The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by spbtstarp, 2021-09-18 12:00:58

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

Buku Teks Bahasa Tamil Tingkatan 5 Chapter 11-22

16 குடும்பவியல் மேம்பாடு
ð£ì‹ 1 பெண்ணின் பெருமை

படங்களை ஆழ்ந்து ந�ோக்குக.

ஆளுமை மேல�ோங்கும் தனித்திறமை வெளிப்பாடு

பெண்கள் வெளியில்
வேலைக்குச் சென்றால்..?

குடும்பத்தின் வாழ்க்கைத் பிள்ளைகளின் கல்வி
தரம் வளர்ச்சி

1

பெண்கள் வேலை செய்ய வேண்டுவதற்கான காரண காரியங்களை அறிவதற்கு ஏற்ற
கேள்விகளைக் கேட்டிடுக.

எ.கா: பெண்கள் வெளியில் சென்று வேலை செய்வது ஏன்?

2

திருமணமான குடும்பப் பெண்கள் வெளியில் சென்று வேலை செய்கையில், எதிர்நோக்கும்
சிக்கல்களை அறிவதற்கு ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக.

எ.கா: பெண்கள் குடும்பப் ப�ொறுப்பை எவ்வாறு செயல்படுத்துகின்றனர்?

1.2.6 காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்பர்.

151

3

கீழ்க்காணும் படங்களின் காரண காரியங்களை ஆராய்ந்து, இவற்றுக்கான காரணத்தையும்
விளைவுகளையும் அறிய கேள்விகள் கேட்டிடுக.

õ÷Šð´ˆ¶î™

கீழ்க்காணும் படங்களின் காரண காரியங்களை ஆராய்ந்து, இதனால் ஏற்படும் விளைவுகளை
அறிய கேள்விகள் கேட்டிடுக.

த�ொகுதி 16

°¬øc‚è™ என் அம்மா என் அம்மா உன் அம்மா உன் அம்மா
152
கீழ்க்காணும் படங்களை
ஒப்பிட்டுக் காரண
காரியங்களை ஆராய்க.
காரண காரியத்
த�ொடர்புகளை அறியும்
வகையில் கேள்விகளைப்
பட்டியலிட்டுக் கேட்டிடுக.

ð£ì‹ 2 குழந்தை வளர்ப்பு

பனுவலை ம�ௌனமாக வாசித்திடுக. முக்கியக் கருத்துகளைக் கலந்துரையாடல் வழி
கண்டறிக. கருத்துகளைக் குழுமுறையில் விவாதித்துத் தெளிவடைக.

குழந்தைகளின் வளர்ப்பிலும் அவர்களின் நலனிலும் பெற்றோர்கள் பெரும் அக்கறை க�ொள்ள த�ொகுதி 16
வேண்டும். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் பயனுள்ள மக்களாக அவர்களை
வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களின் பங்கு மிக இன்றியமையாததாக விளங்குகிறது. ஏனெனில்,
குழந்தைகள், தம் வாழ்க்கையில் மற்றவர்களைவிடப் பெற்றோர்களுடனேயே அதிகம் நெருங்கிய
த�ொடர்பு க�ொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களின் நிறைவான வளர்ச்சிக்குப் பெற்றோர்களே
அடிப்படைக் காரணமாக விளங்குகிறார்கள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அன்பே குழந்தைக்கு அளவிட முடியாத செல்வமாக
அமைகிறது. முழுமையான அன்பு கிடைக்கும்போது குழந்தைகள் பெற்றோர்களின் மீது நம்பிக்கை
க�ொள்கிறார்கள். தன்னுடைய செயல்களில் மிகச் சுதந்திரமாகச் செயற்படுகிறார்கள். எனவே,
குழந்தையின் நலனை மனத்திற்கொண்டு, பெற்றோர்கள் அவர்களிடம் முழுமையான அன்பைக்
காட்டுதல் வேண்டும்.

ஆனால், அளவு கடந்த அன்பும் தீமையைக் க�ொண்டு வந்துவிடும். அளவிற்கு அதிகமாகச்
செல்லம் என்ற பேரில், குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் க�ொடுத்து, குழந்தைகளை
வீணாக்கக்கூடாது. அவ்வாறு வளரும் குழந்தைகள், தாம் நினைத்தது எல்லாம் நிறைவேற
வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே வளர ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறு வளர்வதால் பின்னாளில்
எந்தவ�ொரு ஏமாற்றத்தையும் தாங்கிக் க�ொள்ள இயலாத மனநிலை குழந்தைகளுக்கு ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், பெற்றோர்களே தங்களுக்கு அனைத்தையும் செய்துவிடுவார்கள் என்ற

2.3.13 குடும்பவியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

153

மனப்பாங்கு அவர்களுக்குள் வளர்ந்துவிடும். இதுவே, அவர்களின் திறமையும் தன்னாற்றலும்
வெளிப்பட இயலாத எதிர்மறைநிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் என்கின்றனர்
உளவியலாளர்கள்.

அதிகமாகச் செல்லம் க�ொடுப்பது எவ்வளவு தவற�ோ, அதுப�ோலவே குழந்தைகளை
அளவுக்கதிகமாகக் கண்டிப்பதும் தவறாகவே அமைந்துவிடுகிறது. குழந்தைகளைக் கண்டிப்புடன்
வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி அவர்கள் மீது சீறிச் சினப்பது, குறைச்சுட்டித்
திட்டுவது, மற்ற பிள்ளைகள�ோடு ஒப்பிட்டுத் திட்டுவது ப�ோன்றவை பெருந்தவறாகும். இத்தகைய
செயல்பாடுகளால் குழந்தைகள் உளவியல் நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டு, தன்வளர்ச்சிக்
குன்றி விடுவார்கள். கட்டுப்பாடுகளால் தாங்கள் முடக்கப்படுவதாகக் கருதும் குழந்தைகள்
பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க முயலுவார்கள். இந்த எதிர்வினை, பின்னாளில் பெற்றோர்களுக்கும்
குழந்தைகளுக்கும் இருக்கும் நெருக்கமான உறவைச் சிதைத்துவிடும்.

பெற்றோர்கள், தம் நேரடிக் கண்காணிப்பில் குழந்தைகளை, அனைத்துச் செயல்களுக்கும்
பழக்கவேண்டும். ஒழுக்கம், பழக்கவழக்கம், விளையாட்டு அறிவு ஆகியவற்றின் வளர்ச்சியில்
பெற்றோர்கள் கண்ணுங்கருத்துமாகச் செயற்படவேண்டும். குழந்தைகள் நல்லவர்கள�ோடு பழகவும்
நற்குணங்களுடன் மிளிரவும் பெற்றோரே ஊன்றுக�ோலாக விளங்கவேண்டும். அதுமட்டுமன்றி,
குழந்தைகளின் கல்வி நிலையில் பெற்றோர்கள் அவர்களின் திறமை, ஆர்வம், அறிவுநிலை
ஆகியவற்றிக்கு முன்னுரிமை க�ொடுத்து அவர்களை உணர்ந்து செயற்படவேண்டும்.

த�ொகுதி 16 1

கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

1. குழந்தையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களே அடிப்படைக் காரணமாக விளங்குகிறார்கள் என்று
கூறப்படுவது ஏன்?
2. பெற்றோர்களிடமிருந்து முழுமையான அன்பைப் பெறும் குழந்தைகளிடம் எத்தகைய நல்லுணர்வுகள்
உரம் பெறுகின்றன?
3. அளவு கடந்த அன்பு என்ற நிலையில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் யாவை?
4. அதிகச் செல்லத்தோடு வளரும் குழந்தைகள் குறித்து உளவியலாளர்கள் க�ொடுக்கும் எச்சரிக்கை
என்ன? விளக்கி எழுதுக.
5. குழந்தைகளின் கல்வி நிலையில் பெற்றோர்கள் அவர்களின் திறமை, ஆர்வம்,
அறிவுநிலை ஆகியவற்றிற்கு முன்னுரிமை க�ொடுக்காவிடில் எத்தகைய நிலை ஏற்படும்?

2

பனுவலில் வண்ணமிட்ட ச�ொற்களுக்குச் சூழலுக்குப் ப�ொருந்தும் வகையில் ப�ொருள் கண்டு
கூறுக; எழுதுக.

அளவிட முடியாத எதிர்மறைநிலையை சிதைத்துவிடும்
மனப்பாங்கு சீறிச் சினப்பது மிளிரவும்

154

3

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நீர்
அறிந்து க�ொண்டதைப் பல்நிலை நிரல�ொழுங்கு வரைபடத்தில் நிறைவு செய்க.

செயல்பாடுகள் விளைவுகள்

அளவிற்கு அதிகமாகச் செல்லம் i-THINK குழந்தைகள் தங்களின் எல்லாத்
க�ொடுத்தல் தேவைகளும் நிறைவேற வேண்டும்
குழந்தை
வளர்ப்பு என்று எதிர்பார்ப்பார்கள்

õ÷Šð´ˆ¶î™ த�ொகுதி 16

இன்றைய சூழலில் குழந்தைகளின் வளர்ப்பினில் பெற்றோர்கள் முழுமையான கவனம் செலுத்த
இயலாமைக்கான காரணங்கள் ஐந்தினை 50 ச�ொற்களில் எழுதுக.

°¬øc‚è™

பனுவலை ஆழ்ந்து வாசித்து, கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

நம்மைவிட வயதில் மூத்தோரைப் ப�ோற்றி மதிக்கும் பண்பாடு ஒரு சமுகத்தின் உயர்ந்த பண்பாட்டு
நெறிமுறையாக விளங்குகிறது. மூத்தோரை மதித்துப் ப�ோற்றுகின்ற குடும்பமும் சமுதாயமும்
உயர்நெறிகள�ோடு ஓங்கி வளர்ந்திருக்கின்றன என்பதை உலகம் இன்றுவரை கண்டுவருகிறது.
மூத்தவர்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில், அவர்கள் எதிர்நோக்கி வென்ற சிக்கல்கள்
பட்டறிவுகளாய் மிளிர்கின்றன. அவை, அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கைப் பாடங்களை வகுத்துத்
தருகின்றன. அவர்களின் அறிவார்ந்த வழிமுறைகள், இளைய தலைமுறைக்கு விலைமதிப்பில்லாப்
பாடங்களாக அமைகின்றன. இதையே, க�ொன்றை வேந்தனில், `மூத்தோர் ச�ொல் வார்த்தை அமிர்தம்,’
என்று ஔவையும் ம�ொழிந்தார். மூத்தோர் ச�ொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னரே
இனிக்கும். உண்மையில் உணர்வுப்பூர்வமாக உய்த்துணர்ந்து க�ொள்ள வேண்டிய பாடம் இது. பட்டறிவு
பெற்ற பழுத்த மரங்களாக இருக்கும் மூத்தவர்களை வணங்குதலும் அவர்களைப் ப�ோற்றலுமே நம்முடைய
த�ொடர் பண்பாடாய் அமைய வேண்டும்.

1. சமூகத்தின் உயர்நெறியாகப் ப�ோற்றப்படுவது எது?
2. மூத்தவர்களின் பட்டறிவு இளைய சமுதாயத்திற்கு எத்தகைய நன்மைகளைத் தருகிறது?
3. ‘மூத்தோர் ச�ொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னரே இனிக்கும்’

இதன் கருத்தை விளக்கி எழுதுக.

155

ð£ì‹ 3 கானல் நீர்

கதையை வாசித்து மகிழ்க.

“அப்பா இன்னும் ஒரு வாரத்தில இந்தத் தவணைய�ோட கட்டணத்தைக் கட்டிடனும்பா… விடுதிக்குக்கூட
ரெண்டு வாரம்தான் கெடு க�ொடுத்திருக்காங்க… அதுக்குள்ள பணத்தைக் கட்டமுடியலனா… வெளியேறச்
ச�ொல்லிட்டாங்க…”

இந்தோனியாசியாவில் மருத்துவம் பயிலும் மகன் த�ொலைபேசியில் பேசிவிட்டு வைத்தப�ோது, க�ொஞ்சம்
ஆடித்தான் ப�ோனார் வடிவேலு. இன்னும் ஒரு வாரத்தில் 15 ஆயிரம் வெள்ளியைப் புரட்ட வேண்டும் என்ற
மலைப்பில் அவரின் தலையே ஒருமுறை சுற்றிப்போனது. தன் வாடகை வண்டிக்குக் கட்டவேண்டிய
மாதத்தொகை, வீட்டுக் கடன், அடகு வைத்த நகைகள் ‘மூழ்கும்’ காலக்கெடு எல்லாம் சேர்ந்து தம்
கண்முன்னே சுழன்றப�ோது, வடிவேலுக்குச் சற்றே இருண்டுப�ோனது. ச�ோர்வாக நாற்காலியில் சாய்ந்தார்.

பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தப�ோது ஏற்படாத ‘அழுத்தம்’ இப்பொழுது தம்மையே மூழ்க
வைக்கும் என்று அவர் சற்றும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை.

“மருத்துவம் படிக்க அதிகம் செலவாகும்பா… இங்கேயே உள்நாட்டுப் பல்கலைக்கழகத்தில ப�ொறியியல்
துறையில் படிச்சிக்கிறேம்பா..”

என்று தம் ப�ொருளாதாரச் சூழல் கருதி மகன் ச�ொன்னப�ோது ஏத�ோ ஓர் இறுமாப்பில்…,

த�ொகுதி 16

3.4.36 250 ச�ொற்களில் கதை எழுதுவர்.

156

“நீ ஏம்பா அதைப் பத்தி கவலைப்படற… அப்பா இருக்கேன்..! நீ ப�ோய்ப் படி என் தலையை அடகு த�ொகுதி 16
வெச்சாவது படிக்க வைக்கிறேன்…”

என்று ‘தில்லாக’ தாம் ச�ொன்னது பெரும் தவறாகப் ப�ோய்விட்டத�ோ எனக் கலங்கத் த�ொடங்கினார்
வடிவேலு. தம்முடைய குடும்பத்திலும் யாராவது ஒருவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற அவரின்
ஆசைக்குத் தம் மகனே தீர்வாகத் த�ோன்றினான் அப்போது.

வெளிநாட்டில் படிக்க வைப்பதற்குக் கட்ட வேண்டிய முன்தொகையைத் திரட்டுவதற்கே விழி பிதுங்கிப்
ப�ோனது வடிவேலுவுக்கு. எப்படிய�ோ ஒருவழியாக புரட்டியதில் 35 000 தேறியது. மீதத் த�ொகையைத்
தம்வீட்டை ‘மீள்அடகு’ வைத்துத் தேற்றினார். எப்படிய�ோ அடித்துப் பிடித்து மகனைப் படிக்க அனுப்பிவிட்டார்.
மகனைப் படிக்க அனுப்பிவிட்டோம் என்ற மகிழ்ச்சியைவிட மலைப்பே அவருக்கு முகம் காட்டி நின்றது.
மகன், மிகுந்துவரும் தேவைக்கு அடிக்கடி பணம் கேட்டு நின்றப�ோதுதான் சற்றே உடையத் த�ொடங்கினார்.
குடும்பத் தேவைகைளை நிறைவு செய்வது மிரட்டலாகிப் ப�ோனது.

க�ொஞ்சம் ஆடம்பரமான செலவுகளை நிறுத்தத் த�ொடங்கினார். அன்றாடத் தேவைகளைக் கூட
சிக்கனமாக ஆளத் த�ொடங்கினார். குடும்பத்தோடு மாதம் ஒருமுறை திரையரங்கில் படம் பார்ப்பது என்ற
நிலை ஆறு மாதத்திற்கு ஒன்றென ஆகிப் ப�ோனது.

ஒரு வாரத்தில் பணத்தைத் திரட்டிவிட ஆளாய்ப் பறந்தார். ஆனால், வடிவேலுவால் ஒரு வாரத்தில்
பணத்தைத் திரட்ட முடியவில்லை. பார்க்காத ஆளில்லை. செய்யாத முயற்சியில்லை. அப்படியும்
பணத்தைத் திரட்ட முடியவில்லை.

“இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது பார்த்து அனுப்பிவிடுகிறேன்…” என்று பையனிடம் கூறும்போது
அழுதேவிட்டார் வடிவேலு. தமது இயலாமையைச் ச�ொல்லிய பின்னும், சிக்கலை முழுமையாகப் புரிந்து
க�ொண்ட பையன் ஒன்றுமே ச�ொல்லாமல் அமைதியாய் இருந்தது அவரின் வேதனையை இன்னும்
முள்ளாய் மாறி கீறியேவிட்டது.

பணம் கட்டாததால் மகன் விடுதியில் இருந்து வெயியேற்றப்பட்டு நண்பர்களுடன் ஒண்டிக் குடித்தனம்
நடத்திக் க�ொண்டிருந்தான். பருவத் தேர்வு எழுதுவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தான். அப்பாவுக்குச்
சிரமம் க�ொடுக்கக்கூடாது என்ற நினைப்பில் ச�ொந்த முயற்சியில் பணம் தேடத் த�ொடங்கியிருந்தான்..!
மாணவர்களிடையே ப�ோதைப் ப�ொருளை விநிய�ோகம் செய்யும் உள்ளூர்ப் ப�ோதைப் ப�ொருள் குழுவின்
த�ொடர்பு அவனுக்குச் சிக்கலின் வடிகாலாய்த் தெரிந்தது. அப்பாவின் சிரமங்களுக்குத் தீர்வைத் தரும்
எளிய வழியாய்ப் புதுவழி காட்டிக் க�ொண்டிருந்தது. நடந்து க�ொண்டிருக்கின்ற இந்தக் கலவரங்களை
எல்லாம் அறியாமல் 15 000 வெள்ளியை எப்படியாவது திரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் வடிவேலு
இன்னும் ஆங்காங்கே அலைந்து க�ொண்டிருந்தார்.

படைப்பாக்கம் : மு.தமிழரசு

151577

1

கதையில் அமைந்துள்ள கதைக்கான கூறுகள் குறித்துக் குழுமுறையில் கலந்துரையாடுக.
அக்கூறுகளை ஆய்ந்தறிந்து சிந்தனை வரைபடத்தில் எழுதுக.

2

வாசித்த கதையை ஒட்டிய திறனாய்வினைக் குழு முறையில் மேற்கொள்க. வரிபடக் கருவியில்
நிரல்படுத்திய கலந்தாய்வு கருத்துகளைத் துணைக�ொள்க. கீழ்க்காணும் குறிப்புகளின் அடிப்படைகளில்
உங்கள் திறனாய்வை நிறைவு செய்து கூறுக; எழுதுக.

கதைப் பின்னல் உத்தி
கருப்பொருள் கதைப்பாத்திரம் பண்பின் வெளிப்பாடுகள்
படிப்பினைகள் கதை முடிவைக் குறித்த கருத்து
பின்னணி கதைய�ொட்டிய கருத்து

3

நெற்றிப் ப�ொட்டில் பத்துகாசு அளவில் குங்குமப் ப�ொட்டு. மாறாத அதே புன்னகை. சந்தன
மாலை மணக்க அம்மா நிழற்படத்தில் த�ொங்கிக் க�ொண்டிருந்தார். “அம்மா..! இத�ோ உங்கள்
ஆசை மகள் பட்டத்தாரியாய் உங்கள் முன்னே நிற்கிறேன். என்னை ஆளாக்கிப் பார்க்க
எவ்வளவு ப�ோராடினீர்கள்? அதே மகள் இத�ோ வெற்றிய�ோடு நிற்கிறேன். என்னைக் கட்டிப்
பிடித்து ஆசைதீர முத்தம் தர மாட்டீர்களா..? என்று கதறி அழ வேண்டும் ப�ோல் இருந்தது.
என்று முடிவு பெறும் கதையினை, 250 ச�ொற்களில் எழுதுக.

த�ொகுதி 16 õ÷Šð´ˆ¶î™

‘தாத்தாவின் அன்பு’ இதனைக் கருப்பொருளாகக் க�ொண்டு 250 ச�ொற்களில் கதை எழுதுக.

°¬øc‚è™

கீழ்க்காணும் கதைப்பகுதிக்கு ஏற்ற கதைத் த�ொடக்கம் மற்றும் ப�ொருத்தமான கதை
முடிவை எழுதுக.

தன்னுடைய பிறந்தநாளுக்காக வீட்டை அலங்கரிக்க, வாங்கி வைத்திருந்த தங்க நிறப் பரிசுத் தாளினைத்
தன் எட்டு வயது பெண் குழந்தை கத்தரித்து நாசம் செய்துவிட்டாள் என்று எரிச்சல�ோடு, அதன் முதுகில்
ஓர் அடி வைத்துவிட்டுக் கடுப்போடு தூங்கினான் அன்புமணி. மறுநாள், அவன் தலைமாட்டில் ஒரு
சின்ன அட்டைப் பெட்டி இருந்தது. தங்க நிறத் தாளின் மடிக்கப்பட்டிருந்தது. மேலே, ‘அன்புள்ள
அப்பாவுக்கு என் பிறந்தநாள் பரிசு! - கயல்விழி’ என்று எழுதியிருந்தது...

158

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

பழம�ொழி

பழம�ொழிகள் விளக்கம்

பூவ�ோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் சிறந்த பண்புடையவர�ோடு சேரும் ஒருவர்
அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை நாம் நம் உயிரை எவ்வாறு ப�ோற்றிப்
பாதுகாக்கின்றோம�ோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா
உயிர்களையும் மதிக்க வேண்டும்.

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம்
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ப�ோன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை

நம் தேவைக்குப் பயன்படும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம்
அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை
விளையும்; தீமை செய்யின் தீமை விளையும்.

தர்மம் தலை காக்கும் நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற
ப�ொழுது நம்மைக் காத்து நிற்கும்.

1 த�ொகுதி 16

பனுவலை வாசித்துப் பழம�ொழிகளையும் அவற்றின் ப�ொருளையும் கண்டறிக.

மனிதருள் மாணிக்கம்

தம் இளவயதில் வறுமையில் வாடி நின்றவர் செல்வமணி. வறுமையும் துன்பமும் தம்மைத் த�ொடர்ந்து
வறுத்தெடுக்கக் கூடாது எனத் திட்டமிட்டார். எதிர்காலத் தேவைக்குச் செல்வம் மட்டுமன்று அறிவு, பட்டறிவு
ப�ோன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும் எனத் திட்டமிட்டார். சட்டியில் இருந்தால்தானே
அகப்பையில் வரும்? ஒவ்வொரு அடியையும் எண்ணியெண்ணி எடுத்து வைத்தார். செல்வம் அவர்
வாழ்வில் குவிந்தது. மலைப�ோல் குவிந்த செல்வம் தமக்கு மட்டுமே பயன்படக்கூடாது எனப் பெருமனம்
க�ொண்டார். தர்மம் தலை காக்கும், என எண்ணிப் பல அறக்காரியங்களுக்குத் தம் செல்வத்தை வாரி
வழங்கினார். அறச்செயல்கள் தமக்குத் துன்பம் நேர்கின்ற ப�ொழுது, காத்து நிற்கும் என முழுமையாக
நம்பினார். அதுமட்டுமல்லாது, பூவ�ோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்ற க�ொள்கை உணர்வைப்
ப�ோற்றிய அவர், சிறந்த பண்புடைய சான்றோர்களுடன் நட்புணர்வு க�ொண்டார். அப்பண்பாளர்களின்
சீரிய நல்லியல்புகளைப் ப�ோற்றி, உயர்ந்த சான்றோராய் மிளிர்ந்தார். மனித நேயத்தோடு ஒளிர்ந்தார்.
தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை என்ற க�ொள்கை உணர்வோடு தம் உயிரைப் ப�ோல்
மற்ற எல்லா உயிரையும் ப�ோற்றிப் பாதுகாக்கும் உயர்நெறியில் ஒழுகினார்.

அவர் வாழ்விலும் ச�ோதனை வந்தது. அவரின் வெளிநாட்டு ஏற்றுமதி வணிகத்தில் பெரும் நட்டம்
ஏற்பட்டு ந�ொடித்துப் ப�ோனார். ஆனால், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற உயர்நெறி
அவரைக் காத்தது. முன்னர் அவர் செய்த செயலின் நற்பலனால் பலரும் அவருக்கு உதவி புரிந்தனர்.
மீண்டும் தலைநிமிர்ந்தார்; மனிதருள் மாணிக்கமாய் மிளிர்ந்தார்.

4.7.5 ஐந்தாம் படிவத்திற்கான பழம�ொழிகளையும் அவற்றின் ப�ொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

151599

2

பனுவலில் காணும் பழம�ொழிகளின் ப�ொருளைக் கூறுக; எழுதுக.

3

கற்ற பழம�ொழிகளின் ப�ொருள் விளங்கும் வண்ணம் ஏற்ற சூழலை எழுதுக.

எ.கா:
இளங்கதிர் யாருடைய அறிவுரைக்கும் அடங்காமல், தான் நினைக்கும் எந்தச் செயலையும் தன் விருப்பம்
ப�ோல் செய்து வந்தான். குற்றச் செயல்களைக் க�ொஞ்சமும் அஞ்சாமல் செய்யத் த�ொடங்கினான்.
கருணையின்றிப் பல க�ொலைகளையும் செய்தான். ஒருநாள், வழிப்பறி செய்ய முயன்றப�ோது,
காவல்துறை அவனை விரட்டியது. தப்பித்து ஓடிய இளங்கதிர் எதிரே வந்த பேருந்தில் ம�ோதி விபத்துக்கு
உள்ளானான். அந்த விபத்தில் தன் இரு கால்களையும் இழந்தான். முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும் என்ற விதி தன் வாழ்விலும் விளையாடி விட்டதை எண்ணி மனம்நொந்து அழுதான்.

õ÷Šð´ˆ¶î™

பழம�ொழிகளில் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்து, அதை விளக்கும் வண்ணம் ஒரு கதையை
எழுதுக.

°¬øc‚è™

த�ொகுதி 16 பழம�ொழிகளை அவற்றின் ப�ொருத்தமான ப�ொருள�ோடு இணைத்து எழுதுக.

பூவ�ோடு சேர்ந்த நாரும் முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம் அடைவது
மணம் பெறும். உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும்; தீமை செய்யின்
தீமை விளையும்.
தன் உயிரைப்போல்
மன்னுயிரையும் நினை நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற
ப�ொழுது நம்மைக் காத்து நிற்கும்.
சட்டியில் இருந்தால்தானே
அகப்பையில் வரும் சிறந்த பண்புடையவர�ோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின்
தன்மைகளைப் பெற்று விளங்குவார்.
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும். நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் ப�ோன்றவற்றை
முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.
தர்மம் தலை காக்கும்.
நாம் நம் உயிரை எவ்வாறு ப�ோற்றிப் பாதுகாக்கின்றோம�ோ, அவ்வாறே
உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்.

160

ð£ì‹ 17 வங்கியியல்
1 முதலும் முதலீடும்

உரைநடைப் பகுதியைக் கூர்ந்து செவிமடுத்து உள்வாங்கிக் க�ொள்க.

இன்றைய வங்கித் துறை துரித வளர்ச்சியைக் கண்டு வருகிறது. வளர்ச்சி என்பது அதன் இலாப ஈவை
மட்டும் சார்ந்ததன்று. அது நிபுணத்துவம், நடவடிக்கை, அமலாக்க முறை மற்றும் த�ொழில்நுட்பச் சேவை
ப�ோன்ற பல கூறுகளையும் சார்ந்துள்ளது. அந்த வகையில் இன்று மலேசியாவில் இயங்கிக் க�ொண்டிருக்கும்
வங்கிகள் பல்வேறு சேவைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஒவ்வொரு
வங்கியும் ஒன்றுக்கொன்று சளைத்ததன்று என்பதை நிரூபிக்கும் வண்ணம் தனது சேவைகளையும்
வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுதான் வருகின்றது.

‘பணம், பணம் செய்யும்’ எனும் கூற்றிற்கு ஏற்ப, நம்மிடம் உள்ள பணத்தை முதலீடு எனும் பெயரில்
பெருக்கிக் க�ொள்ளும் முயற்சியை நாம் மேற்கொள்கிற�ோம். நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது
ப�ோல முதலீடு செய்வதில், இலாபமும் நஷ்டமும் இருக்கவே செய்கின்றன. இலாபம் அதிகம் வேண்டும்
என்றால் அதன் எதிர்வினையும் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படுவது இயல்புதான். அதே ப�ோல்,
நஷ்டமும் இழப்பும் குறைவாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான முதலீடும் மிகவும் பாதுகாப்பானதாக
இருப்பதும் இயல்புதான். பங்குகள் வாங்குவதன் மூலம் செய்யப்படும் முதலீடுகளை இன்று வங்கி
நிறுவனங்களும் செய்து வருகின்றன. மலேசிய தேசிய வங்கியின் புள்ளி விவரப்படி இதுவரை ம�ொத்தம்
பதின�ொரு வங்கிகள் முதலீட்டு வங்கிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

1.1.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை மதிப்பீடு செய்து த�ொகுத்துக் கூறுவர்.

161

த�ொகுதி 17 வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதனால் பல நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.
அவற்றில் முதலாவதாக, நாம் செய்த முதலீட்டை எந்நேரத்திலும் முழுமையாகவ�ோ ஒரு பகுதியைய�ோ
மீட்டுக் க�ொள்ளலாம். ர�ொக்கத் த�ொகையாகப் பெற்றுக் க�ொண்டு, நமது அவசரத் தேவைகளுக்கோ
ஏனையவற்றிற்கோ பயன்படுத்திக் க�ொள்ளலாம். அடுத்து, வங்கிகள் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படும்
நிறுவனமாக இருப்பதால் இவை மலேசிய தேசிய வங்கியின் கண்காணிப்பில் செயல்படுகின்றன.
இடைத்தரகர் இல்லாமலேயே வங்கி முகவர்களிடம் ஆல�ோசனை பெற்றுக் க�ொண்டு நேரடியாகவும்
இணையம் வழியும் திறன்பேசிகளைப் பயன்படுத்தியும் நமது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
வங்கி ஊழியர்கள் தேவையான ஆல�ோசனைகளை அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு
வழங்கத் தவறுவதில்லை.

வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க உரிமை உண்டு. பயனாளிகள் பல நிறுவனங்களில்
முதலீடுகளையும் செய்யலாம். அதாவது தங்களின் ப�ொருளாதார வசதிக்கேற்பத் தங்களிடம் உள்ள
பணத்தைக் க�ொண்டு எவ்வளவு பங்குகள் வாங்க முடிவு செய்துள்ளனர�ோ, அதற்கேற்றவாறு அவர்கள்
பங்குகள் வாங்கலாம். த�ொடர்ந்து நாம் ப�ொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும்
நன்கு அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மட்டும் இருந்தால்
ப�ோதும். அதுவும் மிகக் குறைந்த அளவு பணம் இருந்தாலே வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாம். சில
பங்குகளை மலேசிய ரிங்கிட் ஒன்றுக்குக்கூட வாங்கலாம். சில அரசாங்கத்தின் முதலீட்டுப் பங்குகளுக்கு,
குறிப்பாக, அமானா சாஹாம் நேசனல் பெர்ஹாட் நிறுவனப் பங்குகளுக்குத் தனியார் வங்கிகளும்
முகவர்களாகச் செயல்படுகின்ற சூழலும் உள்ளது.

1

செவிமடுத்த கருத்துகளைக் க�ொண்டு ஏற்ற வரிபடக்கருவியைத் தயார் செய்க.

2

செவிமடுத்த கருத்துகளை இணையராகக் கலந்துரையாடி ஒப்பீடு செய்க.

வங்கிகளில் முதலீட்டுச் சேவைகள்

அதிக இலாபம் கிடைப்பதற்கான காரணங்கள்
நஷ்டத்தைக் குறைப்பதற்கான காரணங்கள்

வாடிக்கையாளர் சுதந்திரம்
முதலீட்டுத் த�ொகை
பாதுகாப்பு அம்சம்

3

ஒப்பீடு செய்த கருத்துகளைத் த�ொகுத்துக் கூறுக.

