TORCH
BEARERS
CAMP - 2019
இப்போது திடீரென
எதற்கு இந்த
முகாம் என்று
ய�ோசிக்கிறீர்களா?
ஒவ்வொரு ஊழியரின் திறன்
மேம்பாடுதான் நிறுவனத்தின்
மேம்பாட்டுக்கான அடிப்படை.
ஓர் ஊழியர் தன்னுடைய
திறமைகளை வளர்த்துக்கொண்டு,
அவருடைய பணி இலக்குகளைச்
சரியாக அடைவாரேயானால், அது
அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு
வழிவகுக்கும்.
அப்படி நிறுவனம்
வளர்ச்சியுறும்போது, அதன் பலனை
ஊழியர்களும் பெற இயலும்.
நாம் படைப்பாற்றல்
மிக்கவர்கள். நம் எல்லோருக்குமே
நம்முடைய இலக்குகள்
என்னவென்று தெரியும்; நேர
மேலாண்மையை அறிவ�ோம்;
குழுவாகச் சேர்ந்து செயல்படுவதில்
உள்ள நன்மையை
உணர்ந்திருக்கிற�ோம்.
ஆனால்...
பயிற்சியின் முக்கியத்துவம்
நாம் அனைவரும் நம்முடைய
திறமைகளைச் சரியான விதத்திலும்,
?முழுமையாகவும்
பயன்படுத்துகிற�ோமா
உங்களுக்குள் புதைந்துகிடக்கும்
தனித்திறமைகளைத் தூண்டிவிட்டு,
அவற்றை ஆக்கபூர்வமான வழியில்
செலுத்தி, வெற்றிக்கனிகளை எட்டிப்
பிடிக்கும் சூட்சுமத்தைச்
ச�ொல்லித்தரப்போகிறது.
த�ொழில்ரீதியாக மட்டுமின்றி,
தனிப்பட்ட முறையிலும் உங்கள்
தகுதிகளை நீங்கள் மேலும்
பெருக்கிக்கொள்ளவும்.
உங்களிடமிருக்கும் தனித்திறமைகளை
அடையாளம் கண்டு அவற்றை
வளர்த்துக்கொள்ளவும் இந்தப் பயிற்சி
முகாம் உங்களுக்கு உதவும்.
முழுக்க முழுக்க அனுபவ
அடிப்படையிலான பயிற்சி முகாம் இது.
இந்த முகாம் நிச்சயம்
உங்களுக்கு வேடிக்கையும்
விளையாட்டும் நிறைந்த ஒரு
மகிழ்ச்சியான கற்றல்
அனுபவத்தை வழங்கும்.
முகாமின் செயல்பாடுகள்
இது மூன்று நாள் முகாமாக,
ம�ொத்தம் 15 குழுக்களுக்கு
நடைபெறப்போகிறது.
ஒவ்வொரு குழுவிலும், நமது விகடன்
நிறுவனத்தில் உள்ள வெவ்வேறு துறைகளில்
பணியாற்றுபவர்களும் கலவையாகப்
பங்கேற்கவிருக்கிறார்கள். எனவே, நம்மில்
ஒருவரைய�ொருவர்
அறிமுகப்படுத்திக்கொள்ளவும்,
அறிந்துக�ொள்ளவும், அவரவரின் பணி
அனுபவங்களைப் பகிர்ந்துக�ொள்ளவும், என,
ஒரு மாறுபட்ட அனுபவத்தை இந்த முகாம்
உங்களுக்கு வழங்கும்.
இப்படிப் புது
நண்பர்களுடன் சேர்ந்து
பயிற்சி பெறும்போது
உங்கள் ஞானம்,
ஆற்றல், தனித்திறன்,
பழகும் கலை,
மன�ோபாவம் என
அனைத்துமே
மேம்படுவதற்கான
வாய்ப்பு அதிகம்.
உங்கள் கவனத்திற்கு...
நீங்கள் எந்த பேட்ச், உங்களுக்கான முகாம்
எந்தெந்த நாள்களில் நடைபெறவிருக்கிறது என்கிற
பட்டியல் உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே
அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாள் பயிற்சி முகாமில்
கலந்துக�ொள்ள, நீங்கள் அதற்கு முதல்நாளே புறப்பட
வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் க�ொள்ளவும்.
