The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by bavshnamurugan, 2022-09-21 11:29:01

தமிழ்ச்சிட்டு

தமிழ்ச்சிட்டு

தமிழசசிடடு

உயர்வோம், உயர்த்துவோம்!

PERSATUAN & PANITIA BAHASA TAMIL
S M K T O K P E R D A N A
SITIAWAN PERAK.

த மி ழ் மொ ழி ப ணி க் கு ழு & த மி ழ் மொ ழி க் க ழ க ம்
தோ க் பெ ர் டா னா இ டை நி லை ப் ப ள் ளி
சி த் தி ய வா ன் , பே ரா க் .

JAWATANKUASA PENERBITAN 'TAMIL CHITTU'

Penaung

PUAN ROSIAH BINTI MOHAMED ARIFF
Pengetua SMK Tok Perdana



Pengerusi I

ENCIK ABDUL HAKIM BIN MOHD ISA
Penolong Kanan Pentadbiran SMK Tok Perdana




Pengerusi II

PUAN SUZANA BINTI ABU BAKAR
Penolong Kanan Hal Ehwal Murid SMK Tok Perdana




Pengerusi III

PUAN SUHAIMAH BINTI MOHD SHUKOR
Penolong Kanan Kokurikulum SMK Tok Perdana




Penasihat

PUAN PUSPAVALLI A/P SATHIVAL
PUAN DEVE A/P KERISNA

PUAN VENUSRI LETCHUMY A/P PUVANESVARAN

Ketua Editor Ketua Artikel
JAYA ALAGHAN A/L KALAIVANAN ALAGESH A/L ASOKKUMAR

Penolong Ketua Editor Ahli Jawatankuasa
BAVISHNA A/P MURUGAN THIVYADHAARSHINI A/P THANGARAJAN
CHARIVIN A/L SHASIKUMAR
Ketua Wartawan
RANISHAH A/P KUMARAI YAH

ஒழுக்கத்தைப் போற்றுவோம்...

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்ச்சிட்டு எனும் மாத
இதழில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வி கற்கும் பருவத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒழுக்கம்
என்பது முக்கியமான ஒன்றாகும். பள்ளிப்பருவம் என்பது நண்பர்களுடன்

மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்து இனிய நினைவுகளைச் சேகரிக்கும்

பருவமாக இருந்தாலும் மாணவர்கள் ஒழுக்க நெறிகளை மீறி நடப்பது
முறையன்று. பள்ளிக்கு மட்டம் போடுவது, ஆசிரியர்களை அவமதிப்பது,

பள்ளி விதிமுறைகளை மீறுவது என அடுக்கடுக்காய்ப் பல குற்றங்களைச்
செய்வது பள்ளியைவிட்டு நீக்கப்படுதல், தேர்வில் தோல்வி அடைதல் எனப்
பல சிக்கல்களைச் சந்திக்கும் சூழலை உருவாக்கும். இந்நிலை

மாணவர்களின் கல்வி வாழ்க்கையைப் பெருமளவில் பாதிக்கும் என்பதை
என்றும் நினைவில் கொள்ள வேண்டும். “பருவதே பயிர் செய்” என்ற

சான்றோரின் அறிவுரையை மறந்த பலர் இன்று காலம் கடந்து கண்ணீர்
கடலில் மூழ்க்கிக் கிடக்கின்றனர்.

எனவே, வாழ்க்கை பாதையில் வழுக்கி விழாமல் தாங்கி பிடிக்கும்
ஊன்றுகோலாக மாணவர்கள் ஒழுக்கத்தைப் பார்க்க வேண்டும்.

ஒழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டவர்களே வாழ்க்கையில் பல
சாதனைகளைப் படைத்துள்ளனர் என்பது மறுக்கவியலா உண்மை.
சவால்கள் நிறைந்த இன்றைய 21- நூற்றாண்டில் மாணவர்களாகிய நீங்கள்

கல்வியையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டால் மட்டுமே
உங்கள் எதிர்காலம் பிரகாசிக்கும்.

“என் வாழ்க்கை என் கையில்”
என்பது வாசகம் மட்டுமல்ல அதுவே உண்மையின் வெளிச்சம்.




நன்றி, வணக்கம்.

தமிழ்சிட்டு ஆலோசகர்,
திருமதி புஷ்பவள்ளி த/பெ சத்திவேல்




1

நேர்காணல் வாங்க
பழகலாம்!

திருமதி சீலா தேவி த/பெ குணாளன்,
அறிவியல் ஆசிரியர்,
தொக் பெர்டானா இடைநிலைப்பள்ளி.

நிருபர் : வணக்கம் ஆசிரியை. நலமாக இருக்கிறீர்களா? ஆகஸ்ட் மாத
‘தமிழ்ச்சிட்டு’ எனும் இதழின் வெளியீட்டுக்குத் தங்களை நேர்காணல்
எடுக்க ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி, ஆசிரியை.

ஆசிரியர் : வணக்கம் என் அன்பு மாணவியே. நான் நலமாக இருக்கிறேன்.

என்னை நேர்காணல் எடுக்க வந்தமைக்கு நான்தான் நன்றி கூற
வேண்டும். இந்த நேர்காணலில் நான் கூறப் போகும் கருத்துகள் நம்
மாணவர்களுக்குப் பல பயன்களைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

நிருபர் : உங்களின் நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும், ஆசிரியை. நாம்
நேர்காணலைத் தொடங்குவோம். முதலில் உங்களை அறிமுகப்
படுத்திக் கொள்ளுங்கள், ஆசிரியை.

ஆசிரியர் : என் பெயர் சீலா தேவி த/பெ குணாளன். நான் இப்பள்ளியில் படிவம் 3,
படிவம் 4 மற்றும் படிவம் 5 மாணவர்களுக்கு அறிவியல் மற்றும்
உயிரியல் பாடங்களைப் போதிக்கிறேன்.

நிருபர் : நல்லது ஆசிரியை. நீங்கள் எங்குப் பயின்றீர்கள் என்று தெரிந்து
கொள்ளலாமா?

ஆசிரியர் : கண்டிப்பாக. நான் என்னுடைய ஆரம்பக்கல்வியைப் பூலோ ஆக்கார்
தோட்டத்தமிழ்ப்பள்ளியில் தொடங்கினேன். பின்பு படிவம் 5 வரை
அம்புரோஸ் இடைநிலைப்பள்ளியில் பயின்றேன். பின்னர், ஏ.சி.எஸ்
இடைநிலைப்பள்ளியில் எஸ்.டி.பி.எம் பயின்று பின்னர் மலாயா
பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியைத் தொடர்ந்தேன்.

