The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by spbtstarp, 2021-09-18 12:00:58

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

ð£ì‹ 11 இல்லற இன்பம்
1
குடும்ப உறவு

கீழ்க்காணும் படக்காட்சிகளை உற்றுந�ோக்கிக் கருத்து கூறுக.

1 2 அவன் வெளியே
ப�ோயுள்ளான்.
எங்கே பெரியவன்?

3 இப்போதெல்லாம் நம் பிள்ளையை 4 ஆமாம். நம் உறவு முன்பு
நாம் பார்ப்பதே அரிதாக உள்ளதே! ப�ோல் இல்லை!

1

பின்வரும் படக்காட்சிகளை உற்றுந�ோக்கி அவற்றில் தெரியவரும் சிக்கலை அடையாளம்
காண்க. அச்சிக்கலுக்கான காரண காரியங்களைக் கண்டறிய ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக.

என் பிள்ளைகள் நால்வரும் படித்து முடித்து
வேலை செய்யத் த�ொடங்கிவிட்டனர்.
இப்போதையச் சூழலில் அவர்களின்
வருமானம் ப�ோதாது. என்ன செய்யலாம்..?

1.4.7 சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுவர்.

101

2

சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக.

3

பின்வரும் படங்களை உற்றுந�ோக்கி, சிக்கலையும் அதற்கான காரண காரியங்களையும்
விவரித்துக் கூறுக.

பிளவுபடும் குடும்பம்

õ÷Šð´ˆ¶î™

சமூக ஆர்வலர் சுட்டும் கருத்துரைக்கான காரண காரியங்களைக் குழுவில்
கலந்துரையாடிக் கூறுக.

சமூக ஆர்வலர்: பெரும்பாலான இன்றைய குடும்பங்களில் அறநெறிகள் குன்றி உள்ளன.

°¬øc‚è™ குடும்ப ஒன்றுகூடல்

த�ொகுதி 11 குடும்பச் சிக்கல்களைக்
களைய குடும்ப ஒன்றுகூடல்
எவ்வாறு உதவும்
என்பதை இணையராகக்
கலந்துரையாடிக் காரண
காரியங்களுடன் கூறுக.

102

ð£ì‹ 2 குறள் காட்டும் குடும்பம்

வாசித்தறிக.

வாசிக்கும் முன் பதிலளித்திடுக.

1. உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுக.
2. உங்கள் குடும்பத்தில் நீங்கள் ப�ோற்றும் நபர் யார்? ஏன்?
3. உங்கள் குடும்ப உறுப்பினரிடையே நீங்கள் விரும்பும் பண்பு என்ன? ஏன்?
4. உங்கள் குடும்பத்தை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்கள்?

இல்வாழ்க்கையின் அடிநாதமாக விளங்குவது அன்பும் அறனும் என்பது தெய்வப் புலவரின் த�ொகுதி 11
வாக்கு ஆகும். இல்லறத்தில் இணையும் இணையர் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல்
முறைமையாக அன்பையும் அறத்தையும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். அன்பை
வலியுறுத்தும் முன்னரே நான்காம் அதிகாரத்தில் அறத்தை வலியுறுத்தி விடுகிறார். ஏன்?
அறம் என்பது அனைத்து நற்செயல்களுக்கும் ஆதாரம்; அடிப்படை. ஆதலால்தான்,
‘அறத்தால் வருவதே இன்பம்’ என்றும் ‘மற்றவை எல்லாம் துன்பந்தரவல்லன’
என்றும் ‘அவற்றால் புகழ் வராது’ என்றும் துணிந்து கூறுகிறார். மேலும், மாந்தன்
அறச்செயல்கள் செய்யாது ப�ோவதற்கான அடிப்படைக் காரணங்களைச் சுட்டி
அவற்றை நீக்கிவிட்டாலே ப�ோதுமானது என்கிறார். ப�ொறாமை, ஆசை, க�ோபம்,
கடுஞ்சொல் இவை நான்கே மாந்தனைத் தீச்செயலுக்கும் இழிச்செயலுக்கும் இட்டுச்
செல்கின்றன. இவற்றை நீக்கிவிட்டால் நம் செயல்கள் அனைத்தும் அறச்செயல்களாய்
மாறத் த�ொடங்கிவிடுமல்லவா?

செயல்களுக்குக் காரணமாக இருப்பது எது? மனம்தானே! ‘மனம் அது
செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா’ எனத் திருமூலர் கூறக் காரணம் யாது?
நம் எண்ணமே நம்மை வாழ்த்தும்; நம்மை வீழ்த்தும்! எண்ணத்திற்கு அத்துணை
வலிமையுள்ளது. இதனை உணராதவரா திருவள்ளுவர்? உணர்ந்த காரணத்தால்தான்
அவரால் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என மிக எளிமையாக, ஆனால், அழுத்தமாகச்

ச�ொல்ல முடிந்தது. இல்லறம் த�ொடங்குவாரும் மனத்துக்கண் மாசு இல்லாது
இருப்பார்களேயெனில் இல்லறம் நல்லறமாகும்; அங்கே புகழ்மணம் பரவும்
என்பதில் ஐயமில்லை.

அன்பைப் பற்றிப் பேசாத அறிஞரிலர்; அன்பைப் பற்றிப் பாடாத புலவரிலர்;
அன்பைப்பற்றி ஓதாத மதங்களில்லை. ஆனால், திருவள்ளுவர்போல்
‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்று ச�ொன்னவர் யாருமிலர். அன்பு

2.3.13 குடும்பவியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

103

த�ொகுதி 11 மேலிடும் வேளை அதனை அடைத்து வைக்க யாரால்தான் முடியும்? மனம் க�ொண்ட அன்பைக்
கண்கள் கண்ணீர்வழி அறிவித்துவிடும் என்று அழகாகப் பகர்கின்றார். இல்வாழ்வுக்கு அன்பை
அடிப்படையாகச் ச�ொன்ன திருவள்ளுவர், பின்னர், அன்புடைமை என்று தனிய�ோர் அதிகாரமே
அமைத்து மாந்த உடைமைகளுள் ஒன்றாகச் சேர்த்தார். அன்பும் பண்பும் விதைநிலம் என்றால்,
அதன் விளைபயன் பண்பும் பயனும் என்பது வள்ளுவனார் வாக்கு.

இல்லற வாழ்க்கை நலம்பெற வேண்டுமெனில், துணையாக வாய்ப்பவர் மிக முக்கியப் பங்கினை
ஆற்றவல்லார் என்பதை முக்காலமும் உணர்ந்த செந்நாப்போதார் நுணுக்கமாக உணர்ந்துள்ளார்.
கணவன், மனைவி என இருபாலரும் வாழ்விணையராய் இணைவதே இல்லறம். வாழ்க்கைத்
துணைநலம் என்பதில் இல்லாளுக்கான இயல்புகளை மட்டும் எடுத்தியம்பி இருப்பது ஏன�ோ? என்ற
ஐயம் எழுவது இயல்பே. முற்றும் உணர்ந்தவர் இஃதை உணராமலா ப�ோயிருப்பார்? இவ்விடம்
இல்லறத்தின் முதற்படியை நமக்கு உணர்த்த வேண்டியே ஐயன் வள்ளுவர் அப்படிச் செய்திருப்பார்
என்றே எண்ணத் த�ோன்றுகிறது. ‘இல்வாழ்க்கை’ அதிகாரத்திற்கு அடுத்த அதிகாரமாய் ‘வாழ்க்கைத்
துணைநலம்’ வருகின்றது. இல்வாழ்க்கைக்கு நலம் சேர்க்கின்ற துணைதான் இல்லாள் என்பதை
உணர்த்த வேண்டியே, ‘இல்லாள்’ என்றோ ‘மனையாள்’ என்றோ அதிகாரத்திற்குப் பெயர் சூட்டாமல்
‘வாழ்க்கைத் துணைநலம்’ என்று பெயர் வைத்துள்ளார்.

துணை, நலம் செய்ய வேண்டும்; நலம் செய்பவர் துணையாக வேண்டும். இல்லத்தை
ஆளவும் முறையாக மேலாண்மை செய்யவும் தகுதியுடையவர் பெண் என்பதில் மாற்றுக்
கருத்து இருக்கவியலாது. ஆதலால்தான், வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில்
மனைவியின் இயல்புகள் எத்தகையனவாய் அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார். இல்லாள்
நல்லவளாய் இல்லறத்தை வழிநடத்த தெரியாதவளாய் இருப்பாளேயானால் அனைத்தும் இருந்தும்
ஒன்றுமில்லாததற்கு ஒப்பானது என்கிறார் பேராசான். எதுவும் இல்லாமல் இருந்தாலும் இல்லாள்
நல்லவளாய் இல்லறத்தை வழிநடத்தும் திறன் வாய்ந்தவளானால் அதுவே சிறந்த இல்லறம்
என்கிறார் திருவள்ளுவர்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (குறள் 53)

1

உரைநடையை வாசித்து வினாக்களுக்கு விடை கூறுக; எழுதுக.

1. நாம் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் மனமே காரணமாய் இருக்கிறது. ஏன்?
2. கணவன், மனைவி இணைந்த இல்லறம் எப்படி இருத்தல் வேண்டும்?
3. இல்லாள் எனப்படுபவள் ஒரு குடும்பத்தை எப்படி வழிநடத்த வேண்டுமெனத் திருவள்ளுவர்
வலியுறுத்துகிறார்?
4. சிறந்த இல்லறத்தை உருவாக்குவதில் இல்லாளின் கடமை யாது?
5. திருவள்ளுவர் இல்லறத்தில் அன்பை வலியுறுத்தும் முன்னர் அறத்தை வலியுறுத்தியதன்
ந�ோக்கம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்?

104

2 த�ொகுதி 11

வண்ணமிடப்பட்டுள்ள அருஞ்சொற்களுக்குப் ப�ொருளறிக; எழுதுக.

3

இல்லறம் நல்லறமாய் அமைய கணவனின் கடமைகளை 50 ச�ொற்களில் எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

பின்வரும் குடும்பவியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துத் த�ொடர்ந்துவரும்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக.

நன்மக்கள்

திருக்குறளில் 133 அதிகாரங்கள் அமைத்த திருவள்ளுவர் ‘பேறு’ எனப்
பெயரிட்ட ஒரே அதிகாரம் ‘மக்கட்பேறு’தான்! நன்மக்களைப் பெறுவதையே
வள்ளுவர் வலியுறுத்துகிறார். மக்களை யார் வேண்டுமானாலும் பெற்றுவிடலாம்;
நன்மக்களைப் பெறுவதென்பது அத்துணை எளிமையன்று!

மக்களைப் பெறுவதே இன்பம். அதிலும் அவர்கள் நன்மக்களாய்
இருப்பது பேரின்பம். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே - அதுநல்லவராவதும் தீயராவதும் அன்னை வளர்ப்பினிலே’
என்ற புலமைப்பித்தனின் வரிகள் எண்ணத் தக்கன. அதிகாரத்தின் த�ொடக்கத்தில் இரண்டு குறட்பாவில்
பிள்ளைகளின் நல்லியல்புகளை விவரிக்கிறார் தெய்வப் புலவர்.

1. அறிய வேண்டிய அறிவுகளைப் பெற்றிலங்க வேண்டும்.
2. பழியில்லாத நல்ல பண்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

த�ொடர்ந்து, மூன்றாவது குறளில் குழந்தைப் பேறு என்பது பெற்றோர் வினைப்பயனால் கிடைக்கப்
பெறுபவை என்கிறார். நல்லோர்க்குத் தீயன் பிறப்பதும், சேற்றில் செந்தாமரை பிறப்பதும் இன்றும்
நாம் காண்கிற�ோமன்றோ? ஒழுக்கச் சீலரான பெற்றோர்க்குப் பிறந்த பிள்ளை பண்புக்கேடனாகவும்
தீயவர்க்குப் பிறந்த பிள்ளை பண்பாளனாகவும் இருப்பது வினைப்பயனாலன்றி வேறென்ன?

இத்தனையும் ச�ொன்ன திருவள்ளுவர், பெற்றோர் கடமையையும் பிள்ளையின் கடமையையும்
ச�ொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது. தாய் சான்றோனெனக் கேட்க, தந்தையானவன் பிள்ளையை
அறிஞர் பெருமக்கள் அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டும். எத்துணைப் பெரிய கடமை!
இவற்றை ஆற்றினால் கடமையின் பலனாக இவன் தந்தை என்நோற்றான் எனும் பெரும்பேற்றினைப்
பிள்ளை பெற்றோர்க்கு ஈட்டித் தரும் என்பது வள்ளுவர் வாக்கு.

105

த�ொகுதி 11 1. திருவள்ளுவர் மக்கட்பேறு என இவ்வதிகாரத்திற்குப் பெயரிட காரணம் யாது?
2. மக்களைப் பெற்ற அன்னை எப்படிப் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்?
3. குறட்பாவில் பிள்ளைகளின் நல்லியல்புகள் என்பன குறித்துத் திருவள்ளுவரின்
கருத்துகளைப் பட்டியலிடுக.
4. `பெற்றோரின் நடத்தையைக் கண்டே பிள்ளைகள் வளர்கின்றனர்.’ விவாதித்திடுக.

°¬øc‚è™

உரைநடையை வாசித்திடுக.

தங்கங்களை அள்ளிக் குவிக்கும் ஸ்ரீஅபிராமி
பனிச்சறுக்கு(‘ஸ்கெட்டிங்’) விளையாட்டில் தன் திறமைகளால் பல வெற்றிப்
பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறார் ஸ்ரீஅபிராமி சந்திரன். தமது ஆறாவது
வயதிலேயே பல அனைத்துலகப் பனிச்சறுக்குப் ப�ோட்டிகளில் கலந்துக�ொள்ளத்
த�ொடங்கிய ஸ்ரீஅபிராமி, இதுவரை எண்ணற்ற பதக்கங்களை வாரிக் குவித்திருக்கிறார்.
இந்தப் பதக்கங்கள் அனைத்தும் பல அனைத்துலகப் ப�ோட்டிகளில் வாகை
சூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய சாதனைக்காக மலேசியச்
சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் இளம் வீராங்கனையாகவும் ஸ்ரீஅபிராமி
விளங்குகிறார்.
அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற நான்காவது மத்திய கிழக்குப் பனிச்சறுக்கு
அனைத்துலகப் ப�ோட்டியில் பம்பரம் ப�ோல் சுழன்றாடித் தம் அசத்தலான
பனிச்சறுக்கல் வித்தைகளை ஸ்ரீஅபிராமி காட்டியப�ோது, அரங்கமே கரவ�ொலியில்
அதிர்ந்தது. அந்தப் ப�ோட்டியில் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை ஸ்ரீஅபிராமி தட்டிப்
பறித்தார். 2017ஆம் ஆண்டில் இந்தோனிசியாவில் நடைபெற்ற அனைத்துலகப்
ப�ோட்டியிலும், 2019இல் சீனா, பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய நிலையிலான பனிச்சறுக்குப் ப�ோட்டியிலும்
தங்கங்களை வென்றது முதல் உலகின் கண் இவர் மீது விழுந்திடத் த�ொடங்கிவிட்டது.
இளவயது முதலே பனிச்சறுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் க�ொண்டு விளங்கும் ஸ்ரீஅபிராமி,
அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிகளுக்காக ஒவ்வொரு நாளும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்.
பயிற்சிப் பள்ளிக்குச் செல்வது, ப�ோட்டிகளில் கலந்து க�ொள்வது, வேறு ப�ொழுதுப�ோக்குகளில் ஈடுபடாமல்
இருப்பது, குடும்பத்தைப் பிரிந்து தனியாக வெளிநாட்டில் பயிற்சி பெறுவது என அவரின் வாழ்க்கை
இப்பொழுது நகர்ந்து க�ொண்டிருக்கிறது.
எவ்வளவு தடைகளும் இன்னல்களும் எதிர்பட்டாலும், 2026இல் நடைபெறவிருக்கும் குளிர்கால
ஒலிம்பிக் ப�ோட்டியில், பனிச்சறுக்குப் ப�ோட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் முதல் மலேசிய
வீராங்கணையாகத் திகழ வேண்டும் எனும் இலட்சியத்தோடும் கனவ�ோடும் வலம் வந்து க�ொண்டிருக்கிறார்
ஸ்ரீஅபிராமி. இளம் வயதிலேயே நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நற்புகழை ஈட்டி வரும் ஸ்ரீஅபிராமியின்
கனவு நனவாகும் நாளுக்காக, நம் நாடு நம்பிக்கைய�ோடு காத்துக் க�ொண்டிருக்கிறது.

வினாக்களுக்கு விடை கூறுக; எழுதுக.
1. ஸ்ரீஅபிராமி மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான காரணம் என்ன?
2. ஸ்ரீஅபிராமி எத்தகைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்?
3. ஸ்ரீஅபிராமியின் பண்பு நலன்களை விளக்குக.

106

ð£ì‹ 3 பெண்களின் பங்கு

உரையை வாசித்தறிக. த�ொகுதி 11

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்!

அவைய�ோர் அனைவருக்கும் பணிவான வணக்கம்.

‘நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் உங்கள் முன் உரையாற்றுவதில்
மட்டற்ற மகிழ்ச்சி எய்துகின்றேன். பெண்கள் நல்வாழ்வுக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் இவ்வினிய
விழாவில் நல்லத�ொரு தலைப்பில் பேச நல்வாய்ப்பினை நல்கிய ஏற்பாட்டுக் குழுவினர்க்கு உளமார்ந்த
நன்றிதனைத் தெரிவித்துக் க�ொள்கின்றேன்.

