலளி
அ மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற மாநிலங்களை அறிந்து க�ொள்ள

நண்பருக்குத் துணைபுரிக. அம்மாநிலங்களுக்கு வட்டமிடுக.

சரவாக்

கூட்டரசு
மலாயா

சிங்கப்பூர் சபா
இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்

புருணை

ஆ மலேசிய உருவாக்கப் படிமுறைகளைக் காலநிரலுக்கு ஏற்ப வரிசைப்படுத்துக.

நிகழ்வு காலநிரலுக்கேற்ப
1. மலேசிய உடன்படிக்கை லண்டன், மால்புர�ோ இல்லத்தில் எண்களிடுக

கையெழுத்திடப்பட்டது. என்னை
2. செத்தியா காவான் மலேசியா செயற்குழு அமைக்கப்பட்டது. வருடுக
3. சிங்கப்பூரில் கருத்து வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சிந்தித்துப்
4. க�ோலாலம்பூர், சரவாக், சபா, சிங்கப்பூரில் மலேசியப் பதிலளி

பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது.
5. துங்கு அப்துல் ரஹ்மான் மலேசிய உருவாக்கப்

பரிந்துரையைச் சிங்கப்பூர் அடல்பி விடுதியில் அறிவித்தார்.

18

நாட்டை நேசிப்போம்
மலேசிய உருவாக்க வரலாற்றை அறிந்து க�ொள்வதால் முழு ஈடுபாட்டுடனும்
ஒருமைப்பாட்டுடனும் நாட்டிற்கு வெற்றியை ஈட்டித் தந்த தலைவர்களின்பால்
நாம் பெருமைபடத் தூண்டுகிறது.

தனிநபர் சமுதாயம் நாடு
மலேசிய மக்கள் மலேசிய உருவாக்க நேசமிகு நாட்டின்
எனும் அடிப்படையில் வரலாற்றை அறிவதால் அமைதிக்காக
நாம் நாட்டுப்பற்றைப் ஒற்றுமை உணர்வை ஒருமைப்பாட்டைத்
பேணுவத�ோடு நாட்டிற்குச் உருவாக்கி நாட்டின் தற்காக்க வேண்டும்.
சேவையாற்றிய இறையாண்மையைத்
தலைவர்களின் தற்காக்க முடியும்.
ப�ோராட்டங்களைப்
ப�ோற்ற வேண்டும்.

19

தலைப்பு 10: மலேசிய நாடு

2அலகு மலேசிய மாநிலங்கள்

பெர்லிஸ்

கெடா

கிளந்தான்

பினாங்கு திரங்கானு
பகாங்
பேராக்
ஜ�ொகூர்
சிலாங்கூர்

க�ோலாலம்பூர் நெகிரி மலாக்கா
கூட்டரசு செம்பிலான்
பிரதேசம்
புத்ராஜெயா
கூட்டரசு
பிரதேசம்

சாரம்

மலேசியா 13 மாநிலங்களையும் கூட்டரசு பிரதேசத்தையும் க�ொண்டுள்ளது.
இந்த அலகு மலேசிய மாநிலங்களை விவாதிக்கின்றது. இம்மாநிலங்கள்
ஒரு மாநிலத் தலைவரைத் தமக்குரிய விளிப்பில் க�ொண்டுள்ளன. அத்தோடு,
இந்த அலகு மாநிலத் தலைநகரங்களையும் அரச நகரங்களையும்
விவரிக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்தின் க�ொடி, பாடல், சின்னம் ஆகியவை
இறையாண்மையையும் பெருமையையும் குறிக்கின்றன.

20

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?

1 மலேசிய மாநிலங்களின் பெயர்கள்.
2 மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்.
3 தலைநகரமும் அரச நகரமும்.
4 மாநிலங்களின் அடையாளமாகக் க�ொடி, பாடல், சின்னம்.

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்

வ AKPS 1 மலேசிய மாநிலங்களின் பெயர்களின்
மே கி பூர்வீகத்தை ஆராய்தல்.

தெ 2 மாநிலப் பாடலை மாநில அடையாளமாகப்
ப�ொருள் பெயர்ப்புச் செய்தல்.

3 மாநிலங்களின் அரச நகரமாக விளங்கும்
மாவட்டங்களின் ஒருமைப்பாட்டை
அடையாளம் காணல்.

தெLனau்t CசhீiனnaகS்elகatடanல்

சபா

லாபுவான்
கூட்டரசு பிரதேசம்

சரவாக்

குடியியல் நெறி
• மதித்தல்
• ப�ொறுப்புணர்ச்சி

21

மலேசிய மாநிலங்களின் பெயர்கள்

மலேசியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கே உரிய முறையில் பெயர்களைக்
க�ொண்டுள்ளன. மலேசிய மாநிலங்களின் பெயர் பூர்வீகம் எழுத்து முறையிலும்
வாய்மொழியாகவும் பல்வேறு மூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெர்லிஸ்
• பெர்லிஸ் எனும் பெயர் சயாமிய ச�ொல்லான
‘பிர�ோவ் ல�ோவி’ (Prow-lowy) என்பதிலிருந்து
த�ோன்றியதாக நம்பப்படுகின்றது. அதன் ப�ொருள்
மிதந்து வரும் தேங்காய் என்பதாகும்.
• பெர்லிஸ் எனும் பெயர், சுல்தான் அமாட்
தாஜூடின் ஹலிம் ஷா II அவர்கள் ராஜா
ஜமாலுலாய்ல் சயாமை எதிர்க்க உதவியதற்காக
வழங்கப்பட்ட பெர�ோலே (peroleh) எனப்படும்
ஒப்புதல் த�ொடர்புடையதாகும்.

மூலம்: Hazman Hassan dan Mohd Kasturi Nor Abd. Aziz,
2021. Salasilah Perlis Asal Usul Pemerintahan Jamalullail.

Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka.

கெடா

• கெடா எனும் பெயர் 'கெட்டா' (Kheddah) எனும்
ச�ொல்லிலிருந்து த�ோன்றியதாகும். அதன் ப�ொருள்
யானைப்பொறி என்பதாகும்.