நிருபர் : நன்று, ஆசிரியை. நீங்கள் எத்தனை வருடங்களாக ஆசிரியராகப்
பணி புரிகிறீர்கள்?

ஆசிரியர் : நான் 16 வருடங்களாக ஆசிரியராகப் பணி புரிகிறேன். நான் 2009-ஆம்
ஆண்டில் இப்பள்ளிக்கு ஆசிரியராக வந்தேன். பல ஆண்டுகளாக
இப்பள்ளியில் போதிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

2

நிருபர் : மிக சிறப்பு, ஆசிரியை. அடுத்ததாக, நம் பள்ளியின் தமிழ்
மாணவர்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

ஆசிரியர் : நம் பள்ளியின் தமிழ் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைப்
பற்றி விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் கல்வியைத் தங்கள் வாழ்வின் அடித்தளமாகக்
கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே
எனது கருத்து.

நிருபர் : மிக அருமையாகக் கூறினீர்கள். இந்தப் பணியைத்
தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன, ஆசிரியை?

ஆசிரியர் : நான் முதலாம் ஆண்டு பயிலும் போதிலிருந்தே ஆசிரியராக
வேண்டும் என்பதே என் எதிர்கால ஆசையாகும். அவ்வாசை என்
தமிழாசிரியரைப் பார்த்து உண்டாகியது.

நிருபர் : மிக்க நன்று, ஆசிரியை. மேலும், கற்பித்தலில் உங்களின் மிகப்
பெரிய சாதனை யாது?

ஆசிரியர் : என்னிடம் படித்த மாணவர்கள் இன்று பலர் மருத்துவர்,
பொறியியலாளர், வழக்கறிஞர் எனப் பல துறைகளில் பணி
புரிகின்றனர். அதுமட்டுமின்றி, பி.எச்.டி மற்றும் ‘மாஸ்டர்’
பட்டங்களையும் பெற்றுள்ளனர். இதையே நான் என் கற்பித்தலின்
மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

நிருபர் : அருமை, ஆசிரியை. இறுதியாக, இக்காலத்து மாணவர்களுக்குக்
கல்வியைப் பற்றி நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

ஆசிரியர் : மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு

எனும் மூதுரையை மாணவர்கள் உணர்ந்து கல்வியில் கவனம்
செலுத்தினால் ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’
என்பது போல அவர்கள் எங்குச் சென்றாலும் சிறப்புப் பெறுவர்;
மதிக்கப் படுவர்.

நிருபர் : மிக அருமையாகக் கூறினீர்கள், ஆசிரியை. நீங்கள் கூறிய

கருத்துகள் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணி போல பதியும்
என நம்புகிறேன். என்னுடன் உங்களின் நேரத்தைச்
செலவிட்டதற்கு மிக்க நன்றி, ஆசிரியை.

ஆசிரியர் : மிக்க நன்றி, என் அன்பு மாணவி. உயர்வோம் ; உயர்த்துவோம்.

3

அறிவுக்கூடம்

நாம் பெற்ற சுதந்திரம்

சுதந்திர தினம் என்பது 1957-ஆம் ஆண்டில் ஆங்கிலேய காலணி
ஆட்சியிடமிருந்து  மலாயா கூட்டமைப்பு  விடுதலை பெற்ற நாளாக 31 ஆகஸ்டு
அன்று கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களுடன் விடுதலைக்கான
பேச்சுவார்த்தைக்காக, துங்கு அப்துல் ரகுமான்  தலைமையில் அமைச்சர்கள்,
மலாயாவின் அரசியல் தலைவர்கள், மலாயன் சீன அசோசியேசன் தலைவர்
துன் டத்தோ சர் டான் செங் லொக் மற்றும்  மலேசிய இந்தியக்
காங்கிரசின் தலைவர் துன் சம்பந்தன் ஆகியோர் இலண்டன் சென்றனர். 

மலாயா அவசர காலத்தில்  கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 8
பிப்ரவரி 1956-இல் ஆங்கிலேய அரசாட்சியிடமிருந்து விடுதலைக்கான
ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், நிர்வாக காரணங்களால் 31 ஆகஸ்டு 1957 என்று
இறுதியில் முடிவானது. விடுதலை நாள் நிகழ்ச்சிக்காக  மெர்டேக்கா
மைதானம்  கோலாலம்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டது. 30 ஆகஸ்டு 1957 இரவு
கோலாலம்பூர்  ராயல் சிலாங்கூர் கிளப்,  விடுதலை சதுக்கத்தில்  ஆங்கிலேயர்
ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர்.
பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துலை ரகுமான் 11:58 பின்னேரத்தில்
வந்தார். இரண்டு  நிமிடம் மின்விளக்குகள் .அணைக்கப்பட்டு  மீண்டும்
ஏற்றப்பட்டன.

யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது. புதியகொடி

ஏற்றப்பட்டு  மலேசிய  நாட்டுப்பண்  இசைக்கப்பட்டது. இதனைத்

தொடர்ந்து  ஏழு  முறை மெர்டேக்கா  என்று  துங்கு அப்துல்

ரகுமான்  குரல்  எழுப்பினர். 31 ஆஸ்ட்டு 1957 காலை கொண்டாட்ட நிகழ்வுகள்

மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டன. காலை 9:30க்குத் துவங்கிய அந்தக்

கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து

கொண்டனர்.  மலாய்  மாநில  ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள்,

கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.

ஐக்கிய  இராச்சியத்தின்  இரண்டாம்  எலிசபெத்தின்  பிரதிநிதியாக 
பிரிண்ஸ் ஹென்ரி விடுதலை சாசனத்தைத் துங்கு அப்துல் ரகுமானிடம்
வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட  துங்கு  மலேசிய  விடுதலை
சாசனத்தை வாசித்தார்.

4

தொடர்கதை

நி றை வே று மா ?

"டேய், 7 மணிவரைக்கும் விளையாடுவோம் 8 மணிக்கு அப்பா வந்துருவாரு"

என்று கூறிமுடிப்பதற்குள் அவனின் அப்பாவின் மோட்டார் சைக்கிளின் ஓசை
அவனின் காதுக்கு எட்டியது தொலைவில் அவனின் அப்பா வந்து கொண்டிருந்தார்.