அன்பர்களே!

நல்லத�ொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர் நம் முன்னோர். வீடு சிறந்து விளங்கினால் நாடு சிறந்து
விளங்கும். நாட்டின் வளர்ச்சியின் அளவுக�ோல் குடும்பம் என்றால் அது மிகையாகாது. குடும்பத்தைச்
சீரிய முறையில் வழிநடத்தும் சிறந்த அமைச்சர், நிருவாகி பெண்ணே என்று அறுதியிட்டுக் கூறலாம்.
இக்கூற்றை மறுப்பாரிலர் என்று துணிந்து கூறலாம். ஒரு குடும்பத்தை நன்முறையில் நிருவகிக்கும்
ஆற்றல் பெண்களுக்கே உண்டு. ஆதலால், நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் பெண்களின்
பங்கு அளப்பரியது.

ஔவையார் ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஓதுகின்றார். இல்லறம் நல்லறமாய் இலங்க
வேண்டுமெனில் பெண்களின் பங்கு இன்றியமையாதது. ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன்
க�ொடுத்த வரம்’ என்பர். மேலும், வாழ்க்கைத் துணைநலம் குறித்துப் ப�ொய்யாம�ொழிப் புலவர்,
‘மனைவியானவள் நற்குண நற்செய்கை உடையவளாய் இருக்கும் ப�ொழுது ஒருவனுக்கு இல்லாதது
எது? ஆனால், அவளிடத்தில் நற்குண நற்செய்கை இல்லாக் காலத்தில் ஒருவனுக்கு இருப்பது எது?
ஒன்றுமில்லை’, என்று நயம்பட உரைக்கின்றார். வள்ளுவம், ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்றோர்
அதிகாரமே அமைத்துள்ளமை, குடும்பத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு எத்துணைச் சிறப்பு
வாய்ந்தது என்பதைப் புலப்படுத்தும். குடும்பத்துக்குத் துணையாகவும் வாழ்க்கைக்கு நலம் சேர்ப்பதும்
பெண்களே என்பது மறுக்கவியலா உண்மை.

என்னருமைத் த�ோழர் த�ோழியரே!

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்பது பெண்களின் நிருவாகத்திறனைப் பறைசாற்றும்
முதும�ொழி என்பதைப் பலர் உணர்வதில்லை. பலர் இதற்குப் பலவகையில் ப�ொருள் பகர்வர். ஆனால்,
உண்மையான விளக்கம் யாதெனில், நன்மை ஆவதும் பெண்ணாலே, தீமை அழிவதும் பெண்ணாலே,
என்பதேயாம். குடும்பத்தில் நன்மைகளை உருவாக்கித் தருபவளும் பெண்தான். தீமைகளை எருவாக்கித்
தீய்ப்பவளும் பெண்தான். இதனை உணர்த்த வேண்டித்தான் மேற்கண்ட முதும�ொழியை ம�ொழிந்தனர்

3.4.33 250 ச�ொற்களில் தலைப்பைய�ொட்டி உரை எழுதுவர்.

101077

நம் முன்னோர். குடும்பத்தின் நிதி நிருவாகம் த�ொடங்கி கணவனுக்கு மதியுரை வழங்கும் வரை பெண்களே
பெரும் பங்காற்றுகின்றனர் என்பது வெள்ளிடைமலை. அதனாற்றான், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப்
பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்றனர்.

அவைய�ோரே,

நிறைவாக, இவற்றான் அறிவது, நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுபவர் பெண்களே!
தன்னைக் காப்பதில், தன் கணவனைக் காப்பதில், தன் குடும்பத்தின் புகழைக் காப்பதில் எப்போதும்
கருத்துடன் இருப்பவள் பெண்ணே! இதை உணர்த்தத்தான் நம் முன்னோர், ‘பெண்களுக்கு வீடே
உலகம்’ என்றும் ‘பெண்கள் வீட்டின் கண்கள்’ என்றும் ம�ொழிந்தனர். பெண்கள் வீட்டின் கண்களாகவும்
தூண்களாகவும் இருப்பதால்தான் நாட்டின் கண்களையும் தூண்களையும் உருவாக்க முடிகிறது என்ற
பேருண்மை விளங்கும். இற்றைப் பெண்கள் இது குறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பார்களேயானால்,
குடும்பங்கள் க�ோயில்களாக மாறும். அங்கே தெய்வங்கள் வாழும். பெண்களைப் ப�ோற்றுவ�ோம். விடை
பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

1 2

உரை அமைப்பு முறையையும் அதன் ‘தந்தையின் தியாகம்’ எனும் தலைப்பில்
உள்ளடக்கத்தையும் குழுவில் கலந்துரையாடிக் 250 ச�ொற்களில் உரை எழுதுக.
குறித்துக் க�ொள்க.

3

பின்வரும் கட்டுரைச் சட்டகத்தைத் துணையாகக் க�ொண்டு 250 ச�ொற்களில் ‘மகிழ்ச்சியான
குடும்பம்’ எனும் தலைப்பில் உரை எழுதுக.

முன்னுரை
கருத்து 1 : அன்பான குடும்பம்
கருத்து 2 : சமூகச் சிக்கல்களில் ஈடுபடாமை
கருத்து 3 : சமயக்கல்வி புகட்டல்
கருத்து 4 : பெற்றோர் கடமை
முடிவுரை

த�ொகுதி 11 õ÷Šð´ˆ¶î™

‘குடும்ப உறவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்’ எனும் தலைப்பில்
250 ச�ொற்களில் உரை எழுதுக.

°¬øc‚è™

‘பெற்றோர் கடமை’ எனும் தலைப்பில் உரை எழுதுக.

• பெற்றோரியல் (Parenting) • உறவு (Relationship) • உடல்நலம் (Health)

108

ð£ì‹ 4 இலக்கணம்

எழுவாய்த்தொடர்; விளித்தொடர்

ச�ொற்றொடர்களில், வரும�ொழி க், ச், த், ப் ஆகிய வல்லெழுத்துகளில் த�ொடங்கினால் நிலைம�ொழி
ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது.

எழுவாய்த்தொடரில் வலிமிகாது

தாமரை + பூத்தது = தாமரை பூத்தது
எ.கா: பூனை + பாய்ந்தது = பூனை பாய்ந்தது
சேவல் + கூவியது = சேவல் கூவியது

விளித்தொடரில் வலிமிகாது

தம்பீ + ப�ோ = தம்பீ ப�ோ

எ.கா: இராமா + கேள் = இராமா கேள்

அம்மா + க�ொடுங்கள் = அம்மா க�ொடுங்கள்

1 த�ொகுதி 11

வாசித்தறிக.

கவின்: மாமா, இன்று வகுப்பில் ஆசிரியர் எழுவாய்த்தொடர், விளித்தொடர் குறித்துத் தகவல் தேடி
வரச் ச�ொன்னார். அப்படியென்றால் என்ன?

மாமா: கவின், வேற்றுமை உருபு குறித்துப் படித்திருக்கிறாய் அல்லவா? எட்டு வேற்றுமைகளில்
உருபு இல்லா வேற்றுமைகள் எவை என்பது உனக்கு நினைவிருக்கிறதா?

கவின்: எப்படி மறப்பேன் மாமா? முதல் வேற்றுமையான எழுவாய் வேற்றுமையும் எட்டாம்
வேற்றுமையான விளி வேற்றுமையும் உருபில்லா வேற்றுமைகள், சரியா?

மாமா: மிகச் சரியாய்ச் ச�ொன்னாய். முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் க�ொண்ட
த�ொடர்களை முறையே எழுவாய்த் த�ொடர் என்றும் விளித்தொடர் என்றும் அழைக்கிற�ோம்,
அவ்வளவுதான். இந்த எடுத்துக் காட்டுகளைப் பார். என்ன புரிகிறது?

5.5.11 எழுவாய்த் த�ொடரிலும் விளித்தொடரிலும் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

101099

தாமரை + பூத்தது = தாமரை பூத்தது

பூனை + பாய்ந்தது = பூனை பாய்ந்தது

தம்பீ + ப�ோ = தம்பீ ப�ோ

இராமா + கேள் = இராமா கேள்

கவின்: இவ்விரு த�ொடர்களிலும் வலிமிகவில்லை மாமா.

மாமா: கெட்டிக்காரன் நீ. ச�ொல்லாமலே விளங்கிக் க�ொண்டாயே! எழுவாய்த் த�ொடரிலும்
விளித்தொடரிலும் வலிமிகாது என்பதை நினைவில் க�ொள்.

2

எழுவாய்த் த�ொடர், விளித்தொடர் இலக்கண விதியைக் குறித்து உமது விளக்கத்தைக் கூறுக.

3

பின்வரும் எழுவாய்த் த�ொடர்களையும் விளித்தொடர்களையும் புணர்த்தி எழுதி, வாக்கியத்தில்
அமைத்திடுக.

1. செல்வா + ப�ோகாதே = 4. நாய் + குரைத்தது =
2. கண்ணா + குடி = 5. பறவை + பறந்தது =
3. அண்ணா + கேள் = 6. தலைவா + பேசு =

õ÷Šð´ˆ¶î™

எழுவாய்த்தொடரிலும் விளித்தொடரிலும் ஏன் வலிமிகா என்பதை ஐந்து எடுத்துக்காட்டுகளைப்
பயன்படுத்தி விளக்குக.

°¬øc‚è™

த�ொகுதி 11 பின்வருவனவற்றைச் சரியாகப் புணர்த்தி எழுதுக.

1. நாய் + குரைத்தது = 5. அண்ணா + தாருங்கள் =
2. குழந்தை + சிரித்தது = 6. அப்பா + கேளுங்கள் =
3. யானை + கடந்தது = 7. அரசே + ச�ொல்லுங்கள் =
4. பார் + பெரியது = 8. இறைவா + ச�ோதிக்காதே =

110

ð£ì‹ 12 சமூகத்தில் நாம்
1 பண்பியல் தீர்வுகள்

பனுவலை ஆழ்ந்து வாசித்து, கருத்தறிக.

தங்கள் வட்டாரத்தில் அமைந்துள்ள காற்பந்து விளையாட்டுத் திடலைப் பயன்படுத்துவதில் இரு
தரப்புகளுக்கு இடையே மனக்கசப்பு வளர்ந்து, கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில், இச்சிக்கலைத்
தீர்க்க உங்கள் பகுதியின் குடியிருப்பாளர் சங்கம், இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு
அழைத்திருந்தது.

கிராமத்துத் இங்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும்
தலைவர்: தெரிவித்துக் க�ொள்கிறேன். இன்று நாம் கூடியுள்ளதன் ந�ோக்கம் பற்றி அறிவீர்கள். முதலில்,

நாம் எதிர்நோக்கி இருக்கும் சிக்கல் கடுமையானது அன்று. எல்லாரும் இதற்குத் தீர்வு
காண வேண்டும் என்னும் உணர்வோடு இங்குக் கருத்துகளை முன்வைத்தால் மிக எளிதாக
இச்சிக்கலைத் தீர்த்துவிடலாம்.

தான் சியு உண்மைதான் ஐயா. இதுகாறும் நாம் உடன்பிறப்புகள் ப�ோல்தான் இங்கு வாழ்ந்து
ப�ோங்: வருகிற�ோம். அதற்கு ஊறு நேரா வண்ணம் ஒருமனதாக முடிவெடுப்போம். நாம் எல்லாரும்
உணர்ச்சிகளை முன்வைக்காமல் நட்புணர்வோடு பேசுவ�ோம். இங்கு வந்திருக்கின்ற என்
அன்பு நண்பர்கள் அனைவரும் இதற்கு உடன்படுவார்கள் என்றே கருதுகிறேன்.

இளமாறன்: நண்பர், தான் சியு ப�ோங் ச�ொல்வது மிகச் சரியே. முதலில் இந்தச் சிக்கலில் த�ொடர்புடைய
இளைஞர்களை நாம் அமைதிப் படுத்தவேண்டும். குறிப்பாகக் கடந்த வார கைகலப்பிற்குப்
பின் அவர்கள் க�ோபமாக இருக்கிறார்கள்.

1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

111

த�ொகுதி 12 கிராமத்துத் இளைஞர்களின் இயல்பு அது, இளமாறன். அவர்களை நாம் தவறாக நினைக்க வேண்டாம்.
தலைவர்: எல்லாரும் நம் மீது மரியாதை காட்டும் பிள்ளைகள்தாம்; ச�ொன்னால் கேட்பார்கள்.

அசான்: முதலில், இந்தக் கைகலப்பைத் த�ொடங்கியவர்கள் மீது நாம் கடுமையான நடவடிக்கை
எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அமைதி அடைவார்கள்.

தான் சியு மன்னிக்க வேண்டும் இஞ்சே. அசான். ப�ொதுவாக, நடந்து முடிந்த சிக்கலைப் பற்றிப்
ப�ோங்: பேசுவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் தீர்வு பிறக்காது ஐயா. அடுத்த கட்ட தீர்வைப் பற்றிப்
பேசுவ�ோம். முடிந்தால் இளைஞர்களை அழைத்துப் பேசுவ�ோம். தவறிழைத்தவர்களை
மன்னிப்புக் கேட்கச் செய்வோம்.

இளமாறன்: இந்தச் சிக்கலின் மையமே திடலை யார் பயன்படுத்துவது? எப்போது பயன்படுத்துவது?
என்பதுதான். அதற்கு நாம் முதலில் தீர்வு காண்போம். மன்னிப்புக் கேட்கச் செய்வதைப்
பிறகு பார்க்கலாம். என்ன ச�ொல்கிறீர்கள் நண்பர்களே?

கிராமத்துத் நீங்கள் ச�ொல்வதும் சரிதான். தீர்வைத் தேடுவதுதான் பயன் தரும். ஆனால், இஞ்சே.
தலைவர்: அசான் ச�ொன்ன கருத்தையும் நாம் நிராகரிக்கக்கூடாது. ஆனால், தண்டிக்க வேண்டும்

என்பதைவிட, தவறிழைத்தவர்களின் தவற்றை உணரச் செய்வதுதானே நன்மை பயக்கும்?
என்ன இஞ்சே. அசான், என் கருத்தை ஏற்பீர்களா?

அசான்: ஏற்கிறேன் நண்பரே. தண்டிக்க வேண்டும் என்று உணர்ச்சி வயப்பட்டுச் ச�ொல்லிவிட்டேன்.
நானும் இளைஞன்தானே? (சிரிக்கிறார்).

தான் சியு ஆமாம் அறுபத்தேழு வயதைத் த�ொட்டுவிட்ட ஆற்றல்மிக்க இளைஞர் நீங்கள். என்ன
ப�ோங்: க�ொஞ்சம் வயதாகிவிட்டதால், முன் பற்கள்தான் விழுந்துவிட்டன.

கிராமத்துத் (எல்லாரும் சிரிக்கிறார்கள்)
தலைவர்:
சரி நண்பர்களே! முதலில், இளைஞர்களிடையே எத்தனை காற்பந்து குழுக்கள் இருக்கின்றன
எனும் விவரங்களை எடுப்போம். அதற்கேற்ப அட்டவணை ப�ோட்டுத் தந்து விடுவ�ோம்.
இனிச் சிக்கல் எழாது.

இளமாறன்: ஐயா! ஒரு கருத்தைச் ச�ொல்ல விரும்புகிறேன். ச�ொல்லட்டுமா? இளைஞர்களிடையே
புரிந்துணர்வு உருவாக, காற்பந்து ப�ோட்டி ஒன்றை நடத்துவ�ோம். அது நல்ல பலனைத்
தரும். உங்கள் எல்லாருக்கும் உடன்பாடு உண்டா?

அசான்: அருமையான திட்டம். ஆனால், ஒரு திருத்தம். ஒவ்வொரு குழுவிலும் பல்லினம் சேர்ந்தவர்கள்
இருக்க வேண்டும். ஓரினம் மட்டுமே சேர்ந்த குழுவாக அஃது இருக்கக்கூடாது என்பது
என் விருப்பம்.

கிராமத்துத் ஆகா! அருமை. அப்படியே செய்வோம். நம்முடைய முடிவுகளை உடனே செயல்படுத்துவ�ோம்.
தலைவர்: இவற்றை எல்லாரும் ஏற்பார்கள் எனும் நம்பிக்கைய�ோடு நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

1

பேச்சுவார்த்தையினைக் குழுமுறையில் பாகமேற்றுக் கலந்துரையாடுக. பேச்சுவார்த்தையின்
கூறுகளை ஆராய்ந்து விளக்குக.

112

2 குறிப்புகள்: த�ொகுதி 12
சிக்கலுக்கான காரணம்
பேச்சு வார்த்தையில் இடம்பெற்ற கூறுகளைக் வெளிப்பட்ட பண்புணர்வுகள் -
க�ொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விட்டுக்கொடுக்கும் ப�ோக்கு
இணையராகக் கலந்துரையாடுக. திரட்டிய கருத்துகளை கையாளப்பட்ட பண்பார்ந்த ச�ொற்கள்
வகுப்பின் முன்னிலையில் விளக்கிக் கூறுக. பண்பார்ந்த ச�ொற்களின் பயன்
சிக்கலுக்கான தீர்வு
3 வேறுவகை தீர்வு உண்டா?

மேற்கண்ட பேச்சுவார்த்தையில் நீங்கள் பங்கு பெற்றிருந்தால், எத்தகைய கருத்துரைகளைப்
பண்புடன் வழங்கியிருப்பீர்கள்? அவற்றைப் ப�ோலித்தம் செய்க.

