The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-86214571, 2024-04-12 04:16:33

BAHASA TAMIL TING 5

BAHASA TAMIL TING 5

41 பொருள் வளர்க்கும் பொருளகம் குறுஞ்செய்தியைக் கருத்துணர்க. ð£ì‹ 1 பணப் பரிமாற்றம் 5 1.4.7 சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுவர். குறுஞ்செய்தி உணர்த்தும் சிக்கல்களைக் கூறுக. 1 கண்டறிந்த சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக. 2 இச்சிக்கல் நிகழ்ந்ததற்கான காரணங்கள் எவையாக இருக்கலாம்? இக்காரணங்களால் விளைந்த செயல்கள் யாவை? தெரியாதவர் வங்கி மோசடி தொடர்பான குறுஞ்செய்தி உரையாடல்


42 த� ொகுதி 5 பின்வரும் விளக்கப்படத்தை உற்று நோக்குக. வங்கியில் நிகழும் இத்தகைய சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக. 3 மலேசியத் தேசிய வங்கி உங்கள் கடனட்டை நகலெடுக்கப்பட்டிருக்கிறதா? தேசிய வங்கி, பொது வங்கி, சேவை வழங்குநர், செயலாக்க அதிகாரி போன்றோரிடமிருந்து உங்களுக்கு அழைப்புகளோ குறுஞ்செய்திகளோ வாரா. இத்தகைய கைப்பேசி அழைப்புகளிலிருந்தும் குறுஞ்செய்திகளிலிருந்தும் எப்பொழுதும் எச்சரிக்கையாய் இருங்கள்! உங்கள் அடையாளத்தை யாரேனும் களவாடிவிட்டனரா? உங்கள் வங்கிக் கணக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? எச்சரிக்கை! வங்கி மோசடிக்கு ஆளாகாதீர்கள். வங்கியில் நிகழக்கூடிய மோசடிகள் சிக்கல்: கடனட்டை நகல் எடுத்தல். காரணம்: பயனாளரின் கடனட்டை விவரங்கள் களவாடப்பட்டுள்ளன. விவரிப்பு: எ.கா: ஒவ்வொரு கடனட்டையிலும் அக்கடனட்டையின் உரிமையாளரின் விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். இவ்விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த இரகசியக் காப்பு மீறப்பட்டு, அத்தகவல்கள் தகாதவரின் வசம் கிடைத்தால் அதனை வைத்து, கடனட்டை நகல் எடுக்கப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.


43 த� ொகுதி 5 கீழே கொடுக்கப்பட்டுள்ள சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக. õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ கொடுக்கப்பட்டுள்ள சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக. சிக்கல்கள் காரணங்கள் விளைவுகள் வங்கிக் கணக்கு இட மாற்றம் செய்யப்படுதல் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மற்றவர்கள் பணம் எடுத்தல் அடகுக்கடை மாத வட்டி ச ொத்துகள் அழியும் ஒப்பந்தம் இல்லாக் கடன் அடகுக் கடைக்காரர்


44 ட் மனிதன் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே வாழ்ந்து வருகின்றான். ஆசை அளவோடு இருக்கும் வேளை, சிக்கல்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்கிறான். அவனது ஆசை எல்லையை மீறும்போது பேராசையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றான். பேராசை, மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. மனிதனின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்கப் பேராசையும் வளர்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இற்றைக் காலத்தில் தன் பேராசையைத் தீர்த்துக் கொள்ள பல்வேறு பொருளாதார மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகி வருகிறது. நாள்தோறும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டு வருகிறார் என்பது நடப்பியல் உண்மை. ஏமாற்றும் கூட்டம் பணம் பறிக்கும் நோக்கில் பல்வகைத் திடீர்ப் பணக்காரராகும் திட்டங்களைத் தீட்டி மக்களைத் தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள். ஏமாறும் மக்கள் கூட்டமும் உடனடியாகப் பணக்காரராக வேண்டுமென்ற பேராசையின் காரணமாக ஏமாற்றுக்காரர் வலையில்சிக்குண்டு தவிக்கிறது. பாமர மக்களைக் காட்டிலும் படித்தவர்களே இதில் அதிகம் ஏமாறுகிறார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விடயம். நம் நாட்டில் அண்மையில் பலரையும் சிக்க வைத்த பண மோசடியாகக் கருதப்படுவது மாகாவ் மோசடியாகும். மிக நூதன முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடியாக இது விளங்குகிறது. ஏமாற்றுக்காரர்கள் வங்கிப் பணியாளராக, காவல்துறை அதிகாரியாக, நீதிமன்ற அதிகாரியாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வர். தொலைபேசி அழைப்புகளெல்லாம் தொடர்புள்ள துறைகளின் தொடர்பு எண்ணாகவே இருக்கும். தேசிய வங்கியிலிருந்து அழைப்பதாகச் ச ொல்பவரின் தொடர்பு எண் தேசிய வங்கி எண்களாகவே இருக்கும். இதுவேபலரையும் ஏமாற்று வலையில் சிக்கவைக்கக் காரணமாக அமைகிறது. நீங்கள் குற்றம் இழைத்துவிட்டதாகக் காவல்துறை அதிகாரி என ஒருவர் அழைப்பார். குற்றப் பதிவெண் என்று ஓர் எண்ணைக் கொடுப்பார். பின்னர், நீதிமன்ற அதிகாரி அழைப்பார் என்றும் அவரிடம் குற்றப் பதிவெண்ணை மறுவுறுதிபடுத்தச் ச ொல்வார். அழைப்புத் துண்டிக்கப்படும். 44 த� ொகுதி 5 விரைந்து வாசித்திடுக. ð£ì‹ 2 மோசடி எச்சரிக்கை! வாசிக்கும் முன்… வங்கியில் நிகழும் மோசடிகள் பற்றி நீங்கள் அறிந்தவற்றை இணையராகக் கலந்துரையாடி வகுப்பில் கூறுக. 2.3.15 வங்கியியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.


45 த� ொகுதி 5 மறுமுனையில் மற்றுமோர் அழைப்பு வரும். நீதிமன்ற அதிகாரியெனத் தம்மை அறிமுகம் செய்துகொண்டு பேசுவார். குற்றப் பதிவெண் குறித்துக் கேட்பார். நீதிமன்றக் கைதாணைதயாராக இருப்பதாகவும், எந்நேரத்திலும் நீங்கள் கைதாகலாமெனவும் கூறுவார். கைதாவதிலிருந்து தப்பிக்கப் பணம் செலுத்தச் ச ொல்லுவார். பயத்தின் காரணமாகக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணத்தைச் செலுத்திய பின்னர்தான், நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குப் புலனாகும். மேலே குறிப்பிட்ட மோசடிகள் சிலவே. நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல நடக்கின்றன. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள். மக்கள் விழிப்பாக இருப்பதுவே தீர்வுக்கான ஒரே வழி. எளிதில் எதையும் நம்பிவிடாமல் தீர ஆராய்ந்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்த பின்னரே, எதிலும் இறங்க வேண்டும். அரசுத் துறை நடத்தும் விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதன்வழி உண்மைத் தகவல்களையும் இற்றைத் தகவல்களையும் பெறலாம். ‘நோகாமல் நொங்கு தின்ன முடியாது’ என்பதை உணர்ந்து உழைத்து ஊதியம் பெறுவதை வழக்கமாக்கிக் கொள்வதே நன்று. உரைநடைப் பகுதியிலுள்ள முக்கியக் கருத்துகளை அறிந்து கூறுக. 1 1. பொருளாதார மோசடி என்பதென்ன? 2. பேராசை ஏன் பொருளாதார மோசடிக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது? 3. மாகாவ் மோசடியில் பலர் சிக்கியதற்குக் காரணம் என்ன? 4. ‘நோகாமல் நொங்கு தின்ன முடியாது’ என்பதன்வழி கட்டுரையாசிரியர் என்ன ச ொல்ல விழைகிறார்? 5. பொருளாதார மோசடியால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமென நீர் கருதுகிறீர்? இருவராகக் கலந்துரையாடி விளைவுகளைப் பட்டியலிடுக. வண்ணமிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருளெழுதுக. வினாக்களுக்கு விடை எழுதுக. 2 3


46 த� ொகுதி 5 பொருளாதார மோசடியில் சிக்காமல் இருக்க மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை 50 சொற்களில் எழுதுக. õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. பொருளாதாரக் கோட்பாடுகள் என்றவுடனே நம் மனத்திற்கு வருவது மேற்கத்திய நாடுகள்தாம். அதற்குச் சில காரணங்கள் உள்ளன. கடந்த இருநூறு ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதாரத்தில் உலக அளவில் முன்னணி நாடுகளாக இருந்து வந்துள்ளன. நவீனப் பொருளாதார வரலாறு என்பதே, ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது எனப் பாடநூல்கள் ச ொல்லிக் கொடுக்கின்றன. உலகின் புகழ்பெற்ற பொருளாதாரத் தத்துவங்களாகச் ச ொல்லப்படும் பொதுவுடைமை, முதலாளித்துவம் என்னும் இரண்டுமே ஐரோப்பாவில்தான் தோன்றி உள்ளன. அது மட்டுமன்றி, கீழை நாடுகள் விடுதலை பெற்ற பின்னர் மேற்கத்திய நாடுகளையே தங்களின் முன்மாதிரியாகவும், அவர்களின் கோட்பாடுகளையே தங்களின் வழிகாட்டியாகவும் கருதி வந்துள்ளன. முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலரும் அவற்றைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர். எனவேதான், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாற்றைப் பெற்றுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளும்கூட பொருளாதார வழிமுறைகளுக்கும் சிந்தனைகளுக்கும் ஏதாவது செய்திருக்கலாமே என நமக்குத் தோன்றுவதில்லை. மூலம் : முனைவர் கனகசபாபதி - சில மாற்றங்களுடன் 1. பொருளாதாரக் கோட்பாடுகள் என்றவுடன் மேற்கத்திய நாடுகள் நம் நினைவுக்கு வரக் காரணம் யாது? 2. இந்தியா - சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரச் சிந்தனை ஏன் புகழ் பெறவில்லை? 3. மேற்கத்திய மோகம் பொருளாதாரச் சிந்தனையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நீர் கருதுகிறீர்? பொருளாதாரத்தில் மேற்கும் கிழக்கும்


47 அவையோர் அனைவருக்கும் வணக்கம். ‘வங்கிச் சேமிப்புத் திட்டம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்த எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவர்களே, வங்கிகள் என்றதும் நம் நினைவுக்கு வருவதென்ன? ஆம், சேமிப்பும் கடனுமே ஆகும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏன் ஏற்படுகிறது? நாம் சேமிக்கத் தவறிய காரணமே என்பதை யாரும் மறுத்துவிட முடியுமா? முறையான திட்டமிடல் சேமிப்பிற்கு வழிவகுக்கும். அவ்வகையில் வங்கிகள் வழங்கும் சில சேமிப்புத் திட்டங்கள் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பணம் சேமித்தல் குறித்துமட்டுமே நீங்கள் பொதுவாக அறிந்து இருப்பீர்கள். கல்விச் சேமிப்புத் திட்டங்கள், மருத்துவச் சேமிப்புத் திட்டங்கள், நகை சேமிப்புத் திட்டங்கள் எனச் சேமிப்புத் திட்டங்கள் பல்வகைப்படும். இவற்றை, இன்று வங்கிகளே ஏற்படுத்தித் தருகின்றன. நீங்கள் சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இத்தகைய சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பதன் வழி, நல்ல பலன் பெறலாம். நீங்கள் விரும்பினால், கல்விச் சேமிப்புத் திட்டத்திலோ, மருத்துவச் சேமிப்புத் திட்டத்திலோ, முதலீட்டுச் சேமிப்புத் திட்டத்திலோ தனித்தனியாகவும் சேமித்து நிறைந்த பலனைப் பெறலாம். மாணவர்களே, வங்கிச் சேமிப்புத் திட்டங்களில், நீங்கள் சேமிக்கும் பணமோ, பொருளோ உத்தரவாதம் பெற்றதாகும். பணமோ, பொருளோ களவாடப்பட்டால், வங்கி பொறுப்பேற்று அதைத் திருப்பிச் செலுத்தும். மேலும், இயற்கைப் பேரிடரால் ஏற்படும் சேமிப்பு இழப்புகளுக்கும் வங்கி பொறுப்பேற்கும். மேலும், இத்திட்டங்களுக்குக் காப்புறுதியையும் வங்கி ஏற்படுத்தித் தருகின்றது. வளமான எதிர்கால வாழ்வுக்கு வங்கிச் சேமிப்புத் திட்டங்கள் வழிவகுக்கின்றன. கல்விச் செலவு பெருகி வருகின்ற இன்றைய சூழலில், விரும்பிய கல்வியை, விரும்பிய இடத்தில் மேற்கொள்வதற்குக் கல்விச் சேமிப்புத் திட்டம் வழிகோலுகிறது. வங்கியில் சேமிப்புத் திட்டப் பொருளகக் கணக்கு உள்ளவர்களுக்கே அரசாங்கக் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். அன்பு மாணவச் செல்வங்களே, நாளைய தேர்வுக்கு நீங்கள் நேற்றே படித்தீர்கள் அல்லவா? மழை வருமுன்னரே குடையோடு பயணப்படுகிறீர்கள் அல்லவா? நாளைய அறுவடைக்கு நீங்கள் இன்றே விதைத்தல் வேண்டுமன்றோ? அவை போன்றதே சேமிப்பும்! ð£ì‹ 3 சேமிப்புத் திட்டம் உரையை வாசித்தறிக.