அவனின் அப்பா கண்டும் காணாததுபோல் வீட்டினுள் நுழைந்தார்.
"செத்தாண்டா சிவனாண்டி" அவன் நண்பர்கள் அவனைக் கேலி செய்ய நகுலன்
பயத்துடன் வீட்டை நோக்கி நடக்கலானான். எப்பொழுது போல் இல்லாமல் அன்று
அவனின் அப்பா சற்று மாற்றமாகவே காணப்பட்டார்.

அவனைக் கோபத்துடன் பார்க்கும் கண்களும் கடிந்து பேசும் வாய்களும் சாந்த
நிலையில் இருந்தன. நகுலன் வியப்புடன் அவர் அருகில் சென்றான்.

"அப்பா" என்ற வார்த்தை தொண்டையில் சிக்கித் தவித்து வெளியே வந்தது.
"இங்க பாரு, நீ விளையாடனதுக்கு நான் ஏசலனு ரொம்ப சந்தோஷமா இருக்காத,
அடுத்த வாரத்தில் இருந்து நீ இங்க இருக்க போறது இல்ல. உன்ன நான் இந்தப்
பரீட்சை முடிஞ்சி ஆசிரமத்துல சேர்த்து விடலாம்னு இருக்கேன். இங்க இருந்து
இப்படி இருக்கிறதுக்கு பதிலா நீ போய் அங்க படிக்கிற வேலைய பாரு. அது விடுதி
மாறி அங்கேயே பள்ளிக்கூடம் இருக்கும். அங்கேயே தங்கி படிக்கிறது தான், படிவம்
நான்கும் ஐந்தும் அங்கேயே படி, அங்க சுலபமா அரசாங்க வேலை கிடைக்கும்.
புரிஞ்சதா " என்று அவர் கூறுவது நகுலனுக்கு இரு பக்கக் கட்டுரையை 30
வினாடிகளிலேயே வாசித்தது போல இருந்தது.

கண்ணீர் குளமாய் நீர் தேங்க அதைத் துடைக்காமல் பாட்டி மடியில் சாய்ந்தான்
நகுலன். " ஐயா அழுவாத அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வாரு"

என்று ஆறுதல் கூற நகுலனின் மனமோ அவன் பள்ளியையும் நண்பர்களையும்
பந்து விளையாட்டையும் நினைத்து ஏங்கியது. அவனின் கனவு நிறைவேறுமா
என்ற எண்ணம் அவனின் மனதில் வினாவாக தோன்றியது.

கண்ணை மூடி திறப்பதற்குள் அவனின் படிவம் 3 தேர்வும் முடிந்தது. அவன்
அப்பா கூறிய அந்த ஒரு வார காலமும் முடிந்தது. வீட்டின் வெளியே அவனின்
நண்பர்கள் கண்ணீருடன் நிற்க, அவனின் அப்பா அவரின் மோட்டார் சைக்களில்
நலனுக்காக நிற்க, அவன் பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு ஒரு கையில் துணி

பையுடன் மறுகையில் பந்துடன் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன்

கனவைச் சுமந்தவாறு பேராக்கிலிருந்து கெடாவில் உள்ள ஆசிரமத்திற்குப்
புறப்பட்டான் நகுலன்.

அவனின் கனவுகளை அந்த புதுப்பள்ளி, அந்த ஆசிரமம், அங்கு உள்ள

நண்பர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் கெடாவைச்
சென்றடைந்தான்.

மீண்டும் அடுத்த இதழில் இறுதியாகச் சந்திப்போம்!

ஆக்கம் : 5
புஷ்பரித்தா த/பெ லோகேஸ்வரன்
படிவம் 4 STEM A

அறிவுக்கூடம்

நாட்டின் அடையாளம்

நெகாராகூ என்பது மலேசிய நாட்டுப் பண் ஆகும். 1957-ஆம்

ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு விடுதலை

பெற்ற போது நெகாராகூ நாட்டின் தேசிய தீதமாகத் தெரிவு
செய்யப்பட்டது. இந்தப் பாடலின் மெட்டு முதலில் மலாயா கூட்டரசின்

ஒரு பகுதியான பேராக் மாநில அரசின் நாட்டுப் பண்ணுக்கு உரிய
மெட்டாகப் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் பாடலாசிரியரான பியர்-
ஜீன் டி பெரஞ்சர் (Pierre-Jean de Béranger) எழுதிய லா ரோசாலி (La Rosalie)
எனும் பிரெஞ்சுப் பாடலுக்கான மெட்டைத் தழுவி உருவாக்கப்பட்டது.

செம்பருத்தி மலர் மலேசியாவின் தேசிய மலர். சுதந்திரம்

அடைந்த பிறகு, தேசிய மலராகத் தேர்ந்தெடுக்க பொருத்தமான

பூவை முன்மொழியுமாறு வேளாண்மை அமைச்சகத்திற்கு

அறிவுறுத்தப்பட்டது. 28 ஜூலை 1960 அன்று நடந்த விவாதங்களுக்குப்

பிறகு, மலாயா கூட்டமைப்பின் தேசிய மலராகச் செம்பருத்தி மலர்

அறிவிக்கப்பட்டது. மலாயா சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக்

ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவை உருவாக்கியபோது,

செம்பருத்தி மலர் தேசிய மலராகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

மலாயா புலி மலேசியாவின் அதிகாரப்பூர்வ விலங்கு. இந்தச்
சின்னம் மற்ற மலேசிய நிறுவனங்களின் சின்னங்களிலும் உள்ளது.

புலி சின்னம் மலேசியர்களின் தைரியத்தையும் வலிமையையும்
காட்டுகிறது. இந்த மலாயா புலிக்கு "பாக் பெலாங்" போன்ற பல்வேறு
புனைப்பெயர்களும் உள்ளன.

நம் நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும். இதுவும் நம்
நாட்டின் முக்கிய அடையாளமாகும். மொழி இனத்தின் உயிராகும். 1957
இல் கூட்டரசு மலாய் நாடுகள் அமைக்கப்பட்டபோது மலாய் மொழி,
நமது நாட்டின் தேசிய மொழியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152
வது பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்பட்டத்து.

