The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சிறுவர் பாடல்கள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Active Primary Education, 2022-01-01 05:15:14

சிறுவர் பாடல்கள்

சிறுவர் பாடல்கள்

Arumbu Education சிறுவர் Arumbu Education
பாடல்கள்

www.arumbu.edu.lk

Arumbu Education ஓடி விளையாடு Arumbu Education
பாப்பா

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!



காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!

www.arumbu.edu.lk

Arumbu Education குவா குவா வாத்து Arumbu Education

குவா குவா வாத்து
குள்ள மணி வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
மெல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து.

Arumbu Education அணிலே அணிலே Arumbu Education

அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!

குண்டுப் பழம் கொண்டு வா!
பாதிப் பழம் உன்னிடம்
மீதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

Arumbu Education மாம்பழமாம் மாம்பழம் Arumbu Education

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்
அல்வா போல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா?
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.

www.arumbu.edu.lk

Arumbu Education நிலா நிலா ஓடி வா Arumbu Education

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா



வட்ட வட்ட நிலவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

www.arumbu.edu.lk

Arumbu Education பட்டாம் பூச்சி சிறகு Arumbu Education

பட்டாம் பூச்சி சிறகு
பார்க்கப் பார்க்க அழகு

எட்டி எட்டிப் பாரு
என்ன என்ன அழகு
உயர உயரப் பறந்து
குவிந்த சிறகை விரித்து
காண்போர் மனதைக் கவர்ந்து
நன்றாய்ப் பறத்தல் பாரு
விட்டு விட்டு மின்ன
வெயிலில் பறந்து செல்லும்

பட்டாம்பூச்சி பாரு
பார்க்கப் பார்க்க அழகு.




www.arumbu.edu.lk

Arumbu Education சின்ன சின்ன Arumbu Education
மோட்டார்

சின்ன சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்

நாலு சக்கர மோட்டார்
நாங்கள் ஏறும் மோட்டார்

பாம்.. பாம்.. மோட்டார்
பாய்ந்து செல்லும் மோட்டார்.

www.arumbu.edu.lk

Arumbu Education எங்கள் வீட்டு பூனை Arumbu Education

எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் பார்க்கும்
ஆளைக் கண்டால் ஓடும்
தாவி எலியைப் பிடிக்கும்

தயிரை ஏறிக் குடிக்கும்
நாவால் முகத்தை துடைக்கும்
நாற்காலியின் கீழ் படுக்கும்.

www.arumbu.edu.lk

Arumbu Education தோசை அம்மா தோசை Arumbu Education

தோசை அம்மா தோசை!
அம்மா சுட்ட தோசை!

அரிசி மாவும் உளுந்து மாவும்!
கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூன்று

அண்ணணுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
தின்ன தின்ன ஆசை

திருப்பிக் கேட்டால் பூசை!

www.arumbu.edu.lk

Arumbu Education மியாவ் மியாவ் Arumbu Education
பூனையார்

மியாவ் மியாவ் பூனையார்!
மீசைக்காரப் பூனையார்!
ஆளில்லாத வேளையில்
அடுக்களைக்குள் செல்லுவார்
பால் இருக்கும் சட்டியை
பார்த்து காலி பண்ணுவார்
இரவில் எல்லாம் சுற்றுவார்
எலிகள் வேட்டை ஆடுவார்
பரணில் ஏறிக் கொள்ளுவார்
பகலில் அங்கே தூங்குவார்.

www.arumbu.edu.lk

Arumbu Education கைவீசம்மா கைவீசு Arumbu Education

கைவீசம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!
சொக்காய் வாங்கலாம் கைவீசு!
சொகுசாய்ப் போடலாம் கைவீசு!
கோயிலுக்குப் போகலாம் கைவீசு!

