The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-86214571, 2024-04-12 04:16:33

BAHASA TAMIL TING 5

BAHASA TAMIL TING 5

பூவுலகின் சொர்க்கம் ð£ì‹ 1 வெனிஸ் நகரம் 10 வருணனையைக் கவனமுடன் கூர்ந்து செவிமடுத்திடுக. ஏட்ரியாட்டின் கடல் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 குட்டித் தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் வந்து சேரும் நதிகள் வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின்றன. கடல் அலைகளும் நீரோட்டமும் தொடர்ச்சியான மணல் திட்டுகளை உருவாக்கியிருக்கின்றன. இவை சுமார் 51 கி.மீ. நீளத்திலும் 14 கி.மீ. அகலத்திலும் உள்ள கடற்கழியைச் சூழ்ந்து அமைந்துள்ளன. கடலுக்குள் நுழையும் மூன்று குறுகிய திறப்புகள் ஒரு மீட்டர் உயரக் கடல் அலைகளுக்கும் கடல் சார்ந்த போக்குவரத்துக்கும் வழி செய்கின்றன. ஓயாத வணிகப் போக்குவரத்துக்குப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கடற்கழியே கடைசி நிறுத்தமாக இருந்தது. வெனிசுக்கு வருகை புரியும் பலருக்கு, இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றதுபோல் இருக்கும். இந்நகரத்தின் சூழல் கண்கவர்மிக்கதாக அமைகிறது. மிகவும் அமைதியான நகரமாக அது விளங்குகிறது. அதுவே இந்நகரத்தின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. போக்குவரத்து வசதிகள் குறுகிய நடைபாதைகள், கால்வாய்கள் என்று பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கால்வாயை ஒட்டியுள்ள பாதைகள் கால்வாய்க்குக் குறுக்கே செல்லும்வளைந்த கற்பாலங்களின் வழி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடைபாதையைக் காட்டிலும் நீர்ப்போக்குவரத்தே இங்கு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆகவே, படகுகளே இந்தத் தண்ணீர் தேசத்தில் வலம் வருகிற ஒரே வாகனம். வெனிஸ் நகரம் கண்ணைப் பறிக்கும் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், கம்பீரமாகக் காட்சியளிக்கும் மணிக்கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரமாண்ட கடற்பகுதியாகக் காட்சியளிக்கின்றன. இக்காட்சியைக் காணக் கண்கள் நூறு வேண்டும். முக்கியச் சதுக்கங்களில் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் சுண்டி இழுக்கும் ஈர்ப்பாக அமைகின்றன. இடையிடையே, மெல்லிசை ஒலியைக் கேட்டு மகிழும் தருணமாகவும் இஃது அமைகின்றது. அங்கு உட்கார்ந்து, வருவோரையும் போவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள கட்டடக் கலையை இரசித்துக் கொண்டும் இருக்கலாம். கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. இங்குள்ள அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருக்கின்றன. 1.3.11 சூழலை வருணனை செய்வர். 91


கீழ்க்காணும் படத்தின் காட்சியைக் குறிப்புகள் கொண்டு வருணனை செய்க. °¬øc‚è™ நீர்ப் பகுதி கட்டட அமைப்பு நடவடிக்கை மின் விளக்குகள் õ÷Šð´ˆ¶î™ நீர் பார்த்து வியந்த பழங்காலக் கட்டடம் ஒன்றனை வருணித்துக் கூறுக. 3 1 2 கீழ்க்காணும் படத்தை உற்றுநோக்கி குறிப்புகள் துணைகொண்டு வருணனை செய்க. அந்த வரிகளைத் தெரிவு செய்ததற்கான காரணத்தை நண்பரோடு விவாதித்திடுக. மேற்கண்ட வருணனையில் உம்மைக் கவர்ந்த வரிகளை நண்பரோடு பகிர்ந்திடுக. தோற்றம் தனித்துவம் மனமகிழ்வு நீர்வீதி வெனிஸ் நகரம் நகரின் நடுவே நதிகளில் எப்போதும்வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரில் படகுச் சவாரி செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி. இரு மருங்கிலும் வரிசையாக அமைந்த கட்டடங்கள். நடுவே சலசலவென ஓடும் நீரின் ஓட்டம்; இதில் மிதக்கும் படகுகள். இங்கே உள்ள அலங்காரப் படகுகளை எண்ணி மாளாது. சுற்றுலாப் பயணிகள் அதில் பயணித்துக் கொண்டே இரு பக்கமும் வேடிக்கை பார்ப்பதில் தனி இன்பம் காண்கிறார்கள். வெயில் காலச் சூரியனின் கடுமையையும், பனிக் காலக் குளிரையும் தாங்கும் அளவுக்கு இந்தக் கால்வாய்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. 92 தொகுதி 10


