தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
நேசமிகு விரிவுரையாளர் திரு. ம�ோகன் பழனியாண்டி அவர்கள்
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு (குறள்: 32)
எனும் திருக்குறளைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தும் பிறருக்கு ஓர்
எடுத்துக்காட்டாகவும் திகழும் ஐயா திரு.ம�ோகன் பழனியாண்டி
அவர்கள் கல்வித் துறையில் சுடர�ொளியாகப் பிரகாசிக்கின்றார்.
இவர்தம் வாழ்க்கை பாதையில் பல இன்னல்களையும்
சாவல்களையும் எதிர்நோக்கி பயணித்து, இன்று அனைவராலும்
ஏற்றிப் ப�ோற்றப்படும் உயரத்தில் பெருமைக்குரிய அறிவுசால்
விரிவுரையாளராக, கல்வியாளராக, தகவல் த�ொழில்நுட்பத்
துறையில் வல்லுநராக, மனித நேயமிக்கவராக, தமிழ்
உணர்வாளராக, சமய ஆர்வலராக, பண்பாளராக இப்படிப்
பரிமாணங்களில் திகழ்கின்றார்.
ஐயா திரு.ம�ோகன் பழனியாண்டி அவர்கள் 1959ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி பிறந்தார். இவருக்கு ஆறு
உடன் பிறப்புகள் உள்ளனர். இவர் 1988ஆம் ஆண்டு திருமதி செந்தமிழரசி அவர்களை
மணந்தார். இரண்டறக் கலந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் பிறந்த செல்வங்களே
அவர்களின் மூன்று ஆண் பிள்ளைகள். அம்மூவரும் இன்று தத்தம் துறைகளில்
வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர். அவர்தம் பிள்ளைகள் அனைவரும் தமிழ்க்கல்விவழி
மேன்மைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள், ஐயா.
இவரின் ஆரம்பக் கல்வி, சிலாங்கூர் பந்திங் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியில்
த�ொடங்கியது. அதுமட்டுமின்றி, இப்பள்ளி இவரின் கல்வி வெற்றிக்கும், தமிழின்பால்
உள்ள பற்றுக்கும் வித்திட்டது என்கின்றார். மேலும், இப்பள்ளியில் திரு.அந்தோனிசாமி,
திரு.வடிவேல் ப�ோன்ற ஆசிரியர்களின் வழிகாட்டல், இவரின் வாழ்க்கை சிறப்புற அமைய
உந்துசக்தியாக விளங்கியதாக நன்றியுடன் கூறுகின்றார். பின், தம் கல்வியைச் சுங்கை
மங்கிஸ் இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவம் வரை த�ொடர்ந்தார். பின்னர், படிவம்
நான்கு, ஐந்தைச் சுல்தான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளியில் மேற்கொண்டார்.
இவர் கல்வியின்பால் க�ொண்ட ஆர்வம், எஸ்.ஆர்.பி மற்றும் எஸ்.பி.எம்
அரசாங்கத் தேர்வுகளிலும் சிறப்பான தேர்ச்சிகளைப் பெற உறுதுணையாக அமைந்தது.
மேலும் இவர், ஆறாம் படிவத்தினை, தெலுக் டத்தோ இடைநிலைப்பள்ளியில்
த�ொடர்ந்தார. இவர் தம் இளமை பருவத்தில், வாழ்வின் வறுமையைப் ப�ோக்க தம்
தாயாருடன் இணைந்து த�ோட்டத்தில் வேலைகளை மேற்கொண்டார். பள்ளி
முடிந்தவுடன் ஓய்வு நேரங்களில் த�ோட்டத்தில் தம் தாயாருக்கு மாடுகளைப் பராமரிக்க,
மேய்க்க உதவினார். இவரின் தாயாரின் அன்பும் அரவணைப்பும் ஊக்கமும்தான் இன்றளவும்
இவரின் வெற்றிக்குக் காரணம் என்று பெருமையுடன் கூறுகின்றார்.