6

வாசிப்போம் வாரீர்

நான் ஒரு
பி ர த ம ரா னா ல்

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்", அதே வேளையில் "கனவு காணுங்கள் " என்று
இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஊட்டிய உலக
மாமேதை அப்துல் கலாமின் தன்னம்பிக்கையூட்டும் வரிகளாகும். அவ்வாறே
என் சிந்தனையைக் கட்டி இழுத்த ஆசை நம் நாட்டின் பிரதமராவதுதான்.
நான் பிரதமரானால் என் நாட்டுக்கும் மக்களுக்கும் நிறைய சேவை
செய்வேன்.

முதலில், நான் மருத்துவத்துறையில் நவீன தொழில் நுட்பத்தைக்
கொண்டு "3டி" எலும்புகள் அச்சிடும் தொழில்நுட்பக் கருவி ஒன்றனை
வடிவமைத்துக் கொடுப்பேன். விபத்தினால் உடலில் எலும்புகள் உடைந்து
நோயாளியாகப் பலர் உள்ளனர். இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் உடல்
அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். "வாழ்ந்து ஒரு
பயனுமில்லை" என்று அவர்களின் ஆழ்மனத்தில் ஒர் எண்ணம் தோன்றும்.
இது போன்ற இருண்ட வாழ்க்கையில் இருப்பவர்களை வெளிச்சத்திற்குக்
கொண்டு வரவே நான் இந்தத் தொழில்நுட்பக் கருவியை உருவாக்கித்
தருவேன். இந்த "3டி" எலும்புகள் அச்சிடும் கருவி நோயாளிகள், தாங்கள்
இழந்த எலும்புகளை இக்கருவியைப் பயன்படுத்தி போலி எலும்புகளை
உருவாக்கி மருத்துவர் உதவியுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்பு
இயல்பான வாழ்க்கை வாழலாம் .

நம் நாடு எவ்வளவு பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்திருந்தாலும்
இக்காலக்கட்டத்தில் இங்கு நிலவி வரும் நோய்களுக்குத் தீர்வு காணாமல்
இருக்கின்றது. அந்த வகையில் நான் இந்த நோய்களைக் குணப்படுத்தும்
'ஸ்மார்ட் ஊசிகளை' உருவாக்குவேன். எடுத்துக்காட்டாக கோவிட் -19 ,டிங்கி
காய்ச்சல்,பறவை காய்ச்சல் போன்ற கொடிய நோய்களிலிருந்து என்
நாட்டைக் காப்பேன். இவ்வூசியைப் போட்ட சில வினாடிகளில் நோய்
குணமாகிவிடும். இதன் மூலம் மக்கள் தங்கள் பணத்தைச் சிகிச்சைக்கும்
மற்றும் மருந்துகளுக்கும் செலவழிக்கத் தேவையில்லை. அதோடு, கொடிய
நோயால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். என்
நாடு என்னால் பெருமை அடைகின்றது என்றால் அது என்னைத் தவிர்த்து
மக்களையும் சாரும். நம் நாடு நம் பொறுப்பு எனும் கூற்றை மெய்ப்பிப்பேன்.

7

மேலும், ஏழை மக்கள் ஒர் இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல
பணம் செலுத்தி வாகனத்தைப் பயன்படுத்த முடியாது; ஆபத்து அவசர
வேளையில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆகவே, அவர்கள் சிரமத்தைக்
குறைக்க இந்நவின தொழில்நுட்ப 'பறக்கும் காலணிகளை' உருவாக்கிக்
கொடுப்பேன். அவர்கள் இந்தப் பறக்கும் காலணியைப் பயன்படுத்தி எங்கு
வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பறந்து செல்லலாம். கிணற்றுத்

தவளையாக இருக்கும் மக்களின் பொது அறிவைப் பெருக்க அவர்களுக்கு
விடிவிளக்காக இக்காலணி அமையும்.

மேலும், பலம் பொருந்திய உலோகத்தால் உருவாக்கப்பட்டு மிகத்

துல்லியமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட செயற்கை மூளை

பொருத்தப்பட்டு பல ஆச்சரியமூட்டுகின்ற ஆற்றல்களையுடைய நவீன
தொழில்நுட்ப 'இயந்திர மனிதனை' உருவாக்குவேன். என் நாடு எதிர்

கொள்ளக்கூடிய சவால்களை இந்த இயந்திர மனிதன் தன் ஆற்றலால்
சமாளிப்பான். மேலும் மக்களை அழிக்க நினைக்கின்ற தீவிரவாதிகளை

இந்த இயந்திர மனிதன் அழிப்பான். இதனை நாட்டுப் பாதுகாப்பிற்கும்
இராணுவத்தினர் பயன்பாட்டிற்கும் உருவாக்குவேன். அவர்களைப் போன்ற
தீய சக்திகளை அழிப்பதனால் என் நாடு அமைதியடையும்; மக்கள்
மகிழ்ச்சியாக வாழ முடியும்.

கடைசியாக, நான் கல்வித்துறையில் முக்கிய மாற்றம் ஒன்றனைச்
செய்வேன். நான் நவீன தொழில்நுட்பப் பள்ளிக்கூடம் கட்டுவேன்.
இப்பள்ளிக்கூடத்தில் நிறைய தொழில்நுட்ப வசதிகள் நிறைந்திருக்கும்.
இப்பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் புத்தக வடிவத்தில் அமைந்திருக்கும்.
அப்புத்தகத்தைப் பாடத்திற்குத் தகுந்தவாறு திருப்பிக் கொள்ளலாம்.

இதனால் மாணவர்கள் பள்ளிக்குப் புத்தகம் மற்றும் புத்தகப்பையைக்
கொண்டுவரத் தேவையில்லை. அதுமட்டுமல்லாது, இப்பள்ளிக்கூடம்
தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட "ஓசோன்" பலூனுக்குள் இருக்கும்.
பூமியின் "ஓசோன்" படலம் ஓட்டை விழுந்து பாதுகாப்பற்றதாக இருப்பதால்

என் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்கள் வெயில் தாக்காமல்
இருப்பார்கள். சிறப்பானதொரு மாணவ சமுதாயத்தை உருவாக்க வாழ்நாள்
முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

என் ஆசை நிறைவேறினால் நம் மலேசியத் திருநாடு உலகமே வியக்கும்
வண்ணம் மாற்றிக் காட்டுவேன். நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்
என்பதற்கேற்ப என் குடும்பத்தாரின் பெயரைக் காப்பாற்றுவேன். ஒரு நாள்,
நான் பிரதமராவேன். என் ஆசை நிறைவேற தினமும் இறைவனை
வேண்டுகிறேன்.