162

èõùˆF™ ªè£œè த�ொகுதி 17

உரைநடைப் பகுதியை வாசித்து முக்கியக் கருத்துகளை அடையாளம் காண்க.
அடையாளங் கண்ட கருத்துகளை மதிப்பீடு செய்க.
மதிப்பீடு செய்த கருத்துகளைத் த�ொகுத்துக் கூறுக.
மதிப்பீடு என்பது அவற்றின் குறைநிறைகளைச் சார்ந்தவையாக இருத்தல் வேண்டும்.

õ÷Šð´ˆ¶î™

தகவல்களைச் செவிமடுத்து மதிப்பீடு செய்து த�ொகுத்துக் கூறுக.

அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 க�ோடி
(1.5 பில்லியன்) கூடுதல் அமானா சாஹாம் பங்குகளை இந்தியர்கள் பிப்ரவரி மாதம் முதற்கொண்டு
வாங்க முடியும் என அறிவித்தார். அவை விற்றுத் தீர்க்கப்படும் வரையில் விற்பனையில் இருக்கும்
எனவும் அறிவிக்கப்பட்டது.

இக்கூடுதல் அமானா சஹாம் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகின்றவர்கள் அருகில் உள்ள
அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் கிளை அலுவலகங்களில் அல்லது அதன் முகர்வர்களாகச்
செயல்படும் மேபாங்க் வங்கி, சி.ஐ.எம்.பி., ஆரெ.ச்.பி., மலேசிய அஞ்சல் துறை, அப்ஃபின்
வங்கி, அலையன்ஸ் வங்கி, அம்பாங்க் வங்கி, முவாலாமாட் வங்கி ப�ோன்றவற்றின் வாயிலாக
பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவிலுள்ள மெனாரா உசகாவானில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் இந்த
விவரங்கள் வெளியிடப்பட்டன. இப்பங்கு முதலீட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஏற்கெனவே இதே
முதலீட்டுத் திட்டத்தில் வாங்கியுள்ள பங்குகள் உட்பட, உச்ச வரம்பாக 30 000 பங்குகள் வரையில்
முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், பி40 எனக் குறிப்பிடப்படும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பங்கு முதலீட்டு
அளவை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் வட்டியில்லாக் கடன் திட்டத்தின் வழி, ஐந்து ஆண்டு கால
அவகாசத்தில் அவர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில் 50 க�ோடி (500 மில்லியன்) பங்குகளை
ஒதுக்கியிருந்தது. தகுதியுடைய ஒவ்வொரு பி40 இந்தியக் குடும்பத்திற்கும் வட்டி இல்லாக் கடனாக
5 000 ரிங்கிட் வழங்கப்பட்டு, பின்னர் அப்பணம் அமானா சஹாமில் முதலீடு செய்யப்படும்.
இம்முதலீட்டுத் திட்டம் படிப்படியாக வறுமைக் க�ோட்டிற்குக் கீழ் உள்ள 100 000 பி40, இந்தியக்
குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்யும்.

°¬øc‚è™

மேற்கண்ட செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளில் ஒன்றனை மட்டும் தெரிவு செய்து
அதனை மதிப்பீடு செய்து கூறுக.

163

த�ொகுதி 17 ð£ì‹ 2 வாங்குவ�ோம் பங்கு

உரைநடைப்பகுதியை ஆழ்ந்து வாசித்திடுக.

பண்டமாற்று முறையில் த�ொடங்கிய உலகப் ப�ொருளாதாரப் பரிணாமம் இன்று பல்வேறு மாற்றங்களைக்
கடந்து வந்துள்ளது. அந்த வகையில் உலக நாடுகள் அனைத்தும் அதிமுக்கியத்துவம் க�ொடுக்கும்
வர்த்தகம் பங்குச் சந்தையாகும். பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இலாபமடைய வேண்டும்
என்ற ந�ோக்கத்துடன்தான் ஈடுபடுகின்றனர். ஆனால், த�ொடர்ந்து இலாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்
சந்தை பல பிரிவுகளைக் க�ொண்டிருக்கின்றது. அவை நாள் பங்குச் சந்தை, குறுகிய காலப் பங்குச் சந்தை,
நீண்ட காலப் பங்குச் சந்தை, வங்கிகளில் பங்குச் சந்தை முதலீடு ப�ோன்றவை ஆகும்.

நாள் பங்குச் சந்தை மிக எளிமையானதாகவும் அதிக இலாபகரமானதாகவும் த�ோற்றமளிக்கலாம்.
ஆனால், எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் ப�ோல் நாம் ஒவ்வொரு கணமும்
தயார் நிலையில் இருப்பது அவசியம். நாள் பங்குச் சந்தை வணிகத்தின் ப�ோது ஆதாயமடைவதற்கு
என்னவெல்லாம் செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பதை நாம் அறிந்து க�ொள்ள வேண்டும்.
ஆனால், வங்கிப் பங்குகள் முதலீட்டில் அவ்வாறான நிலை வாடிக்கையாளர்களுக்கு இல்லை. தான்
வாங்கவிருக்கும் பங்குகள் குறித்து அதிகம் அச்சம் க�ொள்ளத் தேவையில்லை. காரணம் இதில் அவர்கள்
செய்யும் முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதற்கொப்பவே, இலாப ஈவும் இருக்கும். அதிகப்
பேராசை க�ொள்ளாத முதலீட்டாளர்கள் இந்த வங்கிப் பங்குகளை வாங்குவதையே மிகவும் விரும்புவர்.
ப�ொதுவாகப் பங்குச் சந்தைகள் த�ொடர்பாகக் க�ொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பக் கூடாது.
இவ்வாறு கூறப்படும் கணிப்புகளில் அதிகமான�ோர் ஆர்வம் காட்டுவதால், பங்கு விலை எதிர்ப்பார்க்கா
வண்ணம் அதிகரிக்கும். அதைப் பார்த்து நாமும் வாங்கும் ப�ோக்கைக் கடைப்பிடித்து விடக் கூடாது.
பங்குதாரர்களே சரியான பங்குகளை வாங்கத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். வங்கிப் பங்குகளைப்
ப�ொருத்தமட்டில் பிறர் வாங்குவதைப் பார்த்துவிட்டு, அப்படியே வாங்கி விடலாம் என முடிவு செய்வது
நல்லதன்று. எப்போதும் நிலைத்தன்மை க�ொண்ட பங்குகளையே வாங்க வேண்டும்.

ஆர்வமிகுதியால் ஏராளமான பணத்தை ஒரே பங்குச் சந்தை அல்லது நிறுவனத்தில் ப�ோடவும் கூடாது.
எவ்வளவுதான் மிகச் சிறந்த நிறுவனத்தின் பங்காக இருப்பினும், நமது முதல், 10 விழுக்காட்டிற்கு
மேல் ஒரே பங்குச் சந்தையில் அல்லது நிறுவனத்தில் ப�ோடுவது ஆபத்தானது. ச�ொல்லப்போனால்
சரியான அளவு ஐந்து விழுக்காடு மட்டுமே இருத்தல் பாதுகாப்பானதாகும். மேலும், ஒரு பங்கின் விலை
சரிந்திருக்கும் ப�ொழுது வாங்குவது சிலரது வழக்கம். மீண்டும் பங்கு விலை ஏறும் ப�ொழுது ஆதாயம்
கிடைக்கும். இந்தத் திட்டம் சரியானதுதான். ஆனால், ஒரு பங்கின் விலை படுவீழ்ச்சி அடைந்துவிட்டால்,
அதை வாங்குவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. இதே உத்தியை வங்கி முதலீடுகளிலும்
முதலீட்டாளர்கள் பயன்படுத்தலாம். முதலீடு செய்வதற்கு முன், எந்த வங்கியில் அதிக இலாப ஈவு
விழுக்காடு இருக்கின்றது என்பதை அறிந்து க�ொண்டு முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை நிலை

2.3.15 வங்கியியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

164

குறித்துத் தெரிந்துக�ொள்ள பல்வேறு நாளிதழ்கள் வாசிப்பது, த�ொலைக்காட்சிகள் பார்ப்பது நல்லது. த�ொகுதி 17
ஆனால், அவை கூறும் ஆல�ோசனைகள் எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. உங்கள்
சிந்தனைத் திறனையும் தர்க்க அறிவையும் பயன்படுத்தி எந்தப் பங்குகளில் ஈடுபடலாம் என நீங்களே
முடிவு செய்வதுதான் சாலச் சிறந்தது.

பங்குச்சந்தை ஒரு விளையாட்டு ப�ோன்றது. இந்த விளையாட்டை மிகுந்த கவனத்துடன் ஆட
வேண்டும். விழிப்புடன் இருப்பதும், முடிவுகளை உடனடியாகச் செய்வதும் அவசியம். நாள் வணிகத்தில்
ஈடுபடுபவர்கள் த�ொடர்ந்து சந்தையைக் கண்காணித்து வரவேண்டும். வீட்டில் இருந்தவாறே கணினியில்
வணிகம் செய்பவராக இருப்பின், மின் தடை, கணினிக் க�ோளாறுகள் இவை காரணமாக இடையூறு
நேராதவாறு பராமரிப்பதும் அவசியம். இந்தச் சிக்கல் வங்கிப் பங்குகள் முதலீட்டில் இல்லை. மாதம்
ஒருமுறைய�ோ மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறைய�ோ தங்கள் பங்குகள் நிலவரம் குறித்துக்
கண்காணித்து வரலாம்.
பங்குகளை விற்பனை செய்து முடிக்கும்முன் மனக்கோட்டை கட்டாதீர்கள். விற்பனை எதிர்பார்த்த
பலனை அளிக்காவிடில், மனச்சோர்வை உருவாக்கும். நேற்று, சந்தை இருந்தது ப�ோல் இன்றும், இன்று
இருப்பது ப�ோல் நாளையும் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்திற்கும்,
புதுப்புது உத்திகளைக் கையாளுவதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பங்குச் சந்தையில் ஈடுபட,
மனத் திண்மையும் கட்டுப்பாடும் அவசியம். இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதுதான் சந்தையின்
வழக்கம் எனினும், அதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். ‘பேராசை பெரு நட்டம்’ என்பது பங்குச்
சந்தைக்கும் ப�ொருந்தக் கூடியதே.

1

வண்ணமிடப்பட்டுள்ள ச�ொற்களுக்கு அகராதியின் துணைக�ொண்டு சூழலுக்கேற்ற
ப�ொருள் எழுதுக.

2

கருத்துணர் கேள்விகளுக்கு விடை எழுதுக.

1. பங்குச் சந்தையின் வகைகளைக் குறிப்பிடுக.
2. நாள் பங்குச் சந்தை “எதிரி நாட்டில் உளவு அறியச் சென்றிருக்கும் இராணுவ வீரன் ப�ோல்”
என்று குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன?
3. சரியான பங்குகளை வாங்குவதற்குப் பங்குதாரர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டிய
காரணம் என்ன?
4. பங்குச் சந்தையில் ஈடுபட முடிவெடுத்துள்ள நீங்கள் மேற்கொள்ளும் சிறந்த மூன்று
வழிமுறைகளை எழுதுக.

165

3

கீழ்க்காணும் பனுவலை வாசித்துப் பங்குச் சந்தைக்கும் வளர்ச்சியை ந�ோக்கிச் செல்லும் த�ொழில்
துறைகளுக்கும் உள்ள த�ொடர்பினை 50 ச�ொற்களில் விளக்கி எழுதுக.

சிறந்த நிறுவனத்தை ந�ோக்கி...

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும் ப�ோது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக
நினைக்காமல், நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண வேண்டும். உங்களிடம் உள்ள பணத்தை
வைத்து ஒரு சிறு நிறுவனத்தை வாங்க நினைப்பீர்கள் அல்லது ஒரு த�ொழில் த�ொடங்க நினைப்பீர்கள்
என்றால், என்ன செய்வீர்கள்? பல்வேறு த�ொழில்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் வளரும் வாய்ப்புகள்
அதிகம் உள்ள நிறுவனங்களை அடையாளம் காணுவீர். உங்கள் முதலீட்டிற்குத் தக்கவாறு இலாபம்
தரக்கூடிய ஒரு த�ொழில் துறையைத் தேர்ந்தெடுப்பீர். அந்தத் துறையில் சிறப்பாக இருக்கக்கூடிய
ஒரு நிறுவனத்தை வாங்குவீர். நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சியே உங்கள் முடிவிற்கான
காரணமாக அமையும். அதே ப�ோல, பங்குகளை வாங்குவதற்கு முன்பு, நல்ல எதிர்காலம் உள்ள
ஒரு த�ொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உதாரணமாக, இப்போது மலேசியாவில்
நல்ல வளர்ச்சியை ந�ோக்கிச் செல்லும் த�ொழில்துறைகள் யாவை என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக மருந்தியல் துறை, தகவல் த�ொழிநுட்பம், கட்டுமானத் துறை ப�ோன்றவைகளாகும்.

இந்த மூன்று துறைகளில் மருந்தியல் துறையை எடுத்துக் க�ொள்வோம். நடுத்தர மற்றும் உயர்
நடுத்தர மக்கள் த�ொகை உயரும்போது, உடல் நலம் பேணல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.
இந்த விழிப்புணர்வு காரணமாக, வருடாந்திர உடல் பரிச�ோதனைகளும், அதில் கண்டறியப்பட்ட
குறைபாடுகளுக்காக மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கமும் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது.
இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் உள்ள துறையாக மாறும். எனவே, மருந்து
தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக, ஆண்டுத�ோறும் அதனுடைய வியாபாரத்தை
அதிகமாக்கி இலாபத்தைப் பெருக்கி வருகின்றன. இது மேலும் த�ொடர்வதற்கான சாத்தியக் கூறுகள்
நிறையவே உள்ளன. ஆகவே, இவ்வாறு வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ள துறைகளைக் கண்டறிந்து,
அவற்றில் சிறந்த, வளரக்கூடிய துறையில் உள்ள நிறுவனத்தின் பங்கினை வாங்க வேண்டும். அப்படி
வாங்கினால் பங்குச் சந்தையில் முன்னோக்கிச் செல்லலாம்.

த�ொகுதி 17 õ÷Šð´ˆ¶î™

1. ஒரு நிறுவனத்தின் எதிர்காலப் ப�ொருளாதார வளர்ச்சிக்கும் தற்போது வாங்கவிருக்கும்
பங்கிற்கும் என்ன த�ொடர்பு என்று விளக்குக.

2. குழுவில் கலந்துரையாடி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யவிருக்கும் ஒருவருக்கு
வழிகாட்டும் வண்ணம் நிரல�ொழுங்கு வரைபடம் ஒன்றனைத் தயார் செய்க.

°¬øc‚è™

க�ொடுக்கப்பட்டுள்ள ச�ொற்களைக் க�ொண்டு ப�ொருள் விளங்க வாக்கியம் அமைத்திடுக.

பங்கு வங்கி முதலீடு விலை சரிவு இலாப ஈவு

166

ð£ì‹ 3 பங்குச் சந்தை

உரைநடைப்பகுதியை வாசித்திடுக.

உலகப் ப�ொருளாதார வளர்ச்சி பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகின்றது. ப�ொருள்களை த�ொகுதி 17
மூலதனமாகக் க�ொண்டு நேருக்கு நேர் நின்று வணிகம் செய்த காலம் ப�ோய், இன்று கண்மறைவில்
நின்றுக�ொண்டு உலகப் ப�ொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் பங்குகளை வாங்குவதும் விற்பதுவும்
உலக வழக்காகிவிட்டது. இது வழக்கமாக இருந்தாலும்கூட, இன்று உலகப் ப�ொருளாதாரத்தையும் நிதி
நிலவரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்தப் பங்குச் சந்தை வணிகம் வைத்துக் க�ொண்டிருக்கிறது.
தனிநபராக இருந்தாலும் சிறிய, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் அனைவரின் கனவும் நனவும்
இலாபம் ஈட்டுவதே ஆகும். அதற்கேற்றவாறு பங்குச் சந்தையும் பல நன்மைகளையும் க�ொண்டு வருகிறது.

பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்கள் முழுநேரமாகவ�ோ பகுதிநேராமாகவ�ோ இந்த வணிகத்தில்
ஈடுபடலாம். பங்குச் சந்தையில் ஈடுபடுவதனால் தங்களுடைய ஓய்வு நேரத்தில�ோ தங்களுக்கு வசதியாக
இருக்கும் நேரத்தில�ோ ஈடுபடலாம். இதனால், உடல் ச�ோர்வு அல்லது களைப்பிலிருந்து விடுபடுவத�ோடு
பகுதி நேரமாக வருவாயையும் ஈட்டிக்கொள்ள வழியுண்டு. ஆகவே, பங்குச் சந்தையில் பகுதிநேரமாக
ஈடுபடுவதனால் நன்மையே விளைகின்றது.

அடுத்து, பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கு அதிக அளவு ர�ொக்கப்பணம் தேவையில்லை. யார்
வேண்டுமானாலும் பங்குச் சந்தை த�ொடர்பான அடிப்படை அறிவு இருந்தாலே த�ொடக்க நிலைக்குப்
ப�ோதுமானது. ப�ொதுவாக, எந்தவ�ொரு வணிகமாக இருந்தாலும், அதைத் த�ொடங்குவதற்கு முதலீடாக
அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், பங்குச் சந்தையில் வணிகம் செய்வதற்கு
அவரவர் வசதிக்கேற்றாற்போல் முதலீடு செய்யலாம். அது சிறிய த�ொகையாகவ�ோ பெரிய த�ொகையாகவ�ோ
இருக்கலாம். மேலும், வணிகத்தில் இலாப நஷ்டம் காரணமாக ஈடுபடத் தயங்குபவர்கள் இந்தப் பங்குச்
சந்தை வணிகத்தில் அவ்வாறு தயங்கத் தேவையில்லை. காரணம், சிறிய முதலீட்டில் த�ொடங்கும்போது
இழப்பு ஏற்பட்டாலும் சிறிய அளவ�ோடு ப�ோய்விடும். ஆகவே, பங்குச் சந்தை வணிகம் நடுத்தர வர்க்கத்தினர்
அனைவரும் ஈடுபடும் சூழலை வழங்குகிறது.

த�ொடர்ந்து, பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் தனிநபராக இருந்தால் சுயமாக முடிவெடுக்கும் உரிமை
பெற்றிருப்பர். அதாவது தாங்கள் வாங்கவிருக்கும் அல்லது முதலீடு செய்யவிருக்கும் நிறுவனம் யாது?
எவ்வளவு பங்குகள் வாங்கலாம்? எப்போது வாங்கலாம்? ப�ோன்ற முடிவுகளை யாருடைய இடையூறும்
இன்றி முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புண்டு. ஆதலால், பங்குச் சந்தையில் மட்டுமே இவ்வாறான வாய்ப்புகள்
உண்டு என்பதை நாம் இங்குக் காண முடிகிறது. ஆகவே, பங்குச் சந்தை பங்குதாரர்களுக்கு இது மிகவும்
முக்கியமான நன்மைகளில் ஒன்றாக அமைகின்றது.

இம்மட்டில் நின்றுவிடாமல், தற்போதைய காலக்கட்டங்களில் பங்குச் சந்தைகளில் முதலீடு
செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சில ர�ொக்கத் த�ொகையும் இன்னும் பிற சலுகைகளும்
வழங்கப்படுகின்றன. குறிப்பாக, வங்கியில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ஒரு முறை அதிர்ஷ்டக் குலுக்கு
முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. விலைமதிப்பு மிக்கப் பரிசுகள் வெற்றி பெறுபவர்களுக்குக்

3.4.29 250 ச�ொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

167

த�ொகுதி 17 கிடைக்கின்றன. அதாவது, தங்களது முதலீட்டில் இலாப ஈவு ஒருபுறம் கிடைத்தாலும், பங்குதாரர்களாக
இருக்கும் இவர்களில் சிலருக்கு இவற்றைப்போன்ற பரிசுப் ப�ொருள்கள் கிடைப்பது மேலும் நன்மை
தருவதாகவே அமைகின்றது.

இப்படிப் பல்வேறு நிலைகளில் அதாவது தனிநபர், குடும்பம், சமுதாயம், த�ொழில்நிறுவனங்கள், நாடு
என்று இந்தப் பங்குச் சந்தை பல நன்மைகளைக் க�ொண்டு வருகின்றது. இது த�ொடர்பாக ஒவ்வொரு
தனிமனிதரும் ஆழ ய�ோசித்து, தங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? ப�ோன்ற கேள்விகளுக்கு
விடை கண்ட பின்னர், பங்குச் சந்தையில் துணிந்து ஈடுபட முயற்சி செய்யலாம்.

1

மேற்கண்ட உரைநடைப் பகுதியில் காணப்படும் முக்கியக் கருத்துகளை அடையாளம்
கண்டு எழுதுக.

2

‘வங்கி’ எனும் தலைப்பிற்கேற்ற முன்னுரை ஒன்றனை எழுதுக. கீழ்க்காணும் குறிப்புகளைத்
துணைக�ொள்க.

வங்கி என்றால் என்ன?
வங்கி எத்தனை வகைப்படும்?
வங்கிய�ோடு த�ொடர்புடையவர்கள் யாவர்?
நம் நாட்டில் இயங்கிக் க�ொண்டிருக்கும் வங்கிகள் யாவை?- ஓரிரு எடுத்துக்காட்டுகள்.

3

‘இணையமும் வங்கியும்’ எனும் தலைப்பில் 250 ச�ொற்களுக்குள் கருத்து விளக்கக்
கட்டுரை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

‘இளைஞர்கள் பங்குச் சந்தையில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்’ எனும் தலைப்பில்
250 ச�ொற்களுக்குள் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

°¬øc‚è™

கீழ்க்காணும் கருத்தை விவரித்து எழுதுக.
இளைஞர்கள் பங்குச் சந்தையில் ஈடுபடுவதனால், வருவாயைப் பெறுவதில் பின்னடைவு - வயது
குறைவு - முதிர்ச்சி குறைவு - முடிவெடுப்பதில் தடுமாற்றம் - விளைவுகள் பற்றிக் கவலை இல்லை.

168

ð£ì‹ 4 இலக்கணம்

த�ொகாநிலைத் த�ொடரில் வினையெச்சத்தொடர்; பெயரெச்சத்தொடர்

த�ொகாநிலைத்தொடர்கள் என்றால் என்ன?
• ச�ொற்றொடரில் உருபுகள�ோ ச�ொற்கள�ோ மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள்

தருமாயின் த�ொகாநிலைத்தொடர் எனப்படும்.
• த�ொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும். அவற்றுள் வினையெச்சத்தொடர் மற்றும்

பெயரெச்சத்தொடர் ஆகியவை உள்ளடங்கும்.
• வினையெச்சத்தொடர் (எ.கா: கூடி மகிழ்ந்தனர்)
• பெயரெச்சத்தொடர் (எ.கா: அறிந்த பெற்றோர்)

வினையெச்சத்தொடர் பெயரெச்சத்தொடர்

கூடி மகிழ்ந்தனர் - ‘கூடி’ என்னும் எச்சவினை அறிந்த பெற்றோர் - ‘அறிந்த’ என்னும் எச்சவினை
‘மகிழ்ந்தனர்’ என்னும் வினைமுற்றைக் க�ொண்டு ‘பெற்றோர்’ என்னும் பெயர்ச்சொல்லோடு
முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர் முடிவதனால், இது பெயரெச்சத்தொடர் ஆகும்.
ஆகும்.

1

ஆறு வினையெச்சத்தொடர்களை எழுதுக.

1. 4.
2. 5.
3. 6.

2 த�ொகுதி 17

ஆறு பெயரெச்சத்தொடர்களை எழுதுக.

1. 4.
2. 5.
3. 6.

5.7.8 த�ொகாநிலைத்தொடரில் வினையெச்சத்தொடர்; பெயரெச்சத்தொடர் ஆகியவற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

169

3

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று ந�ோக்கி வினையெச்சத்தொடர், பெயரெச்சத்தொடர்
என வகைப்படுத்துக.

பார்த்த ஊர்

படித்த இளைஞன் கடந்த தை

முறிந்த கால்

சுவைத்து ருசித்தான் முறிந்து ப�ோயின

படித்து வந்தான்

கடந்து சென்றான் பார்த்துக் க�ொடுத்தான்

சுவைத்த இனிப்பு

õ÷Šð´ˆ¶î™

வினையெச்சத்தொடர், பெயெரெச்சத்தொடர் ஒவ்வொன்றிற்கும் இரண்டு வாக்கியங்கள்
அமைத்திடுக.

த�ொகுதி 17 °¬øc‚è™

கீழ்க்காணும் ச�ொற்றொடர்களை வினையெச்சத்தொடர் என்றும் பெயரெச்சத்தொடர் என்றும்
வகைப்படுத்துக.

விழுந்த மரம்
ஓடிக் களைத்தனர்

கேட்ட பாடல்
படித்த புத்தகம்
சென்று வந்தான்

170

ð£ì‹ 18 வனப்புமிகு வரலாறு
1 பல்லவர் பதிப்பு

பனுவலைக் கவனமாகச் செவிமடுத்திடுக.

உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள
வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இதுதான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று
அழைக்கப்படுகிறது. பிரமாண்ட க�ோவில், கலைப் ப�ொக்கிஷம் என்று ப�ோற்றப்படும் அங்கோர் வாட்
ஆலயத்தைத் தமிழ் மன்னர் ஒருவர் கட்டியிருப்பதுதான் ஆச்சரியமான தகவல். ஆம், இந்த ஆலயத்தை
இவ்வளவு அற்புதமாகக் கட்டி முடித்த பெருமை இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரையே சாரும்.
மேலும், தமிழ்நாட்டிலிருந்து அரசியல், கல்வி, சமயம், பண்பாடு ஆகியவற்றை இந்த மண்ணில்
வளர்த்த பெருமையும் இவரையே சாரும். ப�ோரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை,
சூரியவர்மன் அழகான க�ோவிலாக மாற்றியிருக்கிறார்.

இந்தக் க�ோவிலானது சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும்
அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்கச் சுற்றுச்சுவரே சுமார் 3.6 கில�ோமீட்டர் நீளம்
க�ொண்டது என்றால், அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து க�ொள்ளுங்கள். பன்னிரண்டாம்
நூற்றாண்டில் சூரியவர்மனால் த�ொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டடப் பணி நிறைவு பெறுவதற்கு
27 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த ஆலயம் கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம்
சூரியவர்மன் இறந்துவிட்டார்.

1.1.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை மதிப்பீடு செய்து த�ொகுத்துக் கூறுவர்.

171

த�ொகுதி 18 இரண்டாம் சூரியவர்மன் கட்டியப�ோது, அஃது ஒரு வைணவக் க�ோவிலாக இருந்ததாகவும், ஆறாம்
‘ஜெயவர்மன்’ ஆட்சிக்கு வந்த பிறகு, புத்த க�ோவிலாக மாற்றம் பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றது.
இன்றுவரை இது புத்த ஆலயமாகவே விளங்கி வருகின்றது. அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் க�ோவில்
அமைந்திருப்பதால், பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டுச் சிதிலமடைந்தது.
பிறகு, ஐர�ோப்பிய பாதிரியமார் இருவரால் மீண்டும் இந்த ஆலயம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இரண்டாம் ‘சூரியவர்மன்’ இந்த இடத்தைக் கைப்பற்றியவுடன், இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறார்.
இந்த இடம்தான், அவரது ஆட்சியில் தலை நகரமாகச் செயல்பட்டிருக்கிறது. நடுவில் இருக்கும்
ஐந்து க�ோவில்களை ஓர் அகழியும், மூன்று மண்டபங்களும் சூழ்ந்துள்ளன. மேற்கில் இருந்து
வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தின் வழியாக முதல் வெளி மண்டபத்தை
அடையலாம். முதல் மண்டப வெளிப்புறம், சதுரத் தூண்களையும், உட்புறம், மூடிய சுவரையும் க�ொண்டு
அமைக்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம், தாமரை வடிவ அலங்காரங்களைக்
க�ொண்டுள்ளது. மூடிய சுவர், நடனமாடும் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவரின்
வெளிப்புறத்தில் தூண்கள�ோடு கூடிய பல கன்னிகள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் மீது
அமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. எல்லா
மண்டபங்களின் சுவர்களிலும் தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன.

முதல் மண்டபத்தில் இருந்து நீண்ட வழி மூலம் இரண்டாம் மண்டபத்தை அடைய முடியும். இஃது
இரண்டு பக்கங்களிலும் சிங்கச் சிலைகள் அமைந்த படிக்கட்டுகளைக் க�ொண்ட மேடையிலிருந்து
செல்லும்படி அமைந்துள்ளது. இரண்டாம் மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாகப் புடைப்புச்
சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன.
மூன்றாம் மண்டபம், உயர்ந்த தளத்தின் மீது அமைந்திருப்பதுடன், மண்டபங்களால் இணைக்கப்பட்ட
ஐந்து க�ோவில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும்,
சிங்கம், கருடனின் தலைகளையும் க�ொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மன்னனின் மனம் ப�ோல உயர்ந்து நிற்கும் இந்தத் திருக்கோவில், கடந்த 200 ஆண்டுகளாக
வழிபாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பானியர்கள் திருப்பணி செய்யத் த�ொடங்கியிருக்கிறார்கள்.
கர்ப்பக்கிரகத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் இப்போது காட்சியகத்தில் இருக்கின்றன.

மூலம்: இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது

1

செவிமடுத்த கருத்துகளைப் பட்டியலிடுக.

2

பட்டியலிட்ட கருத்துகளை மதிப்பீடு செய்து கூறுக.

3

மதிப்பீடு செய்த கருத்துகளைத் த�ொகுத்துக் கூறுக.

172

õ÷Šð´ˆ¶î™ த�ொகுதி 18

செவிமடுத்த தகவல்களை
மதிப்பிட்டுத் த�ொகுத்துக்
கூறுக. குறிப்புகளைத்
துணை க�ொள்க.

தென்கிழக்காசியா என்பது உலக
வரலாற்றில் முத்திரை பதிக்க வேண்டிய ஓர் இடமாகும். இந்தியாவிலிருந்து சமையல் ப�ொருள்கள், மிளகு,
பஞ்சு ஆகிய ப�ொருள்களும், சீனாவிலிருந்து பட்டு மற்றும் பீங்கான் பாண்டங்கள் முதலியவையும் வணிகப்
ப�ொருள்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டன. ப�ொதுவாக, தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் வருகை
என்று பார்க்கும்போது, கடாரம், மலாக்கா, புருவாஸ் ப�ோன்ற பகுதிகள் மட்டுமே நம் சிந்தைக்கு எட்டும்.
ஆனால், இந்தியர்கள் மலாயாவின் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள சரவாக், புருணையின் கடல�ோரப்
பகுதிகளுக்கும் பாய்மரக் கப்பல்கள் க�ொண்டு பயணம் செய்திருக்கின்றனர். இந்தக் கப்பல்களும் படகுகளும்
இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் கலிங்கம், ஆந்திராவில் அமைந்துள்ள அமராவதி, பாண்டிச்சேரி,
தமிழகத்தின் காவிரிப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு மேற்குறிப்பிட்ட
தென்கிழக்காசியப் பகுதிகளுக்கு வந்ததாகவும் வரலாற்றுச் சான்றுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பருவக் காற்றைத் துணைக�ொண்டு இவர்கள் பயணம் செய்ததனால், சில காலம் இந்தப் பகுதிகளிலேயே
தங்கி வாழ வேண்டிய சூழல் இருந்தது. ஆகையால், இங்குள்ள குடிமக்கள�ோடு ம�ொழி மற்றும் பண்பாட்டுப்
பகிர்வுகள் ஏற்பட்டன. ம�ொழி என்று பார்க்கும்போது, தமிழ்மொழியும், சமஸ்கிருதமும் பயன்பாட்டில்
இருந்துள்ளன. பண்பாடு என்பது அதிகமாக இந்து மதத்தைச் சார்ந்த நம்பிக்கைகளே பரவி வந்தன.