48 த� ொகுதி 5 வங்கியில் சேமிப்புத் திட்டங்கள் குறித்த மேலதிகத் தகவல்களைப் பெற உங்களுக்கு வழங்கப்பட்ட தாளிகையிலுள்ள அகப்பக்கத்திலோ தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள். சேமிப்புத் திட்டங்களில் பங்கு பெறுங்கள்; பலன் அடையுங்கள். இதுகாறும் அமைதியாகவும் கண்ணும் கருத்துமாகவும் என்னுரையைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி; வணக்கம்! மேற்கண்ட உரையினை வாசித்து உரையின் கூறுகளை நண்பர்களுடன் கலந்துரையாடுக. 1 ‘மலேசிய இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வங்கியியல் துறை ேமற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்’ எனும் தலைப்பில் சட்டகம் ஒன்றனைக் குழுவில் கலந்துரையாடித் தயார் செய்க. சட்டகத்தைத் துணையாகக் கொண்டு 250 சொற்களில் உரை ஒன்றனை எழுதி உரை ஆற்றுக. 2 3 அவை வணக்கம் அவை விளிப்பு கருத்துப் பகுதி மொழி ஆளுமை நன்றி கூறுதல் முடிவு / விடைபெறல் விரும்பிய பொருளைச் சேமிப்பின் வழி வாங்கப்பட்ட அனுபவத்தை 50 சொற்களில் எழுதுக. õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ தகவலைத் துணையாகக் கொண்டு ‘வங்கியியல் வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?’ எனும் தலைப்பில் 250 சொற்களில் உரை ஒன்றனை எழுதுக. வங்கியியல் வணிகத்தில் வெற்றிபெற ஆறு வழிகள் திட்டமிடல் 1 கருத்துருவைச் 2 சோதனையிடல் சந்தையை 3 அறிதல் எதிர்காலப் பயனீட்டாளரை 4 அறிதல் வணிக மேலாண்மையை 5 6 அறிதல் நிதிமூலத்தை உருவாக்குதல்


49 த� ொகுதி 5 வடமொழிச் சந்தி இலக்கணம் (வழக்குச் சொற்களுக்கு மட்டும்) ð£ì‹ 4 இலக்கணம் வடமொழித் தொடர்களில் நிலைமொழியின் ஈற்றில் குற்றொலி அல்லது நெட்டொலி இருந்து, வருமொழி குற்றொலி அல்லது நெட்டொலியில் தொடங்கினால் குற்றொலி மறைந்து நெட்டொலி தோன்றும். பின்வரும் எடுத்துக்காட்டுகள் இவற்றை மேலும் விரிவாக விளக்கும். 5.3.9 வடமொழிச் சந்தி இலக்கணத்தில் ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ தோன்றுதல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். i) நிலைமொழி ஈற்றில் ‘அ/ஆ’ + ‘அ/ஆ’ = ‘ஆ’ தோன்றும் சர்வ + அதிகாரி = சர்வாதிகாரி வ = வ் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘வா’ ஆனது குண + அதிசயம் = குணாதிசயம் ண = ண் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘ணா’ ஆனது வேத + ஆகமம் = வேதாகமம் த = த் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘தா’ ஆனது சேனா + அதிபதி = சேனாதிபதி னா = ன் + ஆ (நிலைமொழி ஈற்றில் ஆ) – ‘னா’ ஆனது ii) நிலைமொழி ஈற்றில் ‘அ/ஆ’ + ‘இ/ஈ’ = ‘ஏ’ தோன்றும் ராஜ + இந்திரன் = ராஜேந்திரன் ஜ = ஜ் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘ஜே’ ஆனது மகா + ஈஸ்வரன் = மகேஸ்வரன் கா = க் + ஆ (நிலைமொழி ஈற்றில் ஆ) – ‘கே’ ஆனது தேவ + இந்திரன் = தேவேந்திரன் வ = வ் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘வே’ ஆனது


50 த� ொகுதி 5 இலக்கணக் குறிப்பை வாசித்துக் கலந்துரையாடுக. 1 பின்வரும் வடமொழிச் சொற்களை வடமொழிச் சந்தி இலக்கண விதிக்கேற்பச் சேர்த்து எழுதுக. பின்வரும் வடமொழிச் சொற்களை வடமொழிச் சந்தி இலக்கண விதிக்கேற்பப் பிரித்து எழுதுக. 2 3 வடமொழிச் சந்தி இலக்கண வழக்குச் சொற்களுக்கான விளக்கப் படம் ஒன்றனைத் தயாரித்து வகுப்பில் படைத்திடுக. õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ பின்வரும் வடமொழிச் சொற்கள் எந்த விதியின் கீழ்ப் புணர்ந்துள்ளன என்பதைக் குறிப்பிடுக. சந்திரோதயம் குணாதிசயம் சகோதரன் ஞானோதயம் 1. வேத + ஆகமம் = 2. தேவ + இந்திரன் = 3. ஞான + உதயம் = 4. குண + அதிசயம் = 5. சக + உதரன் = 6. ராஜ + அதிபதி = 3. சந்திரோதயம் = 4. அமிர்தாஞ்சனம் = 1. சர்வோதயம் = 2. குணானுபவம் = iii) நிலைமொழி ஈற்றில் ‘அ/ஆ’ + ‘உ/ஊ’ = ‘ஓ’ தோன்றும் சூரிய + உதயம் = சூரியோதயம் ய = ய் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘யோ’ ஆனது சக + உதரன் = சகோதரன் க = க் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘கோ’ ஆனது ஞான + உதயம் = ஞானோதயம் ன = ன் + அ (நிலைமொழி ஈற்றில் அ) – ‘னோ’ ஆனது


ம�ொழியும் மனிதனும் ð£ì‹ 1 மலேசியாவில் தமிழ்க்கல்வி 6 எந்தெந்த மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகமாக உள்ளது? அதற்கான காரணங்கள் யாவை? மாநில அளவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுக. எந்தப் பகுதியில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன? அதற்கான காரணங்கள் எவையாக இருக்கலாம்? எந்தப் பகுதிகளில் (மேற்கு/கிழக்கு/ வடக்கு/தெற்கு) தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? அதற்கான காரணங்கள் யாவை? வரைபடத்தில் காணப்படும் தகவல்களை வழங்கப்பட்டுள்ள வினாக்களின் துணைகொண்டு கலந்துரையாடுக. 1 1.5.5 வரைபடத்திலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர். வரைபடம் விளக்கும் தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கையை அறிந்திடுக. பெர்லிஸ் பினாங்கு சிலாங்கூர் திரங்கானு பகாங் நெகிரி செம்பிலான் கெடா பேரா கிளந்தான் கோலாலம்பூர் மலாக்கா ஜ�ொகூர் 51 குறியீடு: பள்ளிகளின் எண்ணிக்கை >90 61-90 31-60 <30 இல்லை


மாநிலங்களுக்கிடையே தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை வேறுபட்டு இருப்பது தொடர்பாகக் கருத்துரைத்து முடிவினைக் கூறுக; குறிப்புகளைத் துணையாகக் கொள்க. பின்வரும் வரைபடத்தைத் தமிழ்க்கல்வியுடன் தொடர்புபடுத்தி கலந்துரையாடுக; கருத்துரைத்து முடிவு கூறுக. 2 3 °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ ‘தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்குப் பெற்றோர்களே காரணம்’ கருத்துரைத்திடுக. நோக்குக் குறியீட்டில் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தை உற்றுநோக்கி தென்கிழக்காசியாவில் தமிழ்மொழிப் பயன்பாடு குறித்துக் கருத்துரைத்திடுக; முடிவு கூறுக. மக்கள் தொகை மக்கள் குடிபெயர்வு போக்குவரத்து வசதி பெற்றோர் ஈடுபாடு தமிழ்நாடு பினாங்கு கிள்ளான் 52 தொகுதி 6


2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர். மொழிபெயர்ப்புத் துறை பல்வேறு மாற்றங்களைத் தாங்கி நல்லதொரு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது என்றால் அது மிகையாகாது. மக்களுக்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ வருவாயை ஈட்டித் தரும் துறையாக இஃது அமைகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக இன்று இயந்திர மொழிபெயர்ப்பு உலகை ஆக்கிரமித்து வருகிறது. கூகுள் மொழிபெயர்ப்பை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இருப்பினும், இயந்திர மொழிபெயர்ப்பு பல வேளைகளில் முழுமையான, மிகவும் பொருத்தமான மொழிபெயர்ப்பாக அமைவதில்லை. இயந்திர மொழிபெயர்ப்பில் மிகச் சரியான, பொருத்தமான சொற்கள் இருப்பதில்லை. மேலும், வாக்கிய அமைப்புகளில்கூட பிழைகளைக் காணக்கூடிய நிலை உள்ளது. ஆதலால், பொதுவாக மொழிபெயர்ப்புத் துறையில் உள்ளவர்கள் இயந்திர மொழிபெயர்ப்பை முழுமையாக நம்புவதில்லை. காரணம், இயந்திர மொழிபெயர்ப்பு நேரடி தகவல்களை மட்டுமே மொழிபெயர்க்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. மாறாக, மனிதர்கள் செய்யும் மொழிபெயர்ப்பு நேரடிப் பொருள், மறைபொருள், பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டு மொழிபெயர்க்கப்படுவதால், தெளிவாகவும் முழுமையாகவும் சரியானதாகவும் இருக்கின்றது. அவ்வகையில், மனிதர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபடுவதற்கு முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் இத்துறை, பட்டயம், பட்டப்படிப்பு, முதுகலை, முனைவர் பட்டம் என்று நல்லதொரு வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. மலேசியாவில் பல பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்புத் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நற்சான்றிதழ் தொடங்கி முனைவர் பட்டம் வரை மொழிபெயர்ப்புத் துறையில் படிப்பை மேற்கொள்ளலாம். இவற்றைத் தவிர்த்துச் சில மொழிபெயர்ப்பு நிறுவனங்களும் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசிய மொழிபெயர்ப்புக் கழகம் (Persatuan Penterjemahan Malaysia), மலேசிய மொழிபெயர்ப்பு நிறுவனம் (Institut Terjemahan Malaysia) போன்றவை ஆகும். இந்த மொழிபெயர்ப்புக் கழகங்கள் மலேசியர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சிகள் வழங்கி அவர்களைப் பட்டயப் படிப்பிற்குத் தயார் செய்கின்றன. இதன் வாயிலாக, இவர்கள் அதிகாரத்துவ மொழிபெயர்ப்பாளராக விளங்குகின்றனர்; மொழிபெயர்ப்பதற்கான உரிமத்தையும் இவர்கள் பெற்றிருப்பர். இவ்வாறான பயிற்சிகளில் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான பொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மலாய்-ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும், மலாய்-ஆங்கிலம்- சீன மொழிபெயர்ப்பாளராகவும், இன்னும் சிலர் ஜப்பான், பிரஞ்சு, ஜெர்மனி, கொரியா போன்ற உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும்மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குகின்றனர். எது எப்படி இருப்பினும், மௌனமாக வாசித்து, முக்கியக் கருத்துகளை ஏற்ற வரிபடக்கருவியில் குறித்துக் கொள்க. ð£ì‹ 2 ம�ொழிபெயர்ப்பு 53 தொகுதி 6


நம் நாட்டில் நிபுணத்துவம் அடிப்படையில் உரிமம்பெற்ற மலாய் - ஆங்கிலம் - தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் மிகச் சிலரே உள்ளனர். இவ்வாறு மூன்று மொழிகளில் மொ ழி பெ ய ர் ப் புச் செ ய் யு ம் ஆற்றல் கொண்ட மொழிபெயர்ப்பு உரிமம் கொண்டவர்கள் இன்று மொழிபெயர்ப ்பைத் தங ்களது தொழிலாகவே கொண்டுள்ளனர். இவர்களுக்கான வேலை வாய்ப்பும் அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக ஊடகத் துறையில், மின்னியல் ஊடகங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். பெர்னாமா, ஆர். டி.எம், டி.வி.3, ஆஸ்ட்ரோ போன்ற நிறுவனங்களின் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்புப் பணியாளர்கள் பலர் இருக்கின்றார்கள். மேலும், படங்கள் திரையிடும்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போதும் வசனங்களைமொழிபெயர்ப்பு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. மேலும், அச்சு ஊடகங்களில்கூட செய்திகளை மொழிபெயர்த்து உடனுக்குடன் அச்சேற்றுவதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. இவை மட்டுமல்லாமல் அரசு ஆவணங்கள், விளம்பரங்கள், வணிகத் தகவல்கள், சட்ட அறிக்கைகள் போன்றவற்றையும் மொழிபெயர்த்துக் கொடுப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். ஆக, மொத்தத்தில் மொழிபெயர்ப்புப் பணி இன்று வருவாயை ஈட்டித்தரும் துறையாக இருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. எனவே, இன்றைய இளம் தலைமுறையினர் இந்தத் துறையில் பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ ஈடுபட்டுத் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முயலலாம். 2 1 பகுத்தாய்ந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்புத் துறையில் வேலை வாய்ப்புகள் தொடர்பான உமது முடிவினைக் கூறுக. மேற்கண்ட கருத்துகளையும் பின்வரும் குறிப்புகளையும் துணையாகக்கொண்டு பகுத்தாய்்க. மொழிபெயர்ப்புத் துறை வளர்ச்சி தொழில்நுட்பம் பகுதி நேர வருவாய் மொழிபெயர்ப்புப் பயிற்சிகள் வேலை வாய்ப்பு ஊடகங்கள் 54 தொகுதி 6


°¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ மனித மொழிபெயர்ப்புக்கும் இயந்திர மொழிபெயர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்புகளின் துணைகொண்டு பகுத்தாய்ந்து கூறுக. நேரம் தரம் வேலை வாய்ப்பு நம் நாட்டுச் சூழலில் குழந்தைகள் பிறந்து, முதன் முதலில் பேசத் தொடங்கும் போது பெரும்பாலும் தங்கள் தாய்மொழியிலேயே பேசுகின்றனர். பேசத் தொடங்கியது முதல் தாய்மொழிகளுக்கு அப்பால் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்துகின்ற சூழலும் அமைகிறது. குழந்தைகள் தங்களை அறியாமலே மொழிபெயர்ப்புகளைத் தங்கள் அன்றாடவாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். தங்களின் அன்றாட வாழ்வில் தொடர்புகளின்போது மட்டுமல்லாமல், அனைத்து வகையிலான பெயர்ப்பலகை, விளம்பரங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் இரு மொழிகளைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. பொதுவாக, மொழிபெயர்ப்பு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இதனை மூல மொழி, இலக்கு மொழி என்றும் அழைப்பர். மொழி அமைப்பு, அம்மொழியோடு தொடர்புடைய கலை, இலக்கியம், மக்கள் பண்பாடு, சமுதாயம், சமயம், அரசியல் நிலைகளைத் தெளிவுறக் கண்டுணர மொழிபெயர்ப்பு இன்றியமையாதது ஆகின்றது. கருத்துப் பரிமாற்றத்திற்கு இவற்றைத் தெளிதல் முக்கியமாகும். மூலநூலின் கருத்துகளை மற்றொரு மொழிக்கு மாற்றுதல் எனும் நிலையில், மூலநூலின் கருத்துகளில் சிறிதும் மாற்றம் அடையாமல் இருத்தல் மிக அவசியமாகும். அவற்றுள் முரண்பாடு தோன்றின் மொழிபெயர்ப்பின் நோக்கத்தில் தடை ஏற்படும். 3 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் -மகாகவி பாரதியார் கவிதைவரிகளைச் செவிமடுத்து, வாசித்து அதன் கருத்துகளைத் பகுத்தாய்ந்து முடிவினைக் கூறுக; எழுதுக. உரைநடைப் பகுதியின் கருத்துகளைப் பகுத்தாய்ந்து முடிவு கூறுக. 55 தொகுதி 6


3.3.7 புள்ளிவிவரப் பட்டியலிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர். 2 1 மேற்கண்ட புள்ளிவிவரப் பட்டியலில் தொழில்வகைகள் ஏன் அவ்வாறு அமைந்துள்ளன என்பதற்கான புதைநிலைக் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. புள்ளிவிவரப் பட்டியலை உற்றுநோக்கி தெரிநிலைக் கருத்துகளை அடையாளம் கண்டு கூறுக; எழுதுக. ð£ì‹ 3 ம�ொழி தரும் வேலை மொழித்துறை பட்டதாரிகளின் தொழில் வகைகள் தொழில்வகை % ஆசிரியர் 56.14 பதிப்பகம் 7.02 அலுவலகப்பணி 1.75 விற்பனை & சந்தைப் படுத்துதல் 14.04 நிருவாகப் பணி 10.53 தலைமை நிருவாகப் பணி 1.75 மற்றவை 8.77 மொத்தம் 100.00 மூலம்: மலேசிய உயர்கல்வி அமைச்சு, 2010 புள்ளிவிவரப் பட்டியலை உற்று நோக்குக. èõùˆF™ ªè£œè தொகுத்து எழுதும் பொழுது தகுந்த எடுத்துக்காட்டுகள் வழங்க வேண்டும். தெரிநிலைக் கருத்துகளை வழங்குதல். புதைநிலைக் கருத்துகளை வழங்குதல் (காரணம், விளைவு, தீர்வு/நடவடிக்கை) 56 தொகுதி 6


3 கீழ்க்காணும் புள்ளி விவரப் பட்டியலிலுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக. தெரிநிலைக் கருத்துகளையும் புதைநிலைக் கருத்துகளையும் கவனத்திற்கொள்க. ஆண்டு எண்ணிக்கை 2007 50 2008 60 2009 25 2010 30 2011 35 2012 35 2013 25 2014 120 2015 200 2016 160 2017 190 மொத்தம் 930 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கணினி மொழியியல் சார்ந்த வேலை வாய்ப்புகள் புதைநிலை மொழித்துறையில் பட்டம் பெற்றவர்களில் அதிகமானோர் அலுவலகப் பணிகளிலும் நிருவாகப் பணிகளிலும் பணிபுரிய ஆர்வமின்றி இருக்கின்றனர். இவ்விரு துறைகளும் அடிப்படையில் மொழிசார் கல்வித் தகுதி தேவைப்படாத துறைகளாக இருப்பதால் இத்துறைகளில் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. தெரிநிலை மொழித்துறையில் பட்டம் பெற்றவர்களில் அதிகமானோர் ஆறு வகையான தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுள், அலுவலகப் பணிகளிலும் நிருவாகப் பணிகளிலும் ஈடுபடுவர்களின் விழுக்காடு மிகவும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகைப் பணிகளில் மொத்தம் 1.75 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளனர். எ.கா: மூலம்: மனிதவள அமைச்சு, 2018 57 தொகுதி 6


°¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ வினாக்களின் துணையுடன் அட்டவணையில் உள்ள கருத்துகளை விவரித்து எழுதுக. புள்ளிவிவரப் பட்டியலில் உள்ள கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில் எழுதுக. 1. மலாய், சீனம், தமிழ், ஸ்பேனிஸ், ஜப்பான் ஆகிய மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை என்ன? தெரிநிலை 2. ஏன் அவ்வாறான சூழல் நிகழ்ந்துள்ளது? புதைநிலை 3. அவ்வாறான சூழல் நிகழ்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது? புதைநிலை முதன்மைப் பாடம் (மொழிப் பாடம்) வேலையில் உள்ளவர்கள் வேலையில்லாப் பட்டதாரிகள் % % மொத்தம் ஆங்கிலம் 44 56 100 மலாய் 56 44 100 சீனம் 75 25 100 தமிழ் 56 44 100 அரபு 38 62 100 ஸ்பேனிஸ் 66 34 100 பிரஞ்சு 38 62 100 ஜெர்மனி 32 68 100 ஜப்பான் 64 36 100 மூலம்: மலேசியக் கல்வி அமைச்சு, 2010 58 தொகுதி 6


ஆதி அந்தம் இல்லாப் பரம்பொருளாகிய இறைவன் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களைப் படைத்து, காத்து, அருள்புரிந்து கொண்டிருக்கிறான். உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளிடமும் எந்தவொரு விருப்பு வெறுப்புமின்றி அருள்புரியும் பேரருளாளனாக இறைவன் விளங்குகிறான் என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார். மேலும், திருவாசகத்தில் திருவெம்பாவை எனும் பகுதியில் இறைவனைச் சீராட்டிப் பாராட்டிப் பாடுகின்ற பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. திருவாசகத்தின் மேலுமொரு படிப்பினையாக நமக்கு மாணிக்கவாசகப் பெருமான் வலியுறுத்துவது என்னவெனில், இந்தப் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்திருக்கும் நாம் எந்தவொரு சூழலிலும் சண்டை சச்சரவு இன்றி, பரம்பொருள் ஒன்றன்கீழ், பகைமையின்றி ஒற்றுமையாகவாழ வேண்டும் என்பதாகும். இதற்கு ஒரு படி மேலேசென்று, மனிதர்கள், மனிதர்களிடம் மட்டுமன்றி எல்லா உயிர்களிடத்தும் தயவு தாட்சணியத்தோடு வாழ வேண்டும் எனும் செய்தியையும் திருவாசகத்தில் பல இடங்களில் கூறுகின்றார். இணைமொழி ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும் 4.4.5 ஐந்தாம் படிவத்திற்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். இணைமொழிகள் விளக்கம் சீராட்டிப் பாராட்டி போற்றிப் புகழ்ந்து விருப்பு வெறுப்பு பிடித்ததும் பிடிக்காததும் / உவத்தல் காய்தல் சண்டை சச்சரவு தகராறு / அடிதடி தயவு தாட்சணியம் இரக்கம் ஆதி அந்தம் தொடக்கமும் முடிவும் 1 2 கீழ்க்காணும் உரைநடைப் பகுதியில் காணப்படும் இணைமொழிகளின் பொருளை விளக்கிக் கூறுக. இணைமொழிகளையும் அதன் விளக்கத்தையும் மனனம் செய்து வகுப்பில் ஒப்புவிக்கவும். 59 தொகுதி 6


°¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ வாக்கியங்களைச் சரியான இணைமொழிகளைக் கொண்டு நிறைவு செய்க. கற்ற இணைமொழிகளைப் பொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக. 1. ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், வீணே ஈடுபட்டுப் பகைமையை வளர்ப்பதைவிட மனம்விட்டுப் பேசி உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 2. இராமலிங்கம் அடிகளாரின் அன்புநெறி உயிர்களிடத்தில் காட்ட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது. 3. நம் பெற்றோர் நம்மைச் வளர்க்கும் அன்பினை நம் வாழ்க்கையில் என்றும் மறந்திடக்கூடாது. 4. வன்முறையாளர்கள் இன்றி அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும்போது, மனிதநேயம் கேள்விக் குறியாகிவிடுகிறது. 5. நடந்த சம்பவத்தை வரை முழுமையாக வழக்கறிஞர் விளக்கியபோதுதான் எழிலன் குற்றம் இழைக்கவில்லை என்று புரிந்தது. சீராட்டிப் பாராட்டி தன் கணவன் கார் விபத்தில் இறந்தபோது, செய்வதறியாது தவித்துப்போனாள் சிவகாமி. எனினும், மனம் தளராமல், தனித்து வாழும் தாயாகப் போராடித் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தாள். இன்று, தான் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பிள்ளைகள் தம் குடும்பத்தோடு வைத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். 3 கற்ற இணைமொழிகளுக்கு ஏற்ற சூழலை எழுதுக. எ.கா: சண்டை சச்சரவு மலேசியர்களாகிய நாம், பல்வேறு அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் (சூழல்) இதுவரை எந்தச் சண்டை சச்சரவும் (மொழியணி) இன்றி வாழ்வது கண்டு உலகமே நம்மைப் புகழ்கிறது. (விளைவு) எ.கா: èõùˆF™ ªè£œè வாக்கியங்களை அமைக்கின்ற வேளையில், இணைமொழியை உள்ளடக்கிய சூழல், சூழலால் ஏற்படும் விளைவு, மொழியணி ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டிருக்க வேண்டும். 60 தொகுதி 6


வாசிக்கும் முன்... சிறந்த நன்னெறிப் பண்புகளே குடும்பவியல் சீர்மைக்குத் துணைபுரிகின்றன. இது குறித்து உமது கருத்தென்ன? நன்னெறிப் பண்புகளின் சிதைவுகள் எத்தகைய விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தும்? அரங்கத் தலைவர்: இந்தக் கலந்தாய்வுக் களத்தில் கலந்துகொண்டு கருத்தை வழங்கவிருக்கும் கல்விமான்களே, வருகையாளர்களே! அனைவருக்கும்வணக்கம். இன்றைய சூழலில் குடும்பங்களில் ஏற்பட்டுவரும் நடைமுறை மாற்றங்கள் மற்றும் நன்னெறிச் சிதைவுகள் குறித்துக் கருத்தாய்வு செய்ய உள்ளோம். குறிப்பாக, இளையோரிடம் காணப்படும் சீர்கேடுகள் எவ்வாறான சிதைவுகளைக் குடும்ப நிலையில் ஏற்படுத்துகின்றன என்று விரிவாக விவாதிக்க உள்ளோம். இச்சிக்கல் தொடர்பில் தம்முடைய கருத்தைக் கூறுவதற்குப் பேராசிரியர் மதிவாணனை முதலில் அழைக்கிறேன். பேராசிரியர் மதிவாணன்: வணக்கம். உண்மையில் மிக முக்கியமான சமூகச் சிக்கல் ஒன்றை நாம் பேசுவதற்கு எடுத்திருக்கிறோம். தம் குடும்ப உறுப்பினர்களுடன் அன்புணர்வும் பாசப்பிணைப்பும் கொள்வது இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. தம் குடும்ப உறுப்பினரோடு கலந்து உறவாடுவதுவும் அருகி வருகிறது. பெரியவர்களைப் போற்றும் பண்பாடும் இப்போது இல்லை. தன்னுடைய நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் புதிய இளைஞர் சமுதாயம் இப்போது உருவாகி வருகிறது. அரங்கத் தலைவர்: உண்மைதான். எல்லா வீடுகளிலும் இது இயல்பாகிவிட்டது. ஆனால், அப்படி ஒரு நிலை உருவாக எது காரணமாக இருக்கிறது? குடும்பவியல் மேம்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் அருள்நாயகி் பதில் சொல்லுங்களேன். வாழ்வு நெறி ð£ì‹ 1 குடும்ப நலனில் நன்னெறி 7 கலந்தாய்வுக் களத்தில் விவாதிக்கப்படும் கருத்துகளை ஆழ்ந்து செவிமடுத்துக் கருத்துகளை அறிக. 1.1.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை மதிப்பீடு செய்து தொகுத்துக் கூறுவர். குடும்பத்தில் நன்னெறிகள் 61