உங்களுக்கான பயண ஏற்பாடுகளை
திரு.வெங்கடேஷ் பெருமாள் கவனிக்கிறார்.
நீங்கள் எப்போது கிளம்ப வேண்டும்,
எங்கிருந்து பஸ் புறப்படும், நீங்கள் எங்கே வந்து
இணைந்துக�ொள்ளலாம் ப�ோன்ற விவரங்களை அவர்
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக மின்னஞ்சல்
மூலமாக அறிவிப்பார்.
செயல் திட்டம்
இந்தப் பயிற்சி முகாமுக்குப் பின்னர், இந்தக்
கற்றல் அனுபவம் குறித்த உங்களின்
கருத்துகளை ‘கற்றல் மற்றும் வளர்ச்சித் துறை’
எதிர்பார்க்கிறது.
மேலும், இங்கே நீங்கள் கற்றுக்கொண்டது
த�ொடர்பாக 15 நாள் செயல்திட்டம் ஒன்றையும்
உங்களுக்கு வழங்கவிருக்கிற�ோம்.
அது உங்கள் வழக்கமான பணி
த�ொடர்புடையதாகவே இருக்கும்.
செயல் திறன் பகுப்பாய்வு
15-ம் நாளன்று ஒவ்வொரு குழுவினரிடமும்
கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும்.
இந்தப் பயிற்சித் திட்டத்தில் நீங்கள்
கற்றுக்கொண்டது என்ன, இந்தப் புதிய பயிற்சியானது
உங்கள் அலுவலகப் பணிக்குக்
கைக�ொடுத்திருக்கிறதா, உங்கள் பணியை
மேம்படுத்திக்கொள்ள இது உதவுகிறதா?
இந்தப் பயிற்சி அனுபவத்தை உங்கள் பணியில்
செயல்முறைப்படுத்தும்போது நீங்கள் எதிர்கொண்ட
சவால்கள், பிரச்னைகள், சிரமங்கள் என்னென்ன,
அவற்றை நீங்கள் சமாளித்தது எப்படி, உங்களுக்கு
யாரேனும் வழிகாட்டி உதவினார்களா ப�ோன்றவற்றை
அறிய விரும்புகிற�ோம்.
பயிற்சி முகாம் நடைபெறும் இடம்:
கார்ல் க்யூபெல் ஃபவுண்டேஷன்,
427/1, ஆனைக்கட்டி ர�ோடு,
மான்கரை, க�ோயம்புத்தூர் - 641108.
Phone: 0422 265 8358,
https://www.kkfindia.com
மிக அமைதியான, இனிமையான, மனசுக்குப்
புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய இடம் இது. பயிற்சி
நேரம் ப�ோக இதர நேரங்களில் அங்கே நீங்கள்
காலார உலா வரலாம். யானைகள் பகுதி என்பதால்
சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
உங்கள் கவனத்துக்கு:
1) துண்டு, டர்க்கி டவல், ஸ்வெட்டர், குடை, டார்ச் லைட்,
வழக்கமாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் ப�ோன்று
மூன்று நாள்களுக்குத் தேவையான உங்கள்
உடைமைகளை, டூர் ப�ோவதுப�ோல நீங்களே எடுத்து வர
வேண்டும். அங்கே நீங்கள் தங்கும் இடத்தில் படுக்கை,
படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவை மட்டுமே
வழங்கப்படும்.
2) உடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால், பயிற்சி
நேரத்தில் அலுவலக ஒழுங்கில் உடை அணிவது
அவசியம்.
3) மூன்று நாள்களும் நீங்கள் அந்த
வளாகத்துக்குள்ளேயேதான் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
4) பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி
வரை. இடையிடையே சிறு சிறு இடைவேளைகள்
இருக்கும்.
5) ரூம் சர்வீஸ் கிடையாது.
மாற்றம் ஒன்றே
மாறாதது. நம்
இலகுவான
இடத்தைவிட்டு
நகரத்
தயாரானால்தான்,
நம்மால்
முன்னோக்கிப்
பயணப்பட
முடியும்.
வேறு ஏதேனும் விளக்கம்
தேவையிருப்பின், மகிழ்ச்சியுடன்
உதவத் தயாராக உள்ளோம்
- கற்றல் மற்றும் வளர்ச்சித்துறை