இந்திய வணிகர்கள் இங்கு விற்பனைக்குக் க�ொண்டு வந்த ப�ொருள்கள் உயர்பண்பாட்டின்
சின்னங்களாக இருந்த காரணத்தால், உள்நாட்டு மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் நல்ல வரவேற்பைப்
பெற்றிருந்தன. வந்தவர்களில் சிலர் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்துக�ொண்டனர்; சிலர்
அரச குடும்பங்களிலும் பெண்களைத் திருமணம் செய்து க�ொண்டனர். அரச குடும்பங்களில் திருமணம்
செய்து க�ொண்டவர்களில் சிலர் அரசு அதிகாரிகளுக்கு ஆல�ோசனை வழங்கும் நிலையிலும் இருந்தனர்.
இப்படி வணிக ந�ோக்கத்திற்காக வந்த இவர்கள் தங்களின் சமய நம்பிக்கைகளையும் பண்பாட்டினையும்
சமூகக் கட்டமைப்புகளையும் அமல்படுத்தத் த�ொடங்கினர். அகழ்வாராய்ச்சியின்வழி, 1967ஆம் ஆண்டு
சந்துப�ோங் மலைப் பகுதியில் புத்த வழிபாட்டுத்தலம் அடையாளங்காணப்பட்டுள்ளது. இப்பகுதியில்
கண்டெடுக்கப்பட்ட வெள்ளியிலான சேமிப்புப் பெட்டியில் தங்க நகைகள், அமர்ந்த நிலையில் இருக்கும்
புத்தர், யானை, ஆமை, பாம்பு ப�ோன்ற சில ப�ொருள்களும் இருந்தன. அகழ்வாராய்ச்சியாளர்கள்
கூற்றுப்படி, இவை இந்து, புத்த மதங்கள�ோடு த�ொடர்புடைய ப�ொருள்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

காலக்கட்டம் கண்டுபிடித்தவர் கண்டெடுக்கப்பட்ட ப�ொருள்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி

°¬øc‚è™

சரவாக்கில் பல்லவர்களின் பண்பாட்டுக் கூறுகளைத் த�ொகுத்துக் கூறுக.

173

த�ொகுதி 18 ð£ì‹ 2 கீழடியில் த�ொன்மை

அறிக்கையை ம�ௌனமாக வாசித்து அறிக.

மலேசியத் தமிழர் வரலாற்றுக் கழகம்
கீழடி தமிழர் வரலாற்றுக் கண்காட்சி

1.0 முன்னுரை

கடந்த 29.05.20 ஆம் நாள் மலேசியத் தமிழர் வரலாற்றுக் கழகம் ஏற்பாட்டில் கீழடி தமிழர் வரலாற்றுக்
கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. காலை மணி
9.00க்குத் த�ொடங்கிய இந்நிகழ்ச்சி இரவு 7.00 மணிக்கு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ந�ோக்கம்
தமிழர்களின் பண்டைய வரலாற்றுச் சிறப்பினை மலேசியத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவது
ஆகும். இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,
பல்கலைக்கழக மாணவர்கள், ப�ொது இயக்கங்களின் நிகராளிகள், ப�ொதுமக்கள் என்று பலரும் கலந்து
க�ொண்டு சிறப்பித்தனர்.

2.0 த�ொடக்க நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சி தமிழ்வாழ்த்துடன் த�ொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மனிதவள அமைச்சரான டத்தோ ஸ்ரீ மு.
சரவணன் சிறப்பு வருகையாளராக வருகை புரிந்திருந்தார். அவர் சிறப்புரையாற்றி இந்நிகழ்ச்சியை
அதிகாரப்பூர்வமாகத் த�ொடக்கி வைத்தார். அவர் தமதுரையில் தமிழர்கள், வரலாறு த�ொடர்பான
விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், வரலாறு அறியாத இனம் வளராத இனமாக
ஆகிவிடும் எனும் கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

3.0 நடவடிக்கைகள்
இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களை ஈர்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

3.1 சுவர�ொட்டி கண்காட்சி
முதல் நடவடிக்கையாக, கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
என்று நான்காம் கட்ட ஆய்வில் வெளிவந்த தகவல்கள் சுவர�ொட்டிகள் வாயிலாக விளக்கப்பட்டிருந்தன.
சிந்து, கங்கை நதிக்கரைக்குப் பின், நகர நாகரிகங்கள், தமிழகத்தில் த�ோன்றவில்லை என்ற கருத்து
ப�ொய்ப்பித்துப் ப�ோகும் அளவிற்குத் தகவல்கள் சான்றுகளுடன் இந்தச் சுவர�ொட்டிகள் படைக்கப்பட்டிருந்தன.

3.2 காண�ொலிக் கண்காட்சி
அடுத்த நடவடிக்கை, 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கீழடிப் பகுதியில் மத்திய
அரசு த�ொல்லியல்துறை ஆய்வு நடத்தியதையும், 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம்
கட்ட அகழ்வாய்வின் ப�ோது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவின் பீட்டா பகுப்பாய்வு

2.1.10 அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

174

ச�ோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுப் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளையும் காண�ொலிக் காட்சிகள் த�ொகுதி 18
மூலம் காட்டப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.

3.3 மேடை நாடகம்

த�ொடர்ந்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை வளமான பண்பாடு
க�ொண்ட பகுதியாக விளங்கிய கீழடித் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையைச் சித்திரிக்கும் வண்ணம்
மேடை நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்தில் கீழடி மக்கள் பண்டைய காலத்தில் ர�ோம்
நாட்டினருடன் வணிகத் த�ொடர்பு வைத்திருந்ததைத் தக்கச் சான்றுகளுடன் மிகவும் சிறப்பான முறையில்
காட்சிப்படுத்தப்பட்டது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் அனைவரும் பேருவகை க�ொண்டனர்.

3.4 உருவப்பொருள்கள் கண்காட்சி

நான்காம் நடவடிக்கையாக மாதிரி உருவப்பொருள்கள் கண்காட்சி ஆகும். கீழடி அகழ்வாய்வில் தமிழ்-
பிராமி, பிராமி எழுத்து ப�ொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் குவிரன், ஆதன் ப�ோன்ற பெயர்களையும்,
முழுமை பெறாத சில எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளையும் மாதிரி ப�ொருள்களாகச் செய்து
பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், சதுரங்க விளையாட்டு, 4 000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட
கல்மணிகள், மதிப்புறு அணிகலன்கள், அரவைக் கல் சுடுமண் உருவங்கள் ப�ோன்றவைகளும்
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

4.0 முடிவு

இந்நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு ஒரு நிறைவுக்கு வந்தது. நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பார்வையாளர்களுக்கு
ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் என்ற முறையில் திருமதி.எழிலரசி இன்பசேகரன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

அறிக்கை தயாரித்தவர், 15.06.20

(எழிலரசி இன்பசேகரன்)
செயலாளர்,
மலேசியத் தமிழர் வரலாற்றுக் கழகம்.

1

வண்ணமிடப்பட்ட ச�ொற்களைச் சரியாக உச்சரித்துப் பழகுக.

2

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசித்திடுக.

175

த�ொகுதி 18 3

நான்கு குழுக்களாகப் பிரிந்து குழுநிலையில் இந்த அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக. குழு உறுப்பினர்கள் மதிப்பிட்டுக்
கருத்துரைத்திடுக.

õ÷Šð´ˆ¶î™

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசித்திடுக.

தமிழ்ப் பல்கலைக்கழகத் த�ொல்லியல் துறை தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கு உறுதுணையாகவுள்ளது.
அது கல்வெட்டுகள், செப்பேடுகள், த�ொல்பொருள்கள் ஆகியவற்றைச் சேகரித்தல்; ஆவணப்படுத்துதல்;
பாதுகாத்தல்; பகுப்பாய்வு செய்தல்; பதிப்பித்து அவற்றை வெளியிடுதல்; தமிழ்நாட்டு வரலாற்றுக்கு
வளம் சேர்க்கும் த�ொல்லியல்சார் இடங்களைக் கண்டறிந்து, அகழாய்வு செய்தல் ப�ோன்றவற்றை
ந�ோக்கமாகக் க�ொண்டு செயல்படும் துறையாகும்.

இதுகாறும் வல்லம், பெரியபட்டினம், மயிலாடும்பாறை, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் அகழாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் க�ொடுமணலே
மிகப் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வாகும். இதில் கிடைத்த த�ொல்பொருள்கள்
உலக அளவில் பெரிதும் பேசப்பட்டன. பெரியபட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வின் மூலம்
அவ்வூர் இடைக்காலத்தில் சிறந்த துறைமுகமாக, சீன நாட்டுடன் த�ொடர்பு க�ொண்டு விளங்கியமை
வெளிக்கொணரப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட த�ொல்லியல் வாழ்விடங்கள் களப்பணிகள்
மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதினேழு ஆய்வுத் திட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழு,
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்தியத் தேசிய அறிவியல் கழகம், இந்தியத் த�ொல்பொருள்
ஆய்வுத்துறை, ஃப�ோர்டு அறக்கட்டளை மற்றும் நேரு அறக்கட்டளை ஆகியவற்றின் நல்கையுடன்
செயல்படுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டளவில் மூன்று திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.

°¬øc‚è™

கீழ்க்காணும் வாக்கியங்களை வாசித்திடுக.

1. இதுகாறும் வல்லம், பெரியபட்டினம், மயிலாடும்பாறை, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் அகழாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2. பதினேழு ஆய்வுத் திட்டங்கள் பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம்,
இந்தியத் தேசிய அறிவியல் கழகம், இந்தியத் த�ொல்பொருள் ஆய்வுத்துறை, ஃப�ோர்டு அறக்கட்டளை
மற்றும் நேரு அறக்கட்டளை ஆகியவற்றின் நல்கையுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.

176

ð£ì‹ 3 வரலாற்றுக் கழகம் த�ொகுதி 18

ஆண்டறிக்கையை ம�ௌனமாக வாசித்து அதன் கூறுகளைக் கூறுக.

வரலாற்றுக் கழகம்
தாமான் மாவார் இடைநிலைப்பள்ளி

மலாக்கா
20 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை

தாமான் மாஜூ இடைநிலைப்பள்ளி வரலாற்றுக் கழகம் 1995ஆம் ஆண்டு த�ொடங்கப்பட்டது. கழக
உறுப்பினர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் உறுப்பினர் அனைவரும்
கலந்து பயனடைந்தனர். இவ்வாண்டில் ம�ொத்தம் நான்கு திட்டங்களைக் கழகம் மேற்கொண்டது.
அவற்றைத் த�ொடர்ந்து காண்போம்.

செயலவையினர்

1. செல்வன் நலன் - தலைவர்

2. செல்வி குமுதா - துணைத் தலைவர்

3. செல்வன் கவின் - செயலாளர்

4. செல்வி யாழினி - துணைச் செயலாளர்

5. செல்வன் கலைமுகிலன் - ப�ொருளாளர்

செயலவை உறுப்பினர்கள்

1. செல்வன் குமணன் 4. செல்வன் தேனமுதன்

2. செல்வன் மாலன் 5. செல்வன் இலக்கியன்

3. செல்வி இளமதி 6. செல்வி பாரதி இனியாள்

1.0 கழக நடவடிக்கைகள்

1.1 வேர்களைத் தேடி
இவ்வாண்டின் முதல் நடவடிக்கையாக கடந்த 14.01.20 ஆம் நாள் மாணவர்களுக்கான
வேர்களைத் தேடி, ப�ோட்டி நடத்தப்பட்டது. இதன் ந�ோக்கம் மாணவர்கள் குடும்ப வரலாற்றை
அறிந்து க�ொள்வது ஆகும். இதில் 140 மாணவர்கள் கலந்து க�ொண்டனர். இப்போட்டியின் மூலம்
பங்கேற்பாளர்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் த�ொகுத்துத் திரட்டேடு தயார் செய்து க�ொடுத்தனர்.
ப�ோட்டியில் கலந்து க�ொண்ட 15 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

1.2 வரலாற்றை நேசிப்போம்
மலாயாப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளர் முனைவர் சிவசந்திரலிங்கம்
அவர்களின் ச�ொற்பொழிவு 29.05.20 இல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ந�ோக்கம்
மாணவர்கள் வரலாற்றின் முக்கியத்துவத்தையும் வரலாற்றுக் கல்வி த�ொடர்பான வேலை வாய்ப்புகள்

3.4.35 250 ச�ொற்களில் ஆண்டறிக்கை எழுதுவர்.

177

த�ொகுதி 18 குறித்தும் அறிந்து க�ொள்வதும் ஆகும். வெண்திரைக் காட்சியின்வழி தக்கச் சான்றுகளுடன் உரை
நிகழ்த்தியதால் மாணவர்கள் மிகவும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர். மேலும், மாணவர்களுக்கு
வரலாற்றுப் பாடத்தின் மீது ஆர்வமும் புதிய க�ோணத்தில் வரலாற்றைப் பார்க்கும் சிந்தனை
மாற்றமும் ஏற்பட்டன.

1.3 புதையல் தேடும் ப�ோட்டி

இந்நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் 19.06.20 இல் மதியம் 2.00 முதல் 3.30 வரை நடைபெற்றது.
இப்போட்டியின் ந�ோக்கம் மாணவர்கள் வரலாறு த�ொடர்பான தகவல்களை அறிந்து க�ொள்ளுதல்
ஆகும். ம�ொத்தம் 20 குழுக்கள் இப்போட்டியில் பங்கெடுத்தன. மிகவும் உற்சாகத்துடன் மாணவர்கள்
பங்கெடுத்தனர். வரலாறு த�ொடர்பான கேள்விகள் புதையல் கேள்விகளாக வழங்கப்பட்டிருந்தமையால்,
மாணவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை அறிந்துக�ொண்டனர். வெற்றிபெற்ற 5 குழுக்களுக்குப்
பரிசுகள் வழங்கப்பட்டன.

1.4 மலாக்கா மாநிலத்திற்குக் கல்விச் சுற்றுலா

மலாக்கா மாநிலத்திற்கு 15.08.20 இல் ஒரு நாள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.
இச்சுற்றுலாவின் ந�ோக்கம் மலாக்காச் செட்டிகளின் வரலாற்றுப் பின்னணியை அறிந்து க�ொள்வதாகும்.
இதில் 40 மாணவர்கள் பங்கெடுத்தனர். இச்சுற்றுலாவில் சிறப்பு அங்கமாக மலாக்காச் செட்டிகள்
வாழும் வீடமைப்புப் பகுதி ஒன்றுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். இதன்வழி, உருமாறி
இருக்கும் தமிழர்களின் அடையாளத்தை அறிந்து க�ொண்டனர். மேலும், அவர்களின் பின்னணி,
தற்போது அவர்கள் பேசும் ம�ொழி, பண்பாடு, சமய நம்பிக்கை ஆகியவற்றை அறிந்து க�ொண்டனர்.

2.0 முடிவு

இவ்வாறான நடவடிக்கைள் த�ொடர்ந்து வரும் காலங்களிலும் ஏற்பாடு செய்யப்படும். எனவே,
உறுப்பினர்கள் அனைவரும் கழகத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவார்கள் என
எதிர்பார்க்கின்றோம். நன்றி.

èM¡அறிக்கை தயாரித்தவர், 30.10.20

(கவின் த/பெ செவ்வினியன்)
செயலாளர்
தாமான் மாவார் இடைநிலைப்பள்ளி
மலாக்கா

èõùˆF™ ªè£œè 5. அறிக்கை தயாரித்தவர்
(கைய�ொப்பம், பெயர், பதவி, கழகம், பள்ளி)
1. தலைப்பு (கழகத்தின் பெயர், பள்ளி/இயக்கம், ஆண்டு)
2. கழகத்தின் முன்னுரை 6. நாள்
3. நிகழ்ச்சிகள் - (ந�ோக்கம், பங்கேற்பாளர்கள் பயன்)
4. முடிவுரை - கழகத்தின் வெற்றி/ எதிர்பார்ப்பு

178

1 த�ொகுதி 18

உமது பள்ளியின் வரலாற்றுக் கழகத்தின் நடவடிக்கைகள் குறித்துக் குழுவில்
கலந்துரையாடி எழுதுக.

2

கலந்துரையாடிய நடவடிக்கைகளைப் பயன்படுத்தி 250 ச�ொற்களில் ஆண்டறிக்கை
ஒன்றனை எழுதுக.

