PANITIA & PERSATUAN BAHASA TAMIL
SMK TOK PERDANA
SITIAWAN PERAK.
தமிழ்மொழிப் பணிக்குழு & தமிழ்மொழிக்
கழகம் தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளி
சித்தியவான், பேராக் .
உயர்வோம் உயர்த்துவோம் BULETIN EDISI JULAI 2022
ஜூலை மாத இதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2053
வாசிப்பு நமது சுவாசிப்பு
வணக்கம் அன்பு மாணவர்களே. தமிழ்ச்சிட்டு இரண்டாம் பதிப்பில் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்ச்சிட்டு முதல் மாத இதழின்
படைப்புகளை வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ”
என்ற பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கிற்கொப்ப நமது வாழ்க்கையை வளமுறச் செய்யும்
சிறந்த செல்வம் கல்விச் செல்வமே. இக்கல்விச் செல்வம் வாசிப்புத் திறனால்தான் வளர்கிறது . பள்ளிப்
பாடங்களைத் தவிர்த்து, கதை , கட்டுரை , சிறுகதை , நாவல் போன்ற பனுவல்களை வாசிக்கும்
பழக்கத்தையும் நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
" தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
என்பதற்கொப்ப நாம் எந்தளவிற்கு அறிவாய்ந்த நூல்களை ஆழமாகக் கற்கின்றோமோ அந்தளவிற்கு
நம்மால் முழுமையான அறிவை பெற இயலும்.
“நூலறிவு ஆகுமாம் நுண்ணறிவு” என்றார் ஔவை. அவ்வகையில் , வாசிப்புப் பழக்கமானது வெறுமனே நூலறிவை மட்டும்
வழங்குவதில்லை . மாறாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றளையும் வழங்குகிறது என்பது திண்ணம். நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின்
போக்குகள் பற்றியும் நாம் வாழுகின்ற உலகம் பற்றிய பொதுவான அறிவையும் வாசிப்புப் பழக்கமே கற்றுக்கொடுக்கிறது .
இதுமட்டுமல்லாது, வாசிப்புப் பழக்கம் மிகச் சிறந்த பொழுது போக்காகவும் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிறந்த வழியாகவும்
திகழ்கிறது .
ஆகவே , மாணவர்களே நூல்களை உங்கள் உற்றத் தோழனாக்கிக் கொள்ளுங்கள் . காலத்தை விரயமாக்காமல் நல்ல நூல்களை
வாசியுங்கள்; வாழ்க்கையில் வெல்லுங்கள் . மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். நன்றி வணக்கம் .
லறிவை என்றும் அன்புடன்
தமிழாசிரியர்
திருமதி புஷ்பவள்ளி சக்திவேல்
2
கவிதைச் சோலை என் உயிர் அ ப்பா
ரோஜா எத்தனைப் பேர் 'நான் இருக்கிறேன் '
என்று சொன்னாலும், என் அப்பாவின்
முள்ளில் பூக்கும் ரோஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .
மஞ்சள் வண்ண ரோஜா எத்தனை உறவுகள் என்அருகில் இருந்தாலும்
முள்ளில் பூக்கும் ரோஜா நான் தேடும் ஒரே உறவு நீங்கள் மட்டுமே
அழகு சிவப்பு ரோஜா ஏனென்றால், நீங்கள் என் உறவில்லை;
வெள்ளை வெள்ளை ரோஜா என் உயிர் அப்பா .
வண்டு மொய்க்கும் ரோஜா
எனக்கு பிடித்த ரோஜா ஆக்கம் : கோமளன் அசோக்குமார் (1A1 )
மலர்களிலே ரோஜா
ஆக்கம் : கோகிலன் (PA 2 )
உயிர் எழுத்துக்கள் 3
அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்து அ;ஆ
இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்து இ;ஈ
உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்து உ;ஊ
எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்து எ;ஏ
ஐவருக்குமச் சரியான முதலெழுத்து ஐ
ஒட்டகத்திற்கும் ஓணானுக்கும் முதலெழுத்து ஒ;ஓ
ஔவையாருக்கும் முதலெழுத்து ஔ
ஆக்கம்: திவியா த/பெ குமார் (3A2)
கவிதைச் சோலை நி ல வு
அ ன் னை ய ர் அலையும் மேகத் திட்டில்
அசைந்து செல்லும் ஓடம்
தி ன ம்
அசைந்து செல்லும் ஓடம்-வெள்ளி
தமிழில் "அம்மா" என்ற சொல் அழகில் புனைந்த கோலம்
எப்படி வந்தது என்று தெரியாது. உலவும் காற்று முகிலை
ஆனால் "அன்பு" என்ற சொல் ஊதி ஊதித் தள்ளும்
அம்மாவிடமிருந்துதான் வந்தது. ஊதி ஊதித் தள்ளும்-நிலவு
ஆக்கம் : கேசவா த/பெ ரவி (1A1) ஒளிந்து ஒளிந்து பார்க்கும்.