• அதே வேளையில் கெடா எனும் பெயர் அரேபிய
ச�ொல்லான ‘கஹடா’ (Qadah) அதாவது அரேபிய
வணிகர்கள் இம்மலாய்ப் பிராந்தியத்தில் அதிகம்
விற்பனை செய்த ஒருவகைக் க�ோப்பை எனும்
ப�ொருளைக் குறிப்பதாகும்.

• தமிழில் காணப்படும் படைப்புகள் கெடாவைக் ‘கடாரம்’
அல்லது ‘கழகம்’ எனவும் குறித்துள்ளன.

மூலம்: Ahmad Zaharuddin Sani Ahmad Sabri, 2016. Sejarah
Kedah Dua Millenia. Sintok: Universiti Utara Malaysia.

பினாங்கு

• பூலாவ் பினாங்கின் இயற்பெயர் 'பூல�ோ கா சத்து' (Pulo Ka Satu)
ஆகும். எனினும், கெடாவைச் சேர்ந்த மலாய்க்காரர்கள் அத்தீவில்
அதிகம் காணப்படும் பெனாகா மரத்தின் அடிப்படையில் இதனைத்
தஞ்சோங் பெனாகா என அழைத்தனர்.

• பூலாவ் பினாங் எனும் பெயர் இங்கு முக்கிய வாணிபப் ப�ொருளாக
இருந்த பாக்கு மரத்தோடு த�ொடர்புபடுத்தப்படுகிறது.

மூலம்: Noriah Mohamed, Muhammad

Haji Salleh dan Mahani Musa, 2006. 'அறியாமல் அன்பு பிறப்பதில்லை'
Sejarah Awal Pulau Pinang. Pulau Pinang: இக்கூற்றை உன் மாநிலம் மீது
Universiti Sains Malaysia. நீ க�ொண்டுள்ள நேசத்தோடு

22 த�ொடர்புபடுத்துக.

பேராக்

• பேராக் எனும் பெயர் நீரில் மீன்கள் வெள்ளி நிறத்தில்
பளபளப்பாகப் பிரகாசிப்பதை முன்னிட்டுக் கூறப்படுகிறது.

• அம்மாநிலத்தில் அதிகம் காணப்படும் ஈயம், வெள்ளி ப�ோலப்
பளபளப்பான தன்மையைப் க�ொண்டிருப்பதால் பேராக் எனும்
பெயருடன் த�ொடர்புபடுத்தி வழங்கப்படுகிறது.

மூலம்: Raja Masittah Raja Ariffin, Che Ibrahim Salleh, Norazlina
Mohd Kiram dan Hasnah Mohamad, 2016. Etimologi Nama Negeri

di Malaysia. Serdang: Universiti Putra Malaysia.

சிலாங்கூர்

• சிலாங்கூர் எனும் பெயர் அச்சமயம் ஆற்று
முகத்துவாரத்தில் அதிகம் காணப்பட்ட ‘மெந்தாகாவ்’
(mentagau) மரத்தைச் சார்ந்ததாகும். அந்த ஆற்று
முகத்துவாரத்தில் தங்கிச் சென்ற வணிகர்கள் க�ோல
சிலாங்காவ் என அழைக்கத் த�ொடங்கி இறுதியில்
அதுவே க�ோல சிலாங்கூர் எனவும் ஆனது.

• மேலும், சிலாங்கூர் எனும் பெயர் அச்சமயம் ஆற்றில்
அதிகம் காணப்பட்ட 'செலாங்கூர்' (sangur) எனும்
பூச்சிய�ோடு த�ொடர்புபடுத்தப்படுகிறது.

மூலம்: Buyong Adil, 1981. Sejarah Selangor. Kuala Lumpur: Dewan
Bahasa dan Pustaka dan Kementerian Pelajaran Malaysia.

நெகிரி செம்பிலான்

• நெகிரி செம்பிலான் எனும் பெயர் ஒன்பது மாவட்டங்களின்
இணைப்புகளிலிருந்து உருவானதாகும். 1773ஆம் ஆண்டில்
இருந்த த�ொடக்க கால மாவட்டங்கள் சுங்கை ஊஜ�ோங்,
ஜெலுபு, ரெம்பாவ், ஜ�ோஹ�ோல், ஜெலாய், உலு பகாங்,
நானிங், செகாமட், கிள்ளான் ஆகும்.

• நெகிரி எனும் ச�ொல் மினாங்காபாவ் ம�ொழியில் பிரதேசம்
எனப் ப�ொருள்படும் 'நாகாரி' எனும் ச�ொல்லிலிருந்து
த�ோன்றியதாகக் கூறப்படுகிறது.

மூலம்: Tan Sri Datuk Abdul Samad Idris, 1987. Takhta Kerajaan Negeri மூலம்: Lembaga Muzium
Sembilan. Kuala Lumpur: Utusan Printcorp Sdn. Bhd. Negeri Sembilan.

மலாக்கா

• அரேபிய மூலங்களின்படி, மலாக்கா எனும் ச�ொல்
வணிகர்கள் கூடுமிடத்தைக் குறிக்கும் 'மலாகாட்'
(malakat) என்ற ச�ொல்லில் இருந்து பெறப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.

• மலாக்கா எனும் பெயர் மரத்தின் பெயரில் இருந்து
த�ோன்றியதாகவும் கூறப்படுகிறது. ஒரு சமயம் பரமேஸ்வரா
அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக் க�ொண்டிருந்த
வேளையில் ஒரு சிறிய வெள்ளைச் சருகுமான் வேட்டை
நாய் ஒன்றை உதைத்த காட்சியைப் பார்த்ததின்
அடிப்படையில் த�ோன்றியதாகக் கூறப்படுகிறது.

மூலம்: Zakiah Hanum, 1989. Asal Usul Negeri-negeri di 23
Malaysia. Kuala Lumpur: Times Books International.

ஜ�ொகூர்

• ஜ�ொகூர் எனும் ச�ொல் அரேபிய ம�ொழியில்
விலையுயர்ந்த மாணிக்கக் கல்லைக் குறிக்கும்
‘ஜாவ்ஹார்’ என்ற ச�ொல்லிலிருந்து பிறந்ததாகக்
கூறப்பட்டுள்ளது.