ஆக்கம்

செ.ரோஷ்னி
படிவம் 3A1

8

மாணவர் கைவண்ணம் பெயர்: படிவம்:

வர்ணம் தீட்டும் போட்டி

மாணவச் செல்வங்களே, உங்கள் திறமையை வெளிப்படுத்த
இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்ப்பாரா பரிசுகளைத்

தட்டி செல்லுங்கள்!!!

மேலே கொடுக்கப்படுள்ள படதிற்கு அழகுபட வர்ணம் தீட்டி
உங்களின் பெயரையும் படிவத்தையும் பூர்த்தி செய்து வரும்

செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் தமிழ்ச்சிட்டு செயலவை
உறுப்பினர்களிடம் ஒப்படைக்கவும்.

9

கவிதை சோலை

காதலை விட ஒரு தூய அன்பிற்கு ஆக்கம்
அடையாளம் யார் என கேட்டால்; அ.கோமளன்

என் நண்பன் உன்னைச் சொல்வேன்!!! படிவம் 1A1
நட்பு என்பது தேடினாலும்;

கிடைக்காத ஒரு வரம்!!!
நண்பா!!! நீ இல்லாவிட்டால்

என் மனம் தாங்காது!!!

புகழை மறந்தாலும், தெரிந்தவர் வந்தால் வாழாட்டும்;
நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! தெரியா தோரை பயமூட்டும்;
அது இன்னொரு முறை நீ வீட்டுத் தோழன் நாய்க்குட்டி;
அவமானப்படாமல் காப்பாற்றும்!!
விரும்இ வளர்ப்போம் நாய்க்குட்டி.
ஆக்கம்
ஆக்கம்
ரா. டுவன் பிரகாஷ்
படிவம் 4K2 பி. ஹரிராகவ ராவ்
படிவம் 2A5

அம்மா, நீங்கள் ஒரு அற்புதமான தாய், ஆக்கம்
மிகவும் மென்மை யானவர் ஆனாலும் சி. நிவனேஸ்
படிவம் 2A1
மிகவும் வலிமை யானவறும் கூட
நீங்கள் அக்கறை காட்டும் பல வழிகள் 10

எப்பபொழுதும் நான் உங்கள் சொந்தம்
என்று என்னை உணரச் செய்வீர்கள்

நான் முட்டாள்தனமாக இருக்கும்ப போது
நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள்.

நான் கேட்கும்போது நீங்கள் வழிகாட்டுகிறீர்கள்;
நீங்கள் எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது;

நீங்கள் ஒவ்வொரு பணிக்கும் அறிவாளி.

நினைவு தினம்

தமிழுக்காக வாழ்ந்த

பாரதிக்குத் தமிழ் அஞ்சலி

தோற்றம் - 11/12/1882
மறைவு - 12/9/1921

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

சின்னசாமி  ஐயர்  இலக்குமி  அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882-இல்
தமிழ்நாட்டின்  தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின்
இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு
இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம்
வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும்
ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு
தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம்
மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர்
எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை
விடுத்து  காசிக்குச்  சென்றார். 1898 முதல்  1902  வரை அங்குத் தங்கி இருந்தார். பின்னர்
எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு
ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர்,  1904-ஆம் ஆண்டு  மதுரையில்  பாரதி எழுதிய
பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில்
இதழாசிரியராகவும் மதுரையில்  சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்  தமிழாசிரியராகவும்
பணியாற்றினார்.

பாரதி  தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி,  சமசுகிருதம்,  வங்காள மொழி  ஆகியவற்றில்
புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

11

சிறுகதை

புதிய ஒளி

“சிவா ! இன்றைக்குப் பந்து விளையாட வருவாயா ? திடலுக்குப் போய் ரொம்ப
நாளாச்சி. நீயும் வாயேன், நம்ம பந்து விளையாடலாம்,” என்று பள்ளி மணி
அடித்தவுடனே தன் கோரிக்கையை விடுத்தான் கபிலன்.

“அ...அ... அதுவாடா ? இன்றைக்கு எனக்கு வேலை இருக்கும் நினைக்கிறேன்.
முடிஞ்சா வரேன். இல்லனா இல்லடா.” என்று வார்த்தைகளை விழுங்கியவாறே பதில்
கொடுத்தான் சிவா.

“அப்படி என்ன வேலை? எது வேலைனா வீட்டுலயே ஒட்கார்ந்து இருப்பதா ? ஏண்டா
வீட்டையே கட்டி அழற ? வெளிய வந்து தான் பார்றேன். பள்ளி முடிஞ்சி வீட்டு உள்ள
போனா, மறுநாள் காலையில பள்ளி வர கதவ திறக்கற. வந்து எங்களோட பழகு," என்று
தன் மனதில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆதங்கத்தைக் கொட்டினான் கவிலன்.

“என் குடும்ப சூழ்நிலை உனக்குச் சொன்னாலும் புரியாது. அஃது
என்னுகுள்ளேயே இருக்கட்டும்,” என்று நினைத்தவாறே குனிந்த தலை நிமிராமல் தன்
வீட்டிற்கு விரைந்தான் சிவா .

சிவா ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவனாவான். அப்பா, அம்மா,

தங்கை என்பவர்களையே வாழ்க்கையாய்க் கொண்டிருந்தான். ஆம் அவர்கள்

நால்வரும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் முகம் சுழித்துக்கொண்டதில்லை.

அவ்வளவு அன்பு, பாசம். ஆனால், இந்த இறைவனுக்கோ அது பொறுக்கவில்லை. சில

நாள்களிலே பரித்து விட்டான். சிவா 14 வயது இருக்கும் போது சாலையில் நடந்தி கோர

விபத்தால் தன் தாயை இழந்தான். பிள்ளைகள் சிறு வயது என்பதாலும் அவர்களைப்

பார்க்க ஒரு தாய் வேண்டும் என்பதாலும் கபிலனை அப்பா மறுமணம்

புரிந்துகொண்டார். ஆனால் இங்கே தாண் சிக்கல், ஆரம்பம்.

“டே, சிவா. ஏண்டா ஒரு மாதிரி இருக்குற ? என்ன ஆயிற்று? வீட்டுல ஏதாவது
பிரச்சனையாடா ?” என்று கேட்டான் சிவாவின் இணைப்பிரியாத் தோழன் மாறன்.