3 கலந்தாய்வுக் களத்தின் கருத்தை ஒட்டிய உமது நண்பரின் கருத்துகளைக் கேட்டறிக. அதனை மதிப்பீடு செய்து தொகுத்துக் கூறுக. பேராசிரியர் அருள்நாயகி்: இந்தச் சிக்கலில் இளைஞர்களை நோக்கிமட்டுமே நம் அம்புகள் பாய்கின்றன. உண்மையில் சமூகம்தான் முதல் குற்றவாளி. இன்று, குடும்பவியலில் அன்புணர்வுகளை மீட்டுருவாக்கம் செய்யும் சூழல்களே இல்லை என்பதுதான் முற்றிலும் உண்மை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை நாம் இழந்துவிட்டோம். பாட்டி தாத்தாமார் அரவணைப்பில் பேரப்பிள்ளைகள் வளர்ந்த காலம் மலையேறிவிட்டது. பொருளியலை முன்னிறுத்திப் போராடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளுடன் உறவாட எங்கே நேரமிருக்கிறது? அரங்கத் தலைவர்: உறவை நெருக்கமாக்கும் சூழல்கள் இன்று குடும்பங்களில் இல்லை என்பது உன்னிப்பாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்து, முன்பெல்லாம் வீட்டுக்குள்ளேயே குடும்ப விழாக்கள் அடிக்கடி நடக்கும். உறவை நெருக்கமாக்கும். அந்தக் காலம் கனவாகிக் கொண்டிருக்கிறது. பேராசிரியர் மதிவாணன்: நீங்கள் இருவரும் கூறுவது ஓரளவுக்கு உண்மைதான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இன்றைய இளைஞர்கள் அவர்கள் சார்ந்த உலகத்தோடுமட்டும் வலம் வருகிறார்கள் என்பதையும் ஏற்க வேண்டும். உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு வரமறுக்கும் தங்கள் பிள்ளைகளை வற்புறுத்தி அழைத்துச் செல்லும்பெற்றோர்களின் இடர்பாடுகளை எண்ணிப் பாருங்கள். அரங்கத் தலைவர்: இன்னொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. சூழல்களுக்கும் சிக்கலுக்கும் ஏற்ப அவ்வப்போது சமாளித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். நாளை பற்றிய கவலையே அவர்களுக்கு இருப்பதில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பேராசிரியர் அருள்நாயகி்: இதுதான் கல்விப் புரட்சி தந்த உளவியல் மாற்றம். சூழ்நிலைகளைத் தன்னாளுமைகளால் வெல்லும் திறன் பெற்ற இளையோர் சமுதாயம் உருவாகி வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய நிலைதானே? அரங்கத் தலைவர்: நல்லது. அருமையான சிந்தனைப் பரிமாற்றம் இன்று நிகழ்ந்தது என்று உணர்கிறேன். குடும்பங்களில் ஏற்பட்டுவரும் நன்னெறிச் சிதைவுகள், சீர் செய்யப்பட வேண்டும். இச்சிதைவுகள் வளர்ந்தால், நலமிக்கச் சமூக வாழ்வும் மாண்பும் சிதைந்துவிடும். மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும். இளையோர் உள்ளத்தைச் செம்மையாக்க வேண்டும். இன்றைய நல்விதைதான் நாளைய பெருமரம். நன்றி, வணக்கம். 1 கலந்தாய்வுக் களத்தில் இடம்பெற்ற கருத்துகளை ஒட்டிக் குழுமுறையில் கலந்துரையாடிக் கருத்துகளைப் பகுப்பாய்வு செய்க. 2 பகுப்பாய்வு செய்த தகவல்களை மதிப்பீடு செய்து, குடும்பத்தில் சிதைந்து வரும் நன்னெறிப் பண்புகள் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கூறுக; எழுதுக. உமது கருத்துகளை விளக்குக. 62 தொகுதி 7


°¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ கீழ்க்காணும் கருத்துகளை மதிப்பீடு செய்து தொகுத்துக் கூறுக. உமது சொந்தக் கருத்தையும் வெளிப்படுத்துக. சிக்கலைக் களைய பெற்றோர், மூத்தோர் அறிவுரையை நாடுதல். சமயக் கல்வியில் அறிந்ததை வாழ்வில் செயல்படுத்துதல். சிறந்த நட்பைத் தேர்ந்தெடுத்துப் பழகும் பண்பை உருவாக்குதல். சட்டதிட்டங்களை முழுமையாகப் பின்பற்றி நடத்தல். கீழ்க்காணும் கருத்துகளை ஆழ்ந்து ஆராய்ந்து மதிப்பிடுக. உம்முடைய கருத்துகளோடு பொருத்திக் குழுமுறையில் மதிப்பீடு செய்க. மதிப்பீடு செய்த கருத்துகளைத் தொகுத்துக் கூறுக. மாணவர்களிடையே நிலவும் சமூகச் சிக்கல் மாணவர்களிடையே நிகழ்ந்துவரும் சமூகச் சீர்கேடுகளுக்கான காரணங்கள் பிள்ளைகளின் வளர்ப்பு முறை இளையோரின் மனநிலை சமயக் கல்வியின்மை நண்பர்களின் தூண்டுதல் சுற்றுச்சூழல் சிக்கல்கள் தொலைத் தொடர்பு ஊடகத் தாக்கம் 63 தொகுதி 7


ஒளிபரப்பப்படும் திரைப்படக் காட்சியினை நன்கு கண்டுகளித்து, உரையாடலில், சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நிறுத்தக்குறிகளுக்குகேற்ப எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிக. ð£ì‹ 2 அறப்போர் 2.1.11 நாடகப் படிவங்களைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். திருதராஷ்டினன்: எப்படியோ யுத்தத்திற்குத் தாம்பூலம்வாங்கியாகிவிட்டது. அடுத்து நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டாமா? யுத்தசாஸ்திர முறைப்படி இப்போது முதலில் தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். துரியோதனன்: மகாவீரன் கர்ணன்தான் தளபதி. துரோணர்: துரியோதனா! அவசரப்படாதே, மகாவீரன் என்ற தகுதி மட்டும் அந்தப் பதவிக்குப் போதாது. போர்க் களத்தில் கர்ணன் 64 தொகுதி 7


கர்ணன்: ஏன்? வயது வேண்டுமா? துரோணர்: ம்ம்ம்! சந்தேகம் என்ன? கர்ணன்: ஹஹஹா! வயதானவர்களிடம் வில்லைக் கொடுத்தால் ஊன்றிக் கொண்டுதான் நடப்பார்கள். அதை உயர்த்திப் பிடிக்க என் போன்ற இளம் காளையர்கள்தாம் தேவை. பீஷ்மர்: பெரும் அகந்தை உன் வார்த்தை! துரியோதனன்: தாத்தா! கோபப்பட வேண்டாம். கர்ணன் சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறது. கனகண்: இல்லை. திறந்த வெளியில் பானங்களைப் பறக்க விடுவது ஒரு வானவேடிக்கை. அதில் வீரம் இல்லை. கர்ணன்: வெறும் கூச்சல்... அது ஓயட்டும். வீரம் இருந்தால் எழுந்து என் எதிரில் வரட்டும். துரோணர்: கர்ணா! மார்தட்டுவது வெறுப்பை வளர்ப்பதாம். அமர்ந்து விடு! என் பேச்சைக் கேளுங்கள். கர்ணனைவிட எத்தனையோ களம் கண்டு யுத்தத் திறம் அறிந்தவர் பீஷ்மர். இதை எண்ணுங்கள். கனகண்: இதுதான் சரி! தனிமையில் யானை பெரும்பலம்கொண்டதாயினும், மிருகவெறி கொண்ட காட்டைக் கட்டியாள இராஜகுணம் கொண்ட சிம்மமே சிறப்பெனப் பாடம் உள்ளது. ஆதலின், யானையையும் அடக்கி ஆளும் சத்ரிய சிம்மம் ஒன்றுதான் களத்தைக் கட்டி ஆளத் தக்கது. அதே போன்றவர்; தன்னிகர் இல்லா வீரப் பிரம்மச்சாரியர்; பீஷ்மர் ஒருவரே ஆவார். தானைத் தளபதிக்கு ஒருவர்; அவரே நம் தலைவர். பிறப்பறியாது எங்கோ இடையில் முளைத்த புல்லுருவிகள் எவருமே இதற்கு ஒவ்வார்! இதுவே என் எண்ணம். கர்ணன்: நண்பா ! எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரே ஈனத்தை, சாபத்தைச் சொல்லி, சபையில் தலையிட்டுத் தம்வயப்படுத்துகிறார் ஒரு சந்தர்ப்பக்காரர். தாயின் பழியை மகன் சுமக்கிறேன். என் பாவம் இது! என் செய்வேன்? அம்மா! துரியோதனன்: கர்ணா! மாவீரன் நீ! எதற்கும் கலங்காதே! என் நலனே உன் குறிக்கோள். எதையும் பொறு ! உயரும் உன் பெருமை ! திருதராஷ்டினன்: துரியோதனா! பிதாமகர் பீஷ்மரே தளபதி ஆவார். நம் குலத் தந்தையைக் கெளரவிப்பது நமக்குப் பெருமையே! துரியோதனன்: அப்படியே ஆகட்டும், தாத்தா! பீஷ்மரே தளபதி. பீஷ்மர்: நன்றி. மிக்க நன்றி. 1 திரைப்படக் காட்சியின் உரையாடலைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நிறுத்தக்குறிகளுக்கேற்ப குழுமுறையில் வாசித்துக் காட்டுக. 65 தொகுதி 7


(பொன்னி எனும் பெண், சினத்தோடு நின்றுகொண்டிருக்க, சேரமன்னன் பெருஞ்சேரலாதன், தான் தங்கியிருந்த போர்க் கூடாரத்திலிருந்து சிரித்துக்கொண்டு வெளியே வருகிறான்.) சேரலாதன்: பெண்ணே யார் நீ? உன் பெயரென்ன? பொன்னி: (கோபத்துடன்) பண்புக்குப் பெயர்போன பாவையர் வாழும் இந்த வெண்ணி வாயிலில் பிறந்தவள் நான்; பொன்னி என்று அழைப்பார்கள் என்னை. õ÷Šð´ˆ¶î™ நாடகப் படிவத்தினைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பப் பாகமேற்று இணையராக வாசித்துக் காட்டுக. 2 3 திரைக்காட்சியில் உங்களைக் கவர்ந்த கதைமாந்தர் நடித்த உரையாடல்களைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நிறுத்தக்குறிகளுக்கேற்ப நடித்துக் காட்டுக. திரைக்காட்சியின் முழுமையையும் குழுவாகப் பங்கேற்றுச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நிறுத்தக்குறிகளுக்கேற்ப நடித்துக் காட்டுக. அறம் காத்த மன்னன் 66 தொகுதி 7


°¬øc‚è™ நாடகப் படிவத்தினைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்துக் காட்டுக. கலையரசு: அமுதனிடம் நேற்று நீ நடந்து கொண்ட முறை சரிதானா மாறன்? மாறன்: எதைச் சரியில்லை என்று கூறுகிறாய்? ஒவ்வொரு முறையும் என்னை ஏளனம் செய்கிறான்; பிறர்முன் மட்டம் தட்டிப் பேசுகிறான்; பழிதூற்றுகிறான்; அதுமட்டும் முறையா? என்னை மட்டும் குற்றம் சாற்றுகிறாய்! அவனைக் கேட்பதுதானே! கலையரசு: நீ என்ன பேசுகிறாய்? அவனைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே! அவன் அளவுக்கு நீயும் இறங்கிப் போகலாமா? மாறன் என்றால் கனிவு, பொறுமை, விட்டுக்கொடுத்துப் போகிறவன் என்றெல்லாம் நினைத்திருந்தோம். எல்லாம் நேற்றுப் பொய்யாகிவிட்டன போ! மாறன்: எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. அளவுக்கு மீறினால் நான் இப்படித்தான் மாறுவேன். உனக்கும் சேர்த்துத்தான் இந்த எச்சரிக்கை. கலையரசு: அடேய் அப்பா! மன்னித்துக் கொள். நான் இது பற்றி இனி பேசவே மாட்டேன். ஆளைவிடு சாமி! சேரலாதன்: நீ எம்மைக் காண வந்த காரணம்? சொல்லவந்த செய்தி? யாம் அறியலாமா பெண்ணே..! பொன்னி: சேரமன்னரிடம் சொல்வதற்குச் செய்திகள் எதையும் நான் சுமந்து வரவில்லை. சொந்த நாட்டை விட்டுச் சோழ நாட்டிற்கு நீங்கள் படையோடு வந்து தங்கியிருக்கும் காரணம் என்னவென்று கேட்கத்தான் வந்திருக்கிறேன். சேரலாதன்: (பொய்க் கோபத்துடன்) அதைக் கேட்க நீ யார்? பொன்னி: நான் யார்? நான் யார்? நீங்கள் எந்த மண்ணில் வந்து நின்றுகொண்டு இறுமாப்போடு பேசுகிறீர்களோ, அந்த மண்ணுக்குச் சொந்தக்காரி நான். மன்னர் மக்களைக் காப்பார்; மக்கள் நாட்டைக் காக்க வேண்டும் என்னும் பண்பைக் கற்றவள் நான். சேரலாதன்: சரி. யாம் வந்திருக்கும் காரணத்தை இப்போது சொன்னால் எம்மை வாழ்த்தி வரவேற்பாயா பெண்ணே? பொன்னி: உறவு கொண்டு வந்திருந்தால் வரவேற்போம். வாழ்த்தும் பாடுவோம், ஒற்றுமையும் நட்பும் ஓங்குக வென்று உறவுக்கரம் நீட்டுவோம். சேரலாதன்: பெண்ணே! மண்வெறி கொண்டு எங்கள் சேரநாட்டைக் கைப்பற்ற நினைத்து, முதலில் போர்முரசு கொட்டிய உங்கள் மன்னர் கரிகாலருக்குச் சாபம் ஏதும் இல்லையோ? பொன்னி: எங்கள் மன்னர் வென்ற நாடுகளைக்கூட பிறருக்குத் திருப்பிக் கொடுத்தவர். அவருக்கு மண்ணாசை என்பது அலுத்துப்போன ஒன்று. எனவே, தாங்கள்தாம் எங்கள் நாட்டின் மீது வற்றாத ஆசைகொண்டு வந்திருக்கிறீர்கள். மூலம் : இரா.பழனிசாமி (காவியநாயகி) 67 தொகுதி 7