• ஜ�ொகூரின் பெயர் 'சுலாலாதுஸ் சாலாதின்'
(Sulalatus Salatin) நூலில் ஊஜ�ோங் தானா
எனக் குறிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Zakiah Hanum, 1989. Asal usul Negeri-negeri di
Malaysia. Kuala Lumpur: Times Books International.

பகாங்

• பகாங் எனும் பெயர் 'மகாங்' (mahang) எனும் மரத்தின்
பெயரை முன்னிட்டு வைக்கப்பட்டது.

• ‘சுலாலாதுஸ் சாலாதின்' நூலில், பகாங் எனும் பெயர்,
இந்திரா புரா அல்லது புரா என அறியப்படுகிறது.
'புரா' என்பது நகரம் அல்லது சிறு பட்டணம் எனப்
ப�ொருள்படும்.

மூலம்: Buyong Adil, 1984. Sejarah Pahang. Kuala Lumpur: Dewan
Bahasa dan Pustaka dan Kementerian Pelajaran Malaysia.

திரங்கானு

• திரங்கானு எனும் பெயர், 'தாரிங் அனு' (taring anu)
எனும் ச�ொல்லிலிருந்து த�ோன்றியதாகக் கூறப்படுகிறது.
இது புலாவ் டூய�ோங்கில் காணப்படும் பெரிய
யானைத்தந்தம் அல்லது பிற க�ொடூர விலங்குக்கு உள்ள
கூர்மையான பல் ப�ோன்றது எனப் ப�ொருள்படும்.

• திரங்கானு எனும் பெயர் 'தெராங்ஞா கானு' (terangnya
ganu) என்று வானவில்லைத் த�ொடர்புபடுத்தியதாகும்.

மூலம்: Muhammad Salleh Haji Awang, 1992. Sejarah Darul
Iman hingga 1361H=1942M. Kuala Terengganu: Percetakan
Yayasan Islam Terengganu.

21ஆம் நூற்றாண்டுக் கற்றல் உலா (Gallery Walk) நடவடிக்கை
கற்றல் திறன் சான்றின் நம்பகம்
நேர்காணல்
1. மாணவர்களைக் குழுவாரியாகப் பிரித்தல். அணுகுமுறையில்
2. ஒவ்வொரு குழுவினரும் மாநிலங்களின் உங்கள் வசிப்பிடம்,
மாநிலத்தின் பெயர்
பெயர்கள் த�ொடர்பான பூர்வீகத் தகவல்களையும் த�ொடர்பான பூர்வீகச்
சிறப்புகளையும் திரட்டுதல். சான்றுகளைத் தேடுக.
3. குமிழி வரிபடத்தைப் பயன்படுத்தி, மலேசிய
மாநிலங்களின் பாரம்பரியத்தின்மீது ஏற்படும் K10.2.7
பெருமிதத்தைக் குறிப்பிடுதல்.
4. திரட்டிய தகவல்களை வகுப்பில் ஒட்டுதல். திரட்டிய

தகவல்கள் த�ொடர்பாகப் பிற குழு உறுப்பினர்கள்
தங்கள் கருத்துகளைக் குறிப்புச்சிட்டையில் எழுதி
ஒட்டுதல்.
24

கிளந்தான்

சரவாக் • கிளந்தான் எனும் பெயர் ‘கிளாத்தான்’ (kilatan) என்ற ச�ொல்லிலிருந்து
த�ோன்றியதாகக் கூறப்படுகிறது. மிகப் பிரகாசமான ஒளியைப்
பட்டாணி மலாய்ச் சமூகத்தினர் கண்டனர். 'கிளாத்தான்' எனும் ச�ொல்
நாளடைவில் கிளந்தான் என மாறியது.

• கிளந்தான் எனும் பெயர், முன்னர் கிளந்தான் கடல�ோரத்தில்
காணப்பட்ட “கெஹ்லாம் ஊத்தான்” (gelam hutan) அல்லது “கெலாம்
ஊத்தான்” (kelam hutan) எனும் பெயரிலான மரத்தை முன்னிட்டும்
வழங்கப்படுகிறது.

மூலம்: Arba’iyah Mohd Noor. “Perkembangan Pendidikan Islam di Kelantan” dlm.
Malaysia Dari Segi Sejarah (Malaysia In History), Vol. 36, hlm. 68-83, 2008.

• சரவாக் எனும் பெயர் சுங்கை செராக் என்பத�ோடு
த�ொடர்புடையது. சரவாக் எனும் ஒரு வகைக் கனிமவளத்தின்
பெயரை முன்னிட்டுச் சுங்கை செராக் நாளடைவில் சுங்கை
சரவாக் எனப் பெயர் மாற்றம் கண்டது.

• ‘செரவா' (cerava) என்று ப�ோர்த்துகீசியரால் அழைக்கப்படும்
அஞ்சன உல�ோகக் கல்லோடு (antimoni) சரவாக் எனும் பெயர்
த�ொடர்புடையது என்றும் கருதப்படுகிறது.

மூலம்: S. Baring Gould, 2019. A History of Sarawak. Kuala Lumpur: Silverfish Books.

சபா

• சபா எனும் பெயர் அம்மாநிலத்தின் மேற்குக்கரையில்
உணவுத் தேவைக்காக அதிகமாகப் பயிரிடப்படும் 'பீசாங்
சபா' வாழைய�ோடு த�ொடர்புடையது ஆகும்.

• 1877ஆம் ஆண்டு சபா எனும் பெயர் 'மஹாராஜா ஆப்
சபா' (Maharajah of Sabah) என்ற வரலாற்று ஆவணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்: P. J. Rivers. “The Origin of ‘Sabah’ and A Reappraisal of

Overbeck as Maharajah” dlm. Journal of the Malaysian Branch of

உங்களுக்குத் தெரியுமா the Royal Asiatic Society Vol 77. No 1 (286), 2004.

• க�ோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், லாபுவான் கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயா
கூட்டரசு பிரதேசம் ஆகியவை கூட்டரசு பிரதேசங்களாகும்.

