மூன்றாம் ஆண்டின்
திருக்குறளும் அதன்
பொருளும்
பெயர் : ஷிவேன் த/பெ செந்தில்குமார்
வகுப்பு : 3 வாய்மை
பாடம் : தமிழ்மொழி
ஆசிரியர் : திருமதி. மு.சுமதி
திருக்குறள்
தெய்வப்புலவர் என்று போற்றப்படும்
திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில்
மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு
அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330
திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும்
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற
மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (788)
பொருள்: உடுத்திய ஆடை நழுவும்போது
ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை
இழுத்து மானத்தைக் காப்பது போன்று
நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று
அதனைப் போக்குவதே நட்பாகும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)
பொருள்:முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப்
பெருகச்செய்யும்; முயற்சி இல்லாமை அவனை
வறுமையில் தள்ளிவிடும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)
பொருள்: நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை
மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து
கொள்ளலாம் என்பது குற்றம்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)
பொருள்: ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ்
சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை
உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)
பொருள்: நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு
இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம்
புண்படும்படி பேசுகின்ற பேச்சால் ஏற்படுகின்ற
பாதிப்பு என்றும் மறையாது.
நன்றி