கம்பர்: அரசே! உங்கள் சிரிப்பின் பொருள் எமக்குப் புரியவில்லை. குலோதுங்கன்: ஆ ஆ ஆ! கம்பரே, அதுவொன்றுமில்லை. நீரும் எமது குடிமக்களும் எமக்கு அடிமைகள்தாமே என்று நினைத்துத்தான் சிரித்தேன். கம்பர்: (கடும் சினத்துடன்) என்ன சொன்னீர்? யாமும் உமது அடிமை என்றா கருதுகிறீர்? ஒருபோதும் அவ்வாறு இருக்க சம்மதியேன். இஃது ஒப்பாது. அரசே! நீவிர் புவிச்சக்ரவர்த்தி, நானோ கவிச்சக்கரவர்த்தி. உமக்கு நான் அடிமையாகேன். இதோ இத்தருணமே நான் இங்கிருந்து விடைபெறுகிறேன். (என்று கூறிக்கொண்டே அவையைவிட்டுக் கிளம்ப முயல்கிறார்) குலோதுங்கன்: கம்பரே! நீவீர் கவிச்சக்கரவர்த்தியாய்த் திகழ்கிறீரே, அது எம்முடைய அரசவையில்தான் என்பதை மறந்து விடாதீர். நீர் இங்கு இருக்கும்வரைதான் உமக்கு எல்லாப் புகழும் பெருமைகளும். எம்மை விட்டு விலகிச் சென்றுவிட்டால் உமது புகழ் மழுங்கிவிடும். நினைவில் வைத்துக் கொள்ளும். மற்ற தேசத்தில் உமக்கு இத்தகைய பெருமை கிடைக்காது. கம்பர்: (மனம் பொறுக்காதவராய்) கொல்லிமலைத் தேன்சொரியும், கொற்றவா! நீர் முனிந்தால் இல்லையோ எங்கட் கிடம்? குலோதுங்கன்: ம்ம்ம்... என்ன எம்மையே பகைத்துக் கொள்கிறீரோ? யாரிடம் பேசுகிறீர் என்று நினைவிருக்கிறதா? நாடகத்தை மெளனமாக விரைந்து வாசித்திடுக. ð£ì‹ 2 கவிச்சக்கரவர்த்தி கம்பன் 2.1.11 நாடகப் படிவங்களைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். குலோதுங்கன் அரசவையில்... 93 தொகுதி 10