பள்ளிப் பருவத்தைச் சிறந்த தேர்ச்சிய�ோடு முடித்தவர், தம் கனவுகளைச்
சுமந்துக�ொண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பெற்றோரையும் உடன்
பிறப்புகளையும் விட்டுப் பிரியும் கவலை ஒரு புறம் இருக்க, தம் வாழ்க்கை வெற்றி
பாதையை ந�ோக்கிச் செல்ல வேண்டும் எனும் வேட்கையில், இவரின் பட்டதாரி கனவு
101
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
த�ொடங்கியது. குறிக்கோளுடன் தம் கல்வியைத் த�ொடர்ந்தார். பல்கலைக்கழகம்
இவரின் வாழ்க்கையை இனிமையாக்கியது. இனிய நண்பர்களான திரு.பாலகிருஷ்ணன்,
திரு.குணசேகரன், டத்தோ தெய்வீகன், இன்னும் சில நண்பர்களால் மேலும் வண்ண
மயமானது. அவர்கள�ோடு பழகிய தருணங்கள் என்றென்றும் நினைவைவிட்டு அகலாதவை
என்கின்றார். பல்கலைக்கழக வாழ்க்கையின் ஒவ்வொரு தடங்களும், ஐயாவிற்கு
இச்சமுதாயத்துடன் ஒற்றிணைந்து வாழும் வழிகளைக் கற்றுக்கொடுத்துத்
தன்னம்பிக்கையை வளர்க்க உதவியது என்கின்றார். பல்கலைக்கழகம், கல்வியை
மட்டுமல்லாது, தம் வாழ்க்கையை மேலும் ஒழுங்குப்படுத்தும் படிப்பினைகளையும்
தந்ததது என்கின்றார். தமிழ்ப்பேரவை நடவடிக்கைகள் தமிழுணர்வு மேல�ோங்க
கைக்கொடுத்தன. அக்கல்லூரி நாட்கள் தம் நினைவில் இன்றும் பசுமரத்தாணிப் ப�ோல
அழியாமல் உள்ளது என்கின்றார்.
திரு.ம�ோகன் ஐயா அவர்கள் 1984ஆம் ஆண்டு இறுதியில் கல்விப் பயணத்தை
முடித்தவுடன், ‘வண்டோ அகடெமி’ (Vanto Academy) எனும் தனியார் பள்ளியில் படிவம்
ஆறு மாணவர்களுக்குப் பூல�ோக ஆசிரியராக நான்கு மாதம் பணிபுரிந்தார். த�ொடர்ந்து,
1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் த�ொடங்கி 1987 ஆண்டு வரை சரவாக்கில் அமைந்துள்ள
பாலாய் ரிங்கின் அரசாங்க இடைநிலைப் பள்ளியில் பூல�ோக ஆசிரியராகப் பணியைத்
த�ொடர்ந்தார். பின்னர், பதவி உயர்வு பெற்று 1988- ஆம் ஆண்டு ரெஜாங், பிந்தாங்கோர்,
சரவாக் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (Maktab Perguruan Rejang Bintangor, Sarawak)
சமூக அறிவியல் விரிவுரையாளராகப் ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றினார். பிறகு, ஐயா
அவர்கள் 1993-ஆம் ஆண்டு த�ொடங்கி 2013 மார்ச் மாதம் வரை துன் உசேன் ஓன்
ஆசிரியர் கல்விக் கழகம், பத்து பகாட் ஜ�ொகூருக்கு (IPG Tun Hussein Onn Batu
Pahat, Johor) மாற்றப்பட்டுத் த�ொழில்நுட்பக் கல்வி விரிவுரையாளராகப் பணி
அமர்த்தப்பட்டார். சமூக அறிவியல் பிரிவின் தலைவராகவும் அங்கு நியமிக்கப்பட்டார்.