தொகுப்பு: குகன்குமார் த/பெ சிவக்குமார் (1A1)
4
வாசிப்பு நமது
சுவாசிப்பு
கபடி
ஆக்கம்: ரசிகா குமரையா
நம் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் கபடியும் ஒன்றாகும்.கபடியைச் சடுகுடு என்றும் அழைப்பர்.இஃது
எதிரணியில் உள்ள ஆட்களைத் தொட்டு, அவர்களிடம் அகப்படாமல் தன் எல்லைக்குள் திரும்பிவரும்
விளையாட்டாகும்.
போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இவ்விளையாட்டை விளையாடுவர்.ஒரு குழுவில் ஏழு பேர்
இருப்பர்.மேலதிகமாக ஐந்து பேர் மாற்றுவிளையாட்டாளராக இருப்பர்.இவ்விளையாட்டைப் பொருத்த வரை,
இதிரணியின் களத்துக்குக் கபடி கபடி என்று பாடிச் செல்பவர் தாக்குதல் ஆட்டக்காரர் ஆவார்.தன் களத்தினுள்
வரும் வீரரைப் பிடிப்பவர் தற்காப்பாளர் ஆவார்.
இவ்விளையாட்டை நீள்சதுரமான தடத்தில் விளையாடுவர்.இவ்விடம் இரண்டு அணியினர்
விளையாடுவதற்காக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் ஏறு
கோடு எனும் பகுதி இருக்கும்.
போட்டி தொடங்கியதும், ஒருவர் மூச்சை அடக்கி, கபடி கபடி என்று பாடிக்கொண்டே எதிரணியினரின்
கோட்டினைத் தொட வேண்டும்.அதன் பின், அவ்வணியினரின் பகுதிக்குச் சென்று, தமது கையாலோ காலாலோ
எதிரணியினரைத் தொட வேண்டும்.அப்படித் தொட்டுவிட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்தை இழப்பார்.
அதே வேளையில், எதிரணியினரிடம் பிடிப்பட் டால் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணிக்குத் திரும்பிவர
வேண்டும்.இந்நேரத்தில், தம் பகுதிக்கு வந்த விளையாட்டாளரைச் சூழ்ந்து பிடிக்க எதிரணியினர்
முயல்வர்.அப்படி அகப்பட்டால் சென்றவர் ஆட்டத்தை இழப்பார்.இஃது ஒரு தாக்குதல்.ஆட்டக்காரருக்கான கால
வரையறை 30 நொடிகள் மட்டுமே.அதற்குள் எதிரணியினரின் பகுதிக்குச் சென்று தம் எல்லைக்குள் திரும்பிவிட
வேண்டும்.
5
தொடர்ந்து, எதிரணியினரைத் தொடச் சென்ற போட்டியாளர் கபடி கபடி என்று பாடுவதை
நிறுத்தக்கூடாது.ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டு வெளியே செல்லும் போட்டியாளர் போட்டியிலிருந்து
வெளியேற்றப்படுவார்.தம் பகுதிக்கு வரும் எதிரணியினரின் கை, கால், இடுப்புப் பகுதிகளை மட்டும்தான்
போட்டியாளர்கள் பிடிக்க வேண்டும்.தாக்குதல் ஆட்டக்காரர் பல முறை விளையாடலாம்.
கபடி போட்டியில் புள்ளிகள், பாடிட் தொடும் விளையாட்டாளரின் மூலமும் பாடி வரும் வீரரைப் பிடிப்பதன் மூலமும்
வழங்கப்படும்.இதனோடு, எதிரணியில் உள்ள அனைவரையும் தோற்கடிக்கச் செய்தால் இரண்டு புள்ளிகள்
கூடுதலாகக் கிடைக்கும்.
கபடி வீரத்தையும் விவேகத்தையும் கொடுக்கும் பயிற்சியாக விளங்குகிறது.இவ்விளையாட்டினால் நம் உடல்
வலிமையும் மனம் உறுதியும் பெரும்.
எனவே, நமது தமிழர் பாரம்பரிய விளையாட்டானா கபடி அழியாமல் இருக்க அனைவரும் அதை விளையாடி மகிழ
வேண்டும் .