கம்பர்: ஏன் தெரியாது? முன்பே தெரியவில்லையென்றாலும் இப்போது உம்மைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டோம். (என்று கூறிக்கொண்டே அணிகலன்களைக் கழற்றிவைத்துவிட்டு வெளியேற முனைகிறார்.) குலோதுங்கன்: என்ன? நாட்டுக்கு அரசரான எம்மிடமே இவ்வளவு அகம்பாவத்தோடு பேசுகிறீரா? இனி உம் வாழ்க்கையில் எல்லாம் துன்பம்தான். எம்மிடமா பகைத்துக் கொள்கிறீர்? கம்பர்: மன்னவரும் நீயோ? வளநாடும் உமதோ? அப்படியே வைத்துக் கொள்ளவும். (என்ற பாடலைப் பாடியவாறே, அவையைவிட்டு வெளியேறுகிறார்.) அவ்வாறு அவையைவிட்டு வெளியேறிய கம்பருக்கு, நீண்ட தூரம் நடந்த களைப்பு. அப்போது அவர் பார்வையில்பட்டது அக்காட்சி. தூரத்தில் பழைய கரைத்த மோரை எடுத்து வந்த மனைவி, உழுது கொண்டிருந்த தன் கணவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தாள். தாகம், பசி மேலீட்டால் கம்பர் தாமும் அங்குச் சென்று கையை நீட்டுகிறார். உழவன்: ஐயா, இதோ இந்தக் குவளையில் குளுமையான மோர் இருக்கிறது. இதனை அருந்தி தங்கள் பசியைப் போக்கிக் கொள்ளுங்கள். கம்பர்: மிக்க நன்றி ஐயனே! என் தாகத்தையும் பசியையும் போக்கிய புண்ணியவானே. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. உழவன்: கைம்மாறு கருதாது வந்தவருக்கு உணவளிப்பதே எங்கள் மரபு. இதுவே எங்களுக்குப் பாக்கியமும் கூட. கம்பர் : உங்களுக்கு இது மரபாக இருக்கலாம். பதிலுக்கு நான் ஏதாவது கொடுப்பது எனது மரபு. ஆனால், தற்போது என்னால் இயலக்கூடிய கைம்மாறு ஒன்றுதான் உண்டு. ஆம் அதுதான் கவிதை, தமிழ்க்கவிதை. இதோ கேட்டு இன்புறுங்கள். அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும் எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச் செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்! உழவன்: வேளாண் குடியைச் சேர்ந்த எனது மகத்துவத்தை இவ்வளவு அழகாக மனமுருகிப் பாடிய விதம் கண்டு நெகிழ்ந்து விட்டேன் ஐயா. மிக்க மகிழ்ச்சி. கம்பர்: தாழ்வில்லை ஐயா. நான்தான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். நான் சென்று வருகிறேன். உழவன்: சென்று வாருங்கள் ஐயா. வாழ்க உம் தமிழ்த்தொண்டு! 2 1 நாடகத்தில் வரும் கதைமாந்தர்களைப் பாகமேற்று, சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக. நாடகத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக. 94 தொகுதி 10


போர்சியா: சைலக்! சற்று பொறுங்கள். மறுபடியும் சொல்கிறேன். மூன்று மடங்கு பணம் உங்களுக்குத் தர நான் ஏற்பாடு செய்கிறேன். இரக்கம் காட்டுங்கள் சைலக்! மூன்று மடங்கு பணம் பெற்றுக்கொள்ளுங்கள்; நான் இந்த ஒப்பந்த பத்திரத்தைக் கிழித்துவிடுகிறேன். சைலக்: எந்த ஒரு மனிதனின் வார்த்தைகளும் என்னுடைய முடிவை மாற்ற முடியாது. பத்திரத்தின் விதிமுறைகளின்படி நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன். தீர்ப்பை வழங்குங்கள். அண்டோனியோ: இந்த நீதி மன்றத்தைத் தீர்ப்பு வழங்கும்படி நானும் கேட்டுக்கொள்கிறேன். (நீதி மன்றக் காவலர்கள் அண்டோனியோவை ஒரு நாற்காலியில் அமர வைத்துக்கைகளையும், கால்களையும் கட்டுகிறார்கள்.) போர்சியா: நல்லது! இந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது போல அண்டோனியோவின் உடலிலிருந்து சைலக் ஒரு பவுண்டு தசையை வெட்டி எடுத்துக் கொள்ளட்டும், அண்டோனியோ! உங்களுடைய நெஞ்சைக் காட்டுங்கள். சைலக்: (மகிழ்ச்சியுடன்) மிகவும் அருமையான தீர்ப்பு. இளம் வழக்கறிஞரிடமிருந்து இப்படி ஒரு அறிவுத் திறமையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். போர்சியா: சைலக்! தசையை நிறுத்துப் பார்க்க நிறைகோல் கொண்டு வந்திருக்கிறீர்களா? சைலக்: நான் ஏற்கனவே கொண்டு வந்திருக்கிறேன். போர்சியா: ஒரு மருத்துவரையும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும், சைலக்! இல்லையென்றால், இரத்தம் சிந்தியே அண்டோனியோ இறந்து விடுவார். சைலக்: பத்திரத்தில் அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? இல்லையே! (சைலக்கின் எண்ணம் அண்டோனியோ இரத்தம் வடிந்து மடியட்டும் என்பதே.) 3 கீழ்க்காணும் நாடகத்தைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக. தொகுதி 10 95