• க�ோலாலம்பூர் எனும் பெயர் க�ோம்பாக் ஆறு, கிள்ளான் ஆறு ஆகியவற்றில்
மேற்கொள்ளப்பட்ட ஈயச்சுரங்கப் பணிகளால் சேறு நிறைந்த ஆற்று
முகத்துவாரத்தைத் த�ொடர்புபடுத்துவதாகும்.

• லாபுவான் எனும் பெயர் 'லாபுஹான்' என்பதிலிருந்து த�ோன்றியதாகும். இது
கப்பல் தங்கிச் செல்லும் இடம் என்று ப�ொருள்படும்.

• புத்ராஜெயா எனும் பெயர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
என்ற பெயரையும் ஜெயா எனப்படுவது வெற்றி அல்லது உச்சிநிலையை
அடைவதையும் குறிக்கும்.

நம் நாட்டின் மாநிலங்கள் த�ொடர்பான பெயர்களின் பூர்வீகத்தைக் குறிக்கும்
பல்வேறு மூலங்கள் இருக்கின்றன. இப்பெயர்களை அறிந்து க�ொள்ளும்போது
நாம் ஓரிடத்தின் பெயர�ோடு த�ொடர்புபடுத்தப்படும் இயற்கைப் பாரம்பரியத்தை
எண்ணிப் பெருமிதம் அடைய முடிகிறது.

10.2.1 ஆசிரியர் குறிப்பு 25

மலேசிய மாநிலங்களின் பெயர்கள் த�ொடர்பான பூர்வீகத்தை வாய்மொழி மூலம்,
எழுத்து அறிந்து க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்

மாநிலத் தலைவர் என்பவர் ஒரு மாநில ஆட்சியின் முக்கியத் தூண் ஆவார்.
ஒவ்வொரு மாநிலத் தலைவரின் விளிப்புமுறையும் மாறுபட்டு இருப்பது நம்
நாட்டின் தனித்துவம் ஆகும்.

சுல்தான் அல்லது ராஜா

சுல்தான் எனும் விளிப்பு முறை கெடா,
பேராக், சிலாங்கூர், ஜ�ொகூர், பகாங்,
திரங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களில்
பயன்படுத்தப்படுகிறது. பெர்லிஸில் ராஜா
எனும் விளிப்புப் பயன்படுத்தப்படுகிறது. ராஜா பெர்லிஸ் மாட்சிமை தாங்கிய மாமன்னர்
துவான்கு சைட் சிராஜுடின் ஜமாலுலாய்ல்
அரியணை அமர்வு சடங்கு.

மூலம்: Jabatan Penerangan Malaysia.

யாங் டி பெர்துவான் பெசார்

மாட்சிமை தாங்கிய மாமன்னர் துவான்கு இவ்விளிப்பு முறை நெகிரி செம்பிலானில்
முக்ரிஷ் இப்னி அல்மர்ஹும் துவான்கு பயன்படுத்தப்படுகிறது.
முனாவீர், யாங் டி பெர்துவான் பெசார்
நெகிரி செம்பிலான்.
மூலம்: Jabatan Penerangan Malaysia.

யாங் டி பெர்துவா நெகிரி

இவ்விளிப்பு முறை பினாங்கு, துன் பெஹின் ஹஜி துன் டத்தோ பங்லிமா
மலாக்கா, சரவாக், சபா அப்துல் தாயிப் மாமுட் (Dr.) ஹஜி ஜுஹார் ஹஜி
ஆகிய மாநிலங்களில் சரவாக்கின் யாங் டி மஹிருடின் சபாவின் யாங்
பயன்படுத்தப்படுகிறது. பெர்துவாவாக டி பெர்துவா நெகிரியாக
நியமிக்கப்படுகிறார். நியமிக்கப்படுகிறார்.
மூலம்: Utusan Borneo.
மூலம்: Utusan Borneo.

மாநிலத் தலைவர்களைத் தெரிந்துக�ொள்வதன் மூலம், அரசர் மீது மதிக்கும்
பண்பையும் விசுவாசத்தையும் மேல�ோங்கச் செய்யும்.

உங்களுக்குத் தெரியுமா மாநிலத் தலைவர்களின் மீது
கூட்டரசு பிரதேச மாநிலத் விசுவாசம் க�ொள்வதினாலும்,
தலைவர் மாட்சிமை தாங்கிய மதிப்பதினாலும் ஏற்படும்
மாமன்னர் ஆவார். நன்மை என்ன?

ஆசிரியர் குறிப்பு 10.2.2
26 மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறையை அறிய K10.2.5

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

தலைநகரமும் அரச நகரமும்

மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைநகரம் உண்டு. ஒரு சில
மாநிலங்களுக்கு அரச நகரமும் உள்ளது.

கங்கார் ஆராவ்
அனாக் புக்கிட்
அல�ோர் ஸ்டார் இடஞ்சுட்டி:
க�ோத்தா தலைநகரம்
அரச நகரம்
ஜார்ஜ்டவுன் பாரு

க�ோல க�ோல
கங்சார் திரங்கானு

ஈப்போ க�ோத்தா கினபாலு

குவாந்தான் தென் சீனக் கடல்

ஷா ஆலம் பெக்கான்

கிள்ளான்

சிரம்பான் மெனாந்தி

பண்டார்

பண்டார் மஹாராணி

மலாக்கா ஜ�ொகூர் பாரு

கூச்சிங்

தலைநகரம் என்பது ஒரு மாநிலத்தின் நிர்வாக மையம்
ஆகும். தலைநகர வளர்ச்சிக்கு நிர்வாக மேம்பாடு,
அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள், கல்வி
நிலையங்கள் ஆகியன காரணமாக விளங்குகின்றன.

அரச நகரம் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் க�ொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக அரண்மனை, பெருந்தலைவர்களின்
கட்டடம், பழைய கடைகள், அருங்காட்சியகம், கலைக்கூடம்,
நினைவுக்கூடம் ஆகியவை ஆகும்.