õ÷Šð´ˆ¶î™

பல ஆண்டு காலமாகத் தங்கள் வசிப்பிடத்தில் நடைபெற்று வரும் தீபாவளிச் சந்தை, திடீரென்று
இவ்வாண்டு புதிய பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு, வாடிக்கையாளர்களுக்கும்
பங்குபெறுகின்ற வணிகர்களுக்கும் பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் த�ொடர்பில்
சிறுவணிகர்களின் சங்கம், த�ொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தத் திட்டமிட்டுள்ளது. அப்பேச்சு வார்த்தையில் பங்குக�ொண்டு சிக்கலுக்குத் தீர்வு காணும்
வண்ணம் பண்புடன் உங்கள் நண்பர்களுடன் குழுவாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்துக.

°¬øc‚è™

உமது வட்டாரத்தில் ப�ொதுமக்களின் பயன்பாட்டிற்குப் பல்நோக்குப் ப�ொதுமண்டபம் ஒன்று
பெரிதும் துணைபுரிந்து வருகிறது. எனினும், பழைய கட்டடமாக விளங்கும் அதனைப் ப�ொது
மக்களின் பாதுகாப்புக் கருதி, பயன்பாட்டிலிருந்து நிறுத்தி வைக்க நகராண்மைக் கழகம்
முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் த�ொடர்பில் ப�ொதுமக்கள் மிக அதிருப்தி க�ொண்டுள்ளனர்.
எனவே, உமது வட்டாரத்தின் அரசுசாரா இயங்கங்கள் நகராண்மைக் கழகத்தின் தலைவரைச்
சந்திக்க திட்டம் க�ொண்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின் உறுப்பினர்களாக உங்களைக்
கருதிக் க�ொண்டு, பேச்சுவார்த்தையில் பங்கு க�ொள்க. கீழ்க்காணும் குறிப்புகளைத் திரட்டி
பேச்சுவார்த்தையில் பங்கு க�ொள்க.

பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயார் படுத்த வேண்டிய குறிப்புகள்

நகராண்மைக் கழகத் தலைவர்:
நகராண்மைக் கழகத்தின் முடிவு த�ொடர்பான விளக்கம்.
முடிவிற்கான சான்றுகளும் நியாயங்களும்.
அரசு சாரா இயக்க நிகராளிகளின் கருத்துரையும் வாதங்களும்
நகராண்மைக் கழகத்தின் முடிவு தவறானது என்பதற்கான காரணங்கள்.
இந்த முடிவின் த�ொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனநிறைவின்மை.
இந்த முடிவினால் ஏற்படப் ப�ோகும் விளைவுகள்.

113

த�ொகுதி 12 ð£ì‹ 2 நற்பணி

அறிக்கையை வாசித்து அறிக.

சமூக நற்பணி இயக்கம்
க�ோலாலங்காட் மாவட்டம்

சிலாங்கூர்
நான்காவது கூட்டக் குறிப்பறிக்கை

நாள் : 25.7.20 (சனிக்கிழமை)
நேரம் : மாலை மணி 6.00
இடம் : இயக்கப் பணிமனை
எண் 18, ஜாலான் சுல்தான் அப்துல் சாமாட்,
42700 பந்திங், சிலாங்கூர்

வருகை புரிந்தோர் - ஆல�ோசகர்
- தலைவர்
1. திரு. அருள்முனைவர் நல்லசிவம் - துணைத் தலைவர்
2. திரு.தென்னரசன் இளமாறன் - செயலாளர்
3. திரு.கதிர்முகிலன் அமுதவாணன் - துணைச் செயலாளர்
4. செல்வி செந்தாமரை மணிமாறன் - ப�ொருளாளர்
5. திரு.மாந்தரன் எழில்வளவன்
6. திரு.இளவேந்தன் தமிழரசு

1.0 வரவேற்புரை
செயலாளர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் வரவேற்றத�ோடு வருகைக்கு நன்றியும்
கூறினார். இயக்க நடவடிக்கைகளுக்குத் துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி கூறினார்.
உறுப்பினர்கள், செயற்குழு கூட்டத்தின் இறுதியில் பல நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமெனக்
கேட்டுக் க�ொண்டார்.

2.0 தலைமையுரை
இயக்கத்தின் தலைவர், வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார். இச்செயற்குழுக்
கூட்டத்தின் ந�ோக்கத்தை விரிவாக விளக்கினார்.

3.0 கடந்த கூட்டக் குறிப்பை ஆய்ந்தேற்றல்
அறிக்கையைச் செயலாளர் வாசித்தார். கூட்டக்குறிப்பறிக்கை அனைவராலும் ஒருமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4.0 நடக்கவிருக்கின்ற செயல் நடவடிக்கைகள்
4.1 சுதந்திர தின ஒற்றுமை மெதுவ�ோட்டம்
இவ்வாண்டு சுதந்திர தினத்தைய�ொட்டி, ஒற்றுமை மெதுவ�ோட்டம் ஒன்றனை இயக்கம் ஏற்பாடு
செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. வட்டார மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஓங்கச்

2.1.10 அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

114

செய்ய இந்நிகழ்வை நடத்த உடன்பாடு காணப்பட்டது. இவ்வோட்டம் எதிர்வரும் ஆகஸ்டு த�ொகுதி 12
31ஆம் நாள் ம�ோரிப் கடற்கரையில் த�ொடங்கி மெர்டேக்கா ப�ொதுமண்டபத்தில் நிறைவுற
முடிவெடுக்கப்பட்டது. அதற்கான செயற்குழுவும் அமைக்கப்பட்டது.

4.2 வட்டார ஏழை மக்களுக்கு உதவித் த�ொகை வழங்குதல்
இவ்வட்டாரத்தில் வறுமையில் வாடும், தனித்து வாழும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும்
பேறு குறைந்தவர்களுக்குத் திங்கள்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து
விவாதிக்கப்பட்டது. நன்நோக்கம் க�ொண்ட இந்த நடவடிக்கைக்குச் செயற்குழு உறுப்பினர்கள்
அனைவரும் உடன்பட்டனர்; முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

5.0 நிதி நிலவரம்
ப�ொருளாளர் இயக்கத்தின் நிதி நிலவரத்தை அறிவித்தார். இதுவரை ரிங்கிட் 12,700.40 வரவும்
ரிங்கிட் 8,347.20 செலவும் ஆகியிருப்பதாகக் குறிப்பிட்டார். மீதம் ரிங்கிட் 4353.20 இயக்கத்தின்
கையிருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

6.0 ப�ொது
இந்த ஆண்டு இறுதியில் வட்டாரத்தில் நற்சேவை புரிந்த த�ொண்டர்களுக்கு விருது வழங்கிப்
பெருமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையைத் திரு. இளவேந்தன் முன்வைத்தார்.

7.0 நன்றியுரை
வருகைபுரிந்தவர்களுக்குச் செயலாளர் நன்றி நவில, இரவு மணி 8.00க்குக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அறிக்கை தயாரித்தவர், 4.8.20

(செல்வி செந்தாமரை மணிமாறன்)
செயலாளர்,
சமூக நற்பணி இயக்கம்,
க�ோலாலங்காட் மாவட்டம்,
சிலாங்கூர்.

1

அறிக்கையினை ம�ௌனமாக வாசித்து, வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவை வெளிப்படும்
இடங்களை ஆய்ந்து அறிக.

2

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
உரக்க வாசித்துக் காட்டுக.

3

அறிக்கையில் காணும் லகர, ளகர, ழகர; னகர, ணகர; றகர, ரகர ச�ொற்களைப் பட்டியலிட்டுச்
சரியான உச்சரிப்புடன் உரக்க வாசித்துக் காட்டுக.

115

த�ொகுதி 12 õ÷Šð´ˆ¶î™

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கு
ஏற்ப உரக்க வாசித்துக் காட்டுக.

வணக்கம். செய்தி அறிக்கை. வாசிப்பவர், தேன்மலர்.
அமைச்சகங்களில் நிலவுகின்ற முறைகேடுகள் குறித்து அந்தந்த அமைச்சுகளைச் சேர்ந்த
அரசு ஊழியர்கள் துணிந்து அம்பலப்படுத்தலாம் என்று, நிதியமைச்சர் குறிப்பிட்டார். இத்தகைய
துணிவான அரசு ஊழியர்களுக்கு ரிங்கிட் 30,000 வரையிலும் வெகுமதி வழங்கப்படும் என்று
அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், வறுமையில் இருப்பவர்களின் சிக்கல்களில் கவனம் செலுத்துவதன்
மூலம் நாட்டில் இனம், மதம், அரசியல் ப�ோன்ற தாக்குதல்களிலிருந்து விடுபட வேண்டும்
என்று மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். தீவிர மதவாதிகள் உருவாக்கிய திசை திருப்பும்
கருத்துகளைப் ப�ோக்குவதற்குக் கல்வியாளர்களும் த�ொழில் வல்லுநர்களும் உதவ வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று, அக்டோபர் 4ஆம் தேதி, உலக அளவில், அதிகாரப்பூர்வமாக ‘டிஸ்லெக்சியா’ விழிப்புணர்வு
நாள் க�ொண்டாடப்படுகிறது. உலகம் டிஸ்லெக்சியாவிற்குக் க�ொடுக்கும் முக்கியத்துவம், இதன்வழி
புலப்படுவதாக மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை
இராமையா குறிப்பிட்டார். “பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஏன் பாதியில் நின்றுவிடுகிறார்கள்?’
என்று ஆராய்ந்தோமானால் அதற்கொரு முக்கியக் காரணம் டிஸ்லெக்சியா எனும் வாசிக்க எழுத
இயலாத ஒரு நிலைமைதான் என்று அவர் குறிப்பிட்டார்.

°¬øc‚è™

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
உரக்க வாசித்துக் காட்டுக.

ப�ொதுச் ச�ொத்து என்றால் என்ன? ப�ொதுச் ச�ொத்துகள் மக்களின் ப�ொது நலன் கருதி உருவாக்கப்பட்டவை
ஆகும். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள், ப�ொதுக் கழிப்பறைகள்,
ப�ொதுப் ப�ோக்குவரத்துகள், சாலைகள், பூங்காக்கள், மனமகிழ் மையங்கள் எல்லாம் இவற்றுள்
அடங்குகின்றன. இச்சொத்துக்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம்? கீழ்க்காணும் கேள்விகளை
ஒரு கணம் கேட்டுப் பாருங்கள்...

உங்களுக்குச் ச�ொந்தமான ப�ொருள்கள், ச�ொத்துகளைப் பயன்டுத்தும்போது நீங்கள்
செலுத்தும் கவனமும், பாதுகாப்பு உணர்வும், ப�ொதுச் ச�ொத்துகளைப் பயன்படுத்தும் ப�ோது
உங்களுக்கு வருகின்றனவா?
உங்கள் வீட்டில் உள்ள ப�ொருள்களை அழகாகவும் நேர்த்தியாகவும் வைப்பதில் உள்ள
உங்கள் ஆர்வமும் தேவையும் ப�ொதுச் ச�ொத்துகள் மீது வருகின்றனவா? உங்கள் மனசாட்சி
என்ன ச�ொல்கிறது? உண்மையில் நாம் ப�ொதுச் ச�ொத்துகளைப் பாதுகாப்பதில் அக்கறை
இல்லாமல்தானே இருக்கிற�ோம்!

நமது மனப்பாங்கு மாறவேண்டும் அல்லவா?
ச�ொல்லுங்கள்..! செயல்படுங்கள்..!

116

ð£ì‹ 3 அறப்பணி த�ொகுதி 12

ஆண்டறிக்கையை ம�ௌனமாக வாசித்து, அமைப்பை அறிக.

குற்றச்செயல் தடுப்பு இயக்கம்
புக்கிட் மெலாவத்தி தேசிய இடைநிலைப்பள்ளி

க�ோலசிலாங்கூர், சிலாங்கூர்

20 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை

குற்றச்செயல் தடுப்பு இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்று நடத்தியது. இயக்கத்தின் உறுப்பினர்கள்
அந்நடவடிக்கைளில் பங்கு க�ொண்டு பயன் பெற்றனர்.

செயலவையினர்

1. செல்வன் கலையரசன் பழநிவேல் - தலைவர்

2. செல்வி அருளினி கனலன் - துணைத் தலைவர்

3. செல்வி வான்மதி தமிழழகன் - செயலாளர்

4. செல்வி பூந்தளிர் அமுதவாணன் - துணைச் செயலாளர்

5. செல்வன் கலைமணி மணிவண்ணன் - ப�ொருளாளர்

செயலவை உறுப்பினர்கள் ஆல�ோசகர்கள்

1. செல்வி துளசி ஆசைத்தம்பி 1. திரு.தமிழரசு முத்தையா
2. செல்வன் மணிமாறன் தமிழ்வாணன் 2. திரு.சுப்பிரமணியம் தங்கையா
3. செல்வி மாந்தளிர் இளங்குமணன் 3. திருமதி கன்னிகா தேவி பத்தினியப்பன்

1.0 கழக நடவடிக்கைகள்
1.1 குற்றச் செயல் தடுப்பு வாரம்

கடந்த 15.2.20 த�ொடங்கி 22.2.20 வரை குற்றச் செயல் தடுப்பு வாரம் சிறப்பாக
நடைபெற்றது. குற்றச்செயல்கள் த�ொடர்பான கண்காட்சி, சுவர�ொட்டி வரையும் ப�ோட்டி, புதிர்ப்
ப�ோட்டி எனப் பல்வேறு ப�ோட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நமது பள்ளியின்
முதல்வர் திரு.ஊன் புன் இயாட் அவர்கள் திறப்புரையாற்றி இந்தக் குற்றச் செயல் தடுப்பு
வாரத்தைத் த�ொடக்கி வைத்தார்.

1.2 ச�ொற்பொழிவு : குற்றச்செயலும் மீளும் வழிமுறைகளும்

‘மாணவர்களிடையே பெருகிவரும் குற்றச்செயலும் மீளும் வழிமுறைகளும்’ என்ற தலைப்பில்,
ச�ொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றனை நமது இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 24.6.20

இல் நடைபெற்ற இந்தச் ச�ொற்பொழிவினைக் காவல்துறை முன்னாள் ஆணையர்
டத்தோஸ்ரீ தெய்வீகன் அவர்கள் ஆற்றினார். மாணவர்களைக் குற்றச்செயல்கள்பால்
ஈர்க்கும் காரணங்கள் பற்றியும் அவற்றைத் தடுப்பதில் எல்லாத் தரப்பும் ஆற்ற வேண்டிய
பங்கு குறித்தும் ஆணையர் விரிவாக விளக்கினார். பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து
க�ொண்டது மிகச் சிறப்பாக அமைந்தது.

3.4.35 250 ச�ொற்களில் ஆண்டறிக்கை எழுதுவர்.

117

த�ொகுதி 12 2.0 கழகத்தின் வெற்றிகளும் சாதனைகளும்
2.1 கடந்த ஆண்டு நம் இயக்கத்தின் நிகராளியாகச் சென்ற நமது மாணவர்கள் பல ப�ோட்டிகளில்
பங்கு பெற்றார்கள். பரிசுகளையும் வென்று வந்தார்கள். அதன் விவரம்:
அ. செல்வன் தமிழினியன் அருள் – முதல் பரிசு : கட்டுரை எழுதும் ப�ோட்டி (மாநில நிலை)
ஆ. செல்வி கலைமதி தமிழன்பன் - ஆறுதல் பரிசு : ஓவியம் வரையும் ப�ோட்டி (மாவட்ட நிலை)

3.0 முடிவு
கடந்த ஆண்டு முழுமையும் நம் குற்றச்செயல் தடுப்பு இயக்கம் சீரிய முறையில் சிறப்போடு நடந்திட
எல்லா வகையிலும் துணைநின்ற அனைவருக்கும் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றி.

அறிக்கை தயாரித்தவர், 5/1/20

(வான்மதி தமிழழகன்)
செயலாளர்,
குற்றச்செயல் தடுப்பு இயக்கம்,
புக்கிட் மெலாவத்தி தேசிய இடைநிலைப்பள்ளி,
க�ோலசிலாங்கூர், சிலாங்கூர்.

1

ஆண்டறிக்கையின் அமைப்புமுறை குறித்துக் குழுமுறையில் ஆராய்ந்து விளக்குக. சட்டகம்
தயார் செய்க.

2

உம் வட்டாரத்தில் இயங்கும் சமூகநல அறவாரியம் கடந்த ஆண்டு முழுமையும் பல்வேறு சமூக
நலத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. அந்த இயக்கத்தின் செயலாளர் என்ற வகையில்
ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கும் வகையில், 250 ச�ொற்களில் ஆண்டறிக்கை
ஒன்றனை எழுதுக.

3

உம் வசிப்பிடத்தில் இயங்கும் சமூக ஒற்றுமைச் சங்கம் சிறப்பான திட்டங்களைத் தீட்டிச்
செயல்பட்டு வருகிறது. உம் வசிப்பிடத்தில் வாழும் மக்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு,
சகிப்புத்தன்மை ஆகியவற்றை உருவாக்கும் ந�ோக்கில், இந்த இயக்கத்தின் செயல்பாடு
அமைந்து வருகிறது. இந்த இயக்கம் அடுத்த மாதத்தில் ஆண்டுப் ப�ொதுக்கூட்டத்தை நடத்த
உள்ளது. இந்த இயக்கத்தின் செயலாளர் என்ற வகையில் 250 ச�ொற்களில் உம் இயக்கத்தின்
ஆண்டறிக்கையைத் தயார் செய்க.