மேற்கண்ட நாடகப் பகுதியில் போர்சியாவின் வசனத்தை மட்டும் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்திடுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ குழுவில் கலந்துரையாடி ஒரு நாடகப் பகுதியைத் தெரிவு செய்க. அப்பகுதியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்்குறிகளுக்கேற்ப வாசித்து ஒலிப்பதிவு செய்க. தொடர்ந்து வகுப்பில் ஒலிபரப்பிடுக. போர்சியா: பத்திரத்தில் மருத்துவரைப் பற்றி இல்லாவிட்டாலும் நல்ல மனத்துடன் ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்யலாம் அல்லவா? சைலக்: நேரம் கடந்து கொண்டிருக்கிறது, தீர்ப்பை உடனே நிறைவேற்றுங்கள். (பழி வாங்கும் விழிகளோடு அண்டோனியோவைப் பார்த்துக் கொண்டே சைலக் நீண்ட கத்தியைத் தீட்டுகிறான்.) சைலக்: ஆகா! இதுதான் அற்புதமான தீர்ப்பு! அண்டோனியோ, வா! தயாராக என் முன்னே வா! இந்தக் கூர்மையான கத்தியால் உன் உடலிலிருந்து ஒரு பவுண்டு தசையை வெட்டி எடுத்துக் கொள்கிறேன். போர்சியா: பொறுங்கள் சைலக்! நிறைகோல் தயாராக இருக்கிறதல்லவா? தசையை எடை போடும் போது நிறைகோலின் முள் ஒரு மயிரிழைகூட அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ சாயக் கூடாது, அது போல, ஒரு துளி இரத்தம்கூட சிந்தக்கூடாது. ஏனென்றால், பத்திரத்தில் ஒரு பவுண்டு தசை எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, ஒரு பவுண்டுக்கு மேல் அதிக தசையோ, இரத்தமோ எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்படவில்லை. அண்டோனியோவின் ஒரு துளி இரத்தம் சிந்தினால்கூட, உங்களுடைய சொத்துகள் முழுவதும் வெனிஸ் நகர சட்டப்படி பறிமுதல் செய்யப்படும். இப்போது நீதிமன்றத்தில் இருந்த எல்லாரும் “ஆகா! இதுதான் நியாயமான தீர்ப்பு! சைலக்! தீர்ப்பை நீ கேட்டாயா?” என்கிறார்கள். சைலக்: (ஏமாற்றத்துடன்) இதுதான் தீர்ப்பா? இதுதான் முடிவான தீர்ப்பா? (தன்னுடைய குரூரமான எண்ணம் நிறை வேறவில்லையே என்று அதிர்ச்சியடைகிறான்.) சைலக்: சரி! நீங்கள் கூறியது போல நான் மூன்று மடங்கு பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன். இவனை விட்டு விடுகிறேன். பசானியோ: சைலக்! இதோ பணம். எடுத்துக் கொள். போர்சியா: சைலக் உன்னுடைய பத்திரம் காலாவதியாகிவிட்டபடியால் பணத்தைப் பெறும் தகுதியை இழந்துவிட்டீர். ஏற்கெனவே இந்த நீதிமன்றத்தில் எல்லாருடைய முன்னிலையிலும் பணம் வாங்க மறுத்து விட்டீர். தண்டனையை மட்டும்தான் நீங்கள் நிறைவேற்ற முடியும். 96 தொகுதி 10