3

குறிப்புகளைப் பயன்படுத்தி 250 ச�ொற்களில் ஆண்டறிக்கை ஒன்றை எழுதுக.

பத்துமலை இடைநிலைப்பள்ளி இயற்கை விரும்பிகள் கழகம்

முன்னுரை முடிவுரை

நடவடிக்கைகள் அறிக்கை தயாரித்தவர்

- புதிர்ப் ப�ோட்டி நாள்

- வனத்தடப் பயணம்

- துப்புரவுப் பணி

- பள்ளி அளவிலான விழிப்புணர்வு முகாம்

õ÷Šð´ˆ¶î™

உமது பள்ளி ஆய்வுக் கழகம் ஒன்றன் செயலாளராகப் ப�ொறுப்பேற்று இருக்கிறீர். செயலாளர்
என்ற முறையில் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நடவடிக்கைகளைத் த�ொகுத்து 250
ச�ொற்களில் ஆண்டறிக்கை ஒன்றைத் தயார் செய்க.

°¬øc‚è™

கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்து விவரித்து எழுதுக.

எ.கா: ந�ோக்கம்:
- மாணவர்களின் எழுத்தாற்றலை வெளிக்கொணர்வது.
நடவடிக்கை 1 பங்கெடுத்தவர்கள்:
கட்டுரை எழுதும் ப�ோட்டி - மாணவர் எண்ணிக்கை ம�ொத்தம் 25 பேர்
பரிசு:
நடவடிக்கை 2 - முதல் ஐந்து ப�ோட்டியாளர்கள்.
நடவடிக்கை 3

179

த�ொகுதி 18 ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

மரபுத்தொடர்

வெள்ளிடைமலை - மிகவும் வெளிப்படையாகத் தெரிவது / தெளிவாகப் புலனாவது
இனிப்புக் காட்டுதல் - ஆசை வார்த்தை கூறுதல்
ஒத்துப் பாடுதல் - பிறர் கூறுவதற்கெல்லாம் ஆம�ோதித்தல்
நெளிவு சுளிவு - நுணுக்கங்கள் / யுத்தி
ஓய்வு ஒழிச்சல் - மிகக் குறைந்த நேர ஓய்வு

1

வாசிப்புப் பகுதியிலுள்ள மரபுத்தொடர்களை அடையாளம் காண்க.

இளவேந்தன் இன்று நாடு ப�ோற்றும் ஓவியர். மலேசிய மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக
இளவேந்தன் விளங்கினார். இவர் சிறு வயது முதல் ஓவியத் துறையில் சிறந்து விளங்கினார் என்பது
வெள்ளிடை மலை. ஆனால், இவரிடம் பலர் பல வேளைகளில் ஓவியத் துறையைக் காட்டிலும்
அறிவியல் துறை நல்ல வேலை வாய்ப்பைக் க�ொண்டுள்ளது என ஆசை வார்த்தை கூறி இனிப்புக்
காட்டினர். ஆனால், பிறர் கூறுவதை எல்லாம் கேட்டு ஏற்றுக் க�ொண்டு ஒத்துப் பாடுகின்ற குணம்
இளவேந்தனிடம் இல்லை. ஆகையால், தாம் விரும்பிய ஓவியத் துறையில் சிறந்து விளங்கும்
வண்ணம் த�ொடர்ந்து ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தார். ஓவியத் துறையில் உள்ள எல்லா நெளிவு
சுளிவுகளையும் அறிந்துக�ொண்டு, பல நுணுக்கங்களை அறிந்தவராக இன்று நாடு ப�ோற்றும் சிறந்த
ஓவியராக விளங்குகிறார்.

23

மேலே க�ொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர்களில் மேற்கண்ட ஐந்து மரபுத்தொடர்களையும் ப�ொருள்
ஒன்றனைத் தெரிவு செய்து அதற்கேற்ற சூழல் விளங்கும்படி வாக்கியம் அமைத்திடுக.
அமைத்துப் பாகமேற்று வகுப்பில் நடித்துக்
காட்டுக.

õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™

மேற்கண்ட ஐந்து மரபுத்தொடர்களில் மரபுத்தொடர்களுக்கு ஏற்ற ப�ொருள் எழுதுக.
ஏதேனும் இரண்டிற்குச் சூழல் எழுதிடுக.

4.6.5 ஐந்தாம் படிவத்திற்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் ப�ொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

180

19 பயணம�ோ பயணம்

ð£ì‹ 1 எழில்மிகு கிழக்கு மலேசியா

கீழ்க்காணும் சூழலின் வருணனையைச்
செவிமடுத்து நண்பர�ோடு கலந்துரையாடுக.

சபா என்றவுடன் உங்கள் நினைவுக்கு முதலில் வருவதென்ன? ஆம், நிச்சயம் உங்கள் நினைவுக்கு
விண்ணைத் த�ொடும் கினபாலுவின் மலை முகடு வந்து ப�ோயிருக்கும் என்பதில் வியப்பில்லை. மாறாக,
இயற்கை அழகினாலும் பெரும்புகழ் பெற்றுத் திகழ்கின்றது. இந்த இயற்கை வனப்பை அள்ளித் தரும்
தீவுகள் பல சபாவில் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? சபாவைத் ‘தென்றல் தவழும் மாநிலம்’
என்று அழைப்பர். அதற்குக் காரணமே அதன் அழகிய தீவுகள்தாம். அப்படிய�ொரு தீவுக்கு உங்களை
அழைத்துச் செல்லவிருக்கின்றேன். தயாராக இருக்கிறீர்களா?

மலேசியாவில் அமைந்துள்ள கடல் சூழ்ந்த தீவுகளுள் ஒன்று சிபாடான் தீவு. சபாவின் கிழக்கே
அமைந்துள்ள இத்தீவு 600 மீட்டர் உயரத்தைக் க�ொண்டிருக்கிறது. ஆழ்கடல் நீந்தலுக்கு உலகப்
புகழ்பெற்ற தீவாகவும் இது திகழ்கின்றது.

எங்கள் குழுவினர், கடற்கரையிலிருந்து சிறு இயந்திரப் படகில் ஆழ்கடல் நீந்தலுக்குப் பயணப்பட்டோம்.
கடல்நீரைக் கிழித்துக்கொண்டு படகு இலக்கை ந�ோக்கிப் பயணித்தது. இருமருங்கிலும் கடலின் இயற்கைக்
காட்சி மனத்தை அள்ளிச் சென்றது. திரும்பும் திசையெல்லாம் தெளிந்த நீரும் பச்சை உடுத்திய மரங்களும்
பசுமைத் த�ோற்றமளித்தன. நீலம் உடுத்திய வானம் கடலில் வீழ்ந்துவிட்டத�ோ எனும் பிரமிப்பு.

எங்கள் படகைப் ப�ோன்றே இன்னும் சில படகுகளும் எங்கள் இலக்கை ந�ோக்கி வந்து க�ொண்டும்
சென்று க�ொண்டுமிருந்தன. மீன்களுக்கு உணவாக ர�ொட்டிகள் தயாராக இருந்தன. பயணத்தின் ஊடே
கையை நீரில் துழாவியபடியே செல்வது இன்பமாக இருந்தது. இலக்கை அடைந்ததும் முதலில் தண்ணீரில்
குதித்தவன் நான்தான்!

தகுந்த முன்னேற்பாடுகளுடன் சென்றதால், முதலில் ஆழ்கடலில் நீந்தி மூழ்கினேன். அடடா! என்னே
விந்தை! அதன் எழிலை அள்ளிப் பருகுகினேன். மெய்மறந்து கடலுக்குள் உலா வரத் த�ொடங்கினேன்.

அசைந்து க�ொண்டிருக்கும் கடல் பாசிகள், கடல் சங்குகள், பவளப்பாறைகள், முத்துச்சிப்பிகள்,
விதவிதமான சங்குகள், மீன்கள் உள்ளிட்டவையைக் கண்முன் காணமுடிந்தது. பவளப்பாறைகளின்
அழகு தனியழகு! அவை இறைவன் தீட்டிய வண்ணக் கலவைகள். இயற்கை அன்னை முக்கால் பகுதி
நீரால் நிரம்பி இருப்பதுப�ோல், தன்னழகின் முக்கால் பகுதியையும் கடலுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்
என்பதும் முற்றிலும் உண்மை.

மீன்கள�ோடு ப�ோட்டியிட்டு நீந்துவது புதிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
கடல்பாசிகளையும் பவளப்பாறைகளையும் கைகளால் த�ொடுவது குழந்தையைத் தழுவுவதுப�ோன்ற
உணர்வினை ஊட்டியது. ஆழ்கடல் எத்துணை அழகு என்பதைச் ச�ொற்களால் விவரித்துச் ச�ொல்ல இயலாது.
ஆழ்கடலில் அதிசயச் சுரங்கமே புதைந்து கிடக்கின்றது என்பதை இப்பயணம் எடுத்து உணர்த்தியது.

1.3.11 சூழலை வருணனை செய்வர்.

181

த�ொகுதி 19 1

சூழலின் வருணனையை விவரித்துக் கூறுக.

2

த�ொடர்வண்டிப் பயணம் மனமகிழ்வு
தரவல்லது. அண்மையில் த�ொடர்வண்டியில்
பயணம் செய்ய தலைநகரில் அமைந்துள்ள
த�ொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கிறீர்.
அச்சூழலை வருணனை செய்க.
க�ொடுக்கப்பட்ட படங்களைத் துணையாகக்
க�ொள்க.

3

விமான நிலையச் சூழலை வருணனை செய்க.
குறிப்புகளைத் துணையாகக் க�ொள்க.

பயணிகள் கூட்டங்கூட்டமாக இருத்தல்
விமானப் பயண அறிவிப்புகள்
பெரிய பெட்டிகள், துணிப் பைகள் பிற ப�ொதிகள்
பயணப் பரபரப்பு
விமானங்கள் தரையிறங்கும் புறப்படும் காட்சி

õ÷Šð´ˆ¶î™

மாலை நேரத்தில் நண்பர்கள�ோடு மலையேறச்
செல்கிறீர்கள். அச்சூழலை வருணனை செய்க.

°¬øc‚è™

பினாங்கிற்கு மிதவைப் படகில் பயணம் செய்கின்றீர்.
அச்சூழலை வருணனை செய்க. குறிப்புகளைத்
துணைக�ொள்க.

கடல் காட்சி
மக்கள் கூட்டம்
வாகனம்

182

ð£ì‹ 2 ப�ோக்குவரத்து இடையூறுகள் த�ொகுதி 19

அறிக்கையை ம�ௌனமாக வாசித்திடுக.

இனியனின் வாழ்விடத்தில் இரவு நேரத்தில் சட்ட விர�ோதப் பந்தயம் நடைபெற்று வருகின்றது. இதனால்,
அங்கு வாழ்கின்ற மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேர்ந்தது. அதன் த�ொடர்பாக இனியன்
காவல் நிலையத்திற்கு முறையீட்டு அறிக்கை ஒன்றனை எழுதினார்.

தாமான் இந்திரா மக்கோத்தா குடியிருப்போர் சங்கம்
சட்ட விர�ோதப் பந்தயத்தால் ஏற்படும் ப�ோக்குவரத்து இடையூறுகள்

காவல்துறை தலைமை அதிகாரி
குவாந்தான் மாவட்டக் காவல்துறை
25604 குவாந்தான்
பகாங்
1.0 வசிப்பிடப் பின்னணி

எங்கள் குடியிருப்புப் பகுதி இந்திரா மக்கோத்தா பட்டணத்தைய�ொட்டி அமைந்துள்ளது.
இக்குடியிருப்புப் பகுதியில் 300 வீடுகள் உள்ளன. எங்கள் குடியிருப்புப் பகுதியின்
அருகில் புதிதாகச் சாலை ஒன்று நிருமாணிக்கப்பட்டு வருகின்றது. அச்சாலையில்
இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து சட்ட விர�ோதமாக இன்னுந்து (motosikal) பந்தயத்தில்
ஈடுபட்டு வருகின்ற செய்தியைத் தங்கள் கவனத்திற்குக் க�ொண்டு வரவே இம்முறையீட்டு
அறிக்கையை எழுதுகிறேன்.
2.0 சட்ட விர�ோதப் பந்தயம்
ஆரம்பக் கட்டத்தில் இளைஞர்கள் சிலர் சாலைய�ோரத்தில் ஒன்றுகூடுவதை வழக்கமாகக்
க�ொண்டிருந்தனர். பின்னாளில், தம்தம் இன்னுந்துகளை எடுத்துவந்து பழுதுபார்த்த வண்ணம்
இருந்தனர். அதுவரையில் குடியிருப்புவாசிகளுக்கு எவ்விதச் சிக்கலும் எழவில்லை. கடந்த
இரண்டு வாரங்களாகச் சிறிய அளவில் த�ொடங்கிய பந்தயம், இப்போது பெருமளவில் நடந்து
வருகின்றது. இரவு நேரங்களிலே பெரும்பாலும் இவர்களது பந்தயங்கள் நடக்கின்றன.
வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இது
ப�ோக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக அமைகிறது.
3.0 ஏற்படும் பாதிப்பு
சட்ட விர�ோதப் பந்தயத்தில் கலந்து க�ொள்வதால் சாலையில் பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இவ்விபத்துகள் அவர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, மாறாகப் ப�ொதுமக்களுக்கும்

2.1.10 அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

183

த�ொகுதி 19 ஏற்பட்டிருக்கின்றன. இவ்விபத்துகள் குறித்த புகார்கள் தங்கள் காவல்துறை பதிவில்
இருக்கின்றன. இச்சாலை விபத்துகள் பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி எங்களை
மீளாத்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதை உங்கள் கவனத்திற்குக் க�ொண்டுவர விழைகிற�ோம்.

4.0 உடனடித் தீர்வை வேண்டுகிற�ோம்
இச்சிக்கலிலிருந்து உடனடியாக விடுபட உங்கள் உதவியை நாடியுள்ளோம். ஒவ்வொரு
நாளும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட நேரிடுகின்றமையால், காவல்துறை உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிலைமை கட்டுக்கடங்காமல்
ப�ோய்விடுவதற்குள் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பாதுகாப்புக்கு உற்றத�ோர் ஏற்பாடு செய்ய
வேண்டுமாய்த் தாமான் இந்திரா மக்கோத்தா குடியிருப்போர் சங்கச் சார்பில் விழைகிறேன்.

நன்றி, வணக்கம்.

அறிக்கை தயாரித்தவர், 06.11.20

è£. ÞQò¡

(இனியன் காளியப்பன்)
செயலாளர்
தாமான் இந்திரா மக்கோத்தா குடியிருப்போர் சங்கம்
எண் 6, ஐஎம் சாலை 6,
தாமான் இந்திரா மக்கோத்தா,
25604 குவாந்தான்.

1

அறிக்கையிலுள்ள லகர, ளகர, ழகர, ணகர, நகர, னகர, ரகர, றகரச் ச�ொற்களை உச்சரித்துப்
பட்டியலிடுக.

2

பட்டியலிட்ட ச�ொற்களைச் சரியான த�ொனி, உச்சரிப்புடன் உரக்க வாசித்துக் காட்டுக.

3

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
உரக்க வாசித்திடுக.

184

õ÷Šð´ˆ¶î™ த�ொகுதி 19

அறிக்கையைச் சரியான வேகம், த�ொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசித்து ஒலிப்பதிவு செய்க; செவிமடுத்திடுக.