õ÷Šð´ˆ¶î™

நீர் வசிக்கும் பகுதியின் குடியிருப்பாளர் சங்கத்தின் ஆண்டறிக்கையைத் தயாரிக்கும் ப�ொறுப்பு
உம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. 250 ச�ொற்களில் அந்த ஆண்டறிக்கையை எழுதுக.

118

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும் த�ொகுதி 12

உவமைத்தொடர்

உவமைத்தொடர்கள் ப�ொருள்

விழலுக்கு இறைத்த நீர் ப�ோல பயனற்ற உழைப்பு

க�ொழு க�ொம்பற்ற க�ொடி ப�ோல ஆதரவு இல்லாத நிலை

சிறகு இழந்த பறவை ப�ோல செயல் இழந்து நிற்கும் நிலை

மாலுமி இல்லாத கப்பல் ப�ோல முறையான வழிகாட்டல் இல்லாமை / தலைமைத்துவம் இல்லாமை

நீறு பூத்த நெருப்புப் ப�ோல சினம், பகை ப�ோன்ற உணர்ச்சிகளை வெளியே காட்டிக் க�ொள்ளாமை

1

உரைப்பகுதிகளை உணர்ச்சிய�ோடு வாசித்துக் காட்டுக. பகுதியில் உவமைத்தொடர்களையும்
அவற்றின் ப�ொருளையும் ஆழ்ந்து அறிந்து விளக்கிக் கூறுக.

“தஞ்சை விவசாய நிலத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்ற, 2000 ஆண்டுகளுக்கு முன்பே பேரணை
கட்டினான் ச�ோழன் கரிகால்பெருவளத்தான். ஆனால், இன்று காவிரி ஆற்றில் நீர்போக்குவரத்து இன்றி,
தஞ்சைநிலங்களே தரிசாய்ப் ப�ோய்க் க�ொண்டிருப்பதைப் பார்த்தால், ச�ோழனின் உழைப்பு பயனற்ற
உழைப்பாய் விழலுக்கு இறைத்த நீர் ப�ோல ஆயிற்றே என்று கவலையாய் இருக்கிறது.”

“பற்றிக்கொள்ள க�ொம்பு இல்லாமல் தவித்த க�ொடிக்கு, தான் ஏறிவந்த தேரையே பற்றுக்கோடாய்
தந்தான் வேள்பாரி; நீங்கள் அப்படித் தேரை எல்லாம் தர வேண்டாம். ஆதரவு இல்லாத நிலையில்
க�ொழு க�ொம்பற்ற க�ொடி ப�ோல தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் ம�ொழிகளைச் ச�ொல்லியாவது துணை
நில்லுங்கள் அது ப�ோதும்.”

“ப�ோர் மேகம் சூழ்ந்த நிலையில், தன் அண்ணனின் ப�ோக்கில் உடன்பாடில்லாத விபீடணன் இராவணனை
விட்டு நீங்கி, இராமனிடம் சென்றப�ோது, சிறகு இழந்த பறவை ப�ோல செயல் இழந்து நின்றான் இராவணன்.
ஆனாலும், அதில் கலங்காமல் ப�ோரை எதிர்கொண்டான் இராவணன்.”

“மகாபாரதப் ப�ோரில், துரிய�ோதனனின் படைக்குத் தலைமைத் தாங்கி நின்ற பீஷ்மர், வீழ்த்தப்பட்டப�ோது,
மாலுமி இல்லாத கப்பல் ப�ோல முறையான வழிகாட்டல் இல்லாமலும் தலைமைத்துவம் இல்லாமலும்
துரிய�ோதனின் படை தவித்தது; அப்போது கருத்து வேறுபாட்டை மறந்து களத்துக்கு வந்தான் கர்ணன்.
தளபதியாய் நின்று ப�ோர் திறம் காட்டினான். அதுவன்றோ அறம்..! வீரத்தின் விளைநிலம்..!”

4.5.5 ஐந்தாம் படிவத்திற்கான உவமைத்தொடர்களையும் அவற்றின் ப�ொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

119

த�ொகுதி 12 “ஏற்பட்ட சினத்தையும் பகைமையும் வெளிக்காட்டாமல், நீறு பூத்த நெருப்புப் ப�ோல புகைந்து
க�ொண்டிருக்கும் நண்பர்களே, எதுவாகினும், மனம் விட்டுப் பேசுங்கள். அன்பைப் பேணுங்கள்; பகைமை
நீங்கும். நல்லவை நடக்கும்; உறவும் வளரும்.”

2

உவமைத்தொடர்களைப் ப�ொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

3

வாக்கியங்களைச் சரியான உவமைத்தொடர்களைக் க�ொண்டு நிறைவு செய்க.

1. நம் பெற்றோர் நமக்காக அல்லும் பகலும் உழைக்கும் தந்நலமற்ற உழைப்பு
பயனற்றுப் ப�ோகாதிருக்க தேர்வில் நல்ல தேர்ச்சிகளைப் பெற்று நாம்

அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும்.

2. தன்னைத் தாய் தந்தையாய் இருந்து காத்து வளர்த்த தன் அக்காளையும் இழந்து
ஆதரவின்றித் தவித்த மணிவண்ணனை, பெரியவர் அரவிந்தன்

தத்தெடுத்தப�ோது அனைவரும் நெகிழ்ந்தனர்.

3. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம்,
நிலவில் தரையிறங்காமல் தன் பாதையை விட்டு விலகிய ப�ோது, இஸ்ரோ தலைவர் சிவன்
செயல் இழந்து நின்றார்.

4. தம் காற்பந்து அணியின் குழுத்தலைவன், காலில் அடிபட்டு வெளியேறியப�ோது,
, திடலில் தம் அணியை யாரும் வழிநடத்த இயலாமல் ப�ோய்விடுமே

எனப் பயிற்றுநர் தவித்தார்.

5. பகை உணர்ச்சியையும் க�ோபத்தையும் வெளிக்காட்டாமல் தம்

உள்ளத்திலேயே அடக்கி வைத்திருந்த வேந்தனும் சந்திரனும் வாய்ப்பு வந்தப�ோது வாய்ச்

சண்டையில் ஈடுபட்டனர்.

õ÷Šð´ˆ¶î™

உவமைத்தொடர்களின் ப�ொருளைச் ச�ொந்த ம�ொழிநடையில் விளக்கி எழுதுக.

°¬øc‚è™

உவமைத்தொடர்களையும் அவற்றின் ப�ொருளையும் மனனம் செய்து ஒப்புவித்திடுக.
120

ð£ì‹ 13 சுற்றுச்சூழல்
1 தூய்மைக்கேடு

புகைமூட்டச் சிக்கல் குறித்துக் கலந்தாய்க.

புகைமூட்டம்

ஒவ்வோர் ஆண்டும் புகைமூட்டம் நம் நாட்டைச் சூழ்வது வாடிக்கையாகிவிட்டது. புகைமூட்டத்தின்போது,
நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. ஆசியான் மாநாடுகள் வரை இச்சிக்கல்
விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு பிறக்கவில்லை.

1

கீழ்க்காணும் சிக்கலைக் குறித்துக் குழுமுறையில் கலந்துரையாடுக. கருத்துகளின் வழி சிக்கலின்
காரண காரியங்களை அறிக.
புகைமூட்டத்தின்போது, நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றது.

2

கலந்துரையாடலில் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் க�ொண்டு, புகைமூட்டச் சிக்கலுக்கான
காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக.

எ.கா: வெயில் காலம் புகைமூட்டத்திற்கு எவ்வகையில் காரணமாக உள்ளது?

èõùˆF™ ªè£œè

கேள்விகள் பல்வேறு க�ோணங்களில் அமைய வேண்டும். கீழ்க்காணும் கூறுகளை உள்ளடக்கி இருக்கலாம்:

இயற்கை மனிதர்கள் அரசுகள் சமூகம் தனியார்த் துறைகள்

1.2.6 காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்பர்.

121

த�ொகுதி 13 3

புகைமூட்டத்தால் ஏற்படும் விளைவுகள் த�ொடர்பான காரண காரியங்களை அறிய ஏற்ற
கேள்விகளைக் கேட்டிடுக.

புகைமூட்டக் காலத்தில் பள்ளிகள் மூடப்படுகின்றன.

õ÷Šð´ˆ¶î™

படங்களை ஆராய்ந்து, சிக்கலுக்கான காரண காரியங்களை அறியும் வண்ணம் கேள்விகளைப்
பட்டியலிடுக. கேள்விகளை வகுப்பின் முன்னிலையில் கேட்டிடுக.

நீர்த் தூய்மைக்கேடு ஒலித் தூய்மைக்கேடு

°¬øc‚è™

கீழ்க்காணும் பல்நிலை நிரல�ொழுங்கு வரைபடத்தில் காணும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான
காரண காரியங்களை அறியும் வகையில் கேள்விகளைப் பட்டிலிட்டுக் கூறுக.

எ.கா: இயற்கைச் சீற்றத்தால் நிகழ்ந்த செயல் யாது? எவ்வகையில் இந்நிகழ்வு இயற்கைச்
சீற்றத்தோடு த�ொடர்புடையது?

காரணம் த�ொடர்பான காரியங்கள் த�ொடர்பான
கேள்விகள் கேள்விகள்

சுற்றுச்சூழல்
சீர்கேடு

122

ð£ì‹ 2 நெகிழியும் நாமும்

பனுவலை ம�ௌனமாக வாசித்து முக்கியத் தகவல்களை அறிக.

நம் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத கூறாக நெகிழி மாறிவிட்டது என்றால் அதை மறுக்க த�ொகுதி 13
இயலாது. நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பெரும்பாலான ப�ொருள்கள் எல்லாமே நெகிழியால்
செய்யப்பட்ட ப�ொருள்களாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக, ப�ொருள்களைக் க�ொண்டு செல்லப்
பயன்படும் பைகள், உணவுப் ப�ொட்டலங்கள், நம் உடைமைகள், வீட்டு அலங்காரப் பூக்கள், குழந்தைகள்
பயன்படுத்தும் ப�ொருள்கள் என எல்லாம் நெகிழிமயமாகவே விளங்குகின்றன. இன்று நெகிழியைத்
தவிர்த்துவிட்டு வாழ முடியுமா என்று நம்முள் பெருங்கேள்வி எழுந்து பயமுறுத்துகிறது.

நெகிழியில் அடங்கியிருக்கும் வேதியல் ப�ொருள்கள் நச்சுத்தன்மை மிக்கவை. அவை, பல்வேறு
தீமைகளை விளைவிக்கின்றன. குறிப்பாக, நெகிழி உறைகளில் சுற்றப்பட்டு வரும் உணவுப் ப�ொருள்களான
இன்னட்டு(சாக்லேட்டு), பால்கோவா ப�ோன்றவற்றில் நெகிழி வேதிப் ப�ொருளான பென்சீன் வினைல்
குள�ோரைடு கலந்துவிடுகிறது. இதனால், புற்றுந�ோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. த�ோல்நோய் முதல் மூச்சு
இளைப்பு ந�ோய் வரை பல ந�ோய்களுக்கும் நெகிழி காரணமாக அமைகிறது. நெகிழிகள் எளிதில் மட்காத
மற்றும் சிதையாத தன்மை க�ொண்டிருப்பதால், நெகிழிப் ப�ொருள்கள், கழிவுக் குழாய்கள், சாக்கடைகள்
ஆகியவற்றில் அடைப்பு ஏற்படுத்தி விடுகின்றன. இதனால், நீர்த்தேக்கம் ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுவத�ோடு,
‘டெங்கி’ ப�ோன்ற ந�ோய்கள் ஏற்படக் காரணமாகின்றது.

எளிதில் மட்கிப் ப�ோகாத நெகிழிப் ப�ொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி, அவற்றின் வளத்தைக்
குறைத்து நஞ்சாக்குகின்றன. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கின்றன. மேலும், கடற்கரை ஓரத்திலும் கடலிலும்
எறியப்படும் நெகிழிப் ப�ொருள்களைக் கடல் பறவைகள், ஆமைகள் ப�ோன்ற கடல்வாழ் உயிரினங்கள்
விழுங்கி, இறந்துவிடுகின்றன. நெகிழிப் ப�ொருள்களால் காற்றுத் தூய்மைக்கேடும் ஏற்படுகிறது. நெகிழிப்
ப�ொருள்களை எரிப்பதால் ‘டையாக்சின்’ என்னும் நச்சுப் புகை வெளிவருகிறது. இந்த நச்சுப்புகை காற்றில்
கலந்து, உயிரினங்களுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கின்றது.

2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர்.

123

த�ொகுதி 13 நெகிழியின் பயன்பாட்டினால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டாலும், அதைத் தவிர்த்துவிட்டு வாழ
இயலாத இக்கட்டான சூழலுக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது. நெகிழி இத்துணை ஆளுமைப் பெற்று
விளங்குவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மற்ற உல�ோகங்களுடன் ஒப்பிடுகையில் நெகிழிப்
ப�ொருள்களை உருவாக்குவது மிகவும் மலிவாகவும் எளிதாகவும் இருக்கின்றது. நெகிழியைப் பல்வேறு
வடிவங்களில், அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கலாம். கண்ணாடி, இரும்பு, காகிதம்
ப�ோன்றவற்றால் உருவாக்கப்படும் ப�ொருள்கள் விரைவில் சிதைந்து, அழிந்துவிடும். ஆனால், நெகிழி
சிதையாது. எடையின்றி இலகுவாக இருக்கும் நெகிழி, காற்று, நீர், ஈரம் ப�ோன்ற வேதிப் ப�ொருள்களால்
பாதிக்கப்படாமல் நீண்ட நாள்கள் நிலைத்திருக்கும். மேலும், மின்சாரக் கருவிகளில் மின்கசிவு ஏற்படாமல்
பயன்படுத்தக் கூடிய இயல்பையும் நெகிழி பெற்றிருக்கிறது.

1

பனுவலில் திரட்டிய தகவல்களைக் குழுவில் பகுத்தாய்க. கருத்துகளை ஏற்ற வரிபடக் கருவியில்
படைத்திடுக. பின்வரும் அடிப்படையில் பகுத்தாய்ந்திடுக.

எ.கா: நெகிழியின் பயன்பாடு.

நெகிழியின் முக்கியத்துவம்.
நெகிழியின் தீமைகள்.
இயற்கைக்கு ஏற்படும் மாசு.
நெகிழியின் பயன்பாட்டைத் தவிர்க்க இயலுமா?

2

பகுத்தாய்ந்த கருத்தின் அடிப்படையில் நெகிழி பயன்பாட்டைப் பற்றிய உமது முடிவினைக்
கூறுக; விளக்கி எழுதுக.

3

கீழ்க்காணும் நாளிதழின் தலைப்புச் செய்தியைப் பகுத்தாய்ந்திடுக. பகுத்தாய்ந்த கருத்துகளின்
அடிப்படையில் உமது முடிவினையும் கருத்தினையும் சான்றுகள�ோடு விளக்கிக் கூறுக; எழுதுக.

சிலாங்கூரில் நெகிழிப் பைகளுக்குத் தடை
மாநில அரசு அறிவிப்பு

சாஆலாம் அக். 15 -
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் மாநிலத்தில் நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு
முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது என மாநில அரசு அறிவித்திருக்கிறது. மாநில மக்களின் முழு
ஆதரவ�ோடு இது செயல்படுத்தப்படும் எனச் சுற்றுச்சூழலுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
குறிப்பிட்டார்.

124

õ÷Šð´ˆ¶î™ த�ொகுதி 13

பனுவலை ஆழ்ந்து வாசித்து, முக்கியத் தகவல்களை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்க.
க�ொடுக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் க�ொண்டு நெகிழி மாசுபாட்டைத் தடுத்துவிட
இயலுமா? என்ற உமது முடிவினைச் சான்றுகள�ோடு விளக்கிக் கூறுக; எழுதுக.

மறுபயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப்பைகளைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் ஆயிரக்கணக்கான
நெகிழிப்பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.

கடைக்குப் ப�ொருள் வாங்கச் செல்லும் ப�ோது, மறக்காமல் கையில், துணிப்பைகளைய�ோ,
சணலால் செய்யப்பட்ட பைகளைய�ோ உடன் எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம்
நம்மிடம் உள்ள பழைய நெகிழிப் பைகளையாவது கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புதிய
நெகிழிப்பைகளை வாங்கக்கூடாது.

ப�ொதுமக்கள் தங்களின் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள பயன்படுத்தும் தண்ணீர் குடுவைகள், மீண்டும்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய உல�ோகங்கள் மற்றும் கண்ணாடிகளால் செய்யப்பட்ட குடுவைகளாக
இருக்க வேண்டும்.

நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும். இயலுமானால்,
முற்றாகத் தடை செய்ய வேண்டும். இதற்கு எல்லாத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

°¬øc‚è™

பனுவலை வாசித்து முக்கியத் தகவல்களைப் பட்டியலிடுக; பகுத்தாய்க. மறுசுழற்சி சுற்றுச்சூழல்
பாதுகாப்பிற்கு எவ்வகையில் பங்காற்றும் என்பதை ஒட்டி உமது முடிவை விளக்கிக் கூறுக.