ஆகா என்னே அழகு! பச்சைப் பசேலெனக் காட்சி தரும் வயல்வெளியைப் பார்க்கும்போது என்னே அழகு. பச்சைக் கம்பளத்தை விரித்துப்போட்டது போல் அதன் தோற்றம் இருக்கிறதே...! அதன் அழகைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதா. பார்ப்பவர்கள் கண்களுக்கு எவ்வளவு வெம்மைச் சூழலிலும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் இயல்பை இந்த வயல்வெளி கொண்டிருக்கிறது. அத்துணைப் பசுமையான சூழல்; பார்ப்பவர் மனத்திற்கு இதமாக இருக்கிறது. அதோ, அந்த வடக்கு நோக்கி பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளியில் உள்ள நெற்கதிர்கள், வீசும் காற்றுக்கு இசைந்து, அங்கும் இங்கும் அசைந்து நடனமாடுகின்றன. பச்சோந்திக்கும் வயல்வெளிக்கும் வேறுபாடு இல்லை. நாற்றங்கால் நடவு செய்யும் போது பச்சை மாணிக்கக் கல்லைப் போன்று தோன்றிய இந்தவயல்வெளி அறுவடை காலம்வந்தபோது பொன்னிறத்தில் காட்சியளிக்கின்றது. ஆக, பச்சோந்தியைப் போல் நிறமாறும் தன்மை அதனிடம் இருக்கிறது போலும். நெற்கதிர்கள் மனிதர்கள் உண்பதற்கு உணவாக இருக்கிறது. மனிதர்கள் அதனை உண்டு உடல் பெருத்துப் பருமனாகின்றனர். ஆனால், மனிதருக்கு உணவாகும் நெற்கதிரோ அளவோடு உண்டு மெல்லிய உடற்கட்டு கொண்டிருக்கிறது. மனிதர்கள் அவற்றிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சலசலவென நீர் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் ஓரத்தில் சற்று அமைதியாக அமர்ந்து கண்ணோட்டமிட்டால் குருவியினம் கூச்சலிட்டுத் தன் குஞ்சுகளோடு ஏதோ பேசுவதுபோல் இருக்கின்றது. உற்று நோக்கியப் பிறகுதான் தெரிந்தது சட்டென வந்த இயந்திரக் கருவிகளின் ஒலிகேட்டு ஏதோ கலவரம் வந்தது போல் இந்தக் குருவிக் கூட்டமும் அதன் குஞ்சுகளும் பதற்றத்தில் அங்குமிங்கும் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டன என்று. குருவிகளும் குஞ்சுகளும் ஒரு புறம் ஆரவாரத்தோடு பறந்து திரிந்தன. அவற்றுக்கு நெற்கதிர்களும் பெரும் நடுக்கத்துடன் ஆடத் தொடங்கிவிட்டன. அறுவடைக்குக் காத்திருக்கும்போது தன்னை வேரறுக்க வந்த விவசாயிடம் தலைகுனிந்து பணிவுடன் உயிர்துறக்கும் காட்சி மனிதனை வியப்பில் ஆழ்த்துகின்றது; ஒரு பாடமாகவும் அமைகின்றது. மலைபோல நிமிர்ந்து நின்ற கதிர்கள், கண்மூடி கண்திறக்கும் நேரத்தில் நிலை குலைந்து போயினவே. விசுவாசத்திற்கு இதைத் தவிர சொல்வதற்கொன்றும் இல்லை. மூலம் : ரா.பி. சேதுப்பிள்ளை - ஆற்றங்கரையிலே சில மாற்றங்களுடன் வருணனையை மெளனமாக வாசித்திடுக. ð£ì‹ 3 வயல்வெளி 3.4.32 250 சொற்களில் வருணனைக் கட்டுரை எழுதுவர். 97 தொகுதி 10