கும்பிட்டு வரலாம் கைவீசு!

www.arumbu.edu.lk

Arumbu Education சாய்ந்தாடம்மா Arumbu Education
சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தங்கச்சிலம்பே சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
சோலைக்கிளியே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்கபக் கொடியே சாய்ந்தாடு.

www.arumbu.edu.lk

Arumbu Education குண்டு குண்டு Arumbu Education
கத்தரிக்காய்

குண்டு குண்டு கத்தரிக்காய்
உருண்டையான சுண்டைக்காய்

நீளமான முருங்கைக்காய்!
நீண்டு தொங்கும் புடலங்காய்!
பட்டை போட்ட வெண்டிக்காய்!

பந்தலிலே பாகற்காய்!
அனைவரும் வாருங்கள்!
சமைத்து ருசித்து உண்ணலாம்!

www.arumbu.edu.lk

Arumbu Education பச்சைக்கிளியே வா! வா! Arumbu Education

பச்சைக்கிளியே வா! வா!
பாலும் சோறும் உண்ண வா!

கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
கவலையெல்லாம் நீங்கவே!
களிப்பெழுந்து பொங்கவே!

பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா!
பாடிப் பாடி களித்து வா!
கையில் வந்து இருக்க வா!

www.arumbu.edu.lk

Arumbu Education கரடி மாமா வருகிறார் Arumbu Education

கரடி மாமா வருகிறார்
கண்ணா இங்கே ஓடி வா!
குட்டிக் கரணம் போடுகிறார்
குதித்து குதித்து நடக்கிறார்.
கோலைத் தோளில் வைக்கிறார்
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார்
கரடி வித்தை பார்க்கவே
காசு பத்து கொடுக்கலாம்.

www.arumbu.edu.lk

Arumbu Education தோ! தோ! நாய்க்குட்டி Arumbu Education

தோ! தோ! நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
வீட்டைக் காக்கும் நாய்க்குட்டி
பாலைக் கொடுத்தால் குடித்திடும்
பக்கம் வந்து நின்றிடும்
வா! வா! என்றால் வந்திடும்
வாலை! வாலை! ஆட்டிடும்.

www.arumbu.edu.lk

Arumbu Education பூனைக்கும் பூனைக்கும் Arumbu Education
கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகம் எல்லாம் கொண்டாட்டமாம்

யானை மேலே ஊர்வலமாம்,
ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்

ஊர்க் குருவி பின் பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல

மாப்பிளை பூனைய காணமாம்
வந்தவர் எல்லாம் திட்டினராம்
வருத்தம் கொண்டு திரும்பினராம்

www.arumbu.edu.lk

Arumbu Education அம்மா இங்கே வா வா Arumbu Education

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போடு

ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லவர்

ஊரில் யாரோ உள்ளவர்
என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்

www.arumbu.edu.lk

Arumbu Education ஆராரோ ஆரிவரோ Arumbu Education

ஆராரோ ஆரிவரோ,
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்
ஆராரோ ஆரிவரோ,
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்காய்
பாட்டி அடித்தாளோ,
பாலூட்டும் கையாலே
அத்தை அடித்தாளோ,
அமுதூட்டும் கையாலே

www.arumbu.edu.lk

Arumbu Education மழையே மழையே Arumbu Education
வா வா

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா

குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா

ஆறு ஓட வா வா
ஆட்டம் போட ஓடி வா

www.arumbu.edu.lk

Arumbu Education வட்டமான தட்டு Arumbu Education
தட்டு நிறைய லட்டு

வட்டமான
தட்டு

தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு,

பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு

மீதம் காலித் தட்டு

www.arumbu.edu.lk

Arumbu Education காக்கா காக்கா Arumbu Education

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா

குருவி குருவி
கொண்டைக்குப் பூக்கொண்டு வா

கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டு வா

கொக்கே கொக்கே
குழந்தைக்கு தேன் கொண்டு வா

www.arumbu.edu.lk

www.arumbu.edu.lk


Click to View FlipBook Version