வீணே வீசப்படும் கழிவுப் ப�ொருள்களைக் குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல்
(Reuse), மறுசுழற்சி (Recycle) எனும் வகையில் மறுபயனீடு மேற்கொள்ளப்படுகிறது.
மறுசுழற்சி செய்வது சுற்றுச்சூழலுக்குப் பெருந்துணை புரிகிறது. மறுசுழற்சி
என்பது நாம் பயன்படுத்திய ப�ொருள்களை மீண்டும் பயன்படுத்தத் தக்கவாறு
மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால், இப்பொருள்கள் வீணே வீசப்பட்டுப்
பயனற்றுப் ப�ோவதைத் தடுக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே
ப�ொருள்களை மீண்டும் உருவாக்கத் தேவைப்படும் மூல வளங்களையும் ஆற்றலையும் சேமிக்க
முடிகிறது. மக்களுக்கு இது குறித்துப் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

125

ð£ì‹ 3 சுற்றுச்சூழலும் மேம்பாடும்

வாதக் கட்டுரையின் பகுதிகளை ஆழ்ந்து வாசித்து, அதன் அமைப்பை அறிக.

த�ொகுதி 13 ‘மேம்பாட்டுத் திட்டங்கள் வளர்ச்சியைவிடச் சுற்றுச்சூழலுக்கு கவனத்தில்
அழிவைத்தான் க�ொண்டு வந்துள்ளன.’ இக்கருத்தை வாதித்து எழுதுக. க�ொள்க..!

முன்னுரை : தலைப்பையும்
இறைவன் நமக்கு வழங்கிய அருள் க�ொடைகளுள் தலையானது இயற்கை பின்னணியையும்
எனும் எழில் வடிவாகும். எல்லா உயிர்களும் நிறைவுடன் வாழும் வகையில்,
இறைவன் இயற்கையை முழுமையாக உருவாக்கித் தந்திருக்கின்றான். விளக்குதல்.
ஆனால், மனிதன�ோ நாகரிக வளர்ச்சி, அறிவியல் புரட்சி, ப�ொருளியல்
மேம்பாடு என்ற பெயரில் நாம் வாழும் பூமியை நரகமாக்கி வருகிறான். நிலைப்பாட்டினைக்
இன்றைய மேம்பாட்டுத் திட்டங்கள் வளர்ச்சியைவிடச் சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடல்.
அழிவைத்தான் மிகுதியாகக் க�ொண்டு வந்துள்ளன எனலாம்.
முதன்மைக்கருத்து
வாதக் கருத்துப் பகுதி:
கட்டுக்கடங்காத ப�ொருளாதார வளர்ச்சித் திட்டங்களும் துணைக் கருத்து
த�ொழிற்பேட்டைகளின் பெருக்கமும் ப�ொருளாதார நடவடிக்கைகளும் வாத விவரிப்பு
நம் இயற்கைச் சூழலையே முற்றிலும் மாற்றி அமைத்து வருகின்றன. எடுத்துக் காட்டு
த�ொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகை, நாம் சுவாசிக்கும் தூய
காற்றையும் த�ொழிற்சாலைகள் வெளியேற்றும் அமிலத்தன்மை மிகுந்த நிலைப்பாட்டை
கழிவுநீர், ஆற்று நீரையும் மாசுபடுத்தி வருகின்றன. த�ொழிற்சாலைகளின் வலியுறுத்தல்
பெருக்கத்தால், எங்குப் பார்த்தாலும் கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கி,
நம்மை வஞ்சிக்கின்றது. மீன்கள் துள்ளிக் குதித்து ஓடிய நீர�ோடைகள் நிலைப்பாட்டை
இன்று சாக்கடைகளின் தாயகமாக மாறிவிட்டன. இதனால், மனிதன் வலியுறுத்தி நிறைவு
புதிய புதிய ந�ோய்க்கும் ஆளாகி வருகிறான். எனவே, இதனை வளர்ச்சி
என்பதைவிடச் சுற்றுச்சூழலின் அழிவே என்பதுதான் சாலப் ப�ொருந்தும். செய்தல்

முடிவுரை:
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதை மனுக்குலத்தின் கடமையாக்க
வேண்டும். வளமான பூமியை அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்
செல்ல வேண்டும். ப�ொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும்
மேம்பாட்டுத் திட்டங்கள் வளர்ச்சியைவிடச் சுற்றுச்சூழலுக்கு அழிவையே
தருவதால், அத்திட்டங்களை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
வரைமுறையற்ற ப�ொருளாதாரத் திட்டங்களினால் பூமியின் ஆயுளைக்
குறைத்துவிடக்கூடாது. நாம் இயற்கையைப் பாதுகாத்தால், நம்மையும்
இயற்கை பாதுகாக்கும்.

3.4.30 250 ச�ொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.

126

1 த�ொகுதி 13

வாசித்த வாதக் கட்டுரையின் கருத்துகளைத் துணையாகக் க�ொண்டு 250 ச�ொற்களுக்குள்
முழுமையான வாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

2

வழங்கப்பட்டுள்ள தலைப்பில் வாதக் கட்டுரை ஒன்றனை 250 ச�ொற்களுக்குள் எழுதுக.
வழங்கப்பட்டுள்ள வழிகாட்டிகளைப் பயனாகக் க�ொள்க.

மாசு சுற்றுச்சூழலுக்கு மிகுதியான அழிவை ஏற்படுத்தி வருகின்றது.

கட்டுமானத்துறையில் ஒலி மாசு
ஏற்படும் ஒலி மாசு : இயந்திரங்கள், வாகனங்கள், கட்டுமானத்துறை
மனிதனின் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறைகளைப் பாதிக்கின்றது.
அமைதியின்மை, மனவுளைச்சலை ஏற்படுத்துகின்றது.

காற்றில் ஏற்படும் மாசு
அறிவியல் சாதனங்கள் அழிவை ஏற்படுத்துகின்றன.
குளிர்சாதனப் பெட்டி, தானியங்கி விற்பனை இயந்திரங்கள், வாகனங்கள் வெளியாக்கும்
வாயு(‘குள�ோர�ோபுள�ோர�ோகார்பன்’) காற்றினை மாசுபடுத்துகின்றது.
ஓச�ோன் படலத்தில் ஓட்டை - புற ஊதாக் கதிர்களின் தாக்கம்
த�ோல் புற்றுந�ோய் ஏற்படுகிறது, கடலின் மேற்பரப்பில் வாழும் மீன்கள் அழிகின்றன.

நீர் மாசுபடுதல்
இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் நீர் மாசடைகிறது.
வீட்டுக்கழிவுகள் - மற்றும் கழிவு நீர்க்குழாய்களில் அடைப்புகள்.
பூச்சிக்கொல்லிகள் - பூச்சிக்கொல்லிகளும் வேளாண்மை பாதிப்புகளும்.
நீரினால் காலரா, மலேரியா, வயிற்றுப்போக்குப் ப�ோன்ற ந�ோய்கள் உண்டாதல்.

127

த�ொகுதி 13 3

குறிப்புகளைப் பயன்படுத்தி 250 ச�ொற்களில் தலைப்பிற்கு ஏற்ற வாதக்கட்டுரை
ஒன்றனை எழுதுக.

மனிதனின் ப�ொறுப்பற்ற ப�ோக்குகளே சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேட்டினை விளைவிக்கின்றன.
முன்னுரை
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் சீர்கேடுகள்.
சீர்கேடுகள் ஏற்படுத்தும் விளைவுகள்.
மனிதனின் பங்கு.
கருத்துகள்
த�ொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள், நச்சுப் புகைகள்.
காடுகளை எரித்தல்.
மின்சாரக் கருவிகளின் அளவுக்கு மிஞ்சிய பயன்பாடு.
விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் வேதியல் உரங்கள்.
நடவடிக்கை எடுப்பதில் அரசின் மெத்தனப் ப�ோக்கு.
முடிவுரை
சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய ப�ொறுப்பு எல்லாருக்கும் உண்டு.
அரசாங்கங்கள், அரசு சாரா ப�ொதுநல அமைப்புகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி, ப�ொறுப்புணர்வோடு
பூமியைக் காக்க வேண்டும்.

õ÷Šð´ˆ¶î™

இயற்கையும் சுற்றுச்சூழலும் மனித வாழ்வின் மேன்மைக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
இத்தலைப்பில் 250 ச�ொற்களில் ஒரு வாதக் கட்டுரையை எழுதுக.

°¬øc‚è™

விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படும் நவீன முறைகள் இயற்கையின்
சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கின்றன.

இத்தலைப்பில் 250 ச�ொற்களில் வாதக் கட்டுரை ஒன்றனை எழுதுவதற்கான சட்டகம் ஒன்றனைத்
தயார் செய்க. வழிகாட்டியைப் பயன்படுத்துக.
முன்னுரை
வாதக் கருத்துகள்:
1. புதிய வகை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பாதிப்பு - மண், நீர், காற்றுத் தூய்மைக்கேடு.
2. இயந்திரப் பயன்பாடு - மனிதனின் ச�ோம்பேறித்தனம் - உடல்நலம் பாதிப்பு
3. புது வகை விதைகள், பயிர்கள் உற்பத்தி மிகுதல். நிலத்தின் வளம் குன்றுதல்
முடிவுரை

128

ð£ì‹ 4 இலக்கணம்

த�ொகாநிலைத் த�ொடர்

த�ொகாநிலைத் த�ொடர்கள் என்றால் என்ன? த�ொகுதி 13

ச�ொற்றொடரில் உருபுகள�ோ ச�ொற்கள�ோ மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள்
தருமாயின் த�ொகாநிலைத் த�ொடர் எனப்படும்.

த�ொகாநிலைத் த�ொடர் ஒன்பது வகைப்படும். அவற்றுள் எழுவாய்த்தொடர் மற்றும்
விளித்தொடர் ஆகியவை உள்ளடங்கும்.



எழுவாய்த்தொடர்: (எ.கா: சேவல் கூவியது)

எழுவாயைத் த�ொடர்ந்து பயனிலை வரும் த�ொடர் ‘எழுவாய்த்தொடர்’ எனப்படும்.



விளித்தொடர்: (எ.கா: கண்ணா வா!)

எ.கஒஅாரவு:்வவராைறுஅவிழளைியத்ேதற்றக்ுமப்ொபர�ுோட்தடுு விளிக்குந்தொடர் விளித்தொடர் எனப்படும்.
பெயர்ச்சொல்லின் கடை நீண்டு ஒலிக்கும்.

1

கீழ்க்காணும் த�ொகாநிலைத் த�ொடர்களை ஆய்ந்து வகைப்படுத்துக.

புலி பாய்ந்தது தென்றலே வா! ச�ொல் மன்னா! மழை பெய்யுமா?
பாரதி கவிஞர் தெய்வமே பார்! குழந்தாய் வா!
குரங்கு தாவியது அன்பு தெரியுமா? குயில் கூவியது
வா தம்பி! மாடுகள் ஓடின

எழுவாய்த் த�ொடர் விளித்தொடர்

5.7.6 த�ொகாநிலைத்தொடரில் எழுவாய்த்தொடர், விளித்தொடர் ஆகியவற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

129

2

கீழ்க்காணும் த�ொகாநிலைத் த�ொடர்களைப் ப�ொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

கலைவாணி வா! குழந்தை அழுதது ஓவியர் ஓடினார் வாரும் நண்பரே!
அவர்தாம் நண்பர் உலகம் வியக்கும்
நிலவு த�ோன்றுமா? அம்மா அமர்க!

த�ொகுதி 13 3

வினாக்களுக்கு விடை கூறுக; எழுதுக.

1. த�ொகாநிலைத் த�ொடர் என்றால் என்ன? விளக்கி எழுதுக.
2. த�ொகாநிலைத் த�ொடர் எத்தனை வகைப்படும்?
3. எழுவாய்த்தொடர், விளித்தொடர் ஆகியவற்றின் வேறுபாடு என்ன? வகைக்கு மூன்று
எடுத்துக்காட்டுகளைத் தருக.

õ÷Šð´ˆ¶î™

கீழ்க்காணும் வாக்கியங்களில் காணப்படும் த�ொகாநிலைத் த�ொடர்களைக் கண்டறிந்து
எழுவாய்த்தொடர், விளித்தொடர் என வகைப்படுத்தி எழுதுக.

1. தமிழரின் இனவுணர்வைத் தட்டியெழுப்ப எழுச்சிக் கவிதைகளைப் பலர் எழுதினர்.
2. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் தமிழ்ச்சுவடிகள் கிடைக்குமா எனத் தேடி அலைந்தார்.
3. “புலவரே வருக! அருங்கவி தருக,” எனக் கபிலரை அன்பொழுக வரவேற்றான் மன்னன் பாரி.
4. “சிறுத்தையே வா! இனம் நலம் காக்க” என்று இளைஞரை எழுச்சிய�ோடு அழைத்தார் பாவேந்தர்.
5. தமிழே உலகின் தாய்மொழி என்பதைத் தம் ஆய்வின் வழி கார்டுவெல் நிறுவினார்.

°¬øc‚è™

வாக்கியங்களைத் த�ொகாநிலைத் த�ொடர்களைக் க�ொண்டு புலவரே
நிறைவு செய்க. கீழ்க்காணும் ச�ொற்களைப் பயன்படுத்துக. நாய்கள்
வாருங்கள்
1. திருடன் பூட்டை உடைத்து நுழைவதைக் கண்டு . அம்மா
இறைவா
2. “ ,!” என்று வரவேற்றார் அமைச்சர். பாடினார்

3. குழந்தையைத் தூங்க வைக்க .

4. “ !” என்று இறைவனை வேண்டினார் பாட்டி.

5. கடும் மழை பெய்ததால் என மக்கள் பயந்தனர்.

காப்பாற்று வெள்ளம் குரைத்தன ஏற்படும�ோ

130

ð£ì‹ 14 நாடகக் கலை
1
த�ொடர் நாடகம்

த�ொலைக்காட்சித் த�ொடர்களைக் குறித்துக் கலந்துரையாடுக.

1

த�ொடர்நாடகங்களின் தேவைக்கான காரணங்களை ஆராய்ந்து கூறுக.

2

த�ொடர்நாடகங்களால் எழும் சிக்கல்களையும் அவற்றிற்கான காரண காரியங்களையும் விவரித்துக் கூறுக.
த�ொடர்நாடகங்களால் சமூகவியல் சிக்கல்கள் மேல�ோங்குகின்றன.

3

இடுபணி 2இல் கூறிய சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளை விவரித்துக் கூறுக.

õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™

இளைஞர்கள் மகிழ்ந்து ஈடுபடும் கீழ்க்காணும் கூற்றின் காரண காரியங்களை
ப�ொழுதுப�ோக்குகளுக்கான வாய்ப்பு ஆராய்ந்து விவரித்திடுக.
த�ொடர்நாடகங்களால் கல்வியில் பாதிப்பு
குறைகிறது.
மேற்க ண ்ட க ரு த் தி னைக் கா ர ண
காரியங்களுடன் ஆராய்ந்து விவரித்திடுக.

1.4.7 சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுவர்.

131

ð£ì‹ 2 நாடகம் வளர்த்த தமிழ்

வாசித்தறிக.

சாக்ரட்டீஸ்

த�ொகுதி 14 கிரேக்கத் தத்துவஞானிகளுள் ஒருவர் சாக்ரட்டீஸ். இவர் கிரேக்க இளைஞர்களை அறிவும் சிந்தனையும்
மிக்க சமுதாயமாக ஆக்க முயன்றார். அதனை விரும்பாத கிரேக்க நாட்டு அரசு அவர் மீது வீண் பழி
சுமத்தி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியது.

அனீடஸ்: சாக்ரடீஸ்! நாட்டில் நடமாடக்கூடாத ஓர் ஆத்மா. ஜனநாயக அரசாங்கத்தைக் குறை
கூறும் இந்த ஜந்து, உடல் முழுதும் விஷம் க�ொண்டது. கேட்டார் பிணிக்கும் ச�ொற்களால்,
கேளாரும் வேட்ப ம�ொழி வார்த்தைகளால், கேடு மலியும் கருத்துகளை அள்ளி வழங்கி,
ஆண்டவனுக்கு விர�ோதமாக, சட்டத்துக்கு விர�ோதமாக, அரசாங்கத்துக்கு விர�ோதமாக
இளைஞர்களைத் தூண்டி விடும் இழிகுலக் கிழவன்.

சாக்ரட்டீஸ்: ம்...ம்...ம்... (சிரிக்கிறார்)

நீதிபதி: என்ன சிரிப்பு? என்ன காரணம்?

சாக்ரட்டீஸ்: ஒன்றுமில்லை தலைவா! ஒன்றுமில்லை. ஆத்திரத்திலே அனீடஸ் தன்னை மறந்து
என்னைப் பார்த்துக் கிழவன் என்று கேலி செய்கிறான். ம்ம்ம்ம்... கேலி செய்கிறான். அதை
நினைத்தேன்; சிரித்தேன். கடல் நுரைப�ோல நரைத்த தலை முடி எனக்கும் அனீடஸுக்கும்
இல்லையா சபைய�ோர்களே! என்ன அனிடஸ் உண்மைதானே?

மெலீடஸ்: சாக்ரடீஸ், இந்த வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரது தலையைப் பற்றியதல்ல.
அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சாக்ரட்டீஸ்: மிகவும் நன்றி மெலீடஸ், மிகவும் நன்றி. ஆனால், ஒன்று, எண்சாண் உடம்பிற்குத் தலையே
பிரதானம் என்பது ப�ோல, இந்த வழக்கிற்கும் தலைதான் பிரதானம். என் தலையிலிருந்து
சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அறிவு; அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து
பீறிட்டெழும் அதிகார ஆணவம், இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் இருமுனைப்
ப�ோராட்டம். அதன் விளைவுதான் மெலீடஸ் இந்த வழக்கு.