நாட்டை நேசிக்கும் மக்கள் எனும் நம் நாட்டில் உள்ள அரண்மனை,
வகையில், நம் நாட்டில் உள்ள பழைய நிர்வாகக் கட்டடம்
தலைநகரம், அரச நகரம் ஆகியவற்றை ஆகியவற்றைப் பேணவும்
நாம் அறிந்திருக்க வேண்டியது பராமரிக்கவும் மேற்கொள்ள
அவசியமாகும். நாம் இங்குக் காணப்படும் வேண்டிய நடவடிக்கைகளைப்
வரலாற்றுப் பாரம்பரியத்தைப் ப�ோற்றவும் பரிந்துரை செய்திடுக.
பேணவும் பராமரித்துப்
புணரமைக்க
வேண்டியதும் உங்களுக்குத் தெரியுமா

அவசியமாகும். கூட்டரசு பிரதேசங்களுக்குத் தலைநகரமும்
அரச நகரமும் இல்லை.

10.2.3 ஆசிரியர் குறிப்பு 27
K10.2.7
நம் நாட்டில் காணப்படும் தலைநகரம், அரச நகரம் ஆகியவற்றை
தெரிந்துக�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மாநில அடையாளங்களாகக் க�ொடி, பாடல், சின்னம்

இறையாண்மைமிக்க மாநிலம் எனும் வகையில் மலேசியாவில் காணப்படும் ஒவ்வொரு
மாநிலமும் தனக்கென க�ொடி, பாடல், சின்னம் ஆகியவற்றைக் க�ொண்டுள்ளன.
இவ்வடையாளங்கள் அம்மாநிலங்களுக்குத் தனித்தன்மையை உருவாக்குகின்றன.

க�ொடி பாடல் சின்னம்
திரங்கானு Selamat Sultan

Aamiin-Aamiin

பெர்லிஸ்

Duli Yang Maha
Mulia

சிலாங்கூர்

Berkatlah Yang
di-Pertuan Besar

நெகிரி செம்பிலான்

Lagu Bangsa
Johor

ஜ�ொகூர்

மூலம்: Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa,
Jabatan Perdana Menteri.

28

க�ொடி பாடல் சின்னம்
கிளந்தான் Selamat Sultan

பேராக் Allah Lanjutkan
கெடா Usia Sultan
பகாங்
Allah Selamatkan
Sultan Mahkota

Allah Selamatkan
Sultan Kami

Sabah Tanah Airku
சபா

Ibu Pertiwiku

சரவாக்

மாநிலக் க�ொடி, பாடல், சின்னம் என்னை விரைந்து பதிலளி
த�ொடர்பான தகவல்கள் வருடுக மாநிலச் சின்னத்தில்
நெற்கதிரை அடையாளமாகக்
க�ொண்டுள்ள மாநிலத்தைப்
பெயரிடுக.

29

க�ொடி பாடல் சின்னம்
மலாக்கா Melaka Maju Jaya
பினாங்கு
Untuk Negeri Kita

க�ோலாலம்பூர் லாபுவான் Maju dan Sejahtera
கூட்டரசு கூட்டரசு
பிரதேசம் பிரதேசம்

புத்ராஜெயா
கூட்டரசு பிரதேசம்

மூலம்: Setiausaha Kerajaan Negeri.

ஒவ்வொரு மாநிலத்தின் க�ொடி, பாடல், மாநிலச் சின்னங்களை மதிக்க
சின்னம் ஆகியவற்றை அறிவதன் மூலம் வேண்டியதன் அவசியம் என்ன?
நாட்டின் மீது விசுவாசமும் அன்பும் செலுத்த
இயலும். ஒரு குடிமகனாக மாநிலங்களின்
பெருமைக்குரிய அடையாளங்களை நாம்
மதிக்க வேண்டும்.

21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் வட்ட மேசை
1. குறிப்பிட்ட மாநிலப் பாடலை ஆசிரியர் ஒலிபரப்புதல்.
2. மாணவர்கள் குழுவில் சுழல் முறையில் மாநிலப் பாடலைச்

செவிமடுப்பத�ோடு பாடல் வரிகளை விளங்கிக் க�ொள்ள முயலுதல்.
3. மாணவர்கள் குழு உறுப்பினர்களுக்குப் பாடல்வரிகளின் ப�ொருளை

விளக்கிக் கூறுதல்.

ஆசிரியர் குறிப்பு 10.2.4
30 நம் நாட்டு மாநிலங்களின் க�ொடி, பாடல், சின்னம் ஆகியவற்றை அறிய K10.2.6

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மீட்டுணர்வோம்

மாநிலங்களின் தலைநகரமும்
பெயர் அரச நகரமும்

மலேசிய க�ொடி,
மாநிலத் பாடல்,
தலைவர்கள் சின்னம்

• பெர்லிஸ் • பகாங்
• கெடா • திரங்கானு
• பினாங்கு • கிளந்தான்
• பேராக் • சரவாக்
• சிலாங்கூர் • சபா
• நெகிரி • கூட்டரசு

செம்பிலான் பிரதேசம்
• மலாக்கா
• ஜ�ொகூர்

• சுல்தான் அல்லது ராஜா ஒவ்வொரு மாநிலத்திலும்
• யாங் டி பெர்துவான் க�ொடி, பாடல், சின்னம்
ஆகியன அம்மாநிலத்தின்
பெசார் அடையாளமாக
• யாங் டி பெர்துவா நெகிரி விளங்குகின்றன.

இந்த அலகு மலேசியாவின் மாநிலங்கள், மாநிலத் தலைவர்கள், தலைநகரங்கள்,
நம் நாட்டில் உள்ள அரச நகரங்கள் ஆகியவற்றை விளக்குகின்றது.
இவற்றைத் தவிர்த்து க�ொடி, பாடல், சின்னம் ஆகியன மலேசிய மாநிலங்களின்
அடையாளங்கள் என விவாதிக்கின்றன. இந்த அலகு நாட்டின் மீது ஆழமான
நேசத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த அலகு தன்னெறிமிகு மலேசியக்
குடிமகனாக உருவாக்கும் தேசியக் க�ோட்பாடு பற்றி விளக்குகின்றது.