6
தொடர்கதை
நிறைவேறுமா?
மேகம் கருக்க மின்னல் சிரிக்க மழையின் சாரல் நகுலனின் அறை ஜன்னலை நனைத்தது.
"ஐயோ மழை பெய்யுது பாட்டி " என்றான் நகுலன். "பெய்யட்டும் நீ போய் தூங்கு " என்றார் பாட்டி. "நான் இன்னைக்கு 5
மணிக்குப் பந்து விளையாட திடலுக்குப் போக வேண்டும் "
" 5 மணிக்குத் தானே நீ போய் தூங்கு " என்று பாட்டி கூற மழை நிற்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் நகுலன் இமை மூடி
உறங்கலானான்.
'கிரிங்.... கிரிங்' கடிகாரத்தின் ஓசை அவனை எழுப்பியது. விறுவிறுவென்று அறையைவிட்டு வெளியே சென்றான். மழை
ஓய்ந்தது. அவன் மனதில் இனம்புரியா மகிழ்ச்சி. 'ஆனால், அப்பா' என்ற எண்ணம் அவன் மகிழ்ச்சியைச் சீர்குலைத்தது.
"பாட்டி.... பாட்டி, அப்பாவுக்கு இன்னைக்கு எத்தனை மணிக்கு வேலை முடியும்" என்றான் நகுலன்
"8 மணிக்குத் தான் முடியும். இன்னைக்குக் கோலாலம்பூர்ல ஜாமான் இறக்கனுமா! பேராக்கிலிருந்து கேலுக்குக் கண்டிப்பா
லேட்டா ஆகும்." என்றார் பாட்டி. தன் மகன் படிப்பிற்காக அல்லும் பகலும் சரக்குந்து ஓட்டுநராக வேலை செய்கிறார் அவனது
அப்பா .
வீட்டின் அருகிலே திடல் இருப்பதால் உடையை மாற்றி கொண்டு ஐந்தே நிமிடத்தில் திடலைச் சென்றடைந்தான் நகுலன்.
அங்கு விளையாடும் அவனின் நண்பர்கள் ஹரிஷ், கிஷனுடன் இணைந்தான்.
"டேய், ஹிட்லர் மகன் வந்துட்டான். " என்று அவனின் நண்பர்கள் கேலி செய்தாலும் அவன் விளையாட்டியில் மும்முரமாக
இருந்தான்.
"டேய், 7 மணிவரைக்கும் விளையாடுவோம் 8 மணிக்கு அப்பா வந்துருவாரு" என்று கூறிமுடிப்பதற்குள் அவனின் அப்பாவின்
மோட்டார் சைக்கிளின் ஓசை அவனின் காதுகளுக்கு எட்டியது தொலைவில் அவனின் அப்பா வந்துக்கொண்டிருந்தார்.
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்!
ஆக்கம்:புஷ்பரித்தா தா / பெ லோகேஸ்வரன்
4 STEM A
7
பாரம்பரியம்
தமிழர் பாரம்பரிய இசைக் கருவிகள்
11)கடம்
1)முரசு 12)யாழ்
2)பறை
3)தப்பட்டை 13)பம்பை
4)கொம்பு
5)தாளம் 14)உருமி
6)வீணை 15)மிருதங்கம்
7)நாதசுரம்
8)மத்தளம் 16)எக்காளம்
9)தவில்
10)கிடுகிட்டி 17)தப்பு
18)உடுக்கை
19)நாமுழவு
20)குடமுழா
21)மகுடி
22)சங்கு
23)புல்லாங்குழல்
24)கிலுகிலுப்பை
25)சந்திரவலையம்
8
நேர்காணல்
வாங்க பழகலாம்
நிருபர் : வணக்கம் ஆசிரியை,நலமா?
ஆசிரியர் : வணக்கம் என் அன்பு மாணவி.இறைவனருளால் நான் நலமாக இருக்கிறேன்.
நிருபர் : இம்மாதம் வெளியிடப்பவிருக்கும் 'தமிழ்ச்சட்டு' எனும் இதழுக்காக உங்களை நேர்காணல்
செய்யவே வந்துள்ளேன்.முதலில், நேர்காணல் எடுக்க ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி,ஆசிரியை.
ஆசிரியர் : நேர்காணல் கொடுக்க என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு முதலில் நான்தான் நன்றி கூற
வேண்டும்.நான் கூறப் போகும் தகவல்கள் நிச்சயம் மாணவர்களுக்குப் பயன்பெறும் என நினைக்கிறேன்.