மெலீடஸ்: பார்த்தீர்களா! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான். இப்படித்தான் இளைஞர்களையும்
கெடுத்தான்.

சாக்ரட்டீஸ்: ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்? நானென்ன வாலிபருக்கு
வலைவீசும் விலைமாதா? பருவ விருந்தளிக்கும் பாவையா?

மெலீடஸ்: மாதரிடம் இல்லாத மயக்கும�ொழி, வாலிபருக்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத
வசீகரச் ச�ொல் அலங்காரம், வார்த்தை ஜாலம், அடுக்குத் த�ொடர், இப்படிப் பல மாயங்கள்
கற்றவர் நீர்!

சாக்ரட்டீஸ் : மந்திரவாதி என்றுகூடச் ச�ொல்லுவாய். அன்புள்ள இளைஞனே! ஏதென்ஸ் நகரத்தில் நான்
ஒருவன்தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன், அப்படித்தானே?

2.1.11 நாடகப் படிவங்களைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

132

மெலீடஸ்: ஆமாம். த�ொகுதி 14
சாக்ரட்டீஸ்: நீ கெடுக்கவில்லை?
மெலீடஸ்: இல்லை!
சாக்ரட்டீஸ்: அனீடஸ்?
மெலீடஸ்: இல்லை!
சாக்ரட்டீஸ்: சிற்பி லைகன்?
மெலீடஸ்: இல்லை!
சாக்ரட்டீஸ்: இத�ோ இந்த நீதிபதி?
மெலீடஸ்: இல்லை!
சாக்ரட்டீஸ்: யாருமே இளைஞர்களைக் கெடுக்கவில்லை. எல்லாரும் நன்மையே செய்கிறார்கள்;

என்னைத் தவிர அப்படித்தானே?
மெலீடஸ்: ஆமாம்! ஆமாம்!
சாக்ரட்டீஸ்: ஏன் ஏதென்ஸ் நகரமே இளைஞர்களைத் திருத்தும்போது, நான் ஒருவன் மட்டும் எப்படியப்பா

அவர்களது பாதையைத் திருப்ப முடியும்?
மெலீடஸ்: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்!
சாக்ரட்டீஸ்: ஏன் இப்படியும் ச�ொல்லலாமே! இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு. என்ன மெலீடஸ்

திகைக்கிறாய்? சபைய�ோர்களே! வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம்பாடி ப�ோல வட்டமிடக்
காரணம், என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல; வளம் குறையாக் கருத்துகள்; தரம்
குறையாக் க�ொள்கைகள்; இந்தத் தரணிக்குத் தேவையான தங்க நிகர் எண்ணங்கள்; அழகு
ம�ொழியால், அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்கிறார்களே
அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், அந்த ம�ொழி எனக்கு மட்டும் ச�ொந்தமல்லவே; அதை
அவர்கள் பேசக்கூடாது என்று நான் தடை ப�ோட்டது கிடையாதே! பேசட்டுமே அவர்களும்.
பாவம் பேசித் த�ோற்றவர்கள்; பேசித் த�ோற்றவர்கள். ம்ம்ம்ம்...

மூலம்: கலைஞர் மு.கருணாநிதி - எடுத்தாளப்பட்டது

1

நாடகப் படிவத்தைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பப்
பாகமேற்று வாசித்திடுக.

2

சாக்ரடீட்ஸை இளைஞராகக் கற்பனை செய்து அவர் பேசிய நாடக வசனங்களைச் சரியான
வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நடித்துக் காட்டுக.

133

த�ொகுதி 14 3

நாடகப் படிவத்தைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக.

பாரதியின் கனவு

பாத்திரங்கள் : பாரதி (மீண்டு உயிர்த்தெழுந்தவன்), தற்காலன் (நீங்கள�ோ அல்லது நான�ோ) (ஆகஸ்டு
15, 2012 - ஒரு வழக்கமான காலை – ஆனால், இன்று விடுதலை நாள் என்பதால் தற்காலன், அந்த
நினைவுடன் எழுகின்றான். கண்ணைக் கசக்கிக் க�ொண்டு, சாரளத்தைத் திறந்து காலை வானத்தைப்
பார்க்கிறான்...)

அருவ ஒலி... “வானமெங்கும் பரிதியின் ச�ோதி… மலைகள் மீதும் பரிதியின் ச�ோதி… கானல் நீர்க் கடலின்
மீதும்…”

தற்காலன்: ஐய�ோ! பாரதியா, இவர் எங்கு இங்கு வந்தார்? (மெல்லிய காலை ஒளியில் புகைப�ோல்
ஒன்று வானில் த�ோன்றி, அருகே வந்து தெளிய, எதிரே பாரதி)

தற்காலன்: சார்! ஐயா! குட் மார்னிங்! சாரி, காலை வணக்கம் ஐயா! நீங்க… எப்படி… இங்க…

பாரதி: காலையின் முதல் வணக்கமே ஆங்கிலமா… அப்படியென்றால் இன்னுமா இங்கு
ஆங்கிலேயன் இருக்கிறான்… எங்கே அவன்?

தற்காலன்: (இவர் வேற…) ச�ொல்லுங்கையா… எப்படி வந்தீங்க? ஐயா, கவிதை வேறு, வாழ்க்கை வேறு…

பாரதி: என்ன?… கவிதை வேறு வாழ்க்கை வேறா?… அடப்பாவி! கவிதை என்பது வாணியின்
வாக்கு; அது சத்தியம்; வாணியைச் சரண் புகுந்தேன்; அருள் வாக்களிப்பாள் எனத் திடம்
மிகுந்தேன்; பேணு நல் பெரும் தவத்தாள்; நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள்…
இல்லை; எங்கோ தவறு இருக்கிறது; உள்ளத்தின் சத்தியம் கனல் விட்டு எரிய எழுதிய
வார்த்தைகள் ப�ொய்யாக முடியாது… சரி; ச�ொல்! அவர்கள்தாம் பிரிந்து சென்று விட்டார்கள்;
பகைவனுக்கருள்வாய் நெஞ்சே; நல் நெஞ்சே! பகைவனுக்கருள்வாய். அவர்கள் நன்றாய்
வாழட்டும்… விடு… மீதமுள்ள நம்மவராவது நன்றாய் இருக்கிறார்களல்லவா… சிந்து
நதியின் மிசை, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
த�ோணிகள் ஓட்டி விளையாடி வருகிறீர்கள் அல்லவா? வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்கிறீர்கள் அல்லவா? சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்து
விட்டீர்களல்லவா? சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்து விட்டீர்களல்லவா?…

(சிறு ஓய்வுக்குப் பிறகு... பாரதி த�ொடர்கிறார்)

பாரதி:
அட ஈனமில்லாதவர்களே; குழந்தைகளையுமா?
‘நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய
உடையவர்கள் மேல�ோர் பாப்பா’ என்ற
என் பாடலை அவர்களுக்குச் ச�ொல்லியே
தரவில்லையா? ‘பாரத நாடு, பழம்பெரும்
நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்’…
இதையும் ச�ொல்லவில்லையா?

134

õ÷Šð´ˆ¶î™

நாடகப் படிவத்தைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக.

வெயில் கடுமையாக அடிக்கிறது. சாலையில் ஒரு குப்பை வண்டி ப�ோகிறது. அதிலிருந்து ஒரு புழு கீழே த�ொகுதி 14
விழுந்து விடுகின்றது. சாலையின் வெப்பம் தாங்க மாட்டாமல் புழு துடிக்கின்றது. அதனைக் கண்ட
செல்வன் மிக வருந்தி ஒரு குச்சியால் எடுத்து நிழலில் ப�ோடுகின்றான். அதனைப் பெருநாவலரும்
செல்வியும் கண்டு உருகுகின்றனர்.

பெருநாவலர்: செல்வா! உனக்கு எங்கள் உள்ளார்ந்த அன்புப் பாராட்டுதல். நீ வாழ்க! உன்
த�ொண்டும் வாழ்க.

செல்வி: தம்பி! நீ செய்வது சிறிய செயல். ஆயினும் அது மிக அரிய செயல் ஆகும்.

செல்வன்: நேற்று என்னைத் தாத்தா பாராட்டியதற்கு மறு பாராட்டுதலா?

பெருநாவலர்: இல்லை செல்வா! நல்லதைப் பாராட்டுவதுதான் நன்று. அது நாட்டில் நல்லது நடக்க
வழிக�ோலும். அதுப�ோல், தீயதைக் கண்டிக்காமல் விடுவதும் தீது. அது தீமையையே
வளர்க்க உதவும்.

செல்வி: புழு துடித்தால் நமக்கென்ன? செத்தால்தான் நமக்கென்ன என்று இருக்கும் மனம்,
மரத்துப் ப�ோன மனம். பின்னர், அம்மனம் மாந்தர் துடிப்பதைக் கண்டும்கூட இரக்கம்
காட்டாத மனமாகப் ப�ோய்விடும்.

மூலம்: இலக்கியச் செம்மல் இளங்குமரனார் (பெருநாவலரும் பேரர்களும்)

°¬øc‚è™

கீழ்க்காணும் நாடகப் பகுதியைப் பாகமேற்றுச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப நடித்துக் காட்டுக.

தற்காலன்: ஐயா, நீதி காசுக்கு விலை ப�ோகிறது; உயர்ந்த மதி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறது;
கல்வி கூறுகட்டிக் கடைத்தெருவின் நடைபாதையில் விற்கப்படுகிறது; அன்பு செலுத்தத்
தகுதியான அடுத்த மனிதர் யாருமே இல்லை என்பதால் வளர்ப்புப் பிராணிகளிடம் மட்டுமே
செலுத்தப்படுகிறது… மேல�ோர் என்பவர் பத்து க�ோடிக்கு மேல் வருமான வரி கட்டாமல்
ச�ொத்து வைத்திருப்பவர்கள் அல்லது சினிமா நடிகர்கள்… நாங்கள் பாரத நாட்டின்
புதல்வர் என்பதை மறப்பதே இல்லை; அதனால்தான், என்று வெளிநாடு செல்வோம்
என்ற கனவிலேயே ஏங்கிக் க�ொண்டிருக்கிற�ோம்.

பாரதி: பாவிகளே, படுபாவிகளே… (மெல்லிய உடைந்த குரலில்) ‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத்
திறமுமின்றி… வஞ்சனை செய்வாரடி, கிளியே… வாய்ச்சொல்லில் வீரரடி…’ என்று ஏத�ோ
ஒரு விரக்தியில் நான் பாடியது உண்மைதான்… அதற்காக, நான் பாடிய பல பாடல்களை
உண்மையாக்காத நீங்கள்… இந்த வரிகளைத்தானா சத்தியமாக்க வேண்டும்? பதர்களே…
‘நல்லத�ோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? ச�ொல்லடீ
சிவசக்தி… வல்லமை தாராய�ோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே…’

135

த�ொகுதி 14 ð£ì‹ 3 கலையா...? க�ொலையா...?

பனுவலைக் கூர்ந்து வாசித்துக் கருத்தறிக.

த�ொடர்நாடகங்களின் விளைவுகள்

யாழினி

நாளை
நமதே

‘த�ொடரும், மலரும், மீண்டும் பூக்கும்...’ இவையனைத்தும் நாடகம் முடிந்தவுடன் அதன் த�ொடரைக்
காண்பதற்கு முன் ப�ோடப்படும் ச�ொற்கள். இவற்றை வைத்தே நாளை என்ன நடக்கும் என்ற ஆவல�ோடு
இரசிகர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருப்பர். இன்னும் ச�ொல்லப் ப�ோனால்,
த�ொடர்நாடகம் என்பது ஐந்தாறு நாள்களில் முடியும் நாடகம் அன்று. ஈராண்டு, ஆறாண்டுக் காலம்கூட
சில த�ொடர் நாடகங்கள் த�ொடர்கின்றன. முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சில த�ொடர்நாடகங்கள்
ஓரிரு மாதங்களில் முடியக்கூடியனவாய் இருந்தன. அதன் பிறகு, இரசிகர்களின் ஆதரவ�ோ என்னவ�ோ
தெரியவில்லை, பல நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டன. இத்தகு த�ொடர்நாடகங்களைப் பார்ப்பதால் பல
விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றுள் நேர்மறை விளைவுகளைக் காட்டிலும் எதிர்மறை விளைவுகளே
மிகுதி எனலாம்.

தேன்
சிட்டு

என் தங்கை

3.4.31 250 ச�ொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.

136

இந்தத் த�ொடர்நாடகங்கள் பார்ப்பவரை மன உளைச்சலுக்கு இட்டுச் செல்கின்றன என்பதில் த�ொகுதி 14
ஐயமில்லை. ஆராய்ச்சியின் ஆதாரங்களும் இதைத்தான் ச�ொல்கின்றன. இன்று ‘த�ொடரும்’ என்று
முடிந்த நாடகம், நாளை என்ன நடக்கும்? இவளை யார் திருமணம் புரிவார், அவர் இறந்து விடுவாரா?
என்றெல்லாம் ய�ோசிக்க வைக்கிறது த�ொடர்நாடகம். இளகிய மனம் படைத்த இரசிகர்கள�ோ தங்களையே
கதைப்பாத்திரத்தில் ஒருவராக மாற்றி, அக்கதைப்பாத்திரத்திற்கு நேர்ந்த ச�ோகத்தில் தங்களையும்
ஆழ்த்திவிடுகின்றனர். இதுவே, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது.

அதுமட்டுமல்லாமல், இல்லத்தரசிகள் த�ொடர்நாடகங்களிலேயே மூழ்கி விடுகின்றனர் எனும்
குற்றச்சாட்டும் இருந்து க�ொண்டுதான் வருகிறது. இதை மறுக்கவும் முடியாது. சமைக்கின்ற
நேரங்களில் ஒளிபரப்படும் த�ொடர்நாடகங்களைப் பார்க்கும் சாக்கில் சமையலையே செய்யாமல்
உண்ணா நிலைகூட இருக்கவே செய்கின்றது. மற்ற குடும்பப் ப�ொறுப்புகளையும் சரிவரச்
செய்ய முடியாத சூழ்நிலையையும் இத்தொடர்நாடகங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. வேலை விட்டு
வீட்டிற்கு வந்த கணவரைக் கவனிக்காமல் த�ொடர்நாடகத்தில் மூழ்கியிருந்த மனைவியின் மேல்
க�ோபப்பட்டுத் த�ொலைக்காட்சி பெட்டியை உடைத்தார் கணவர் என்ற செய்தி நாளிதழில் வெளிவந்தது
அனைவரும் அறிந்ததே.

மேலும், த�ொடர்நாடகங்கள் இரசிகர்கள் மத்தியில் எதிர்மறைச் சிந்தனையைத் தூண்டுகின்றன.
என்று ச�ொன்னால் அஃது உண்மையே. ப�ொதுவாகத் த�ொடர்நாடகங்களில் ஒருவர், இருவரைத்
திருமணம் புரிவதும், மனைவிய�ோ கணவன�ோ அவரவர் துணைக்குத் துர�ோகம் புரிவதும் அதிகமாகக்
காட்டப்படுகின்றன. த�ொடர்நாடகத்திலே மூழ்கியிருக்கும் ஒருவருக்கு ‘இது சரிதான�ோ?’, ‘செய்தால்
சரிதான�ோ’ என்ற எதிர்மறைச் சிந்தனையைத் தூண்டுகிறது. இத்தொடர்நாடகங்களில் வரும் மாமியார்
மருமகள் பாத்திரங்கள் கூட வழக்கத்திற்கு மாறாகக் காட்டப்படுகின்றன. நடைமுறை வாழ்க்கைக்கு
இஃது ஒத்துவராது என்பதைத் த�ொடர்நாடகம் எடுத்துரைப்பதில்லை. இன்றைய நிலையில் நமது
சமுதாயத்தின் கலாசார மாற்றத்திற்கு இவற்றைப் ப�ோன்ற த�ொடர்நாடகங்கள் பெரிதும் துணைப�ோகின்றன
என்பதில் ஐயமில்லை.

எல்லாம் நன்மைக்கே எனும் காலம்போய் இதுவும் தீமைதான் தருகிறது என்றாகிவிட்டது.
இதுகாறும் த�ொடர்நாடகங்களினால் தீமையே என்று பார்த்தாலும் ஒரு சில நன்மைகளும் இருக்கவே
செய்கின்றன. த�ொடர்நாடகங்கள் குடும்ப உறவை வலுப்படுத்துகின்றன என்று ச�ொல்லத்தான்
வேண்டும். இப்போதைய காலக்கட்டத்தில், த�ொடர்நாடகங்கள் குடும்பத்தோடு பார்க்கப்படுகின்றன.
அனைத்துக் குடும்ப உறுப்பினரும் ஒன்றாய் அமர்ந்து நாடகங்களைப் பார்க்கின்ற சூழல் குடும்ப
ஒற்றுமையை மேல�ோங்கச் செய்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், குறிப்பாகக் கணவன்
மனைவிக்கிடையே நல்லத�ோர் உறவைத் த�ொடர்நாடகங்கள் வளர்க்கவே செய்கின்றன.

த�ொடர்நாடகங்கள் தமிழ்ச் சினிமாப் ப�ோல் பாலியல் சிந்தனையைய�ோ ஆபாசங்களைய�ோ
மிகுதியாகக் க�ொண்டிருப்பதில்லை. வன்முறைக் காட்சிகளும் குறைவே. தமிழ்ச் சினிமாவில்
வன்முறைக்கு அளவேது? மேலும், சினிமாவைப் ப�ோல் த�ொட்டதற்கெல்லாம் பாடல், பாடல்களில்
ஆபாசம், ஆடைக் குறைப்புப் ப�ோன்ற அவலங்கள் த�ொடர்நாடகங்களில் அரங்கேறுவதில்லை.
எனவேதான், இதை அதிகமான�ோர் பார்க்க விரும்புகின்றனர்.