31

சிந்தித்துப் பதிலளி

காலியான கட்டங்களில் மாநிலங்கள், கூட்டரசு பிரதேசங்களுக்கான
க�ொடிகளின் எண்களை எழுதுக.
1 23 4

5 67 8

9 10 11 12
13 14

சரவாக் பகாங் கெடா
திரங்கானு பெர்லிஸ் நெகிரி
ஜ�ொகூர் கிளந்தான் செம்பிலான்
பினாங்கு சபா மலாக்கா
சிலாங்கூர் பேராக் கூட்டரசு
பிரதேசம்
32
என்னை
வருடுக
சிந்தித்துப் பதிலளி

நாட்டை நேசிப்போம்
எல்லா மாநிலங்களையும் அறிந்து
க�ொள்வதன்மூலம் நாட்டுணர்வைத்
த�ோன்றச் செய்வத�ோடு உலக
அளவிலும் மலேசியாவின் புகழை
மேல�ோங்கச் செய்யும்.

தனிநபர் சமுதாயம்
மாநிலங்களின் பெயர், க�ொடி, ஒற்றுமையும் முயற்சியும் மிக்க சமுதாயம்
பாடல், சின்னம் ஆகியவற்றை நாட்டின் க�ௌரவத்தை அனைத்துலக
அறிந்து க�ொள்வதால் நாட்டின் நிலையில் உயர்த்தவல்லது.
மீதான நேசத்தை உயர்த்த
முடிகிறது.

நாடு
அனைத்துலக நிலையில் நாம்
அறியப்படும்போது நம் நாடு
த�ொடர்ந்து முன்னேற்றம் கண்டு
உலக மக்களால் மதிக்கப்படும்.

33

தலைப்பு 10: மலேசிய நாடு

3அலகு தேசியக் க�ோட்பாடு

சாரம்
தேசியக் க�ோட்பாடு (ருக்குன் நெகாரா) இனங்களுக்கிடையே
நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேணும் வகையில் உருவாக்கப்பட்ட
நாட்டின் சித்தாந்தம் ஆகும். ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் தேசியக்
க�ோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்கள், தேசியக் க�ோட்பாட்டின்
ந�ோக்கம், நெறி ஆகியவற்றை விளங்கிக் க�ொள்வத�ோடு உய்த்துணர
வேண்டும் என்பதை இந்த அலகு விவரிக்கின்றது. நம் நாட்டு மக்களின்
அன்றாட வாழ்க்கையில் தேசியக் க�ோட்பாட்டின் பங்கினையும் இந்த அலகு
விவரிக்கின்றது.

34

நீங்கள் கற்கப் ப�ோவது என்ன?

1 தேசியக் க�ோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன்
காரணங்கள்.

2 தேசியக் க�ோட்பாட்டின் ந�ோக்கமும் நெறிகளும்.
3 அன்றாட வாழ்வில் தேசியக் க�ோட்பாட்டின் பங்கு.

அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன்

AKPS 1 கடந்த கால சிக்கல்களையும்
பிரச்சனைகளையும் விளங்கிக் க�ொள்வதன்வழி
தேசியக் க�ோட்பாடு உருவாக்கப்பட்டதன்
காரணங்களையும் விளைவுகளையும் அறிதல்.

2 தேசியக் க�ோட்பாட்டின் ந�ோக்கம், நெறிகள்
த�ொடர்பாகப் ப�ொருள் விளக்கம் செய்தல்.

3 சமூகத்தில் காணப்படும் மாற்றங்களையும்
த�ொடர் ஒற்றுமையையும் விவரித்தல்.

குடியியல் நெறி
ப�ொறுப்புணர்ச்சி

தேசிய நடவடிக்கை மன்றம் (MAGERAN)
மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்.

35

தேசியக் க�ோட்பாட்டின் பின்னணி

தேசியக் க�ோட்பாடு மக்களின் நல்லிணக்கம், சுபிட்சம் ஆகியவற்றை
உறுதிப்படுத்தும் நாட்டின் சித்தாந்தம் ஆகும். தேசியக் க�ோட்பாடு மலேசியர்களின்
வழிகாட்டியாகவும் நடைமுறையாகவும் இருக்கின்றது. தேசியக் க�ோட்பாடு ஒரு
தனித்துவமிகு பின்னணியையும் உருவாக்க வரலாற்றையும் க�ொண்டுள்ளது.

1 மாணவர்களே...,
தேசியக் க�ோட்பாடு மாட்சிமை தாங்கிய நான்காவது மாமன்னர்
அவர்களால் அரசப் பிரகடனம் செய்யப்பட்டது. தேசியக் க�ோட்பாடு
நாட்டின் 13ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு 31 ஆகஸ்ட்டு 1970இல்
பிரகடனப்படுத்தப்பட்டது.

துவான்கு சுல்தான் 2 யாருக்குத் தேசியக்
இஸ்மாயில் நசிருடின் க�ோட்பாடு உருவான
ஷா இப்னி அலமார்ஹும் வரலாறு தெரியும்?
சுல்தான் ஜய்னால் அபிடின்

5 வாழ்த்துகள் தாமியா,
ஜனிஜா! நன்று
மாணவர்களே, அனைவரும்
தேசியக் க�ோட்பாட்டின்
பின்னணியை நன்கு
அறிந்துள்ளீர்கள்.

4 ஐயை, தேசிய ஆல�ோசனை மன்றத்தின்கீழ் எனக்குத் தெரியும் ஐயை.
(MAPEN) அமைக்கப்பட்டிருந்த தேசியக் 3 தேசியக் க�ோட்பாடு 13
க�ோட்பாட்டுச் செயற்குழு, 4 மார்ச் 1970இல்
தேசியக் க�ோட்பாட்டை உருவாக்கி மே 1969 நிகழ்வுக்குப்
அறிமுகப்படுத்தியது. பின்னர் தேசிய நடவடிக்கை
உங்களுக்குத் தெரியுமா மன்றத்தால் (MAGERAN)
நாடு நிர்வகிக்கப்பட்டப�ோது
உருவாக்கப்பட்டது ஆகும்.