கதைத் தொடக்கம் சிக்கல் முருகியல் கூறு கதை மாந்தர் பண்பு நலன் பின்னோக்கு உத்தி கதையின் சிக்கல் உரையாடல் உத்தி கதை வளர்ச்சி ð£ì‹ 3 சிறுகதையில் மனவியல் சிறுகதையைக் கருத்தூன்றி மௌனமாக வாசித்திடுக. அன்பின் ஈரம் “நான் உங்களுக்கு என்னடா செய்யல..? ராத்திரி பகலா உங்களுக்காகதான் உழைக்கிறேன். உங்ககிட்ட என்ன கேட்கிறேன்? ஒழுங்காபடிங்க.., தேர்வில் நல்ல புள்ளிங்க எடுங்கன்னுதானே கேட்கிறேன். அதைக்கூட செய்ய முடியாதா? அதைவிட வேறென்ன உங்களுக்கு வேலை…?” அப்பாவின் கோபம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்பா, இப்படிக் கோபத்தின் உச்சத்தில் கொந்தளிப்பது இது முதல் தடவை அன்று. நானும் தம்பியும் ஏதாவது சின்னச் சின்ன தப்புகள் செய்யும் போதெல்லாம் இப்படித்தான். வறுத்து எடுக்கத் தொடங்கிவிடுவார். இன்று தம்பி மூன்று பாடத்தில் குறைந்த புள்ளிகள் எடுத்து வந்திருந்தான். சொல்லவா வேண்டும்? ஆகாயத்தைத் தொட்டுவிட்டது அப்பாவின் கொந்தளிப்பு. அப்பா நல்லவர்தாம்; அன்பானவர்தாம். எப்பொழுதும் எங்களுக்கு என்ன வேண்டும் எனப் பார்த்துப் பார்த்துச் செய்வார். தம் நலத்தைப் பார்க்காமல், எங்களுக்காகவே வாழ்பவர். நாங்கள் ஏதாவது தவறுகள் செய்யும்போதுதான் வில்லனாக மாறிப் போவார். என்னைவிடத் தம்பியின் மேல்தான் அப்பாவுக்கு நிறைய கோபம். எதைச் செய்யாதே என்று அப்பா கூறுகிறாரோ, அதைத்தான் விரும்பிச் செய்வான். தம்பிக்குப் பந்து விளையாட்டு என்றால் உயிர். விளையாடுவது மட்டுமன்று, தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு விடியற்காலை என்றாலும் விழித்திருந்து பார்ப்பான். அதுதான் அப்பாவுக்கு எரிச்சலையே உண்டாக்கிவிடும். “இந்த அக்கறை படிப்பில் இல்லையே” என்று அந்த அதிகாலை நேரத்தில்கூட தம்பியை இடைவாரினால் பின்னி விடுவார். அப்போதெல்லாம் தம்பியைப் பார்க்கப் பாவமாக இருக்கும். தம்பி படிப்பில் சோடையாக இருப்பதுதான் அப்பாவின் பெரிய வருத்தம். தம்பியும் முயற்சி செய்யாமல் இல்லை. பாவம் அவனால் முடியவில்லை. ‘எஸ். பி.எம்.’ தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதம்தான் இருந்தது. இப்போது போய் மூன்று பாடத்தில் குறைந்த புள்ளிகள் என்றால் யார்தான் பொறுப்பார்கள்? அதனால்தான், அப்பா தம்பியை இன்று வெளுத்துக் கொண்டிருந்தார். “உன்னோட சிந்தனை எல்லாம் பந்து விளையாட்டிலியே இருந்தா எப்பிடிடா ‘பாஸ்’ பண்ணுவ? சொன்னாலும் கேட்க மாட்ட, பந்து விளையாட்டா உனக்குச் சோறு போடப் போவுது?” அப்பாவின் குரல் உச்சத்திற்கு ஓங்கி இருந்தது. ஒரு மணி நேர அர்ச்சனையில் தம்பி நிலைகுலைந்து நின்றான். என் மனமே உருகிப் போனது. அந்த நாளுக்குப் பிறகு வீட்டில் எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டன. தொலைக்காட்சியின் விளையாட்டு அலையை அப்பா நிறுத்திவிட்டார். தம்பியின் பந்து விளையாட்டு, அப்பாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது. ஆனால், அப்பாவுக்குத் 3.4.36 250 சொற்களில் கதை எழுதுவர். 68 தொகுதி 7


கதை வளர்ச்சி உச்சம் சிக்கல் தீர்வு கதை முடிவு தெரியாமல் தம்பி பள்ளியில் விளையாடிக் கொண்டுதான் இருந்தான். இடையில் ‘எம். எஸ்.எஸ்’ போட்டிக்கும் போய் வந்திருந்தான். ஆனால், தம்பியின் போக்கிலும் நிறைய மாற்றம் இருந்தது. விடியற்காலை 2.00 மணி வரை தம்பியின் அறையில் விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது. தம்பி படிக்கத் தொடங்கியிருந்தான். ‘எஸ்.பி.எம்.’ தேர்வில் கண்டிப்பாகத் தேறி விடுவான் என்று என் உள்மனம் உற்சாகம் பாடியது. அன்று தம்பிக்கு ஒரு கடிதம்வந்திருந்தது. நான்தான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். கடிதம் மலேசியக் காற்பந்துச் சங்கத்திலிருந்து வந்திருந்தது. தம்பியை இளையோர் விளையாட்டுக் குழுவிற்குத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். இரண்டு மாதத்தில் இலண்டனில் தொடக்கப் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள். அப்பாவின் முகத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி. அப்பா, தம்பியை அழைத்துக் கடிதத்தை நீட்டுகிறார். கடிதத்தைக் கொடுத்த கையோடு அம்மாவை அழைக்கிறார்.., “கோகிலா, பையனுக்குத் கண்ணூறு வந்திடப்போது; சுத்திப்போடு...!” நான் வியப்போடு அப்பாவைப் பார்க்கிறேன். அப்பாவின் மனத்தில் மகிழ்ச்சியின் மாமழை பெய்திருந்தது. அதன் ஈரம் அப்பாவின் விழியோரத்திலும் பூத்திருந்தது. பிள்ளைகளின் வெற்றியில்தான் என்ன பெருமிதம் என்று அப்பாவின் ஈரம் கோத்த விழிகள் எனக்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. - படைப்பு : மு.தமிழரசு கதையில் அமைந்துள்ள கதைக் கூறுகள் குறித்துக் குழுமுறையில் கலந்துரையாடுக. சிறுகதைக் கூறுகளை ஆய்ந்தறிக. ஏற்ற வரிபடக்கருவியில் குறித்திடுக. இறுதிப் பயணம் “சரி, அப்ப நான் போயிட்டு வந்துடறேன் லட்சுமி” கரகரத்த குரலில் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் திருவேங்கடம். “இன்னும் ஓர் ஆண்டுதான், நான் பதவி ஓய்வு பெறும் வரைக்குமாவது இருந்திருக்கக்கூடாதா? அதுக்குள்ள இப்படி ஆகணுமா?” புலம்பினார், திருவேங்கடம். “கணேசனுக்குத் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவான். அவன் இலண்டன் போயிருக்கிற சமயம் பார்த்தா இப்படி நடக்கணும்?” என்ற லட்சுமி, திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவளாக, “ஏங்க, நானும் வரட்டுமா?” என்றாள். “அங்க ரொம்பக் கும்பலா இருக்குமே; லட்சுமி. இந்த இறுதிப் பயணத்தில கலந்துக்க நிறைய பேர் வருவாங்க.” 2 1 சிறுகதையில் அமைந்துள்ள சிறுகதைக்கான கூறுகள் குறித்துக் குழுமுறையில் கலந்துரையாடுக. 69 தொகுதி 7


õ÷Šð´ˆ¶î™ ‘மனமாற்றம்’ இதனைக் கருப்பொருளாகக் கொண்டு 250 சொற்களில் கதை எழுதுக. சிறுகதையின் உள்ளடக்கக் கூறுகளை மையமாகக் கொண்டு உமது கதையை அமைத்திடுக. ஒருநிமிடக் கதையின் தொடக்கத்தை மையமாகக் கொண்டு, கதைக்கேற்ற முடிவை எழுதுக. °¬øc‚è™ தானம் சாலைவிபத்தில் தலைக் காயத்துடன் நினைவிழந்து கிடந்த செல்வத்தை உடனடியாக அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தனர். மருத்துவக் குழு அவன் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருந்தது. காயத்தினால் செல்வத்தின் இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. அவன் உயிரைக் காப்பாற்ற ஒரு ‘யூனிட்’ இரத்தம் தேவைப்பட்டது. ஆனால், செல்வத்தின் இரத்தம் மிக அரிதான வகையைச் சேர்ந்தது. “அந்த வகை இரத்தம் நம் இரத்தவங்கியில் இருக்குமா?” சந்தேகத்தோடு கேட்டார் தலைமை மருத்துவர். 3 “வேண்டுமானால் இன்னும் இரண்டு நாள் எடுத்துக்கொள் எழிலன்… அதற்குள் 11.15 விநாடிகளில் இந்த நூறுமீட்டர் ஓட்டத்தை உன்னால் ஓடி முடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டு. இல்லாவிட்டால், நான் இம்ரானைத்தான் தேர்ந்தெடுப்பேன், பிறகு வருத்தம் கொள்ளாதே! இம்ரான் 11.16 விநாடிகள் ஓடி முடித்திருக்கிறான்.” பயிற்றுநர் ஆதங்கத்தோடு சொல்லிவிட்டுப் போன சொற்களில் நிலைகுலைந்து போனான் எழிலன். இவ்வாறு தொடங்கும் கதையினை 250 சொற்களில் எழுதுக. “பரவாயில்லிங்க! இன்னிக்கி விட்டா இனிமே பார்க்கவே முடியாதே! அதனால, நானும்வரேன்! போற வழியிலேயே மாலை வாங்கிட்டுப் போயிடுவோமா?” என்றாள் லட்சுமி. “அந்த ஏற்பாடெல்லாம் பசங்க ஏற்கனவே செஞ்சி வெச்சிருப்பாங்க. நீ சீக்கிரம் கிளம்பு” அவசரப்படுத்தினார் திருவேங்கடம். திருவேங்கடத்தைப் பார்த்ததும் கூடியிருந்தவர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள். சிலர் துக்கம் தாளாமல் கண் கலங்கினார்கள். திருவேங்கடத்திற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அடுத்த சில நிமிடங்களில்... அந்தத் தொடர்வண்டியின் ஓட்டுநரான திருவேங்கடம் ஏறி அமர்ந்து இயக்க, மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தொடர்வண்டி பட்டவெர்த்தை நோக்கி கோலாலம்பூரிலிருந்து தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கியது. 70 தொகுதி 7


õ÷Šð´ˆ¶î™ வாக்கியங்களை முற்றியலுகரச் சொற்களைக் கொண்டு வலிமிகுந்து எழுதி நிறைவு செய்க. கீழ்க்காணும் முற்றியலுகரச் சொற்களுக்கு ஏற்ற இணைச் சொற்களை எழுதுக. °¬øc‚è™ 1. கலைவாணிக்குப் லாய் (படு + சோம்பல்) இருந்ததால் விரைவில் தூங்கச் சென்றாள். 2. நம் அன்றாடவாழ்வில் (புது + புது) புனைவுகள் மாற்றங்கள் இருந்தால்தான் மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும். முற்றியலுகரம் (வலிமிகும் இடங்கள்) ð£ì‹ 4 இலக்கணம் 5.4.8 திரு, நடு, முழு, விழு, பொது, அணு போன்ற முற்றியலுகரச் சொற்களுக்குப்பின் வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். முழு + பாடல் = முழுப்பாடல் நடு + தெரு = நடுத்தெரு திரு, நடு, முழு, விழு, பொது, அணு போன்ற முற்றியலுகரச் சொற்களுக்குப்பின் வலிமிகும். சொற்றொடர்களில், வருமொழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகும். வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால்தான் வல்லினம் மிகும். எ.கா: 1 2 3 முற்றியலுகரத்திற்கு ஏற்றவாறு சேர்த்தெழுதுக. முற்றியலுகரச் சொற்களைப் பிரித்தெழுதி, முற்றியலுகரச் சொற்களில் வலிமிகும் விதியறிக. பத்து முற்றிலுகரச் சொற்களைப் பட்டியலிட்டு, வலிமிகுந்த இயல்புகளை ஆராய்ந்து கூறுக. 1. தெரு + கடை = 2. கணு + கால் = 3. எரு + குவியல் = 4. கரு + சிதைவு = 5. விழு + புண் = 6. பசு + கூட்டம் = 1. முழுப்பேச்சு = 2. பொதுத்தேர்தல் = 3. நடுக்கோடு = 4. உறுப்பசி = 5. அணுப்போர் = 6. பசுத்தோல் = எ.கா: தெரு - தெருப்பாடகன் குழு படு திரு முழு கரு விழு ப ொது 71 தொகுதி 7


இலக்கியச் சுவை ð£ì‹ 1 இலக்கிய நுகர்வு 8 சுவரொட்டியை உற்று நோக்குக. 2 1 மேற்கண்ட சுவரொட்டி குறித்த, காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக. எடுத்துக்காட்டை வழிகாட்டியாகக் கொள்க. சுவரொட்டியை உற்று நோக்கி உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் கூறுக. 1.2.6 காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்பர். இலக்கியச் சுவையைப் பருக வாசிக்கும் ஆர்வம் இருத்தல் வேண்டும். அப்போதுதான், இலக்கியப் படைப்புகளில் உள்ள வளமிக்க சிந்தனைகள், கலை நயங்கள், கற்பனைத் திறன்கள் நம் மரபின் மேன்மைகள் போன்றவற்றை உய்த்துணர இயலும். இலக்கிய நுகர்வின் முதல் நிலை வாசிக்கும் வேட்கையாகும். எனவே, வாசிக்கும் பழக்கத்தைவளர்க்கப் பல்வகையான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எ.கா: வாசிக்கும் சமூகம் ஏன் வெற்றிபெறும் சமூகமாகக் கூறப்படுகிறது? வாசிப்போம் வாரீர்! வாசிக்கும் சமூகம் வெற்றிபெறும் சமூகம் 72