137

த�ொகுதி 14 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”

என்பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் ப�ோனாலும்,
செய்யக்கூடாத காரியங்களைச் செய்தாலும் அதன் விளைவு நன்மை அளிக்காதென்பது
முடிபான முடிவு. அவ்வகையில், த�ொடர்நாடகங்களின் விளைவும் குறள் உணர்த்தும் கருத்தும்
ஒன்றே ஆதலால், த�ொடர்நாடகங்கள் பார்த்தலைத் தவிர்த்தல் நலம்; அல்லது தெரிவு செய்து
பார்ப்பது நல்லது.

1

விவாதக் கட்டுரையை வாசித்து அதன் கூறுகளை அறிந்து கூறுக.

2

மேற்கண்ட கட்டுரையை வாசித்துக் கருத்துகளை மனவ�ோட்டவரையில் படைத்திடுக.

3

‘தமிழ்த் திரைப்படங்கள் மாணவர் சீரழிவிற்கு வழிக�ோலுகின்றன’ எனும் தலைப்பில் 250
ச�ொற்களில் விவாதக் கட்டுரை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

‘த�ொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் தாக்கங்கள்’ எனும் தலைப்பில் 250 ச�ொற்களில் விவாதக்
கட்டுரை எழுதுக.

°¬øc‚è™

‘நாடகங்கள் மாந்த வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்’ எனும் தலைப்பில் 250 ச�ொற்களில்
விவாதக் கட்டுரை எழுதப் பணிக்கப்பட்டுள்ளீர். கட்டுரைக்கான சட்டகத்தைத் தயாரித்திடுக.

நன்மை தீமை
• ம�ொழியாற்றலை வளர்க்கிறது. • ம�ொழிச்சிதைவை ஏற்படுத்துகிறது.
• கற்பனையாற்றல் வளர உதவுகிறது. • பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்துகிறது.

138

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

திருக்குறள்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் த�ொகுதி 14
என்ன பயத்தத�ோ சால்பு. (987)

ப�ொருள்
தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம்
இருந்தும் பயனில்லை.
கருத்து
தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வதே சான்றோரின் பண்பு.

1

வாசித்து, சான்றாண்மை குறித்த வள்ளுவரின் கருத்து எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்பதனை
விவரித்திடுக.

சான்றாண்மையும் வள்ளுவமும்

திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அது தமிழகத்தின் செல்வம். அதன் திரண்ட கருத்தெல்லாம் ஒன்றே
ஒன்று. அது மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும் என்பது.
அத்தகைய பண்புகளுள் ஒன்றே சான்றாண்மை. அதனையுடையவரே சான்றோர்.

தமிழகம் சான்றோரைத் தனது நாட்டுச் செல்வமாகக் க�ொண்டிருக்கிறது. சேரநாடு வேழமுடைத்து;
பாண்டி நாடு முத்துடைத்து; ச�ோழநாடு ச�ோறுடைத்து; த�ொண்டை நாடு சான்றோருடைத்து என்பது
ஒளவையின் வாக்கு. இதிலிருந்து நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல்
வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும் தமிழகத்தின் செல்வங்கள் என்னும் உண்மையை
நன்கு உணரலாம்.

சான்றாண்மை என்னும் ச�ொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது. சான்றாண்மைத் தன்மை, தமிழ்
மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு, தமிழகத்தின் தனிப்பட்ட ச�ொத்து. சான்றாண்மை என்னும்
ச�ொல்லைக்கூடப் பிற ம�ொழிகளில் ம�ொழிபெயர்க்க முடியாது. ம�ொழி பெயர்த்துக் கூறினாலும்
அச்சொல்லில் தமிழ் கூறும் ப�ொருள் இராது.

சான்றாண்மை என்பது மற்றவர் பின்பற்றும்படி நடந்து காட்டிய ஆண்மை என்றும், சான்றோர்
என்பவர் பிறருக்குச் சான்றாக வாழ்ந்தோர் என்றும் ப�ொருள் கூறினாலும் தவறாகாது. என்றாலும்,

4.2.5 ஐந்தாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

139

த�ொகுதி 14 சான்ற என்னும் ச�ொல் ‘சிறந்த’ என்னும் ப�ொருளிலேயே கையாளப் பெற்றிருக்கின்றது. இவ்வுண்மையை
‘தகை சான்ற ச�ொல்’, ‘உரை சான்ற நூல்’, ‘வாய் சான்ற ப�ொருள்’ என்னும் ச�ொற்களால் நன்கறியலாம்.

சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இன்றேல், ஐந்து குணங்களேனும் வேண்டும்.
அவை, எல்லாரிடத்தும் அன்பாயிருத்தல்; பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல்; எவரையும் உற்ற
உறவாய்க் க�ொள்ளுதல்; இயன்றவரை எளியவர்க்கு உதவுதல்; எப்போதும் உண்மையே பேசி
மகிழ்தல் என்பன எனலாம். சான்றோரை நமக்குக் காட்டுவது அவரது குணநலனே; பிற நலன்கள்
அல்ல. கல்விகேள்வி, செல்வம், அழகு, வண்டி, வாகனம், ஆடை, அணிகலன், பட்டம், பதவி முதலிய
நலன்களையெல்லாம் அடக்கி, அதன்மேல் உயர்ந்து நிற்பது குணநலன் ஒன்றேயாகும். குணநலன்
இன்றேல், ஒருவன் சான்றோன் ஆகான். அவன் அடைந்த பிறநலன்களால் அவனுக்குச் சிறப்பு
சிறிதுமில்லை என்பது வள்ளுவருடைய முடிவு.

மூலம்: முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் (திருக்குறள் கட்டுரைகள்)

2

திருக்குறளையும் அதன் ப�ொருளையும் அறிந்து மனனம் செய்க; வகுப்பில் படைத்திடுக.

3

பின்வரும் வினாக்களுக்கு விடை காண்க.

1. விடுபட்ட அடியை நிறைவு செய்க.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்


2. பின்வரும் விடைகளில் எது க�ோடிடப்பட்ட ச�ொல்லுக்கேற்ற ப�ொருள் அன்று?

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தத�ோ சால்பு

A ஊக்கம் B மேன்மை C மாட்சிமை D மகிமை

õ÷Šð´ˆ¶î™

சான்றாண்மை குறித்துத் திருவள்ளுவர் கூறும் கருத்துகளைப் பட்டியலிட்டுத் த�ொகுத்து எழுதுக.

°¬øc‚è™

குறளையும் அதன் ப�ொருளையும் விளக்கும் வகையில் சூழல் அல்லது கதை ஒன்றனை எழுதுக.

140

ð£ì‹ 15 இலக்கிய உலா
1 தேர்வில் இலக்கியம்

பேச்சுவார்த்தைச் சூழலைக் கூர்ந்து செவிமடுத்து, உள்வாங்கிக் கூறுக.

தர்ஷினி: வணக்கம் அம்மா.
ஆசிரியர்: வணக்கம் தர்ஷினி.
தர்ஷினி: அம்மா, என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினீர்களாமே? என்ன செய்தி அம்மா?
ஆசிரியர்: ஆமாம் தர்ஷினி. படிவம் நான்கில் நீ தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வுப் பாடமாகப்

பயில்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கேள்விப்பட்டேன்.
தர்ஷினி: ஆமாம் அம்மா. நான் அறிவியல் பிரிவில் பயில்கின்றேன். ஏற்கனவே எனக்குப் பத்துப்

பாடங்கள் உள்ளன. இலக்கியப் பாடத்தைச் சேர்த்தால் பதின�ொரு பாடமாக ஆகிவிடும்.
சமாளிப்பதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கும்.

1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

141

த�ொகுதி 15 ஆசிரியர்: இல்லை தர்ஷினி. பன்னிரண்டு பாடமாக இருந்தாலும், தமிழ்மொழிப் பாடத்தில் நீ மிகச்
சிறந்த தேர்ச்சி பெறுவதால், தமிழ் இலக்கியப் பாடத்தைப் பயில்வதற்கு உனக்கு நிச்சயம்
சிரமமாக இருக்காது. உனது ஆற்றலை அறிந்த எனக்கு இது நன்றாகத் தெரியும்.

தர்ஷினி: இல்லை அம்மா. மறுப்பதற்கு மன்னிக்கவும். நான் அறிவியல் பிரிவில் பயில்கின்றேன்.
மேலும், படிவம் ஐந்து முடிந்தவுடன் அறிவியல் துறை சார்ந்த மேற்கல்வி பயில ஆர்வம்
க�ொண்டுள்ளேன். இந்நிலையில், என் த�ொடர் கல்விக்குத் தமிழ் இலக்கியப் பாடம்
எவ்வகையில் உதவும் எனத் தெரியவில்லை. இந்தப் பாடத்தை ஆர்வம் மிகுதியில் நான்
பயில நினைத்தாலும், தேர்வுக்கு நான் நேரம் ஒதுக்கிப் படித்துத்தானே ஆக வேண்டும். அது
எனக்குச் சிரமத்தைக் க�ொடுப்பதாகத்தான் அமையும் என்று நான் நினைக்கிறேன், அம்மா.

ஆசிரியர்: நீ கூறுவது ஒருவகையில் உண்மைதான் தர்ஷினி. பத்துப் பாடங்கள் பயின்று அவற்றில்
சிறந்த தேர்ச்சி பெறும் எண்ணம் க�ொண்டிருக்கும் உனக்குத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப்
பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெறுவது கடினமான ஒன்றாக இருக்கும். அத�ோடு, உன்னைத் தமிழ்
இலக்கியப் பாடத்தைப் பயிலச் ச�ொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது,
எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்குப் பிறகு, மேற்கல்வி த�ொடர உபகாரச் சம்பளம் பெறுவதற்கு இது
மிகவும் துணைபுரியும். கூடுதல் பாடமாக இலக்கியப் பாடத்தைப் படிக்கும் உன்னையும் , பத்துப்
பாடங்கள் தேர்வுக்குப் படித்துச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற பிற மாணவர்களையும் ஒப்பிடும்போது,
நீ தனித்து விளங்குவாய், வாய்ப்பும் அதிகம். இதனால், உனக்கு நன்மைதானே?

தர்ஷினி: தமிழ் இலக்கியப் பாடம், பாட வேளையில் ச�ொல்லித் தரப்படுவதில்லை, பாட நூல்களும்
கிடைப்பதற்கு அரிது என்று என் நண்பர்கள் கூறினார்களே?

ஆசிரியர்: பள்ளியில் பாடவேளையில் கற்றுக் க�ொடுக்கப்படவில்லை என்றாலும், நான்தான் தன்னார்வ
முறையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளி முடிந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்
க�ொடுத்து வருகிறேனே? மேலும், தற்போது கல்வி அமைச்சின் இரவல் பாடநூல் திட்டத்தின் கீழ்
தமிழிலக்கியப் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றைத் துணைக�ொண்டு
எவ்விதத் தடையும் இன்றி நீ சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம்; தயக்கம் வேண்டாம்.

தர்ஷினி: நல்லது அம்மா. என்மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் தங்களின் கருத்துகளுக்கும்
மிக்க நன்றி. எஸ்.பி.எம் தேர்வில் இலக்கியப் பாடத்தைத் தேர்வுப் பாடமாகப் பயின்று, சிறந்த
தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி அம்மா.

ஆசிரியர்: மகிழ்ச்சி. உனக்கு எனது வாழ்த்துகள்.

1

பேச்சுவார்த்தைக்கான கூறுகளை அடையாளங்கண்டு கூறுக.

142

2

மேற்கண்ட பேச்சுவார்த்தையை நண்பர�ோடு நடித்துக் காட்டுக.

3

உம் பள்ளியில் இலக்கிய விழா ஒன்றனை ஏற்பாடு செய்ய தமிழ்மொழிக் கழகம் முடிவெடுத்துள்ளது.
ஆனால், தேர்வு காலம் நெருங்கிவிட்டதால் கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் சிலரின்
ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எனும் முறையில் அவர்கள�ோடு
பேச்சுவார்த்தை நடத்துவதுப�ோல் வகுப்பில் நடித்துக் காட்டுக. கீழ்க்காணும் குறிப்புகளைத்
துணைக்கொள்க.

ஏற்பாட்டுக் குழுவினர் செயலவையினர் த�ொகுதி 15

ஆண்டு நிகழ்ச்சியாக இருப்பதால் பெற்றோர் அனுமதி இல்லை.
இலக்கிய விழா தடைப்படக்கூடாது.
இந்த ஆண்டு, தேர்வு ஆண்டாக
மாணவர்களின் ஆற்றலை இருப்பதனால் கல்விக்கு முக்கியத்துவம்
வெளிப்படுத்தும் தளமாக அமையும். க�ொடுக்க வேண்டும்.

புறப்பாட நடவடிக்கைகளுக்கான பிரத்தியேக வகுப்புகளும் த�ொடர்ந்து
புள்ளிகளும் நிறைவாகக் கிடைக்கும் - சென்றுக�ொண்டிருப்பதனால் ஓய்வு
ஏற்பாட்டுக் குழுவினர், பங்கேற்பாளர்கள், இல்லை.
வெற்றிப் பெற்றவர்கள்

õ÷Šð´ˆ¶î™

நகராண்மைக் கழக நூலகத்தில் தமிழ் இலக்கிய நூல்கள் குறைவாக உள்ளன. இது த�ொடர்பாக
நகராண்மைக் கழக நூலகப் ப�ொறுப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துக.

°¬øc‚è™

நீ உறுப்பினராக இருக்கும் இலக்கியக் கழகத்தில் இலக்கியம் சார்ந்த ப�ோட்டிகள் இவ்வாண்டு
நடத்தப்படவில்லை. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இலக்கியம் சார்ந்த
ப�ோட்டிகளை ஏற்று நடத்துமாறு செயலவையினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான
குறிப்புகளை எழுதுக.

143

த�ொகுதி 15 ð£ì‹ 2 அறிவியல் இலக்கியம்

விரைந்து வாசித்திடுக.

இலக்கியங்கள் எந்த ம�ொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த
கருத்துகள் படர்ந்திருப்பதை நாம் காணலாம். நம்மில் அதிகமான�ோர் இவ்வாறான இலக்கியங்களை,
இலக்கிய ந�ோக்கில் பார்த்தால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் க�ொள்வோம். அவற்றில்
புதைந்துள்ள அறிவியல் நமக்குப் புலப்படாது. இன்றைய மக்களின் அறிவியல் ஆர்வம் கூடியதனால்,
அவர்கள் அறிவியலையும் இலக்கியத்தையும் ஒரே நிலையில் வைத்து ஆய்வு செய்யப் பழகி
வருகின்றனர். இதனால், அறிவியலாளர்கள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள்
ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் படைத்து அரிய சாதனைகளைச்
செய்து வருகின்றனர்.

மனிதனின் அக வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கியக் கல்வியே வாழ்க்கைக் கல்வியாகும்.
சிறந்த இலக்கியங்கள் என்றும் சமுதாய மாற்றத்துக்கு உறுதுணையாக உள்ளன. சிறந்த இலக்கியங்கள்
ஆய்வைப் பெருக்கி, திறனை வளர்த்து, அறிவை விரித்து, ஆக்கம் உண்டாக்கி, ம�ொழிவளம் க�ொடுத்து
நிற்கின்றன. இவை கலை சார்ந்து இருந்தாலும் அறிவியலும் இணைந்தே இருத்தல் அவசியம்.

மேற்கு நாடுகளில் அறிவியல் வளர்ச்சி உயர்ந்த நிலைக்கு வளர்ந்துள்ளது. கற்பனைத்
திறனுடன்தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. கலை, அறிவியல் குறித்த
செய்திகளை எச்.ஜி.வெல்ஸ் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். இவர் புகழ் பெற்ற அறிவியல்
கற்பனை சார்ந்த ஆக்கங்கள் படைப்பதில் வல்லவர். இவர் ‘இயந்திர நேரம்’, ‘உலக யுத்தம்’,
‘காணமுடியாத மனிதன்’, ‘சந்திரனில் முதல் மனிதன்’ ஆகிய சிறந்த இலக்கியங்களை மக்களுக்குக்
க�ொடுத்துள்ளார். 1969ஆம் ஆண்டில் முதல் முதலாகச் சந்திரனில் மனிதன் காலடி பதிக்க உதவிய
விஞ்ஞானிகளுக்குச் ‘சந்திரனில் முதல் மனிதன்’ என்ற புதினம் உந்துதலாக இருந்தது எனலாம்.