அதன்பின், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் த�ொடங்கி, ஈப்போ ஆசிரியர் கல்விக்
கழகத்தில் மூத்த விரிவுரைஞராகப் பணியாற்றுகின்றார். தகவல் த�ொழிற்நுட்பப் பிரிவில்
ஆறு ஆண்டுகளாகத் தம் பணியைச் சிறப்பாக ஆற்றிவருகின்றார். அவ்வப்போது, தமிழ்
ஆய்வில் பிரிவின் பாடங்களைப் ப�ோதித்தும் வருகின்றார். 2016ஆம் ஆண்டு முதல்
2018ஆம் ஆண்டு வரை 'எஸ் ஏழு' பிரிவு மாணவர்களுக்கு வழிகாட்டி விரிவுரையாளராக
இருந்து அவர்களுடன் பயணித்த காலங்கள் இனிமையானவை என அகம் மலருகின்றார்.
பணி ஓய்வுக்குப் பிறகு .... பயணம் த�ொடரும்..!
ஐயா அவர்கள், தமது பணி ஓய்வுக்குப் பிறகு பல திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
தம் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்ளவும் திட்டம் தீட்டியுள்ளார். தாம்
நிரம்ப கற்ற ஆன்மிக கல்வியை மக்களிடையே பரவச் செய்ய சிறந்த தளத்தை
உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
நன்றி திரு.ம�ோகன் பழனியாண்டி ஐயா அவர்களே! நல்ல இலக்கை ந�ோக்கிய தங்கள்
பயணம் வெற்றியடைய வாழ்த்துகள். நலமுடன் வளமுடன் வாழ்க. தமிழ் ஆய்வியல் பிரிவு
தங்களின் சேவையைப் ப�ோற்றிப் பாராட்டுகிறது. நன்றி, ஐயா.
நேர்காணல் & த�ொகுப்பு: அ.கல்பனா
102
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
இவர்கள் இன்னமும் வாழ்கின்றார்கள்!
துன் வீ.தி.சம்பந்தன்
எத்தனைய�ோ ஏழைகளின் அடிவயிற்றில்
இராப் பகலாய் மூண்டிருந்த நெருப்பையெல்லாம்
பத்து வெள்ளி திட்டத்தால் அணைத்த அண்ணல்
பல லட்சம் பலக�ோடி சேர்த்த செம்மல்
(இ.தங்கையா) கண்ணதாசன்
க�ோ.சா. காட்டுக்குள் - தேனீக்கள்
கூட்டுக்குள் வைத்ததைப்-
சாரங்கபாணி எனும் தமிழர் செல்வம் பாட்டுக்குள் வைத்தவன்!
தாடியில்லாத தாகூர்
தமிழ் மக்கள் வாழ்வுக்குத் தன்னைத் தந்து மீசையில்லாத பாரதி
பாரெங்கும் தமிழ்மக்கள் உயர்வு காண (கவிஞர் வாலி)
பன்னாளாய் உழைக்கின்ற பண்பு மிக்கோன்
(கவியரசு)
பாரதி காமராஜர்
ம�ோனைக் காலில் - ஆடு மேய்ப்பவனும்
முத்தமிழை நிறுத்தி - ஒருநாள் மாடு மேய்ப்பவனும்
ஆனைக் காலில் - நாலெழுத்துப் படித்து- நாளை
அடிபட்டுப் ப�ோனான் நாடு மேய்க்க வேண்டும்
ப�ோனதுப�ோல் ப�ோய்ப்
ப�ோகாதவன் ஆனான் ப�ோடு சாப்பாடு; பின்
ப�ோதி வாய்ப்பாடு! எனச்
பாவேந்தர் செய்தான் சட்டம்; அதுதான்
தமிழையும் தமிழரையும் சத்துணவுத் திட்டம்
பிறம�ொழி வெப்பம் (கவிஞர் வாலி)
பிடித்து விடாமல்
கவிதைக் குடையை
நீள விரித்து- அன்னை திரேசா
நாளும் நிழலாற்றினான்!