கீழ்க்காணும் தேயிலைத் தோட்டப் படத்தை உற்றுநோக்கி வருணனை செய்து எழுதுக. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைத் துணையாகக் கொள்க. °¬øc‚è™ தேயிலைத் தோட்டம் பசுமைத் தோட்டம் வரிக்குதிரையைப் போன்ற காட்சி… பச்சைத் தட்டைக் கவிழ்த்து வைத்தாற்போல்… இரண்டு மரங்கள் சளைக்காமல் எட்டிப் பார்க்கின்றன… õ÷Šð´ˆ¶î™ உங்கள் மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் ஒன்றனைத் தெரிவு செய்து 250 சொற்களில் வருணனை கட்டுரை ஒன்றனை எழுதுக. கீழ்க்காணும் வருணனை வரிகளைத் துணையாகக் கொண்டு, நொய்வத் தோட்டம் தொடர்பான வருணனையை ஒரு பத்தியில் எழுதுக. வருணனையில் உள்ள வருணனைச் சொற்களை அடையாளங்கண்டு எழுதுக. வாசித்து மகிழ்ந்த வருணனையைக் கூறுக. 3 2 1 உயர்ந்தோரெல்லாம் உயர்ந்த இடத்தில்தான் இருப்பர் - அதனால்தான் நொய்வமும் உயர்ந்த இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடுபோட்டு நடவு செய்ததுபோல் மிகவும் நேர்த்தியாகவரிசைப் பிடித்து நிற்கின்றன. மிகவும் வன்மையான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் மென்மையான பாலைச் சொரிகிறது இந்த நொய்வ மரங்கள். 98 தொகுதி 10


4.3.5 ஐந்தாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். புறநானூறு ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும் 99 பெரியோர் சிறியோர் யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (கணியன் பூங்குன்றனார்) விளக்கம் எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே. எல்லாரும் எம் சுற்றத்தார்களே. எமக்கு உண்டாகும் துன்பமும் நன்மையும் பிறர் கொடுப்பதால் வருவன அல்ல. அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும். உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று. கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கை இனிதென்று மகிழ்ந்ததும் இல்லை; ஒரு வெறுப்பு வந்ததும் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுக்குதலும் இல்லை. மின்னலினால் பெருமழை தோன்றும். அதன் பயனால் ஆறு கல்லை உருட்டி ஒலிக்கும். அது போன்றே, பெரிய ஆற்றில் செல்லும் மிதவை போல இவ்வுயிரானது ஊழ்வினை செலுத்தும் வழியில் செல்வதாகும். ஆகையால், சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை. சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை. தொகுதி 10


செய்யுள் மக்களுக்குக் கூறவரும் இரண்டு கருத்துகளை விளக்கி எழுதுக. °¬øc‚è™ õ÷Šð´ˆ¶î™ செய்யுளடிகளில் காணப்படும் கருத்துகளை வட்ட வரைபடத்தில் எழுதுக. பெரியோர் சிறியோர் செய்யுளடிகளுக்கு ஏற்ற கருத்துரையை எழுதுக. கீழ்க்காணும் சொற்களுக்குப் பொருள் தருக. 3 2 1. யாதும் ஊரே; யாவரும் கேளிர் 2. தீதும் நன்றும் பிறர்தர வாரா 3. பெரியோரை வியத்தலும் இலமே 4. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே 1. தீதும் 2. நோதலும் 3. இலமே 4. இன்னா 5. மாட்சியின் 6. வியத்தலும் மேற்கண்ட செய்யுளையும் அதன் பொருளையும் கூறுக; எழுதுக. 1 100 தொகுதி 10


Click to View FlipBook Version