õ÷Šð´ˆ¶î™ இலக்கியப் படைப்புகளை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான வழிவகைகள் தொடர்பான காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக. மலேசியரிடையே இலக்கியப் படைப்புகளை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான காரண காரியங்களைக் கண்டறிய கேள்விகள் கேட்டிடுக. °¬øc‚è™ 3 வாசிப்புப் பழக்கம் குறைந்து போனால், இலக்கியப் படைப்பும் பட்டுப் போகலாம். இது சமூக வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும். பின்வரும் புள்ளிவிவரப் படவரைவை அடிப்படையாகக் கொண்டு வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கான காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக. உலகோர் வாசிப்பு நாட்டம் உலகில் படிப்பறிவுள்ளோர் மிகுந்த நாடு பின்லாந்து ந�ோர்வே இந்தோனேசியா மத்திய ஆசியா லத்தீன் அமெரிக்கா ஆப்பிரிக்கா மத்திய & கிழக்கு ஐரோப்பா கிழக்காசியா உலகம் 100% 97% 89% 99% 90% 70% 100% 92% 84% 99% 77% 59% இளையோர் முதியோர் மூலம் : எடுத்தாளப்பட்டது - UNESCO மலேசியரிடையே இலக்கியப் படைப்புகளை வாசிக்கும் பழக்கம் மேம்பட வேண்டும். இலக்கிய விழாக்களே இலக்கியப் படைப்புகளை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன. எ.கா: எ.கா: 73 தொகுதி 8


இலக்கியம் இன்பம் தரவல்லது. கற்பவர் மனத்தைக் கவரவல்லது. உள்ளத்தைநெகிழ வைப்பது. உலகமொழிகள் அனைத்திலும் இலக்கியம் உருவாகி உள்ளது. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டது. கலை கலைக்காக என்றும் கலை வாழ்க்கைக்காக என்றும் இருதரபட்ட கருத்துகள் இலக்கியவாணர்களிடையே இருக்கின்றன. எஃதெப்படி இருப்பினும், கலை வாழ்க்கைக்குப் பயனளிப்பதாக அமைவதே சிறப்பு. வாழ்க்கைக்குப் பயனளிக்காக் கலை தேவையற்ற ஒன்றே. இலக்கியத்தின் நோக்கம், கலைக்காக; அதன் அழகினைக் காட்டுவதற்காக என்ற வாதம், பொருத்தமில்லாதது. உருவம் மட்டும் நேர்த்தியாக இருந்து, உள்ளடக்கம், சீர்குலைவு தரக் கூடியதாகவும் தவறான ஒழுக்கத்தை உணர்த்துவதாகவும் இருந்தால், அந்த இலக்கியமே பிழைபட்டதாகத்தான் இருக்கும். எனினும், உயர்ந்த கருத்துகளைச் சொல்லுகிற உந்துதலில், அதனை அழகுபட நேர்த்தியாகச் சொல்லவில்லையென்றால், அந்த இலக்கியம் சக்தி இழந்ததாகவும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாததாகவும் ஆகிவிடும். இலக்கியக் கலையின் நோக்கம் வாழ்க்கையைச் சித்தரிப்பது என்று கண்டோம்; வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு ஓரளவாவது உதவுவது என்பது இதன் பொருளாகும். ஆனால், சொல்லுவதை மனங்கொள்ளுமாறு சொல்ல வேண்டும்; உணர்த்துவதை நேர்த்தியுடன் உணர்த்த வேண்டும்; அறம், உரைநடைப் பகுதியை மௌனமாக வாசித்திடுக. ð£ì‹ 2 முருகுணர்ச்சி 2.3.14 இலக்கியம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 74 தொகுதி 8


3 2 1 ‘கலைகள் எல்லாம் ஒரே வகையின அல்ல.’ ஆசிரியரின் கருத்தை 50 சொற்களில் விளக்கி எழுதுக. வாசித்த உரைநடைப்பகுதி தொடர்பான வினாக்களுக்கு விடை கூறுக; எழுதுக. வண்ணமிடப்பட்ட சொற்களுக்குப் பொருளறிக; எழுதுக. அறிவுரையாக அமையும் போது, அது அழகுற அமைய வேண்டும். நீதியும் அறமும், திருக்குறள் போல, கலையியல் கூறுகளுடன், படிப்போர் சுவைத்துணருமாறு அமைய வேண்டும். அதுவே கலையின் பண்பும் நோக்கமும் ஆகும். உருவம், உள்ளடக்கம் எனும் இரண்டும் முக்கியமே. ஆனால், இரண்டும் ஒன்றனையொன்று சார்ந்து, தமக்குள் முரண்பாடுகளன்றி இசைந்து இருக்க வேண்டும். கலையின் பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோதுதான், கலையின் நோக்கம் வெற்றி பெறும். மேலும், கலைகள் எல்லாம் ஒரே வகையின அல்ல. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை எனும் இவற்றின் பண்பும் செயல்பாடும் வேறு வேறு. இசைக்கலை, கருவி இசையாகவும், பாடலாகவும் அமைகிறது. இவற்றின் செயல்பாடுகளும் வேறு. இலக்கியம், மொழியால் ஆன கலை. இதன் பண்பும் செயல்பாடும், ஏனைய கலைகளினும் வேறுபட்டது. ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு வகையான சக்தி அல்லது தன்மை உண்டு. கலைகள், தம்முடைய சிறப்பியல் பண்புகளைக் கைவிடாமல், உயர்ந்த நோக்கங்களையும் விட்டுவிடாமல் அமைந்திருக்க வேண்டும். இலக்கியத்திற்கும் அதன் சிறப்பு இயல்புகள் உள. இலக்கு, வடிவம் மற்றும் உணர்ச்சி போன்ற இன்றியமையாத் தன்மைகளைக் கொண்டிருப்பது இலக்கியமாகும். இத்தகைய இலக்கியப் படைப்புகள் செறிவான இலக்கியமாகவும் சமூக ஈர்ப்பினைக் கொண்டனவாகவும் அமையும். மூலம் : இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது. 1. இலக்கியம் என்பது என்ன? 2. ஏன் ‘கலை அதன் அழகினைக் காட்டுவதற்காக எனும் வாதம்’ பொருத்தமில்லாதது? 3. இலக்கியக் கலையின் நோக்கமும் பண்பும் யாது? 4. ‘கலைகள் எல்லாம் ஒரே வகையின அல்ல’ எனக் கூறப்படுவது ஏன் என நீங்கள் கருதுகின்றீர்கள்? 5. ‘கலை கலைக்காக, கலை வாழ்க்கைக்காக’ இவற்றுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குக. 75 தொகுதி 8


உரைநடையை வாசித்திடுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ இலக்கியக் கலை மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த திரட்டேடு ஒன்றனைக் குழுமுறையில் தயாரித்திடுக. “யான்பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம்” எனும் பரந்த நோக்கினாலும் அருள் உணர்வாலும் சில சமயங்களில் இலக்கியம் படைக்கப்படுகின்றது. ஆன்றோர்களும் அருளாளர்களும் தங்கள் அறிவு முதிர்ச்சியாலும்வாழ்க்கையில் பெற்ற கனிந்த அனுபவத்தாலும் தாங்கள் அடைந்த மனநலமாகிய இன்பத்தை மற்றவர்களும் அடைய வேண்டும் எனும்நோக்கோடு இலக்கியம் படைக்கப்படுவதும் உண்டு. அப்பர் பெருமானின் “மாசில் வீணையும் மாலை மதியமும்” எனத் தொடங்கும் தேவாரப் பாடல், அவர் பெற்ற இறை அனுபவத்தை எடுத்துரைப்பதை நாம் அறியலாம். “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே” எனத் தொடங்கும் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவும் இந்த எண்ணப் போக்கில் தோன்றியதாகும். திருவள்ளுவருடைய “திருக்குறள்” இத்தகைய உந்துதல் சக்தியால் இயற்றப்பட்ட நீதி இலக்கியமாகப்போற்றப்படுகிறது. மூலம் : டாக்டர் மு.வ. 1. வண்ணமிடப்பட்ட சொற்களுக்கு அகராதியின் துணைகொண்டு பொருள் எழுதுக. 2. இலக்கியத்தின் நோக்கம் என்ன? 3. அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் எதனை உணர்த்துகிறது? 4. இந்த எண்ணப் போக்கில் தோன்றியதாகும் என்பது எதனை உணர்த்துகிறது? 5. ஏன் திருக்குறள் நீதி இலக்கியமாகப் போற்றப்படுகிறது? கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. 76 தொகுதி 8


இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டுமே உணரக் கூடிய ஓர் இன்பம். இலக்கியங்களை நாம் வாசிப்பதும் அசை போடுவதும் நம் மனத்தைப் பண்படுத்தும்; வாழ்வை வளமாக்கும். இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாள்களில், பட்டு, அறிந்து, கண்டு சுவைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும். இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தைத் துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று. ‘ஒருவன் படிக்கின்ற புத்தகங்களைப் பொறுத்தே அவன் எத்தகைய மனிதன் என்று அறியலாம்’ என்று ஆங்கில மூதுரை கூறுகிறது. எனவே, நல்ல இலக்கியங்களைப் படிப்பவனே சிறந்த பெரியோனாக விளங்குவான். ஆதலால், நல்ல இலக்கியங்களைப் பெற்று மகிழ்வது நம் தலையாய கடமையாகும். இலக்கியங்களில் இலைமறை காய்களாக இயற்கை, வாழ்வியல் நெறிகள், தத்துவம், இறைவன் போன்ற பொருள் நயங்கள் செறிந்து கிடக்கின்றன. இவற்றின் வெளித்தோற்றங்களாகக் காட்சியளிக்கும் மோனை, எதுகை, மடக்கு, யமகம், திரிபு போன்ற நயங்களை உணர்ந்து சுவைக்கும்போது என்றுமே காணாத இன்பத்தை அடையலாம். இலக்கியச் சுவையில் திளைத்த ஒருவர் ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன், இமையோர் விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார். உலகத்தில் நாம் பல்வேறு மக்களோடு பழகும்போதும், வயிற்றுப் பிழைப்புக்காகப் பல துறைகளிலும் ஓடியாடித் திரிந்து உழைத்து அலுத்துப்போகும் போதும் தோன்றக்கூடிய வெறுப்பை இலக்கியங்களே போக்க வல்லன. ‘ஜான் ஸ்டூவர்ட் மில்’ என்பார், கலைத்துறையை மருந்தாக நாடித் தம் துன்பத்தை நீக்கிக் கொண்டார். அவர் தம் துன்பத்தை நீக்கிக் கொள்ள வோர்ட்ஸ் வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞரின் பாட்டுத் தொகுதி ஒன்றைப் படிக்கத் தொடங்கினார். அவர் தம் மனச் சோர்வை அது மாற்றும் என்ற நம்பிக்கையோடு படிக்கவில்லை. ஆனால், அந்த நூலால் வியக்கத்தக்க வகையில் அவர் ஊக்கமும் ஆறுதலும் பெற்றார். “என் மனநிலைக்கு ‘வோர்ட்ஸ் வொர்த்’ பாட்டுகள் மருந்தாக இருந்தன. வாழ்க்கையின் பெரிய பொல்லாங்கெல்லாம் தவிர்க்கப்பட்ட பிறகு, பெறத்தக்க நிலையான இன்பம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்பாட்டுக்களால் நான் அறிந்தேன். அவற்றின் பயனாக உடனே நான் முன்னிலும் மகிழ்ச்சி உற்றேன்,” என்றார். ð£ì‹ 3 பயன் தரு இலக்கியம் மேலோட்டமாக வாசித்துக் கருத்தறிக. 3.4.30 250 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர். 77 தொகுதி 8


‘இலக்கியமே மனிதனைப் பண்படுத்துகிறது’ எனும் தலைப்பில் வாதிட கருத்துகளைத் திரட்டுக; சட்டகம் அமைத்திடுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ ‘இலக்கியம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்’ எனும் தலைப்பில் 250 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுக. 3 2 1 சட்டகத்தைத் துணையாகக் கொண்டு ‘இலக்கியமே வாழ்வைச் செம்மைப்படுத்தும்’ எனும் தலைப்பில் 250 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுக. ‘இலக்கியமே வாழ்வைச் செம்மைப்படுத்தும்’ எனும் தலைப்பில் வாதக் கட்டுரை எழுதப் பணிக்கப்பட்டுள்ளீர்கள். கட்டுரைக்கான சட்டகத்தைக் குழுவில் கலந்துரையாடித் தயாரித்திடுக. பனுவலிலுள்ள கருத்துகளைத் துணையாகக் கொள்க. வாசித்து அறிந்த கருத்துகளை நண்பரோடு பகிர்ந்து கொள்க. இலக்கியப் படிப்பு என்பது காலத்தைப் பயனுள்ள வழிகளில் போக்குதல், பயனுள்ள எண்ணத்தையும் சொல்லையும் பாராட்டுதல் போன்ற நன்மைகளைக் கொடுக்க வல்லது. பரந்த அறிவையும் விரிந்த பார்வையையும் அளிக்க வல்ல காவிய இன்பத்தைச் சுவைத்து மகிழ்வதைவிடப் பேரின்பம் உலகத்தில் வேறு இல்லை என்பர் சான்றோர். வாய் பருக வயிறு கலனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நின்ற பிறகு, மறைந்தொழிவதோடு தெவிட்டும் தன்மையும்வாய்ந்தன. அளவுக்கு மிஞ்சினால் நோய்க்கிடந்தருவன. செவியுருக உளம் உணரத்தக்க கவிச்சுவையோ, கொஞ்சமும் தெவிட்டாத தெள்ளமுதாய் மேலும்மேலும்வளர்ந்து நினைக்கும் போதெல்லாம் புத்தின்பம் பயப்பதாய் நமதுள்ளத்தை என்றும் இன்பத்தில் ஆழ்த்தவல்லதாய் உள்ளது. சிறந்த இலக்கியங்களில் ஆங்காங்குக் காணப்படும் ஒன்பது சுவை நயங்களும் அவற்றிற்கேற்ற ஓசை நயமும் கற்பவர் மனத்திற்கு மகிழ்ச்சி தருவது கண்கூடு. இலக்கியத்தில் முருகுணர்ச்சியும் கற்பனையும் மிளிர்கின்றன. முருகு என்றால் அழகு என்று பொருள். முருகுணர்ச்சி என்பது அழகுணர்ச்சி என்று பொருள்படும். 78 தொகுதி 8