(கவிஞர் வாலி) மனித நேயத்திற்கே மதம்
என்பதேயன்றி
மு.வ. வேற�ொன்றும் அறியேன்
ஆய்ந்து, ஆய்ந்து பரமபிதாவே
த�ோய்ந்து, த�ோய்ந்து என்று ஒலித்த
மாய்ந்து, மாய்ந்து மாதா க�ோயில் மணிய�ோசை
தூய தமிழில்
துறை ப�ோனவர்!
வாசிக்கும் மாணவர்களால் வாடிய பயிரைக்
நேசிக்கப்பட்டவர்;
நேசிக்கும் மாணவர்களால் கண்டப�ோதெல்லாம் வாடி
வாசிக்கப் பட்டவர்.
அவற்றைத் தேற்றித் தேற்றியே
(கவிஞர் வாலி)
தேய்ந்து ப�ோன தெய்வம்.
கவிஞர் மாயவன்
103
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
மலேசிய ஊடகத் தமிழின் முன்னோடி
உதயம், இதயம் மாத இதழ்களின் முன்னாள் ஆசிரியர் எம்.துரைராஜ் அவர்கள்
அண்மையில் காலமானார். இந்நாட்டின் தமிழ் எழுத்துலகமும் தமிழ் ஊடக உலகமும்
என்றென்றும் நன்றியுடன் க�ொண்டாட வேண்டிய ஆளுமை திரு. எம்.துரைராஜ் அவர்கள்
என்றால் அது மிகையில்லை. நவம்பர் 1ஆம் நாள் 1934இல் தமிழ்நாட்டில் பிறந்த இவர்,
தமது 84ஆம் வயதில் கடந்த, ஆகஸ்ட் 24ஆம் நாள் 2018இல் மலேசியாவில் காலமானார்.
உலகில் முதன் முறையாக த�ொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி அறிக்கையை
வாசித்தவர் இவர். 1963-ஆம் ஆண்டில் மலேசியத் த�ொலைக்காட்சி தமிழ்ச் செய்தி
ஒளிபரப்பைத் த�ொடங்கியப�ோது, அதைத் த�ொகுத்து வழங்கிய பெருமைக்குரியவர் எம்.
துரைராஜ் அவர்கள். திரு.எம்.துரைராஜ் அவர்கள் மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில்
மிக மூத்த இதழாளராகவும் நீண்ட நெடிய அனுபவம் மிக்கவராகவும் வலம் வந்தவர்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் த�ோற்றுநர்களில் ஒருவராகவும் தலைவராகவும்
இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைத் துறையினரின் குறிப்பாக, அமரர் திரு.ஆதி குமணன்
அவர்களின் வழிகாட்டியாகவும் பத்திரிக்கை ஆசானாகவும் திகழ்ந்தவர்.
மலேசிய தகவல் துறையில் சேர்ந்து பணியாற்றிய இவர், மலேசியா அரசின்
சார்பில் உதயம் என்னும் தமிழ் இதழை 14 ஆண்டுகளாகத் தயாரித்து வெளியிட்டு
வந்தார். கட்டுரை, அரசியல் ஆய்வுரை, சிறுகதை என்றெல்லாம் ஏராளமான இலக்கியப்
படைப்புகளை வார்த்த இவரின் 'பாதைகளும் பயணங்களும்' எனும் 600 பக்க நூல்,
மலேசியாவிலும் தமிழகத்திலும் லண்டன் தமிழ்ச் சங்கத்திலும் ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகத்திலும் வெளியீடு கண்டுள்ளது. அது ஆங்கிலத்திலும் ம�ொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் மற்றொரு நூலான 'நினைக்கத் தெரிந்த மனமே' எனும்
நூல் மலேசிய ஆசிரியர் கல்விக் கழக மாணவர்களுக்கான பாட நூலாக உள்ளது.