நிருபர் : கண்டிப்பாக, ஆசிரியை.நாம் நேர்காணலைத் தொடங்குவோம்.முதலில், உங்களை
அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆசிரியை : என் பெயர் திருமதி வேணு ஸ்ரீ லெட்சுமி த/பெ புவனேஸ்வரா.நான் இப்பள்ளியில் பயிலும்
புகமுக வகுப்பு மற்றும் படிவம் 1 மாணவர்களுக்குத் தமிழ் மொழி பாட ஆசிரியராகப் பணி புரிகிறேன்.
நிருபர் : நல்லது, ஆசிரியை.நீங்கள் தமிழ் ஆசிரியராக எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்கிறீர்கள் ?
ஆசிரியை : நான் தமிழ் ஆசிரியராக வேலை தொடங்கி இவ்வருடத்தோடு 3 ஆண்டுகள்
நிறைவடைகின்றன.இன்னும் பல ஆண்டுகள் என் தமிழ் ஆசிரியர் பணி தொடரும்.
நிருபர் : நிச்சயம்.அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அடுத்து, நீங்கள் இப்பள்ளியில் பணி தொடர்ந்து
எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன ?
9
ஆசிரியர் : 2020-ஆம் ஆண்டில் 6-ஆம் மாதம் நான் இப்பள்ளியில் கால் எடுத்து வைத்தேன்.இதற்கு முன் 2017-ஆம்
ஆண்டில் இப்பள்ளிக்கு நான் பயிற்சி ஆசிரியராக வந்தேன்.பின்னர்,நான் ஆசிரியராகப் பணி தொடர்ந்த முதல்
பள்ளியே தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளி ஆகிவிட்டது என்று சொல்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
நிருபர் : மகிழ்ச்சி, ஆசிரியை.இப்பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்னவாக
இருக்கும்?
ஆசிரியர் : இப்பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களும் ஒவ்வொன்றிலும் தரம் வாய்ந்தவர்கள்.முயற்சி என்ற
விதையைப் போட்டால் எல்லா மாணவர்களும் முன்னேற வேண்டும்.மனம் உண்டானால் மார்க்கம் உண்டு அல்லவா?
நிருபர் : ஆம், ஆசிரியை.தொடர்ந்து, நீங்கள் ஆசிரியர் பணியைத் தேர்ந்துதெடுக்க காரணம் என்ன?
ஆசிரியர் : நான் 6-ஆம் வகுப்பு படித்த தமிழ் விட்டுவிட கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.ஆகவே,
ஆசிரியர் பிரிவைத் தேர்ந்து எடுத்து படிக்க நினைத்தேன்; படித்தேன்; ஆசிரியரானேன்.மேலும், தமிழ்மொழியின்
பால் கொண்ட பற்று தொடர வேண்டும் என்ற உணர்வும் என்னிடத்தில் உருவாகி மரமானது.
நிருபர் : சிறப்பு, ஆசிரியை.கற்பித்தலில் நீங்கள் எதைச் சாதனையாகக் கருதுகிறீர்கள் ?
ஆசிரியர் : சாதனை என்னவென்றால், 2017-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குப் பயிற்சி ஆசிரியராக வரும்போது, நான்
பாடம் போதித்த படிவம் 2-இல் ஒரு மாணவன் தமிழ் படிக்கத் தெரியாது. அச்சிக்கலைப் போக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் ஒவ்வொரு முறையும் வகுப்பறைக்கு வரும்போது அம்மாணவனுக்குப் படிக்கக் கற்றுக்
கொடுப்பேன்.அதன் விளைவாக, மூன்று மாத காலத்தில் அம்மாணவன் தமிழ்மொழியினைச் சரளமாகப் படிக்கத்
தொடங்கினான்.என்னுடைய அம்முயற்சி இறுதியில் சாதனையானது.
நிருபர் : அருமை, ஆசிரியை.இறுதியாக, ஒரு சிறந்த ஆசிரியருக்கான உருவாக்க குணங்கள் யாவை ?
10
ஆசிரியர் : ஒரு மாணவனுக்குப் பாடம் கற்றுத் தர முதலில் அவ்வாசிரியருக்குப் பொறுமை மிக மிக
அவசியம்.மேலும், அவ்வாசிரியருக்குப் பிள்ளைகளின் மேல் புரிந்துணர்வு இருக்க வேண்டும்.மேலும், எவ்வாறு
சொன்னால், அவர்கள் செய்வார்கள் என்ற வழியைக் கண்டறிந்து செயல்படும் திறன் ஒவ்வொரு
ஆசிரியரிடத்திலும் இருக்க வேண்டும்.