1 வாசித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து குறளையும் பொருளையும் அறிக. திருக்குறள் ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும் 4.2.5 ஐந்தாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். திருக்குறள் பொருள் கருத்து நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784) ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் செய்யும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும். தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதே உண்மையான நட்பு ஆகும். மாந்த உறவுகளில் நனிசிறப்பு நட்புக்குண்டு. இதற்குக் காரணம் நட்பு என்ற உறவு நாமேதேடிக் கொள்ளும் ஓர் உறவு. தாய்தந்தையரைக் குழந்தை தெரிவு செய்ய முடியாது; குழந்தையைத் தாய்தந்தையர் தேடிக் கொள்ள இயலாது. இப்படியே ஒவ்வோர் உறவும் தாமாக அமைக்கப்பட்டதேயாகும். ஆனால், நண்பனை நாமே தேடிக் கொள்ளலாம். பிற உறவுகளுக்கில்லாச் சிறப்பு நட்புக்கு இருக்க இதுவும் ஒரு காரணமாக அமையலாம். ஆதலால்தான், தெய்வப்புலவர் திருவள்ளுவர், நட்பு குறித்துமட்டும் தனியே ஐந்து அதிகாரங்களைப் படைத்தளித்துள்ளார். அவை முறையே, நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ 79 தொகுதி 8


கீழ்க்காணும் கருத்துக்கேற்ற திருக்குறளையும் அதன் பொருளையும் கூறுக; எழுதுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ நட்பு குறித்துத் திருவள்ளுவர் உணர்த்த விழையும் கருத்துகளைத் தொகுத்துத் திரட்டேடு ஒன்றனைத் தயாரித்திடுக. 3 2 குறளின் பொருளறிய நிலைய விளையாட்டை (Station Games) உருவாக்கி மூன்று குழுவினராக விளையாடுக. மூன்று குழுக்களும் மூன்று இடுபணிகளையும் செய்திட வேண்டும். திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து மனனம் செய்து கூறுக; எழுதுக. பென்சிலுக்கு ஒரு ரப்பர் இருக்கிற மாதிரி நாம் எல்லாருக்கும் ஒரு நண்பன் வேண்டும். நாம் செய்யும் தவறுகளைத் திருத்துவதற்கும் நம்மைச் சரி செய்வதற்கும். குறிப்புகள்: மூன்று நிலையங்களுக்கான இடுபணிகள். சூழல் உருவாக்கல் ஓரங்க நாடகம் உருவாக்கல் ஒரு பக்கக் கதை எழுதல் குறள் குறள் குறள் நட்பு, கூடாநட்பு. நட்பில் நல்லதும் உண்டு, அல்லதும் உண்டு என்பதனாலேயே தேர்ந்தெடுக்கும் நட்பை ஆய்வுக்கு உட்படுத்தி நல்நட்பா, தீநட்பா என உறுதி செய்ய வேண்டுமென்பது வள்ளுவம் உணர்த்தும் நட்பிலக்கணம் ஆகும். மனிதரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும்வழிகோலும் ஒரு துணையாய்த் திகழ்வதும் நட்பே என்றால் மிகையாகாது. எனவே, நட்பைத் தேர்ந்தெடுப்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். ‘உன் நண்பர்கள் யாரென்று சொல்? நீ யாரென்று, எப்படிப்பட்டவன் என்று நான் சொல்கிறேன்’ என்பர் பெரியோர். ஆதலால், சிற்பிபோல் நம்மைச் செதுக்கும் நண்பர்களையே நாம் நாடல் வேண்டும்; தேடல் வேண்டும். நட்பு சிரித்து மகிழ்வதற்கு மட்டுமன்று. நண்பன் தவறு இழைக்குங்கால் அத்தவற்றை இடித்துரைத்துத் திருத்துவதும் நட்பின் இலக்கணம் ஆகும். 80 தொகுதி 8


பொருளியல் உலகு ð£ì‹ 1 கடன் உதவி 9 கீழ்க்காணும் சூழலை வாசித்து, பேச்சுவார்த்தை நடத்தும் முறையைக் குறித்துக் கொள்க. 1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர். வணக்கம் ஐயா. கடந்த வாரம் நான் உங்கள் வங்கியில் கடன் விண்ணப்பம் செய்திருந்தேன். இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதோ எனது விண்ணப்ப நகல். ஓ அப்படியா! நிராகரித்ததற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? தயவு செய்து எனக்குக் கூற இயலுமா? வணக்கம் அம்மா. மன்னிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்து பார்த்தோம். ஆனால், நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆம், கண்டிப்பாக இயலும். உங்களுடைய விண்ணப்பப் பாரங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், சில தகவல்கள் போதவில்லை. எனவே, நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. 81


1 2 மேற்கண்ட பேச்சுவார்த்தையில் பண்புடன் பேசுகின்ற கூறுகள் இடம்பெற்றிருக்கும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைப் பட்டியலிடுக. மேற்கண்ட பேச்சுவார்த்தையில் மறுவிண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் இருந்திருந்தால் பேச்சு வார்த்தை எவ்வாறு அமைந்திருக்கும் என நினைக்கிறீர்? அதனை உம் நண்பருடன் பாகமேற்று வகுப்பில் பேசிக் காட்டுக. எ.கா: மன்னிக்கவும். நான் அவற்றைக் கவனிக்கவில்லை போலும். மன்னிக்கவும். நான் அவற்றைக் கவனிக்கவில்லை போலும். அதனால், உங்களுக்குத் தேவையான தகவலை என்னால் கொடுக்க இயலவில்லை. நான் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற இயலுமா? என்ன? தகவல்கள் போதவில்லையா? என்னுடைய கைப்பேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றைக் கொடுத்திருந்தேனே? என்னைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே? தாராளமாக. எந்தவொரு சிக்கலும் இல்லை. நீங்கள் எங்களுக்கு முழு விவரங்களுடன் விண்ணப்பக் கடிதம் எழுதுங்கள். மறுபரிசீலனை செய்து தெரியப்படுத்துகிறோம். மன்னிக்கவும் அம்மா. நீங்கள் கொடுத்திருந்த தகவல்கள் உங்கள் சுயவிவரங்களை ஆராய்ந்து பார்ப்பதற்குத்தான். விண்ணப்பம் தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு அன்று. காரணம், விண்ணப்பப் பாரத்தில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோமே. 82 தொகுதி 9


நீங்கள் கணினி வாங்குவதற்குக் கடன் பெற விரும்புகிறீர்கள். மாணவர் எனும் முறையில் வட்டி விகிதத்தில் சிறப்புக் கழிவு பெறுவதற்கு வங்கி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்துக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ வங்கிகள் தனிநபர்களுக்குக் கடன் வசதி செய்து கொடுத்தால் மாணவர்கள் கணினி மற்றும் கல்வி உபகரணப் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகிறீர். அதற்காக வங்கி உயர் அதிகாரி ஒருவருடன் பேச்சு வார்த்தை செய்வது போல் ஒரு சூழலைக் கைப்பேசியில் காணொலி படம் எடுத்து வகுப்பில் படைத்திடுக. 3 சிறு வணிகம் தொடங்குவதற்கு வங்கியில் கடன் விண்ணப்பம் செய்திருந்தீர்கள். ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து வங்கி அதிகாரியிடம் பேச்சு வார்த்தை செய்வது போல் நடித்துக் காட்டுக. தகவல்களைத் துணையாகக் கொள்க. அரசு உதவித் தொகையை அதிகம் எதிர்பார்ப்பது இலாபம் / வரவு செலவு போதிய அளவு இல்லை முழுமையான விவரங்கள் இல்லை வியாபாரத்தை விரிவுபடுத்த இயலாத நிலை ஏற்கனவே உள்ள கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியிருத்தல் வீடு/ நிலப் பத்திரம் – மறுபடியும் கடன் பெறும் ஆற்றல் உள்ளது. வங்கியில் நிரந்தர சேமிப்புப் பணம் உள்ளது. வியாபாரம் முறையாக நிருவகிக்கப்பட்டதற்கான சான்று உள்ளது. கடன் விண்ணப்பம் 83 தொகுதி 9


வங்கி எனும் சொல்லுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. அவை வைப்பகம், பொருளகம், சேமிப்பகம் போன்றவையாகும். தொடக்கக் காலத்தில் வட்டிக்கடை என்றும் பெயர் வழங்கப்பட்டு வந்தது. ஆங்கிலத்தில் இன்று நாம்பயன்படுத்தும்பாங்க் (bank) எனும் சொல் அடிப்படையில் ஜெர்மானிய மொழியான பாங்க் (bank) எனும் சொல்லிலிருந்து உருவானது. இதன் பொருள் கூட்டுப் பங்கு நிதி (Joint Stock Fund) அல்லது குவியல் (heap) என்பதாகும். இந்த பாங்க் என்ற சொல் பிரெஞ்சு மொழிச் சொல்லான ‘பாங்கே’ (Bangue) மற்றும் இத்தாலிய மொழிச் சொல்லான ‘பாங்கா’ (Banco) என்ற சொல் ஆகியவற்றிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றுகூட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இத்தாலிய மொழியில் ‘பாங்கா’ எனப்படுவது இருக்கையைக் குறிக்கும். அதிலிருந்து பணம் மாற்றுபவர் அல்லது இடைத்தரகர்கள் பணத்தின் ஒருவகையை மற்றொரு வகையாக மாற்றித் தருவதன் மூலம் வங்கி வாணிபம் செய்தனர். இவ்வாறு, பழங்கால வங்கியியல் முறை பணமாற்று வாணிபத்துடன் தொடர்பு கொண்டிருந்தது. உலகின் முதல் பொது வங்கி நிறுவனம் ‘வெனிஸ் வங்கி’ ஆகும். இது 1157இல் தோற்றுவிக்கப்பட்டது. ‘பார்சிலோனா வங்கி’ மற்றும்ஜெனோவா வங்கி முறையே1401, 1407ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டன. இவையே நவீன வணிகவங்கிகளின் முன்னோடியாகக் கருதப்படுகின்றன. எனினும், 1609ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாம் வங்கி மற்றும் 1690இல் மாம்பர்க் (Mamburg Bank) வங்கிகளுக்குப் பின்னர் பரிவர்த்தனை வங்கி முறை வளர்ச்சியுற்றது. இங்கிலாந்து நாட்டின் நவீன வங்கிமுறையைத் தோற்றுவித்ததன் பெருமை இத்தாலியைச் சேர்ந்த இலம்பார்டி யூதர்களையே சாரும். இவர்கள் இத்தாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். இலம்பார்டி யூதர்கள் இங்கிலாந்தில் பணத்தை வட்டிக்குக் கொடுக்கும் வாணிபம் நடத்தினர். 1694ஆம் ஆண்டு ‘இங்கிலாந்து வங்கி’ தொடங்கப்பட்டது. 1833இல் கூட்டுப் பங்கு வணிக வங்கிமுறை (Joint Stock Commercial Banking) தொடங்கப்பட்டது. நவீன வங்கிமுறை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வளர்ச்சியுற்றது எனலாம். தொழிற்புரட்சிக்கு முன்னர் வியாபார அளவு மிக மிகச் சிறியதாக இருந்தது. தொழிற்புரட்சிகளுக்குப் பிறகு வியாபார நடவடிக்கைகள் அதிகரித்தன. எனவே, கூட்டு வாணிப முறையிலான வியாபார அமைப்புகள் நிறுவப்பெற்றன. இத்தகைய வாணிபமுறை முதலீடு செய்பவர்களை விரிவடையச் செய்தன. எனவே, குறைவான முதலீடுகள் உள்ளவர்கள்கூட பெரிய தொழில் நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆனார்கள். எனினும், இதில் பல இடர்ப்பாடுகள் இருந்தமையால் பலர் இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை மௌனமாக வாசித்திடுக. ð£ì‹ 2 வங்கி பிறந்த கதை 2.3.15 வங்கியியல் தொடர்பான உரைநடைப் பகுதியைவாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். 84 தொகுதி 9