ஜ�ோர்ஜ் ஓர்வெல் என்பவர் இலக்கியம், கவிதை, அறிவியல் கற்பனைக்
கதை ஆகிய துறைகளில் எழுதும் ஓர் ஆங்கில எழுத்தாளர். இவர்
எழுதிய பல நூல்களில் ‘யானை வேட்டையாடல்’ (1936), ‘விலங்குப்
பண்ணை’ (1945), ‘திமிங்கிலங்களுடன்’ (1949), ப�ோன்றவை அறிவியல்
த�ொடர்புடன் மிகவும் புகழ் வாய்ந்தனவாய் அமைந்துள்ளன. இலக்கியத்தில்
பரவலாக அறிவியல் ப�ொதிந்திருக்கின்றது. அறிவியலாளர்க்கும்
இலக்கியவாதிகளுக்கும் அமைந்துள்ள அகந�ோக்கு, புறந�ோக்கு,
முற்போக்குச் சிந்தனை, உணர்வு, தத்துவம், ஆக்கம் ஆகியவை
அத்துணையும் ப�ொதுவானவையாகும். இலக்கியவாதிகளை வெறும்
படைப்பாளிகள் என்ற பட்டியலில் சேர்த்துவிட முடியாது. அவர்களின்

2.3.14 இலக்கியம் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

144

ஆக்கங்களில் இடம்பெறும் அறிவியல் சிந்தனைகள் பல உள. அவை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு த�ொகுதி 15
உறுதுணையாய் அமைகின்றன.

த�ொல்காப்பியர் உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை
வகைப்படுத்தி ஒரு மேல்நிலை அறிவியலை விஞ்சும் முறையில் நிரல்படுத்திக்
கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம். இதனை “ஒன்றறி வதுவே
உற்றறி வதுவே” எனும் வரியில் த�ொடங்கும் செய்யுள் வரிகள் மூலம்
கூறியுள்ளார். இவரின் இந்தப் பகுப்பு முறையானது காலத்தைக் கடந்து
நிற்கும் வல்லமை பெற்றிருக்கிறது என்பது இன்றைய பயன்பாட்டிலிருந்து
புலனாகிறது.

சங்க காலத்தில் த�ோன்றிய தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில், கதிரவன் செல்லும் வீதியும், அதன் இயக்கமும்,
இயக்கத்தால் சூழப்படும் மண்டலமும், காற்று செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும்
ப�ோன்றவற்றைப் புலவர், தாமே அவ்விடம் சென்று ஆய்ந்து அறிந்தவரைப் ப�ோல, அவை
இப்படிப்பட்டவை என உரைக்கின்றார். இவ்வாறு துல்லியமாகப் பேசப்படும் இலக்கிய விந்தையை
“செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்” எனும் செய்யுளடியின்வழி அறியமுடிகின்றது.

வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவியல் பாடங்களும், கலையும் இலக்கியங்களும், ம�ொழி
அறிவும் மிக மிக இன்றியமையாதன. கல்வி முழுமையடைய வேண்டுமெனில் அங்கு அறிவியல்
பாடங்கள் அமையவேண்டும். வாழ்க்கையானது முழுமையடைவதற்குக் கலை, இலக்கியங்கள்
நிரம்பத் தேவைப்படுகின்றன. நவீன உலகம் சமைக்க, கலை ஆர்வமும், இலக்கிய இன்பமும்,
அறிவியல் பயனும், தாய்மொழி அறிவும், அறநெறி வாழ்க்கை முறையும் மிக மிக முக்கியம்.

1

பனுவலில் வண்ணமிடப்பட்ட ச�ொற்களுக்குச் சூழலுக்கு ஏற்பப் ப�ொருள் எழுதுக.

2

வினாக்களுக்கு விடை எழுதுக.

1. இன்றைய வாசகர்களின் இலக்கிய ந�ோக்கு எவ்வாறு அமைந்துள்ளது?
2. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இலக்கியம் எவ்வாறு துணைபுரிகிறது?
3. எச்.ஜி.வெல்ஸ் எவ்வாறு தாம் ஓர் இலக்கியவாதி என்பதனை நிரூபித்துள்ளார்?
4. ‘இலக்கியவாதிகளை வெறும் படைப்பாளிகள் என்ற பட்டியலில் சேர்த்துவிட முடியாது’
எனும் கூற்றிற்கான விளக்கத்தைக் கூறுக.
5. உமது பார்வையில் அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள த�ொடர்பினை
விளக்கிக் கூறுக.

145

த�ொகுதி 15 3

மேற்கண்ட உரைநடைப்பகுதியில் அறிவியல் சார்ந்து படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளை
ஏற்ற வரிபடக்கருவி க�ொண்டு விளக்குக.

õ÷Šð´ˆ¶î™

வாசித்து, கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

உலக ம�ொழிகளை வளர்ந்த ம�ொழிகள்; வளரும் ம�ொழிகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
எந்தெந்த ம�ொழிகள் சீரான இலக்கண அமைப்பைக் க�ொண்டுள்ளனவ�ோ செழுமையான இலக்கியப்
படைப்புகளைக் க�ொண்டுள்ளனவ�ோ அவை வளர்ந்த ம�ொழிகளாகக் கருதப்படுகின்றன. இந்த
வரிசையில் தமிழ்மொழி என்பது வளர்ந்த ம�ொழியாகவும் செம்மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
நாம் அறிந்த ஒன்றே.

தமிழ் இலக்கியம் சங்ககாலம் த�ொடங்கி தற்காலம் வரை பல்வேறு மாற்றங்களைத் தாங்கி
வருகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சி இந்திய எல்லைக்குள் மட்டும் அல்லாமல் எல்லை
கடந்து மலேசியா ப�ோன்ற புலம்பெயர்ந்தோர் நாடுகளிலும் வேரூன்றி நிற்கிறது. சிறந்த இலக்கியப்
படைப்புகள் படைக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. இவ்வாறான இலக்கியங்கள் சீரிய
இலக்கை மையமாக வைத்துப் படைக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள்
வரை ஏத�ோவ�ோர் இலக்கை அல்லது படிப்பினையை அதனைப் படிக்கும் சமுதாயத்தினரிடையே
க�ொண்டு சேர்க்கின்றன. அதுப�ோன்றே மலேசிய இலக்கியங்களும் சிறந்த ந�ோக்கத்திற்காகப்
படைக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் வளர்ச்சியில் மலேசிய நாட்டு இலக்கியங்கள் தனக்கெனத்
தனி முத்திரையைப் படைத்திருப்பது உலக அரங்கில் நமக்குப் பெருமை தருவதாக அமைகிறது.

1. தமிழ்மொழி வளர்ந்த ம�ொழியாகக் கூறுவதற்குக் காரணம் என்ன?
2. சிறந்த இலக்கியப் படைப்பாக அமைவதற்கான இலக்கணம் யாது?
3. மலேசிய இலக்கியப் படைப்புகள் உலக அரங்கில் நமக்குப் பெருமை தரும்படி
அமைவதற்கான காரணம் என்ன?
4. மலேசியத் தமிழ் இலக்கியங்களின் ந�ோக்கம் எதுவாக இருக்கலாம் என்பதனை
விவரித்து எழுதுக.

°¬øc‚è™

உரைநடைப்பகுதியில் தமிழ் இலக்கியம் காட்டும் அறிவியல் சிந்தனைகளை விளக்கும் வண்ணம்
சுவர�ொட்டி ஒன்றனைக் குழுமுறையில் தயார் செய்து வகுப்பில் படைத்திடுக.

146

ð£ì‹ 3 இலக்கிய மேடை

உரையாடலை ம�ௌனமாக வாசித்திடுக.

சூழல்: மகிழ்மதியும் கவியாழினியும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் இலக்கியச்
ச�ொற்பொழிவுக்குச் செல்வது த�ொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

மகிழ்மதி: வணக்கம் யாழினி. இன்று ஓய்வு நேரத்தில் சிற்றுண்டிச் சாலையில் உன்னைப் பார்க்கவில்லையே!
நீ இன்று பள்ளிக்கு வரவில்லைய�ோ என்று நினைத்தேன்.

யாழினி: வணக்கம். இல்லை மகிழ், இன்று என் தமிழாசிரியர், வரும் சனிக்கிழமை தலைநகரில்
இலக்கியச் ச�ொற்பொழிவு ஒன்று நடைபெறுவதாகக் கூறினார். அதைப் பற்றிய கூடுதல்

விவரங்கள் பெறுவதற்குத்தான் ஓய்வு நேரத்தில் ஆசிரியர் அறைக்குச் சென்று வினவி வந்தேன்.

மகிழ்மதி: என்ன ஓய்வு நேரத்தில் உணவு உண்பதற்குக்கூட வராமல் ஆசிரியரைப் பார்க்கச் சென்றாயா? த�ொகுதி 15
அவ்வளவு முக்கியமான ச�ொற்பொழிவா?

யாழினி: ஆம் மகிழ். இந்தச் ச�ொற்பொழிவு வழங்குபவரைப் பற்றி என் அப்பா நிறைய கூறி இருக்கிறார்.
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், ஆசிரியர் இவரின் ச�ொற்பொழிவைப் பற்றிக்

கூறியப�ோது அவற்றைக் குறித்து மேலதிகத் தகவல் பெறச் சென்றேன்.

மகிழ்மதி: ஆமாம். யார் அந்தச் ச�ொற்பொழிவாளர்?

யாழினி: தமிழகத்தைச் சார்ந்த உயர்திரு. கலியமூர்த்தி அவர்கள்.

மகிழ்மதி: ஓ! திரு. கலியமூர்த்தியா? அவரைப் பற்றிய சில காண�ொலிகளைப் புலனம்வழி நானும்
அறிந்திருக்கிறேன். அவற்றைத் தவிர்த்து வேறேதும் தெரியாது. ஆனால், அவர் காவல்துறை

அதிகாரியல்லவா? இலக்கியவாதி அல்லவே?

யாழினி: ஆமாம் மகிழ்மதி, நீ ச�ொல்வது உண்மைதான். அவர் தமிழகத்தில் உயர்நிலை காவல்
துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்தாம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை
க�ொண்டவரும்கூட. அவருடைய ச�ொற்பொழிவுகளில் குறிப்பாகத் தன்முனைப்பு உரைகளில்
கூட பல தமிழ் இலக்கியச் சான்றுகள�ோடுதான் பேசுவார். அவரின் ச�ொற்பொழிவு கேட்பவர்களை
மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். அதனால்தான், அவர் மலேசியாவிற்கு வருகை
தரும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் க�ொண்டு அவரின் இந்தச் ச�ொற்பொழிவுக்குச்
சென்று வரலாம் என்று நினைக்கிறேன்.

மகிழ்மதி: ஓ அப்படியா! சரி கவியாழினி, அவருடைய ச�ொற்பொழிவு குறித்த தகவல்கள் ஏதும் இருந்தால்
க�ொஞ்சம் க�ொடுத்து உதவு. இச்சொற்பொழிவுக்குச் சென்றுவர ஆர்வமாகத்தான் உள்ளது.
என் தந்தையிடம் இந்தத் தகவலைச் ச�ொல்லி அனுமதி பெற வேண்டும்.

யாழினி: மகிழ்ச்சி மகிழ்மதி! திரு. கலியமூர்த்தி அவர்களின் ச�ொற்பொழிவு வரும் ஞாயிற்றுக் கிழமை
பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள நகராண்மைக் கழகச் சமூக மண்டபத்தில் மாலை
5.00 மணிக்குத் த�ொடங்கவிருக்கிறது. “தமிழ் இலக்கியம் காட்டும் வாழ்க்கை நெறி” எனும்
தலைப்பில் அவர் உரையாற்றவிருக்கிறார்.

3.4.34 250 ச�ொற்களில் உரையாடல் எழுதுவர்.

147

மகிழ்மதி: தகவலுக்கு மிக்க நன்றி கவியாழினி. நான் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் வந்து
கலந்து க�ொள்கிறேன். தமிழ்மொழியைக் கற்கும் நாம்தானே இவ்வாறான இலக்கியச்
ச�ொற்பொழிவுகளுக்குச் செல்ல வேண்டும். நாமே ப�ோகவில்லையெனில் வேறு யார் ப�ோவார்?

யாழினி: அதுமட்டும் அன்று மகிழ்மதி. நாம் இளைய தலைமுறையினர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த
நாம் இவ்வாறான இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றால்தான் இலக்கியச் சிந்தனைகளை
அடுத்த தலைமுறைக்குக் க�ொண்டு செல்ல முடியும். இது நமது ப�ொறுப்பும்கூட.

மகிழ்மதி: சரி கவியாழினி, பேருந்தும் வந்துவிட்டது ப�ோல் இருக்கிறது. நல்ல பயனான தகவலைப் பற்றி
உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. சரி நாம் ஞாயிறு சந்திப்போம்.

யாழினி: நன்று மகிழ், நானும் புறப்படுகிறேன்.

1 2

உரையாடலில், நீர் அறிந்துக�ொண்ட உரையாடலுக்கான சூழல், முகமன் மற்றும்
கூறுகளைக் கூறுக, எழுதுக. முடிவு ஆகியவற்றை எழுதுக.

த�ொகுதி 15 3

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற உரையாடலை 250 ச�ொற்களில் எழுதுக.

சூழல்:
அகிலன் தனது ஆரம்பப்பள்ளித் த�ோழன் மகிழவனை மாவட்டத் தமிழ் விழாவில் சந்திக்கிறான்.
ஓய்வு நேரத்தில் இருவரும் சிற்றுண்டிச்சாலையில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது நான்காம்
படிவத்தில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு பாடமாகப் பயிலவில்லை என்னும் செய்தியைக்
கேள்விப்படுகிறான். அது குறித்து இருவரும் உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.

õ÷Šð´ˆ¶î™

நீர் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்று வந்துள்ளீர். அந்நிகழ்ச்சி குறித்து உம் நண்பர�ோடு
உரையாடுகிறீர். அவ்வுரையாடலை 250 ச�ொற்களுக்குள் எழுதுக.

°¬øc‚è™

இணையராகச் சேர்ந்து கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்தி உரையாடல் ஒன்றனை எழுதுக.

ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். கண்டிப்பாக, நீ ச�ொல்வதுவும் சரிதான்.
நீ இதற்குத் தயாராக இருக்கிறாயா? இல்லை, அப்படி இருக்க வாய்ப்பில்லை.

148

ð£ì‹ 4 இலக்கணம்

த�ொகாநிலைத் த�ொடரில் வேற்றுமைத்தொடர்

த�ொகாநிலைத்தொடர்கள் என்றால் என்ன?
• ச�ொற்றொடரில் உருபுகள�ோ ச�ொற்கள�ோ மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள்

தருமாயின் த�ொகாநிலைத்தொடர் எனப்படும்.

• த�ொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும். அவற்றுள் வேற்றுமைத்தொடரும் உள்ளடங்கும்.
வேற்றுமைத்தொடர் (எ.கா: உணவைச் சாப்பிட்டான்)

த�ொகாநிலைத் த�ொடரில் வேற்றுமைத்தொடர் த�ொகுதி 15

ச�ொற்றொடரில் வேற்றுமை உருபுகள் மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள் தரும்.
படத்தை வரைந்தான் - இரண்டாம் வேற்றுமைத்தொடர் (உருபு - ஐ)
ஈட்டியால் குத்தினான் - மூன்றாம் வேற்றுமைத்தொடர் (உருபு - ஆல்)
தம்பிக்குக் க�ொடுத்தான் - நான்காம் வேற்றுமைத்தொடர் (உருபு - கு)
மலையின் அருவி - ஐந்தாம் வேற்றுமைத்தொடர் (உருபு - இன்)
பாண்டியனது செங்கோல் - ஆறாம் வேற்றுமைத்தொடர் (உருபு - அது)
மணியின்கண் ஓசை - ஏழாம் வேற்றுமைத்தொடர் (உருபு - கண்)

1

வேற்றுமைத்தொடர்களைத் தெரிவு செய்து கூறுக.

கடிதத்தைப் படித்தான் கல்லூரி சென்றாள் ஆசிரியரைப் பார்த்தான்

பேனாவால் எழுதினாள் பள்ளி முதல்வர் சீடனுக்குக் க�ொடுத்தான்

கம்பனின் பெருமை விளையாட்டு வீரர் காட்டினது தீ பாடம் படி

2

வேற்றுமைத்தொடருக்கு ஏற்றவாறு சேர்த்தெழுதுக.

1. தம்பி + க�ொடுத்தாள் = 4. உளி + செதுக்கினான் =
2. கிளி + கூண்டு = 5. கடை + கிடைக்கும் =
3. பால் + குடித்தான் = 6. மலை + வீழருவி =

5.7.7 த�ொகாநிலைத் த�ொடரில் வேற்றுமைத்தொடர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

149

3

வேற்றுமைத்தொடருக்கு ஏற்றவாறு பிரித்தெழுதுக.

1. மனைவியினது சேலை = +
+
2. குதிரையினது க�ொம்பு = +
+
3. தேரின் சக்கரம் = +
+
4. நரியினது பல் =

5. வாழையினது தண்டு =

6. எனது புத்தகம் =

õ÷Šð´ˆ¶î™

த�ொகுதி 15 வேற்றுமைத்தொடருக்கு ஏற்றவாறு எடுத்துக்காட்டுகளை எழுதுக.

வேற்றுமைத்தொடர் எடுத்துக்காட்டு
இரண்டாம் வேற்றுமைத்தொடர் (ஐ)
மூன்றாம் வேற்றுமைத்தொடர் (ஆல்)
நான்காம் வேற்றுமைத்தொடர் (கு)
ஐந்தாம் வேற்றுமைத்தொடர் (இன்)
ஆறாம் வேற்றுமைத்தொடர் (அது)
ஏழாம் வேற்றுமைத்தொடர் (கண்)

°¬øc‚è™

க�ொடுக்கப்பட்டுள்ள வேற்றுமைத்தொடர்களின் வகைகளைக் குறிப்பிடுக.

1. கடைக்குச் சென்றான்
2. புத்தகத்தைப் படித்தான்
3. கத்தியால் வெட்டினான்
4. எருமையினது பால்
5. இலையின் துளிர்

150


Click to View FlipBook Version