“அது ஒன்னும் இல்லடா. என் சித்தி இருக்காங்களே, அவங்கனாலத்தான்.
ஏன்தான் என் அப்பா இவங்கள கல்யாணம் பண்ணாருன்னு தெரில. ஒரே
சித்திரைவதை,” என்று எல்லாவற்றையும் கக்கி அழுதான் சிவா.

மறுநாள் .…

“எல்லாரும் நேற்று கொடுத்த வீட்டுப் பாடத்தை எடுத்து மேசை மேல வைங்க,”
என்று ஆசிரியர் திரு. பாலன் சொல்லியதுமே சிவாவின் கண்கள் பிதுங்கின.
என்னவாக இருக்கும் ? வீட்டுப்பாடம் செய்யவில்லை.

“சிவா ஏன் வீட்டுப்பாடம் செய்யல? வீட்டுல ரொம்ப வேலையோ?”
என்று கேட்ட அவர் மறுவார்த்தைப் பேசாத சிவாவின் முதுகில் தட்டினார். சிவாவின்
முகத்தில் ஈயாடவில்லை,

12

“அப்புறம் வந்து என்ன பாரு," என்று சொல்லிவிட்டு சென்றார் திரு.பாலன்.
சிவாவும் ஓய்வு நேரத்தின் போது அவரைக் கண்டான்.

“உனக்கு என்ன பிரச்சனை? ஏன் வகுப்பில கூட யாரு கிட்டயும் பேசாம தனியா
இருக்க? வீட்டுப்பாடம்கூட செய்யல. உன்ன இப்படி பார்த்தது இல்லயே! ஏன்டா, சொல்லு.
ஒரு ஆசிரியரா இருந்து ஒரு தீர்வு கண்டு தரேன்,” என்று கேட்டதில் அவரின் அன்புள்ளம்
தெரிய வந்தது,

“உங்களுக்கே தெரியும் தான சார். என் அப்பா இரண்டாவது

திருமணம் பன்னிகிட்டாருனு. அந்த சித்தி தான் சார், என் வாழ்க்கையைத்

திருப்பிட்டாங்க. அப்பா இருந்த ஒரு மாதிரியும் அப்பா இல்லனா ஒரு மாதிரியும்

பார்க்கறாங்க, இல்ல… இல்ல… நடந்துக்குறாங்க. அவங்க என்னையும் என்

தங்கையையும் அப்படி போட்டு அடிப்பாங்க. சரி, நான் பரவாயில்லை. என் தங்கை பாவம்

சார். ஒன்றும் தெரியாத பச்சை குழந்த சார். மதியம் விளையாட திடலிக்குப் போனா

அங்கேயே வந்து அடிக்கிறாங்க. தங்கை பசிக்கிதுனு உணவு கேட்டா, உணவு இல்லனு

விரட்டிவிடுராங்க. சரி, பள்ளிக்குப் போகலாம்று காலையில கிளம்பினா, பள்ளிக்கு

போய் என்ன பன்ன போற? வேலைக்கு போனாலாச்சும் பத்து வெள்ளி கிடைக்கும்னு

திட்டுறங்க சார். இப்படினா எப்படிப் படிக்கத் தோணும்? என் அம்மா இருந்திருந்த

இப்படிலாம் நடந்திருக்குமா? அதான் சொல்லுவாங்க போல, கடவுள் நல்லவங்கள

ரொம்ப சோதிப்பாருனு,” என்று தன் மனதின் சிறையில் போட்டு மூடப்பட்ட

இரகசியத்தை ஆசிரியரிடம் கொட்டினான். சிவாவின் கண்கள் மழையாகி குளமாகின.

“சரி. இப்ப அவங்கள் என்ன செய்யலாம்னு நினைக்கிற?" என்று ஆசிரியர்
கேட்கவே, “அவங்க எங்களுக்கு வேண்டாம் சார்,” என்று அழுதுக் கொண்டே
பதிலளித்தான் சிவா.

“இதான் உன் இறுதி முடிவா?”

“ஆம்,” என்று ஏதோ ஒரு நிலையில் விடைகூறினான்.

“சரி நீ போ, பார்க்க வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று சிவாவிற்கு
நம்பிக்கைக் கொடுத்தார் திரு. பாலன்.

மறுநான் ... வழக்கம்போல் சித்தியின் கொடுமைகள் சற்று கூடுதலாகவே
இருந்தன. சிவாவின் சித்தி ஊர் முன்நிலையில் சிவா வேலை செய்யாததற்கு
அவனைப் பிரம்பால் அடித்தார். சிவா கதறுவது அனைவரின் காதுகளில் விழுகிறதே
தவிர உதவ யாரும் முன்வரவில்லை.

அப்பொழுது...

ஒரு காவல் துறை வாகனம் எச்சரிக்கை ஒலியோடு தங்கள் குடியிருப்புப்
பகுதிக்கு வருவதை எல்லோரும் பார்த்தனர் ; அதிர்ச்சியில் முழ்கினர். எதற்கு? எதற்கு?
என்று அனைவரும் கேட்க, சிவா தன் கண்ணீரைத் துடைத்தவாறே பெருமூச்சு விட்டது
அனைவரின் கேள்விகளுக்கும் பதிலாகியது.

ஆக்கம் : 13
கவிப்பிரியா த/பெ சண்முகம்
படிவம் 5RC

கவிதை சோலை

இயற்கை

அழகான இயற்கை ! அப்பா ,எனக்கு பேட் மேனைப் பிடிக்கும்
என்பது உங்களுக்குத் தெரியும்
அதிகாலையில் வெண்பனி அழகு சூப்பர்மேன் கூட பிடிக்கும்
அந்திமாலையில் செந்நிறம் அழகு ஆனால் எனக்கு அவை உண்மையில்
மலர்கள் துளிர்க்கின்றதே அது அடிகு தேவையில்லை
அதன் மேல் உள்ள வண்டுகள் அழகு என்னுடன் நீங்கள் இருக்கும் வரை !