தேசிய ஆல�ோசனை மன்றத்தில் (MAPEN) தேசிய நடவடிக்கை என்னை
மன்றத்தின் (MAGERAN) 66 பிரதிநிதிகள், மாநில அரசாங்கம், வருடுக
அரசியல் கட்சிகள், சரவாக், சபா பிரதிநிதிகள், சமயக் குழுக்கள், MAGERAN
நிபுணத்துவ அமைப்புகள், ப�ொதுச் சேவைத் துறை, நாளேடுகள்,
ஆசிரியர்கள், த�ொழிற்சங்க அமைப்புகள், முதலாளிகள்
அமைப்புகள் ஆகியன அங்கம் வகித்தன.
36

தேசியக் க�ோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்கள்

பல்வேறு காரணங்களைக் கருத்தில் க�ொண்டு தேசியக் க�ோட்பாடு உருவாக்கப்பட்டது.
இவற்றுள் ப�ொருளாதார நடவடிக்கை வேறுபாடு, வெவ்வேறான வசிப்பிடச் சூழல்,
மாறுபட்ட அரசியல் புரிதல் ஆகியனவும் அடங்கும்.

ப�ொருளாதார • ப�ொருளாதாரத் துறையில் பணியாற்ற வெளிநாட்டில் இருந்து
1 நடவடிக்கை த�ொழிலாளர்களைப் பிரிட்டிஷ் நிர்வாகம் அழைத்து வந்தது.

வேறுபாடு • ப�ொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப மக்கள் பிரிந்ததால்
சமன்நிலையற்ற ப�ொருளாதார இடைவெளி ஏற்பட்டது.
மலாய்க்காரர் - தற்சார்பு விவசாயம்
சீனர் - சுரங்கத் த�ொழில், வியாபாரம்
இந்தியர் - த�ோட்டத் த�ொழில்

வெவ்வேறான • மலாய்க்காரர்கள் கம்பங்களிலும் உள்புறங்களிலும் வாழ்ந்தனர்.
2 வசிப்பிடச் சீனர்கள் நகரங்களிலும் இந்தியர்கள் த�ோட்டங்களிலும்
வாழ்ந்தனர்.
சூழல்
• இந்த வெவ்வேறான வசிப்பிடச் சூழல் சமூகங்களுக்கிடையே
த�ொடர்பு க�ொள்ளும் வாய்ப்பைக் குறைத்தது.

மாறுபட்ட • மாறுபட்ட அரசியல் புரிதல் நம் நாட்டில்
3 அரசியல் இனங்களுக்கிடையே நெருக்கமற்ற சூழலை
உருவாக்கியது.
புரிதல்
• இந்நிலை இனங்களுக்கிடையே நல்லிணக்கமற்ற சூழலை
உருவாக்கி, 13 மே 1969 இனப்பூசலுக்கு வழிவகுத்தது.

மூலம்: Rukun Negara Malaysia. Kuala Lumpur: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்.

மலாய்க்காரர் குடியிருப்புப் பகுதி இந்தியர்கள் ரப்பர் சீனர்கள் ஈயச் சுரங்கத்தில்

மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் த�ோட்டத்தில் வேலை செய்தல் வேலை செய்தல்
காப்பகம்.
மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக்

காப்பகம். காப்பகம்.
தேசியக் க�ோட்பாடு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் நாம் எனும்
உணர்வையும் வலுப்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தேசியக்
க�ோட்பாட்டினை உய்த்துணர்ந்து அதன் ந�ோக்கத்தினை அடைந்து
அமைதியையும் சுபிட்சத்தையும் உருவாக்குவது நமது கடமையாகும்.

10.3.1 ஆசிரியர் குறிப்பு 37
K10.3.4
தேசியக் க�ோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணத்தை விளங்கிக்கொள்ள
மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

தேசியக் க�ோட்பாட்டின் ந�ோக்கமும் நெறிகளும்

தேசியக் க�ோட்பாட்டின் ஐந்து ந�ோக்கங்களும் ஐந்து நெறிகளும் மலேசியர்களின்
வாழ்க்கைப் பிடிப்பாக விளங்குகிறது. தேசியக் க�ோட்பாட்டில் உள்ள எல்லா
நெறிகளும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும்
ஏற்படுத்தும் திறவுக�ோலாகும்.

ந�ோக்கம்
நம் நாடு மலேசியா அடைய வேண்டிய குறிக்கோள்களாவன:
• அனைத்துச் சமூகத்தினரிடையே மிக அணுக்கமான ஒற்றுமையை

அடைவது;
• ஜனநாயக வாழ்க்கை முறையைப் பேணுவது;
• நாட்டின் சுபிட்சத்தை ஒருங்கே நியாயமாகவும்

நடுநிலைமையுடனும் அனுபவிக்கும் ஒரு நேர்மையான
சமுதாயத்தை உருவாக்குவது;
• பல்வேறு வடிவமைப்பு க�ொண்ட சமுதாயப்  பாரம்பரியங்களுக்குச்
சுதந்திரமான முறையை உறுதிப்படுத்துவது;
• நவீன அறிவியல் த�ொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி த�ொடர்ந்து
முன்னேறும் சமுதாயத்தை உருவாக்குவது;

க�ோட்பாடு

மலேசியர்களாகிய நாங்கள், முழு ஆற்றலையும்
முயற்சியையும் க�ொண்டு குறிக்கோள் நிறைவேற
கீழ்க்காணும் க�ோட்பாடுகளில் கவனம் செலுத்த

வாக்குறுதியளிக்கிற�ோம்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

மூலம்: Malaysia, 2020. 50 Fakta Rukun Negara. Kuala Lumpur: மலேசியப்
பழஞ்சுவடிக் காப்பகம்.

ஆசிரியர் குறிப்பு
38 தேசியக் க�ோட்பாட்டின் நெறிகளையும் ந�ோக்கத்தையும் விளங்கிக் க�ொண்டு

அமல்படுத்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

முதல் ககோட்பாடு
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது சமயம் மலேசியர்களின்
முதன்மையான பிடிப்பு என்பதைச் சுட்டுகிறது. இக்கோட்பாடு பிற
சமூகத்தினரின் சமய வழக்குகளை மதிக்கும் மக்களை உருவாக்குகிறது.
இவற்றைத் தவிர்த்து இக்கோட்பாடு பல்லின மலேசியச்
சமூகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.