நிருபர் : மிக அருமையாகச் சொன்னீர்கள்.நீங்கள் கூறிய கருத்துகளை நிச்சயம் மாணவர்களும் தங்களது
வாழ்க்கையில் பின்பற்றுவர் என நம்புகிறேன்.நேரம் ஒதுக்கியதிற்கு மிக்க நன்றி ஆசிரியை.
ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி.உயர்வோம்;உயர்த்துவோம்.
11
சாதனைச் சிட்டுகள்
பள்ளி அளவிலான போட்டி விளையாட்டு வெற்றியாளர்கள்
தமிழ்மொழி வார வெற்றியாளர்கள்
12
மாநில அளவிலான சதுரங்கப் போட்டி முதல்
நிலை வெற்றியாளர்
மாவட்ட அளவிலான ஓட்ட போட்டி வெற்றியாளர்கள்
13
மாவட்ட அளவிலான ஓட்ட போட்டியில் நம் பள்ளி
இரண்டாம் நிலையில் வாகை சூடியது
14
விடுகதை
விடுகதை
1.எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல்.
அஃது என்ன ?
2) இலையுண்டு கிளையில்லை, பூவுண்டு
மணமில்லை, காய்
என்ன ? உண்டு விதையில்லை. அஃது
3) விரல் இல்லாமலே ஒரு கை. என்ன கை ?
4) ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது.
அவர்கள் யார் ?
5) ஒன்று கண் சிமிட்டும். மற்றொன்று மணி அடிக்கும்.
இன்னொன்று கண்ணீர் வடிக்கும். அவை என்ன ?
6) கள்ளனுக்குக் காவல். காற்றுக்குத் தோழன். அவன்
யார் ?
•• விடைகள் மாறியுள்ளன ••
வாழைமரம், விக்கல், உலக்கை, மின்னல்-இடி-மழை, எறும்புக்கூட்டம், சன்னல்
15
பொது அறிவு கேலி சித்திர கதை
தொகுப்பு : ஹரிணி தா/
பெ கேங்காதரன் 3A3
தொகுப்பு: பவிஷ்ணா,சர்வின் 2A 1
16
17
18
நகைச்சுவை
துணுக்கு
மாணவன் 1 : எப்படி உன்னால் வரைய முடிகிறது ?
மாணவன் 2 : கையால்தான் வரைந்தேன்.
மாணவன் 1 : எனக்குக் கையில் வரைய வரவில்லையே !
மாணவன் 2 : அப்படியென்றால் காலில் வரைந்து பார் .
ஈஸ்வரன் த/பெ சிவனேஸ்வரன் (1A1)
வளர்ந்து, நல்ல வேலை செய்து, நல்ல பேரு வாங்குறதுக்கு....
பிறக்கும் போதே நல்ல பேரா வைச்சா எவ்வளவு நல்லா இருக்கும் ?
கேசவா த/பெ ரவி (1A1)
மாணவன் : ஐயை ! உதவி...உதவி...
ஐயை : ஏன் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அழுகிறாய் ?
மாணவன் : ஐயை, இது பள்ளி நூலகப் புத்தகம் . இதைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையேல், நூலக
ஆசிரியர் தண்டிப்பார்.
ஐயை : அதற்கு ஏன்டா அழுகிறாய் ? புத்தகம் பாதுகாப்பாகக் தானே உள்ளது.
மாணவன் : வெகு நேரமாகப் புத்தகத்தைக் கையில் பிடித்திருக்கிறேன். கை வலிக்கின்றது. விட்டு விட்டால் புத்தகம் மிதந்து
மேல் சுவரில் இடித்துச் சேதாரமாக வாய்ப்புள்ளது.
ஐயை : என்ன சொல்கிறாய் ?
மாணவன் : ஏனென்றால் , புத்தகத்தின் தலைப்பு "ஹீலியம்" ஐயை.
க.ஜெய அழகன் (2A1)
19
மாணவர் பெயர் :
கைவண்ணம்
படிவம்:
மாணவ செல்வங்களே உங்கள் திறமையை வெளிபடுத்த இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்பாரா பரிசுகளைத்
தட்டிச் செல்லுங்கள் !!
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு அழகுபட வண்ணம் தீட்டி உங்களின் பெயரையும் படிவத்தையும் பூர்த்தி செய்து
வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்குள் தமிழ்ச்சிட்டு செய்யலவை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கவும் . 20
புதிர்
முளைக்குக் கொஞ்சம் வேலை!
21
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
நிலைபெறநீ வாழியவே!
நிலைபெறநீ வாழியவே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!