ரோஜாவின் இதழ்கள் அழகு ஆக்கம்
அதில் உள்ள முற்களும் அழகு
கடல்களின் அலைகள் அழகு சி. நிவினேஸ்
கரையைக் கடந்து போகும் காற்றும் அழகு படிவம் 2A1

காற்றில் அசையும் மரங்கள் அழகு
இலைகளைத் தாங்கும் கிளைகளும் அழகு
ஆற்றில் உள்ள குட்டி மீன்கள் அழகு
கடலைச் சேரும் நதியும் அழகு

இரவில் முழுமையான பிறை அழகு பள்ளிக் கூடம் செல்வேன்
மின்னும் நட்சத்திரங்கள் அழகு பாடம் நன்றாய்ப் படிப்பேன்
சூரியன் முகத்தைப் பார்க்கும்
சூரியகாந்தியின் விடியல் அழகு துள்ளிக் குதித்தே வருவேன்
இறைவன் படைப்பில், எல்லாம் அழகு. தூய உணவே உண்பேன்


பள்ளிக் கூட வாழ்க்கை
ஆக்கம் பழத்தைப் போல இனிக்கும்

கு. ரசிகா அள்ளி அள்ளிக் கொடுக்கும்
படிவம் 4 STC அறிவை நிறையப் பெறுவேன்

பள்ளிக் கூடம் போவேன்
பாட்டுப் பாடி மகிழ்வேன்

துள்ளி துள்ளித் திரிவேன்
துடுக்காய்ப் பேசி மகிழ்வேன்!

தொகுப்பு

கு. ரனிஷா
படிவம் 2A1

14

விடுகதை

விடுகதைகள்

1.பத்து மாடியில் இருந்து தூக்கி
எறிந்தாலும் அடிபடாது. ஆனால்,
அருகில் உள்ள தண்ணீரில் போட்டால்

செத்துவிடும். அது என்ன?



2. மேலே மேலே செல்லும். ஆனால்

கீழே வராது. அது என்ன?



3. காது பெரிசு கேளாது. வாய் பெரிசு
பேசாது. வயிறு பெரிசு உண்ணாது.

அது என்ன?



4. உடம்பில்லா ஒருத்தன் பத்து சட்டை

அணிந்திருப்பான். அவன் யார்?



5. அதட்டுவான், அலறுவான். ஆனால்

கோட்டையைவிட்டு வரமாட்டான்.
அவன் யார்?

விடைகள் மாறியுள்ளன:
வெங்காயம், காகிதம், நாக்கு,

வயது, அண்டா

15

வாசிப்போம் வாரீர்

“ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்”

என்கிறார் திருவள்ளுவர். ஒரு மனிதனது வாழ்க்கையில் ஒழுக்கம்

அவனது உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. ஆதலால் தான் வாழ்வில்

ஒழுக்கம் உயிரை விட மேலானதாகப் பார்க்கப்படுகிறது. ஒழுக்கம்

தவறியவர்கள் வாழ்வில் உயரமுடியாது மாறாக துன்பங்களையே சந்திக்க

நேரிடும். ஒ

நாம் மனதிலே எண்ணிய எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற
ஆசை மனிதனுக்குத் தோன்றக் கூடாது. உலகின் எல்லா

துன்பங்களுக்கும் காரணம் ஆசையே என்று போதிக்கின்றார்

புத்தபெருமான். நமது வாழ்க்கையில் புயல்போல எழும் மன

ழுபோதிக்கப்படுகிறது.
சஞ்சலங்களை எவரெல்லாம் அடக்கியாள கற்றுக்கொள்கின்றார்களோ

அவர்களே பின்னாளில் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். இதனால்

தான் தனி மனித ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு அவசியம் எனப்

ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் விரும்பி

ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையில் முன்னேற

அவர்களுக்கு துணையாக அமையும். க்

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” என்று திருக்குறள் கூறுகிறது.

அதாவது ஒழுக்க நெறி நிற்பவர்கள் என்றைக்கும் உயர்நிலையை

அடைவார்கள் என்பது தெய்வ வாக்காகும். உதாரணமாக நேர்மையான க
வழியில் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேறியவர்கள்
வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் காண்பார்கள் மாறாகத்
தவறான வழியில் முன்னேற நினைப்பவர்கள் அவற்றை இழந்து
துன்பமடைவார்கள் என்பது இயற்கை. வறுமையான நிலையிலும்

நல்லொழுக்கம் தவறாது கல்வி கற்று உயர்ந்த பல தலைவர்களை நாம் ம்
பார்த்திருக்கின்றோம். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாழியின் மகனான

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர காரணம்
அவரது கடின உழைப்பும் அவரது நேர்மையும் ஆகும்.

அன்று தொட்டு இன்று வரை ஒழுக்கமே சிறந்தது என ஒழுகி வரும்

இனம் சார்ந்த நாம் எப்போதும் நம்மை உயர்த்த கூடிய ஒழுக்க நெறி

நின்று இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும். இன்றைக்கு

ஒழுக்கமற்ற சமுதாயம் அதிகரித்து செல்வது மன வருத்தத்திற்கு

உரியதாகும். இவற்றினால் எமது சமூகம் சீரழிந்தே செல்கிறது. இதைத்

தடுக்க நல்வழியை உணர்ந்து ஒழுக்க சீலர்களாக வாழ்வோம்

மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்போம் இதுவே எல்லார்க்கும்

நன்மை பயப்பதாக அமையும். தொகுப்பு

க. ஜெய அழகன்
படிவம் 2A1

16

வாசிப்போம் வாரீர் அவத்திக்கீரை

தட்டாங்கல் அவத்திக்கீரை குளிர்ச்சி
தரும் குணமுடையது. உடலில்

தட்டாங்கல் ஆட்டம் என்பது உள்ள அனைத்து விதமான

பாரம்பரிய விளையாட்டுகளில் விஷங்களையும் முறியடிக்கக்

ஒன்றாகும். இந்த ஆட்டத்தைச் கூடியது. மருந்துகளை

சிறுவர்கள் பெரிதும் விரும்புவர். உண்ணும் காலங்களில்

இதில் ஒரே மாதிரியான சிறு அவத்திக்கீரையை உண்டால்

கூழாங்கற்களைப் பயன்படுத்தி மருந்தின் குணத்தை
விளையாடுவர். முறியடித்துவிடும். எனவே,

மருந்து உண்ணும் காலங்களில்

இந்த விளையாட்டைப் அவத்திகீரையை

பாண்டிக்கல், ஐந்தாக்கல் என்றும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது

அழைப்பர். சங்க காலத்தில் இது நல்லது. உடலின்

‘தெற்றி’ என அழைக்கப்பட்டது. அதிகப்படியான பித்தத்தைக்

இவ்விளையாட்டினை மேலும் குறைக்கும். ஜீரண சக்தியை

மகிழ்வூட்டும் வகையில் பாட்டுப் அதிகரிக்கும்.