சுல்தான் அபு பாக்கார் இடைநிலைப்பள்ளி வரலாற்றுக் கழகத்தின்
தலைமைத்துவ முகாம் அறிக்கை

சுல்தான் அபு பாக்கார் இடைநிலைப்பள்ளியின் வரலாற்றுக் கழகம் மார்ச் திங்கள் 19ஆம் நாள்
த�ொடங்கி 21ஆம் நாள் வரையில் பகாங், பெந்தோங் நகரில் அமைந்துள்ள டூசுன் ஏக�ோ ரிச�ோட்டுக்கு
(Dusun Eco Resort) மூன்று நாள் தலைமைத்துவ முகாம் ஒன்றனை ஏற்பாடு செய்திருந்தது. ஐந்து
ஆசிரியர்களும் 40 மாணவர்களும் இம்முகாமில் கலந்து க�ொண்டனர்.
1.0 பதிவு
சரியாகப் பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் பதிவு நிறைவுற்றது. மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள்
பயிற்றுநர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். அந்நேரம் முதற்கொண்டு முகாமை அவர்கள்
வழிநடத்தத் த�ொடங்கினர். முகாமுக்கான கட்டளைகள் வழங்கப்பட்டன. நாங்கள் நான்கு குழுக்களாகப்
பிரிக்கப்பட்டோம்.
2.0 இறுக்கத் தளர்வு நடவடிக்கை (Ice Breaking Activity)
முகாமின் முதல் நடவடிக்கையாக இறுக்கத் தளர்வு நடவடிக்கை நடத்தப்பட்டது. நாங்கள் முன்னரே
அறிமுகமான ப�ோதிலும் இறுக்கத் தளர்வு நடவடிக்கை எங்களை மேலும் நன்கு புரிந்துக�ொள்ள
பேருதவியாக அமைந்தது. இந்நடவடிக்கையின்வழி எங்களது பலமும் பலவீனமும் நன்கு புலப்பட்டன.
3.0 குழு பிரித்தலும் பெயர் வைத்தலும்
நான்கு குழுக்களாக இறுக்கத் தளர்வு நடவடிக்கையில் கலந்துக�ொண்ட எங்களை ஐந்து குழுக்களாகப்
பிரித்தனர். குழுத் தலைவர்களை நியமிக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. குழுத் தலைவரை நியமித்தப்பின்
வட்டமாக அனைவரும் குழுவில் அமர்ந்து அடுத்த நடவடிக்கையாகக் குழுவுக்கான பெயரையும்
சின்னத்தையும் முடிவு செய்தோம். மேலும், குழுவுக்கான உற்சாக முழக்கம் ஒன்றையும் உருவாக்கின�ோம்.

°¬øc‚è™

இரு வெவ்வேறு வகையான த�ொனியில் வாசித்துக் காட்டுக.

ப�ொதுப் ப�ோக்குவரத்துப் பயன்பாடு பல்வேறு நன்மைகளை அளிக்கவல்லது என்பதை நீங்கள்
அறிவீர்களா? ப�ொதுப் ப�ோக்குவரத்தைப் பயன்படுத்துவதன்வழி ப�ோக்குவரத்துச் செலவைப் பேரளவு
குறைக்கலாம். மேலும், சாலை நெரிசலைத் தவிர்க்கவும் ப�ொதுப் ப�ோக்குவரத்து பெருந்துணையாக
அமைகிறது. சாலை நெரிசலால் ஏற்படும் மனவுளைச்சலிலிருந்து விடுபடலாம்.

185

ð£ì‹ 3

நேரலை வருணனையை வாசித்து,
வருணனைக் காட்சிகளை
இணையராகப் பகிர்ந்து க�ொள்க.

த�ொகுதி 19 `வெற்றிவேல் முருகனுக்கு... அர�ோகரா
வள்ளி தெய்வானை மணாளனுக்கு...
அர�ோகரா’

நேயர்களே!

பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூசத்
திருவிழாவின் நேரலையில் என்னோடு
இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
திருமுருகனின் திருவருள் நிறைவாய்க் கிடைத்திட
அவன் திருத்தாள் வணங்கிப் பணிகின்றேன்.
பத்துமலைத் திருத்தலம் தைப்பூசத்திற்குப்
பெயர்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று என்பதை
ஊர்அறியும்;உலகறியும்.தைப்பூசத் திருநாளான
இன்றும் திருவிழாக் க�ோலம் பூண்டுள்ளது
பத்துமலைத் திருத்தலம். குன்றுத�ோறும்
குடியிருக்கும் குமரன், வெள்ளித்தேரில் உலாவரும்
காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம்கண்
முன்னே அரங்கேறிக் க�ொண்டிருக்கின்றது.

திருக்கோயிலின் 272 படிகளில் ஏறி மேல்தலத்திற்குச் செல்லும் அருளாளர்களின் கூட்டம்,
படிகள் இருப்பதையே மறைத்திருக்கிறது. மக்கள் தலையா? கடல் அலையா? என அறிய முடியாத
கூட்டம் குழுமி வழிகிறது. சுமார் 14 இலட்சம் மக்கள் கூடியிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
இந்துக்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்கு ஒவ்வோர் ஆண்டும் கூடும் இத்திருத்தலம்
இவ்வாண்டு மேலும் பல ப�ொலிவுகள் பெற்றொளிர்வதைக் காண முடிகின்றது. நம்மவர்கள�ோடு பிற
இனத்தவர்களும் இணைந்திருக்கும் காட்சி மலைநாட்டின் பல்வகைமையைப் பறைசாற்றுகின்றது.
நம் நாட்டினர�ோடு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகையும் இவ்வாண்டு அதிகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.

பால்காவடி, பன்னீர்க்காவடி, மலர்க்காவடி என வண்ணக் காவடிகளின் அணிவரிசை
அடியவர்களின் மனத்தை அள்ளிச் செல்லும் தன்மையில் மிகுந்த வேலைப்பாட்டுடன்
அமைக்கப்பட்டுள்ளன. அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணமாக மலர்க்காவடிகள் மயில்
இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு மயில்வாகனனின் பேரருள் வேண்டி மலையேறி வருகின்றன.
கரும்புத் த�ொட்டில் கட்டி, குறிஞ்சிக் குமரனுக்குக் காணிக்கை செலுத்த வந்து க�ொண்டிருக்கிறார்கள்
வாழ்விணையர் இருவர்.

3.4.32 250 ச�ொற்களில் வருணனைக் கட்டுரை எழுதுவர்.

186

ஆங்காங்கே மக்களின் தாகம் தீர்க்க த�ொகுதி 19
அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்ப் பந்தல்களில்
மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
பக்கத்தில் அமைந்துள்ள சிற்றங்காடிகளில்
விற்கப்படும் இனிப்புப் பண்டங்களையும்
உணவுப் ப�ொட்டலங்களையும் வாங்கிடும்
மக்கள் அங்குமிங்கும் அலைந்த வண்ணம்
இருக்கின்றார்கள். விளையாட்டுப் ப�ொருள்களை
விற்கும் சிற்றங்காடியில் மழலையர் கூட்டத்தைக்
காண முடிகின்றது. அவர்கள் கரங்களில்
பலவிதமான விளையாட்டுப் ப�ொருள்கள்
இருக்கின்றன.
நேயர்களே!
இப்போதைக்கு இத்துடன் விடைபெறுகின்றேன்.
விரைவில் அடுத்துச் சந்திப்போம். நன்றி.

1

கட்டுரையிலுள்ள வருணனைத் த�ொடர்களை அடையாளம் கண்டு எழுதுக.

2

தாவரவியல் பூங்காத் தடக்காட்சிகளைத் துணையாகக் க�ொண்டு 250 ச�ொற்களில் வருணனைக்
கட்டுரை ஒன்றனை எழுதுக.

187

த�ொகுதி 19 3

ஷா ஆலாமிலுள்ள நுட்பவியல் பூங்காவின் (Taman ICT) இரவுக்காட்சியை
வருணித்து 250 ச�ொற்களில் வருணனைக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

புத்ராஜெயாவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சிக்குச் செல்கிறீர். அம்மலர்
கண்காட்சியை வருணித்து 250 ச�ொற்களில் வருணனைக் கட்டுரை ஒன்றனை
எழுதுக.

°¬øc‚è™

சிம்ஃபெனி நீரூற்றுக் காட்சி (Symphony Fountain Show) காண�ொலியில்
வழங்கப்பட்டுள்ளது. அக்காட்சியைக் கண்டு 100 ச�ொற்களில் வருணனைக்
கட்டுரை ஒன்றனை எழுதுக. குறிப்புகளைத் துணையாகக் க�ொள்க.

குறிப்பு :
நீரூற்றுக் காட்சி
10,000 அடி பரப்பளவு - சிம்ஃபெனி ஏரி
ஒளியும் இசையும் க�ொண்ட 380 வகையிலான நீர் அமைப்பு
பகல், இரவு த�ோற்றங்கள்; இரவு நேர வண்ண வேலைப்பாடு நனிசிறப்பு

188

ð£ì‹ 4 இலக்கணம்

த�ொகாநிலைத் த�ொடரில் வினைமுற்றுத்தொடர்; இடைச்சொற்றொடர்

த�ொகாநிலைத்தொடர்கள் என்றால் என்ன? த�ொகுதி 149
• ச�ொற்றொடரில் உருபுகள�ோ ச�ொற்கள�ோ மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள்

தருமாயின் த�ொகாநிலைத்தொடர் எனப்படும்.

• த�ொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும். அவற்றுள் வினைமுற்றுத்தொடர் மற்றும்
இடைச்சொற்றொடர் ஆகியவை உள்ளடங்கும்.

• வினைமுற்றுத்தொடர் (எ.கா: அழைத்தனர் உற்றார்)

• இடைச்சொற்றொடர் (எ.கா: மற்றொன்று, அவன் தானே?)

வினைமுற்றுத்தொடர்:

ஒரு த�ொடர் எழுவாயில் த�ொடங்கி வினைமுற்றைக் க�ொண்டு முடியுமென்பது உங்களுக்குத் தெரியும்.
வினைமுற்று, த�ொடருக்கு முன்வந்து எழுவாயில் முடியுமென்றால் அதனை வினைமுற்றுத்தொடர்

என்று அழைக்கிற�ோம்.

எ.க ா: 1. அழைத்தனர் உற்றார்

இவ ்வாக்கியத்தில் ‘அழைத்தனர்’ என்னும் வினைக்குக் காரணமான பெயர் ‘உற்றார்’. எனவே,
உற்றார் என்பது இவ்வாக்கியத்தின் எழுவாய். உற்றார் செய்த செயலைக் குறிப்பிடும் வினைச்சொல்
‘அழைத்தனர்’ என்பது. வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில்

இடம்பெற்று ஆறு வகைப் பெயரையும் க�ொண்டு முடியும். இது வினைமுற்றுத்தொடர் எனப்படும்.

இடைச்சொற்றொடர்:

இடைச்சொல் என்பது, பெயரும் வினையும் ப�ோலத் தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது; பெயரையும்
வினையையும் சார்ந்து வரும் ச�ொல்லாகும்.



எ.க ா: 1. மற்றொன்று 2. அவன் தானே?

1

வினைமுற்றுத்தொடரையும் இடைச்சொற்றொடரையும் வாசித்து அறிக. குழுவில் கலந்துரையாடுக.

5.7.9 த�ொகாநிலைத் த�ொடரில் வினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர் ஆகியவற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

189

2

ச�ொற்றொடர்களை வினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர் என வகைப்படுத்துக.

த�ொகுதி 19 அழைத்தனர் உற்றார் கூவின குயில்கள்
மற்றொன்று ச�ோவெனப் பெய்தது
அவன் தானே? ஓங்கியது கரம்

3

மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது வினைமுற்றுத்தொடர் அல்ல?

A ஆடின மயில்கள் B மலர்ந்த மலர்கள்

C குவிந்தன இதழ்கள் D கரங்கள் க�ொடுத்தன

2. சரியான இணையைத் தெரிவு செய்க.

A அவன் தானே - வினைமுற்றுத்தொடர்

B அழைத்தனர் உற்றார் - இடைச்சொற்றொடர்

C சிரித்தனர் மக்கள் - வினைமுற்றுத்தொடர்

D ஊர் அழுதது - வினைமுற்றுத்தொடர்

3. கீழ்க்காண்பனவற்றுள் எது இடைச்சொற்றொடர்?

A சேவல் கூவியது B மற்று என்னகுறை

C சாலப் பேசினான் D கண்ணா வா!

õ÷Šð´ˆ¶î™

பின்வரும் த�ொடர்களின் வகையை எழுதி சிறு விளக்கம் தருக.
1. சிவந்தன கண்கள் 2. மற்று என்னை ஆள்க

°¬øc‚è™

வினைமுற்றுத்தொடர் ஐந்தும் இடைச்சொற்றொடர் ஐந்தும் எழுதுக.
190

ð£ì‹ 20 கவின்மிகு மலேசியா
1 சுற்றுலாத் தலங்கள்

வரைபடத்தை வாசித்திடுக.

 கேமரன் மலை  தாமான் நெகாரா

 செஞும் மலை  சிராத்திங் ஓய்விடம்

 ரிம்பா பார்க்

 நீர்வீழ்ச்சி

 பிரெசர் மலை  குவாந்தான்
 கெந்திங்
மலை  சுல்தான் அமாட் சா
விமான நிலையம்
 சின்னி ஏரி
 பெரா ஏரி

 பெக்கான் அருங்காட்சியகம்

 குவாலா கண்டா  திய�ோமான் தீவு
யானைகள்
சரணாலயம்

 ர�ொம்பின் தேசியப் பூங்கா

பகாங் மாநில அமைவிடங்கள்

1

வரைபடத்தை உற்றாய்ந்து அதிலுள்ள தகவல்களைக் குழுவில் கலந்துரையாடுக.

1.5.5 வரைபடத்திலுள்ள தகவல்களைய�ொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.

191

2

தகவல்களைய�ொட்டிக் கருத்துரைத்து முடிவு கூறுக.

3

கீழ்க்காணும் வரைபடத்தை உற்றாய்ந்து அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் கருத்துரைத்திடுக;
முடிவு கூறுக.

 ஹெந்தியான் தீவு  ரெடாங் தீவு
 லதா தெம்பாக்கா
த�ொகுதி 20 அருவி

 சுல்தான் மாமூட்  காபாஸ் தீவு
விமான நிலையம்

 கெஞ்ஞீர் அணை  கெலுலுட் கடற்கரை

 ரந்தாவ் அபாங் (கடலாமை)

 செகாயு அருவி

 தேசியப் பூங்கா

 சுங்கை செரலாக் அருவி  தெங்கோல் தீவு

 தஞ்சோங் ஜாரா

 கெர்தே விமான நிலையம்

திரங்கானு மாநில அமைவிடங்கள்
192

õ÷Šð´ˆ¶î™

பின்வரும் உரையாடலில் நீர் வேந்தன் இடத்தில் இருந்தால் என்ன முடிவெடுப்பீரெனக் கூறுக.

அப்பா: வேந்தா! இங்கே வா.
வேந்தன்: இத�ோ வந்தேன் அப்பா.
அப்பா: அத�ோ அந்த மேசை மீது இரண்டு வரைபடங்கள் உள்ளன. நீயும் உன் தம்பிகளும்

கலந்துரையாடி விடுமுறைக்கு குடும்பத்தோடு எங்கே சுற்றுலா மேற்கொள்ளலாமென
முடிவு எடுங்கள்.

 பாசீர் பஜ்ஜாங் கடற்கரை தஞ்சோங் பத்து தபீர் த�ொகுதி 20
 சகுரரணங்காுல யம் தெலுக் டாலாம் பாசீர் பங்லீமா அபு

தெலுக் கெர்மா

 ஆயர் பாத்தாங் பாசிர் மாஸ் பத்து நீசான்
விமான நிலையம் பாசீர் பஜ்ஜாங்
 ரெங்கீஸ் தீவு
 ஜுவாரா கிராமம்
 காஜாங் மலை

கம்பிங் குகை

 புக்கிட் சிராவ்

 நிப்பா கிராமம் பெர்ஹெந்தியான்

 மூகுட் கிராமம் கெச்சில் தீவு பத்து பெட்டி
 மூகுட் அருவி

பாசீர் கெராஞ்சி

திய�ோமான் தீவு அமைவிடங்கள் பெர்ஹெந்தியான் கெச்சில் தீவு அமைவிடங்கள்

°¬øc‚è™

திய�ோமான் தீவு குறித்துக் கருத்துரைத்திடுக. மேற்கண்ட வரைபடத்தைத் துணையாகக் க�ொள்க.

193

த�ொகுதி 20 ð£ì‹ 2 திரங்கானுவில் லண்டன்

ம�ௌனமாக வாசித்துக் கருத்தறிக.

பாலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களில்
எத்தனை பேர் பாலத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள்?
பாலம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது
பினாங்குப் பாலமாகத்தான் இருக்கும். இல்லையேல்,
சிறுவயதில் நீங்கள் பாடிய குழந்தைப் பாடலிலுள்ள
லண்டன் நகரிலுள்ள பாலம் நினைவுக்கு வரலாம்.
லண்டன் பாலம் என்றவுடன் நம் நினைவுக்கு வரும்
மற்றொன்று அப்பாலம் திறந்து மூடும் காட்சியே
ஆகும். அந்தப் பாலத்தின் அழகை உங்களில்
எத்தனை பேர் கண்டு மகிழ்ந்திருக்கிறீர்கள்?

அ த்தகை ய ஒ ரு ப ா ல த் தி ன்
அழகைத்தான் நாம் காணப் ப�ோகிற�ோம்.
அது த�ொங்கு பாலம் என்று பெயர்
க�ொண்டது. பகலில் பார்ப்பதைக்
காட்டிலும் இரவில் அப்பாலத்தின் அழகே
தனிதான். கப்பல்கள் கடந்து செல்ல
இப்பாலம் வகை செய்கிறதென்பது
குறிப்பிடத்தக்கதாகும். கப்பல் கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தென்கிழக்காசியாவின்
முதல் பாலமாக, கம்பீரமாக வீற்றிருக்கிறது. கப்பல்கள் கடந்து செல்லும் காட்சி மிக இரசிக்கத்தக்கதாக
அமைந்துள்ளது. திறப்பதற்கு இரண்டு நிமிடம், மூடுவதற்கு இரண்டு நிமிடமே எடுத்துக் க�ொண்ட
ப�ோதும், சாலைப் ப�ோக்குவரத்தைச் சரிசெய்யக் குறைந்தது இருபது நிமிடங்கள் ஆகிறது.

இப்பாலத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைவது பதினாறு மாடிகள் க�ொண்ட நான்கு
கட்டடங்களும் இரண்டு வான்பாலங்களுமே (skybridge) ஆகும். இவற்றின் அழகிய வேலைப்பாடுகள்
நிச்சயம் காண்பவரின் மனத்தைக் க�ொள்ளை க�ொள்வனவாகும். மேலும், இவற்றின் வண்ண
வேலைப்பாடுகள் ஒருவகை மயக்கத்தைக் க�ொடுக்க வல்லன.

வடக்கிலுள்ள வான்பாலத்தின் பதினான்காம் தளத்தில் 200 பேர்களுக்கான உயர்தர உணவகம்
ஒன்று உள்ளது. தெற்கு வான்பாலத்தில் கலை காட்சிக் கூடமும் (galeri) 200 பேர்களை உள்ளடக்கும்
ந�ோக்குத் தளமும் (anjung tinjau) உள்ளன. இந்நோக்குத் தளம்வழி சுற்றுப்பயணிகள் இப்பாலம்
அமைந்துள்ள மாநகரின் அழகைக் கண்டு மகிழலாம். அஃதே இரவு வேளையென்றால் க�ொள்ளை
அழகு நம் உள்ளத்தைக் க�ொள்ளை க�ொள்ளும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர்.

119944

பாலத்தின் இருமருங்கிலும் பாதசாரிகளுக்கு த�ொகுதி 20
நடைபாதை அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.
நீங்கள் இப்பாதையில் நடந்தபடியே பாலத்தின்
அழகையும் கடற்கரையின் அழகையும் ஒருங்கே
நுகரலாம். நீங்கள் முழுப்பாலத்தின் அழகையும்
நுகர உங்களுக்காகப் பாலத்தின் கீழ்ப்பகுதியில்
இருமருங்கிலும் தலா ஐம்பது வாகனங்கள்
நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துணைச் சிறப்புகள் அமைந்த பாலத்தைக்
காண உங்கள் உள்ளம் பேருவகை க�ொள்கிறதா? இப்பாலத்தைக் காண, அதன் அழகை, நுண்ணிய
வேலைப்பாடுகளைக் காண நீங்கள் பெரும் ப�ொருள் செலவு செய்யத் தேவையில்லை. ஏன்? ஆம்,
மாணவர்களே. அந்தப் பாலம் குவாலாத் திரங்கானுவில்தான் அமைந்துள்ளது. ஜம்பாத்தான் அங்காட்
திரங்கானு (Jambatan Angkat Terengganu) என்பதுதான் அந்தப் பாலத்தின் பெயர். மேலை நாடுகளில்
மட்டுமே அற்புதமான சுற்றுலாத் தலங்கள் இருப்பதாக எண்ணம் க�ொண்டு ஏங்குபவர் பலர் உள்ளனர்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது எத்துணை உண்மை. ஜம்பத்தான் அங்காட் திரங்கானு
ப�ோல பல மனங்கவர் சுற்றுலாத் தலங்கள் நம் நாட்டிலேயே உள்ளன. இச்சுற்றுலாத் தலங்களுக்கு
அடுத்த விடுமுறையில் குடும்பத்தோடு சென்று வரலாமே!

1 2

பனுவலிலுள்ள முக்கியத் தகவல்களைக் முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து
குறிப்பெடுத்துக் க�ொள்க. கலந்துரையாடுக.

3

பகுத்தாய்ந்த கருத்துகளைய�ொட்டி முடிவைக் கூறுக; எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

பனுவலின் முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து முடிவு கூறுக; எழுதுக.

சரவாக் செல்வோம்

ஆசியாவின் இரகசியம் என்று கருதப்படும் சரவாக் மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து
விடுபட்டு உலகப் பார்வையைத் தன்வசம் கவர்ந்து வருகின்றது. கலை, பண்பாடு, இசை, மர்மம்,
வரலாறு என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக�ொண்டே ப�ோவது நமக்கொன்றும் வியப்பில்லைதான்.
அதிலும், மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவாக் ப�ோர்னிய�ோ தீவில் அமைந்துள்ளது.

195

த�ொகுதி 20 சரவாக் பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாந்த இனத்தின் பெட்டகமான மழைக்காடுகளைச் சூழல்
மண்டலமாகக் க�ொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ் பெற்றனவாகும்.
மிகவும் த�ொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியினரின் வாழ்விடமாக
உள்ளன. இஃது அதன் மற்றொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட்,
கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் ப�ோன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

பல்வேறு இனங்களைச் சரவாக் க�ொண்டிருப்பதால் கலை கலாசாரமும் பல்வகையில்
அமைந்துள்ளன. ஙஜாட் அலு, ஙஜாட் அர�ோ, டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில்
மிகவும் புகழ்பெற்றனவாகும். வேளாண்மை இம்மாநில மக்களின் முக்கியத் த�ொழில் என்பதால்
சரவாக்கியர்கள் காவாய் பெருநாளை அறுவடைத் திருநாளாகக் க�ொண்டாடி மகிழ்கின்றனர்.
சரவாக்கியர்கள் கைவினைத் த�ொழில்களிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வகை களிமண்ணால்
அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவாக் ஜாடிகள் (Sarawak Vase) இங்கு வரும்
உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றவை. மேலும், புவா (Pua)
கைத்தறித் துணிகள் சரவாக் மக்களின் மற்றொரு சிறப்பாகும். இந்தப் புவா வகைத் துணிகளுக்குப்
பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் ப�ோன்ற இயற்கைப்
ப�ொருள்களை மூலமாகக் க�ொண்டுள்ளன. இவ்வகைத் துணிகளைத் திருவிழாக் காலத்தின் ப�ோதும்
திருமணத்தின் ப�ோதும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மூலம்: இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது

°¬øc‚è™

வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து முடிவு கூறுக.

தேசியப் பூங்கா

மழைக்காடுகளைச் சூழல் மண்டலமாகக் க�ொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப் பூங்காக்களைக்
க�ொண்ட மாநிலமாகச் சரவாக் திகழ்கின்றது. அவற்றுள் மூலு மலைத் தேசியப் பூங்கா, பக்கோ தேசியப்
பூங்கா, நியாத் தேசியப் பூங்கா, காடிங் மலைத் தேசியப் பூங்கா ஆகியவை மிகப் புகழ்பெற்றவை.
ஆண்டுத�ோறும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும்
இடங்களாக இவை விளங்குகின்றன. இந்தப் பூங்காக்கள் ஐந்நூற்றுக்கும் அதிகமான உயிரினங்களுக்கு
வாழ்விடங்களாகத் திகழ்வதாக அறியப்பட்டுள்ளது. அவற்றுள் கிப்போன், ஓராங் ஊத்தான், மான்
ப�ோன்ற விலங்குகளையும் இம்மாநிலச் சின்னமான ஹ�ொர்ன்பில் பறவைகளையும் இங்கு
அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான
ரஃப்லேசியாவும் இங்கு உள்ளன.

மூலம்: இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது

196

ð£ì‹ 3 சுற்றிப் பார்ப்போம்!

வாசித்தறிக.

ஒரு நாட்டின் வளப்பம் என்பது அந்நாட்டின் ப�ொருளியல் வளத்தைக் க�ொண்டு அடையாளம் காணலாம்.
ப�ொருளியல் வளம் க�ொண்ட நாடுகள் பெரும்பாலும் நிலைத்தன்மை பெற்றிலங்குவதும் இயல்பே.
அவ்வகையில் நாட்டின் ப�ொருளியல் வளத்திற்கு ஆண்டுத�ோறும் அள்ளி வழங்கும் ஒரு துறையாகத்
திகழ்வது சுற்றுலாத்துறை என்றால் அது மிகையன்று. நம் நாட்டிலும் சுற்றுலாத்துறை, ப�ொருளியல்
வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு வகையில் பங்களிப்பு செய்தாலும், சுற்றுலாத்துறையால் சில
சிக்கல்களையும் நாடு எதிர்நோக்கி வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, சுற்றுலா வளர்ச்சியில்
நன்மையும் தீமையும் கலந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

நன்மை

சுற்றுலாத்துறை நாட்டின் ப�ொருளியல் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக விளங்கி
வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன்

அவர்கள் நம் நாட்டில் செய்கின்ற செலவுகள் த�ொடர்ந்து அதிகரித்து வருவதாகச்
சுற்றுலாத்துறை அறிக்கை காட்டுகிறது. மேலும், இவ்வாண்டுத்
த�ொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்வழி இந்நாட்டிற்குச்

சுற்றுலா மேற்கொண்ட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 25.8
க�ோடியாகவும், அவர்களால் நாடு பெற்ற வருமானம் ரி.ம. 84.1 பில்லியன்
எனவும் அறிய முடிகின்றது. நாட்டின் ப�ொருளியல் பலத்திற்குச் சுற்றுலாத்துறை
த�ொடர்ந்து பங்காற்றி வருவதை இதன்வழி அறியலாம்.

தீமை

சுற்றுலாத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும் அதே
வேளையில், சில தீமைகளையும் விளைவிக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து
நம் நாட்டிற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள் தங்கள் பண்பாட்டையும்
உடன்கொண்டு வருகின்றனர். மேற்கத்திய பண்பாடுகள் சில கிழக்கத்திய
பண்பாட்டுக்கு முரணானவை என்பதை நாமறிவ�ோம். ப�ொது இடங்களில்
கட்டியணைத்தல், அரைகுறை ஆடை அணிதல் ப�ோன்ற செயல்கள் பார்ப்போர்
மனத்தைப் பாதிக்க வல்லவை. இவர்களின் திறந்தவெளிப் பண்பாடு நம் நாட்டு மக்களை
முகஞ்சுழிக்கச் செய்வத�ோடு இளைய�ோர்களை வழிதவறவும் வழிக�ோலச் செய்கிறது.

3.4.31 250 ச�ொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.

197

த�ொகுதி 20 1

‘நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதத்திற்குரிய
இரண்டு கருத்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்து நண்பர்கள�ோடு கலந்துரையாடி
விவாதம் செய்க.

2

‘நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பிற்கான கருத்துகள்
வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்தி, பத்தியமைப்பில் கருத்துகளை விவாதித்து எழுதுக.

நன்மைகள்
வேலை வாய்ப்புகள் பெருகும்.
நாட்டிற்குப் பேரும் புகழும் கிட்டும் / ப�ொருள் வளம் பெருகும்.
தீமைகள்
உள்நாட்டினரின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு.
சுற்றுப்பயணிகள் எனும் ப�ோர்வையில் விரும்பத்தகாதவர்கள் நுழைதல்.

3

திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி 250 ச�ொற்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால்
ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

‘வெளிநாட்டுக்குச் சுற்றுலா மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் 250
ச�ொற்களில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

°¬øc‚è™

‘சுற்றுலா செல்வதால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதக் கட்டுரைக்கான
கருத்துகளை எழுதுக.

198

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

த�ொல்காப்பியம்

ஓரறிவு இரண்டறிவு

உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் த�ொகுதி 20

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதன�ொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

- த�ொல்காப்பியர்

ஆறறிவு மூன்றறிவு

ஐந்தறிவு நான்கறிவு

ஓரறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினால் அறியும் இயல்பு உடையது. இரண்டறிவு பெற்ற உயிர்
என்பது, உடம்பினாலும் வாயினாலும் அறியும் இயல்பு உடையது. மூன்றறிவு பெற்ற உயிர் என்பது,
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறியும் இயல்பு உடையது. நான்கறிவு பெற்ற உயிர்,
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் அறியும் இயல்பு உடையது. ஐந்தறிவு
பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் செவியாலும் அறியும்
இயல்பு உடையது. ஆறறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும்
கண்ணாலும் செவியினாலும் மனத்தினாலும் அறியும் இயல்பு உடையது என மரபுகளை நேர்மை
பெற உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியுள்ளனர்.

4.3.5 ஐந்தாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

199

1

பின்வரும் பகுதியை வாசித்து, அதன் அடிப்படையில் த�ொல்காப்பியரின் உயிர்களின் பகுப்பு,
அறிவுநிலை குறித்து நண்பர்கள�ோடு கலந்துரையாடிக் குறித்துக் க�ொள்க.

உயிரிவகைப்பாடு

தனது வாழ்வியற் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப்

ப�ொருள்களைப் பற்றியும் தான் ப�ொதுவான அறிவுடையவனாக விளங்குவதே சூழலியல்

அறிவின் முதற்படியாகும். தனது சூழலில் என்னென்ன இருக்கின்றன? என்ற வினாவிற்கான

விடையை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயங்கும் அனைத்து உயிரினங்களும் அறிந்திருத்தல்

வேண்டும். இதில் விலங்குகளை ந�ோக்கும் ப�ொழுது, தமது சூழலில் இயங்கும் ப�ொருள்களில்

இவற்றை உண்ணவேண்டும், இவ்வுயிரினத்தை இம்முறையில் தாக்கி அழிக்கவேண்டும் என்னும்

நிலையில் துல்லியமான அறிவுடையனவாக விளங்குவதை அவற்றின் செயல்பாடுகள் நமக்கு

உணர்த்துகின்றன. மனிதனைப் ப�ொருத்தமட்டில் அவ்வகையில் தெளிவான அறிவுடையவனாக

த�ொகுதி 20 விளங்குகின்றானா? என்பது கேள்வியாகவே உள்ளது. பண்டைத் தமிழினம் தான் இயங்கிவரும்

சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பது த�ொல்காப்பியரின் கூற்றின்வழி

அறியலாம். மூலம் : நூல் திரு. வெள்ளையங்கிரி - எடுத்தாளப்பட்டது

2 õ÷Šð´ˆ¶î™

செய்யுளின்வழி நீங்கள் உணர்ந்த தமிழரின் அறிவுநுட்பத்தையும் உயிர்வகை பகுப்பையும்
கருத்துகளை விளக்கிக் கூறுக. த�ொல்காப்பியரின் செய்யுளின் துணைக�ொண்டு
ஆராய்ந்து விளக்குக.

°¬øc‚è™

அட்டவணையை நிறைவு செய்க.
த�ொல்காப்பியரின் அறிவு ந�ோட்டம்

அறிவுநிலை அறியும் ஆற்றல் எடுத்துக்காட்டு
த�ொடுதல் உணர்வு புல், மரம்
ஓரறிவு
ஈரறிவு
மூவறிவு
நான்கறிவு
ஐந்தறிவு
ஆறறிவு

200


Click to View FlipBook Version