மலேசிய சமுதாயத்தினர் தத்தம் சமய நம்பிக்கைகளைக் க�ொண்டுள்ளனர்.

தேசியக் க�ோட்பாட்டில் குறிப்பிட்டுள்ளவாறு பல்லின
சமூக வாழ்வில், சமய நம்பிக்கை ஏன் அவசியமாகிறது?

10.3.2 39

இரண்டாவது ககோட்பாடு
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம்

செலுத்துதல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்பது எல்லா
மலேசிய மக்களும் தங்களின் முழு பற்றுதலையும் விசுவாசத்தையும்
நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தாங்கிய
மாமன்னருக்குச் செலுத்த வேண்டும். இக்கோட்பாடு மலேசியச்
சமூகத்தினரை ஒற்றுமையுடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்கச் செய்கிறது.

மாட்சிமை தாங்கிய மாமன்னரும் மாட்சிமை தாங்கிய பேரரசியாரும்
அரண்மனை அரியணையில் வீற்றிருக்கின்றனர்.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரச மலாய் விரைந்து பதிலளி
இராணுவ முதலாவது படையின் முதன்மை மலேசியாவின் முகாமைத்
அணிவகுப்பைப் பார்வையிட்டு (Batalion தலைவர் யார்?
Pertama Rejimen Askar Melayu Diraja)
ஏற்கிறார். மூலம்: Parlimen Malaysia.
40

மூன்றாவது ககோட்பாடு
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக்

கடைப்பிடித்தல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் என்பது கூட்டரசு
அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம் எனப் ப�ொருள்படுகிறது. இந்தக்
கருத்துருவின்படி கூட்டரசு அரசியலமைப்பைவிட மேலான ஓர் அமைப்பு
இல்லை. மக்கள் அரசியலமைப்பை ஏற்று, கடைப்பிடிப்பத�ோடு அதன்
மாட்சிமையைத் தற்காப்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக்
கடைப்பிடிப்பதைக் க�ோருவதாகும்.

18 மே 2020இல் 14ஆவது நாடாளுமன்ற மூன்றாம்
தவணை முதல் கூட்டத் துவக்க அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி.
மூலம்: Parlimen Malaysia.

21ஆம் நூற்றாண்டுக் தகவல் த�ொலைத்
கற்றல் திறன் த�ொடர்பு த�ொழில்நுட்பம்
(TMK)

விரைந்து பதிலளி 1. மாணவர்களைக் குழுவாரியாகப் பிரித்தல்.
அரசியலமைப்புச் சட்டத்தை 2. நம்பகமான இணைய மூலத்தைக்
உறுதியாகக் கடைப்பிடித்தல்
என்பதன் ப�ொருள் என்ன? க�ொண்டு ஒவ்வொரு குழுவினரும்
கூட்டரசு அரசியலமைப்புத் த�ொடர்பான
தகவல்களைத் திரட்டுதல்.
3. ஒவ்வொரு குழுவினரும் திரட்டிய
தரவுகளைப் படைத்தல்.

41

நீதி அரண், புத்ராஜெயா
நான்காவது ககோட்பாடு

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் என்ற க�ோட்பாடு ஒவ்வொரு
மனிதரும் வரையறுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மதிப்பத�ோடு
அதற்குக் கட்டுப்படவும் வேண்டும் என்று ப�ொருள்படுகிறது.
சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின்
பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இயலும். விசுவாசமிக்க குடிமகனாகிய
நாம் நாட்டில் சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதலைத் தற்காக்க
வேண்டியது அவசியமாகும்.

உயர் நீதிமன்ற வளாகம், ஜ�ொகூர் பாரு, நீதிமன்ற வளாகம், கூச்சிங், சரவாக்.
ஜ�ொகூர்.
விரைந்து பதிலளி
நம் வாழ்க்கையில் ஏன் நாம் ஏன் நாட்டின் சட்டங்களைப்
தேசியக் க�ோட்பாட்டின் பின்பற்ற வேண்டும்?
ந�ோக்கத்தையும்
நெறிகளையும் கடைப்பிடிக்க K10.3.5
வேண்டும்?
42

ஐந்தாவது ககோட்பாடு

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும்
பேணுதல்

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் என்பது மலேசியர்களின்
ஆளுமையை அவர்கள் கடைப்பிடிக்கும் நன்னெறிப் பழக்கங்களின்வழி
பிரதிபலிக்கின்றது. இது கட்டொழுங்கு, தூய சிந்தனை நல்லிணக்கமான
வாழ்க்கைச் சூழலைக் க�ொண்ட சமுதாயத்தை உருவாக்குகிறது. மக்கள்
ஒருவருக்கொருவர் புரிந்து க�ொண்டு ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

21ஆம் நூற்றாண்டுக் அருந்தகம் (cafe)
கற்றல் திறன்

1. அருந்தகச் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் ஒரு நடவடிக்கை
மேசையில் குழுவாக அமர்தல். ஐந்து தேசியக்
க�ோட்பாடுகளைக் குறிப்பிடும்
2. ஆசிரியர் 'நன்னடத்தையையும் வகையில் மனவ�ோட்டவரை
ஒழுக்கத்தையும் பேணுதல் மலேசியர்களின் (i-Think) ஒன்றனை ஆக்கச்
வாழ்க்கை முறை' எனும் தலைப்பினை சிந்தனைய�ோடு வரைந்திடுக.
வழங்குதல். இந்தத் தேசியக் க�ோட்பாட்டை
உய்த்துணர்வதால் ஏற்படும் பயன் என்ன?

3. மாணவர்கள் இத்தலைப்பைக் குழுவில்
கலந்துரையாடுதல்.

நாட்டின் சித்தாந்தம் எனும் வகையில் தேசியக் க�ோட்பாடு மலேசியர்களை
ஆளுமை நிறைந்தவர்களாக மாற்றியிருக்கின்றது. தேசியக் க�ோட்பாடு
பல்லின சமூகத்தினர் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ உதவுகின்றது.
எனவே, நமது அன்றாட வாழ்க்கையில் தேசியக் க�ோட்பாடுகளை
அமல்படுத்துவது மிக அவசியமாகும்.

10.3.2 43


Click to View FlipBook Version