பாடிக் கொண்டே ஆடுவர். அவத்திக்கீரையில் இலையும்,

பூவும், காயும், பட்டையும்

ஏழு கற்களைக் கொண்டு மருந்தாகப் பயன்படுகின்றன.

ஆடப்படும் ஆட்டத்தில் ஒன்னான்,

இரண்டான், மூன்றான் நான்கான், காய்ச்சலைக் குறைத்து

ஐந்தான், ஆறான்,ஏழான் எட்டான், உடல் சூட்டைச் சமன்படுத்தும்
ஒன்பதான்,பத்தான் எனப் பத்து இயல்புடைய இந்த அற்புத கீரை

பிரிவுகள் ஆடவேண்டும். கல்லை குடல்புண், தொண்டைப்புண்

மேலே போட்டு விட்டு அது கீழே மற்றும் தொண்டைவலி உள்ள

கைக்கு வந்து சேரும் முன் கீழே மக்கள் இதை பச்சையாக

கிடக்கும் மற்ற கற்களை மென்று சாற்றை விழுங்கி
அழுங்காமல் எடுக்க வேண்டும். வந்தால் வந்த நோய்கள் பறந்து

அதே சமயத்தில் மேலிருந்நு போகும். மேலும், தோல்

விழும் கல்லைப் பிடித்துவிட நோய்களையும்
வேண்டும். குணப்படுத்துகிறது.

தொகுப்பு தொகுப்பு

அ. அழகேஸ் செ. தஷ்மிதா 17
படிவம் 2A1 படிவம் 3A3

புதிர்

இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்

2. விடுதலை நாள் நிகழ்ச்சியில் எத்தனை 1. மலாயா அவசர காலத்தில்
நிமிடம் மின்விளக்குகள் கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு
அணைக்கப்பட்டன? வந்ததும், 8 _____1956-இல்
ஆங்கிலேய அரசாட்சியிடமிருந்து
3. யார் விடுதலை சாசனத்தைத் துங்கு விடுதலைக்கான ஒப்பந்தம்
அப்துல் ரகுமானிடம் வழங்கினார்? ஏற்பட்டது.

4. புலி சின்னம் மலேசியர்களின் ______யும் 5. மலாயா புலிக்கு _______ போன்ற
வலிமையையும் காட்டுகிறது. பல்வேறு புனைப்பெயர்களும்
உள்ளன.
6. தட்டாங்கல் விளையாட்டைப் _______ ,
ஐந்தாக்கல் என்றும் அழைப்பர். 8. ________ காய்ச்சலைக் குறைக்கும்
கீரை வகை.
7. தட்டாங்கல் விளையாட்டில் கல்லை
மேலே போட்டு விட்டு அது _______கைக்கு 18
வந்து சேரும் முன் கீழே கிடக்கும் மற்ற
கற்களை அழுங்காமல் எடுக்க வேண்டும்.

சாதனையாளர்கள் வாழ்த்துக்கள்!

சாதனைச் சிட்டுக்கள்

மாவட்ட அளவிலான வளர் தமிழ்விழா போட்டி வெற்றியாளர்கள்

ச. கவிப்ரியா

சிறுகதை எழுதும் போட்டி
மூன்றாம் நிலை

க. ஜெய அழகன்

பேச்சுப் போட்டி
முதல் நிலை

ச. சர்வின்

கவிதை ஒப்புவித்தல்
நான்காம் நிலை

அ. அழகேஸ்

பேச்சுப் போட்டி
ஐந்தாம் நிலை

மாநில அளவிலான வளர் தமிழ்விழா போட்டி வெற்றியாளர்

ச. கவிப்ரியா

சிறுகதை எழுதும் போட்டி
இரண்டாம் நிலை

19

மாவட்ட அளவிலான இந்து சங்க போட்டிகளின் வெற்றியாளர்கள்

வாழ்த்துக்கள்!

அ. அழகேஸ்

பேச்சுப் போட்டி
முதல் நிலை

க. ஜெய அழகன்

பேச்சுப் போட்டி
இரண்டாம் நிலை

தேவாரம் ஓதுதல்
மூன்றாம் நிலை

ச. சர்வின்

தேவாரம் ஓதுதல்
நான்காம் நிலை

த. திவ்யதர்ஷினி & ச. தாரணி

குழு முறையிலான தேவாரம் ஓதுதல்
முதல் நிலை

20

மாணவர் படைப்புகள்

வர்ணம் தீட்டும் போட்டி

ஜூலை மாத வெற்றியாளர்கள்

ஹரிராகவ ராவ் தேவன்
2A5 1A6

கேசவராஜா
5RC

21

மாணவர் படைப்புகள்

மாணவர் கைவண்ணம்

கு. ரனிஷா க. ஜெய அழகன்
2A1 2A1

அ. அழகேஸ் நெகின் குமார்
2A1 2A4

சி. நிவனேஸ் 22
2A1

நகைச்சுவை துணுக்கு

சிரிப்போம்
வாரீர்!

கமலா : நீ எப்பொழுதும் தெளிவாகப் பார்க்கிறாய்.
ஆனால், நான் அருகில் வந்தால் மட்டும்
கண்ணாடி அணிகிறாயே!

அன்பு : அதுவா ! தலைவலி வரும்போது மட்டும்
கண்ணாடி அணிய வேண்டும் என்று
மருத்துவர் கூறியுள்ளார்.

ஆக்கம் இரவி : உங்களுக்கு ஒன்று
அ. அழகேஸ் தெரியுமா. என் ஊரில்
படிவம் 2A1 வெள்ளம் வரும்.

துரை : என்னதான் உன் ஊருல
வெள்ளம் வந்தாலும் அந்த
வெள்ளத்திலே சர்க்கரை
பொங்கல் செய்ய முடியுமா?
முடியாதுதானே.

சர்வின் : உலகத்திலே முதல் கண் அறுவை 23
சிகிச்சை எங்கே நடந்தது?

கவின் : மருத்துவமனையில்தானே?

சர்வின் : இல்லை. கண்ணில்தான்.

ஆக்கம்
சி. நிவனேஸ்
படிவம் 2A1

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
நிலைபெற நீ வாழியவே!
நிலைபெற நீ வாழியவே!



எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்

இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்

புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்

சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!



குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!


Click to View FlipBook Version