2 1 மேற்கண்ட உரைநடைப் பகுதியைக் கருத்தூன்றி வாசித்து வங்கித் துறை வளர்ச்சி குறித்து நிரலொழுங்கு வரைபடத்தை நிறைவு செய்க. 1157 விரும்பவில்லை. எனவே, மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நிதியைத் திரட்டுவதற்காக ஒரு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டிற்காக முதலீட்டினைத் திரட்டும் ஒரு நிறுவனமே ‘வங்கி’ எனப்பட்டது. எனவே, ‘வங்கி’ என்பது பணம் மிகையாகக் கொண்டிருப்பவர்களையும் பணம் தேவைப்படுபவர்களையும் இணைக்கும் நிறுவனமாக விளங்கியது; இன்றும் விளங்கி வருகின்றது. தொடக்கக் காலத்தில் வங்கிகள் மூன்று வகையான நிறுவனங்களை உள்ளடக்கியிருந்தன. அவை ‘வணிகவங்கி’ (Merchant Banker), பணத்தைவட்டிக்குக் கொடுப்பவர் (The Money Lender), பொற்கொல்லர் (Goldsmith) ஆகியவை ஆகும். வணிகவங்கி என்பது அடிப்படையில் வாடிக்கையாளர்களின் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைத் தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொள்வதாகும். இரண்டாவது, பணத்தை வட்டிக்குக் கொடுப்பது. பணத்தை வட்டிக்குக் கொடுப்பவர் தம்மிடம் உள்ள அதிகப்படியான பணத்தைத் தேவைப்படுபவர்களுக்குக் கடனாகக் கொடுத்து, அதற்கு உண்டான வட்டியையும் பெற்றுக்கொள்வர். மூன்றாவது, பாதுகாப்புப் பெட்டகமாகச் செயல்படுவது. பொற்கொல்லர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின், மதிப்புமிக்க பொருள்களான தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றைத் தமது சொந்தப் பாதுகாப்பில் வைத்துக்கொள்வர். வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும்போது அவற்றைத் திருப்பிக் கொடுத்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்வர். இப்படிச் செயல்படும் இந்த வங்கி தொடர்புடைய வணிக நடவடிக்கைகள் காலம் கடந்து சென்றாலும் அதன் அடிப்படைத் தன்மையிலிருந்து மாறுபடாமல் தொடர்ந்து சேவையை வழங்கி வருவதாகும். 1. வண்ணமிடப்பட்ட சொற்களுக்குச் சூழலுக்கு ஏற்றவாறு பொருள் கூறுக. 2. வங்கியை வட்டிக்கடை என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்ன? 3. பழங்கால வங்கியியல் முறை பணமாற்று வாணிபத்துடன் எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தது? 4. நவீன வங்கிகளின் உருவாக்கத்திற்கு எவை காரணமாக அமைந்துள்ளன? 5. இணைப்பு நிறுவனங்களாக வங்கிகள் செயல்படுவதற்கான காரணம் என்ன? 6. தற்கால வங்கி செயல்பாடு, கடந்த கால செயல்பாடுகளோடு எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை ஒப்பிட்டு எழுதுக. கீழ்க்காணும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. 85 தொகுதி 9


உமது வட்டாரத்தில் உள்ள ஒரு வங்கி பற்றிச் சிறுகுறிப்புகள் எழுதுக. குறிப்புகளுக்கேற்ற தகவல்களைத் திரட்டி எழுதுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ வாசித்திடுக. இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பிறகு சில நாடுகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தன. அதாவது, பல லட்சம் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு நாடும் நாட்டு மக்களும் வாழ்வாதாரமின்றிப் பசி, வறுமை, போருக்குப் பிந்திய உயிரிழப்புகளும் நிகழவே செய்தன. இதன் அடிப்படையில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும், மேலும் 44 நாடுகளிலிருந்தும் சுமார் 730 பேராளர்களைக் கொண்டு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் யாதெனில், மேற்கண்ட உறுப்பிய நாடுகளில் பொருளாதாரமும் நிதிநிலையும் சீராக இருப்பதை உறுதி செய்வதாகும். இதனைத் தொடர்ந்து, பிரிட்டனிலிருந்து ஜோன் மேய்னட்டும் (John Maynard) அமெரிக்காவிலிருந்து ஹேரி வைட்டும் (Harry White) ஓர் அமைப்பு உருவாகுவதற்கு முதுகெலும்பாக இருந்தனர். அந்த அமைப்பு போருக்குப் பிறகு சீரழிந்து கிடக்கும் பொருளாதார நிலையை மீட்டெடுப்பதைத் தனது கடப்பாடாகக் கொண்டிருந்தது. இவ்வாறான அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை பல்வேறு உறுப்பிய நாடுகளிடையே நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களுக்குப் பின்னரே உருவாக்கப்பட்டது. அதன் இறுதி கலந்துரையாடலாக அமைந்ததுதான் பெரட்டன் வூட்ஸ் (Bretton Woods) மாநாடு. அம்மாநாடு 1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் அட்லாண்டிக் சிட்டியில் (Atlantic City) நடைபெற்றது. அந்த மாநாட்டின் தீர்மானமாக உருவானதுதான் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் உலக வங்கியும் (World Bank) அனைத்துலக நிதியகமும் (IMF) ஆகும். வங்கியின் தோற்றம் பயன் வாடிக்கையாளர்கள் 3 மேற்கண்ட உரைநடைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு குழுவாகச் சேர்ந்து சுவரொட்டி ஒன்றனைத் தயார் செய்து வகுப்பில் படைத்திடுக. 1. போருக்குப் பிந்திய பொருளாதார நிலையை உறுப்பிய நாடுகள் எவ்வாறு கடந்து வந்தன? 2. ஒரு மாநாடு நடைபெற்ற பிறகு சில தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன. ஏன் அந்தத் தீர்மானங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன? 3. இணையத்தின் துணைகொண்டு உலக வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துச் சிறுகுறிப்பு எழுதுக. கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. 86 தொகுதி 9


கடன் அட்டை பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் ð£ì‹ 3 வரமும் சாபமும் 3.4.31 250 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர். நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப இன்றைய காலக்கட்டத்தில் பொருளின்றி அமையாது உலகு என்று கூறும் அளவிற்குப் பொருளாதாரம் உலகை ஆட்டிப் படைக்கும் சக்தியாக அமைந்துவிட்டது. தொடக்கக் காலத்தில் பண்டமாற்று நடவடிக்கைகளில் தொடங்கிய வணிகப் பரிவர்த்தனைகள், இன்று புதிய பரிணாமத்தை அடைந்துள்ளன. அதாவது, கடன் அட்டைப் பயன்பாடு. இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது. கடன் அட்டையைப் பயன்படுத்துவதனால் பல நன்மைகள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக அமைவது அதன் பாதுகாப்பு அம்சம் ஆகும். கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் ரொக்கப் பணத்தைக் கையில் சுமந்து செல்வதைக் காட்டிலும் கடன் அட்டை வடிவில் பயன்படுத்துவதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றனர். சில வேளைகளில் கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்குக்கூட கடவுச் சொல் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பயன்படுத்த இயலும். அதனால், பணம் திருடு போவதற்கும் காணாமல் போவதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த வகையில் மிகவும் பாதுகாப்பான நிலையில் வணிக நடவடிக்கை நடைபெறுவதை நாம் இன்று காண முடிகிறது. ஆகையால், கடன் அட்டையைப் பயன்படுத்துவதால் பயனர்களின் பண பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அடுத்ததாக, ஆபத்து அவசர வேளைகளில் பணம் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் கடன் அட்டை நமக்குக் கைகொடுத்து உதவும். நமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் எப்போது என்ன சிக்கல் ஏற்படும் என்று தெரியாது. நம்மிடம் போதிய அளவில் சேமிப்பு இல்லையெனில் ஆபத்து அவசர வேளைகளுக்குக் குறிப்பாக, மருத்துவத் தேவைகளுக்கோ இதர உடனடித் தேவைகளுக்கோ கடன் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறான சூழலில் பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்படாது. இப்படிச் சுயகாலில் நிற்கும் தம்முடைய தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் திறனை அவர்கள் பெற்றிருப்பர். இதன் வாயிலாக இவ்வாறான கடன் அட்டை நிச்சயமாக நமக்கு நன்மையைத் தரும் ஒன்றாகவே அமைகிறது. கடன் அட்டைப் பயன்பாடு எவ்வளவுதான் நன்மைகளைக் கொண்டு வந்தாலும் அதனால் தீமைகளும் விளையவே செய்கின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு மிகுந்த கட்டுப்பாடு தேவை. ஆனால், கட்டுப்பாடற்ற கடன் பற்றட்டை மிக எளிதில் ஒருவரைப் பெரும் கடன்காரராக உருவாக்கிவிடுகிறது. கையில் பணம் இல்லையெனினும் கடன் அட்டை இருக்கின்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாகச் செலவு செய்துவிடுகின்றனர். பிறகு அந்தக் கடனை அடைப்பதற்கு மாதா மாதம்வட்டியையும் அசலையும் கட்டி முடிப்பதற்குள் சுமை கூடிக்கொண்டே போகிறது. வாசித்திடுக. 87 தொகுதி 9


1. விடுமுறைக் காலங்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கடன் அட்டை உதவியாக இருக்கும் - இந்தக் காலக்கட்டங்களில் வழங்கப்படும் சிறப்புக் கழிவுகளை அனுபவிக்க முடியும். - செலவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 2. சுற்றுலாத் தலங்களில் கடன் அட்டை பயன்பாடு - ஆடம்பரத் தங்கும் விடுதிகளில் தங்க முடிகிறது - கட்டுப்பாடின்றிச் செலவுகள் அதிகரிக்கின்றன. கீழ்க்காணும் கருத்துகளை விவரித்து எழுதுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ இளைஞர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் எனும் தலைப்பில் கருத்தூற்று முறையில் கருத்துகளைச் சேகரித்திடுக. 3 1 2 மேற்கண்ட கருத்துகளைத் துணைகொண்டு 250 சொற்களில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக. விவாதக் கட்டுரையில் காணப்படும் முக்கியக் கருத்துகளை அடையாளங்கண்டு எழுதுக. ‘கல்விக் கடன்’ பெறுவதால் ஏற்படும் விளைவுகள் எனும் தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைப் பட்டியலிடுக. மலேசிய வடப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சுமார் 35 விழுக்காடு கடன் அட்டைப் பயனர்கள் பெரும் கடன் சுமையை எதிர்நோக்கி வருகின்றனர் எனும் செய்தி இதனை உறுதிப்படுத்துகிறது. ஆக, கடன் அட்டைப் பயன்பாடு தீமையைக் கொண்டு வருகிறது என்பதனை இதன்வழி அறியமுடிகிறது. கடன் அட்டையின் பயன்பாட்டால் நன்மைகளும் தீமைகளும் ஒருங்கே அமைந்திருந்தாலும் பயனர் எனும் நிலையில் இவை இரண்டையும் நன்கு சீர்தூக்கிப் பார்த்து அதன் பயன்பாட்டை உறுதி செய்வது நம் கடமையாகும். நம் செயல்பாடுகளால்தாம் நாம் நம் எதிர்காலத்தை வடிவமைக்க இயலும். ஆகவே, நமது நிம்மதி நிறைந்த எதிர்கால வாழ்க்கைக்குச் சிறந்த முறையில் திட்டமிட்டு வாழ்வதே சாலச் சிறந்ததாகும். 88 தொகுதி 9


பெயரெச்சம் ð£ì‹ 4 இலக்கணம் 5.5.10 பெயரெச்சத்தின்பின் வலிமிகாது என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். 1 2 பெயரெச்சங்களை அடையாளங்கண்டு கூறுக. அடையாளங்காணப்பட்ட பெயரெச்சங்களைக் கொண்டு வாக்கியம் அமைத்திடுக. எ.கா: வாடிய பயிர் எ.கா: பறந்த + பறவை = பறந்த பறவை ஆடுகின்ற + பெண் = ஆடுகின்ற பெண் பெயரெச்சத்தின் பின் வலிமிகாது பார்த்த படம் பார்த்த படம் + முற்றுப் பெறாதது - எச்சம் பெயர்ச்சொல் வாடிய பயிர் ஓடிய பையன் பிடித்துக் கொடு குடித்த தேநீர் தேடிய குருவி கடித்துத் தின்றான் எழுதிய கதை எடுத்துச் சொல் கூடிப் பேசினர் படித்த புத்தகம் ஆடிப் பாடு • சொற்றொடர்களில், வருமொழி ‘க், ச், த், ப்’ ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது. 89 தொகுதி 9


உரைநடைப் பகுதியில் பெயரெச்சத்தின்பின் வலிமிகாது என்ற விதி கொண்ட சொற்றொடர்களை அடையாளங்கண்டு எழுதுக. °¬øc‚è™ இன்று துரிதமாக வளர்ந்து வருகின்ற விவசாயத் துறையில் பயிர்கள் மட்டுமல்ல கால்நடை வளர்ப்பும் அடங்குகிறது. கால்நடை வளர்ப்பில், குறிப்பாகப் பால் உற்பத்தித் துறையில் எருமைப் பால் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. காரணம் விலை மலிவு. தாவரங்கள் பயிரிடுவது விவசாயிகளின் உன்னத செயலாகும். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகவில்லையென்றால் விவசாயிகள் உழைத்த பாடு யாவும் கேள்விக் குறியே. அவர்களின் கடின உழைப்பிற்கு உரிய செல்வம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. விவசாயத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் விவசாயிகள் கொள்கையில் என்றும் மாறாமல் உலகத்தார் போற்றும் இனமாகவே வாழ்ந்து வருகின்றனர். õ÷Šð´ˆ¶î™ பெயரெச்சத்தின்பின் வலிமிகாது என்ற விதிகளுக்கேற்ற எடுத்துக்காட்டுகள் பத்தினை எழுதுக. 3 அட்டவணையில் உள்ள சொற்களுக்கு ஏற்ற சொற்களை எழுதிப் பெயரெச்சங்களை உருவாக்குக. கேட்ட அடித்த துடித்த விளைகின்ற தலைவன் குதிரை பாடல் பயிர் 90 தொகுதி 9


Click to View FlipBook Version