அந்நூலில் சிறப்பான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த பேச்சாளருமான
இவர் தனது 84ஆம் வயதிலும் தமிழ்ப் புலனம் சார்ந்த குழுக்களில் ஆர்வமுடன்
பங்கெடுத்து, கருத்துகளைப் பகிர்ந்தும் வந்தார். பல இளம் படைப்பாளர்களுக்குத் தம்
இறுதி காலம் வரை வழிகாட்டியாய் வாழ்ந்தவர். மலேசியாவில் தமிழுக்கு இவர் ஆற்றிய
பங்களிப்பு ஈடு இணையற்றது. வாழ்க அவர் த�ொண்டு.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
104
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
நினைவுச் சாரல்
105
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு யு 9 (விரிவுரையாளர் முனைவர் சேகர் நாராயணன்)
106
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு எஸ் 5 (விரிவுரையாளர் கா.சுப்பிரமணியம் / முனைவர் ப.மதன்)
107
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு எஸ் 6 (விரிவுரையாளர் முனைவர் செ.ம�ோகன் குமார்)
108
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு எஸ் 7 (விரிவுரையாளர் ம�ோகன் பழனியாண்டி)
109
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு ஆர் 5 (விரிவுரையாளர் சு.குணசீலன்)
110
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
தமிழாய்வு பிரிவு கி.யு 4 (விரிவுரையாளர் முனைவர் வி.அருள்நாதன்)
111
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
2018இன் நினைவலைகள்
112
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
Penghargaan / நன்றி நவில்கின்றோம்!
Tuan Haji Kamarulizham Bin Hazizi
(Tuan Pengarah, IPG Kampus Ipoh)
Pn.Suraya Binti Harun
(Ketua Jabatan Bahasa, IPG Kampus Ipoh)
Dr.Sagar Narayanan
(Ketua Unit Pengajian Tamil, IPG Kampus Ipoh)
Para Pensyarah Unit Pengajian Tamil, IPG Kampus Ipoh
En.Karthigesu Letchumanan (SMK Kamunting)
Para Siswa Siswi Unit Pengajian Tamil, IPG Kampus Ipoh
தமிழ்ச்சாரலுக்கு இனிய வாழ்த்துகள்
அமரர் பிச்சை மந்திரி வீராசாமி குடும்பத்தினர் (துர�ோங், பேரா)
திருமதி கஸ்தூரிபாய் பாலுசாமி (சிம்.அம்பாட், பினாங்கு)
திரு. உதயகுமார் ராமதாஸ் (கெமஞ்சே, நெ.செம்பிலான்)
திருமதி ரெனுஷா வடிவேலு (சுங்கை பட்டாணி, கெடா)
திருமதி அன்னமேரி ரங்கசாமி (ஆயர் தாவார், பேரா)
திரு. கேசவன் சுப்பையா (சுங்கை பட்டாணி, கெடா)
திரு. சுப்ரமணியம் மாரிமுத்து (ரவாங், சிலாங்கூர்)
திரு. சுப்ரமணியம் மாரிமுத்து (சிலிம் ரீவர், பேரா)
திரு. தியாகராஜன் சுப்பையா (தைப்பிங், பேரா)
திரு. ராமு துரைராஜு (பந்தாய் ரெமிஸ், பேரா)
திரு. முனியாண்டி முனுசாமி (கூலிம், கெடா)
திரு. தமிழரசன் ராமு (பத்து காஜா, பேரா)
உள்ளன்போடு உதவி நல்கிய தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றி!
பயிற்சியாசிரியர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிப்பதற்கான
ஒரு களம் தமிழ்ச்சாரல்.
இத்தகு முயற்சிக்குத் த�ொடர்ந்து எங்கள�ோடு
கைக�ோர்த்து இருங்கள்.
தமிழ்ச்சாரலின் பயணம் இனிதே த�ொடரும்.
நன்றி. வணக்கம்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது. (குறள்: 102)
113
தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh
Autograf
114