| 1 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்
மின்னூல் குறிப்பு
1. நூலின் பெயர் : நாட்டுப்பற்று
2. ஆசிரியர் : பேரருள்மிகு பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு
சித்தர் “அரசய�ோகிக் கருவூறார்”
3. வெளியீட்டாளர் : மின் புத்தக வெளியீட்டுக் குழு,
இந்து வேத முன்னேற்றக் கழகம்,
இந்துவேத முன்னேற்றக் கழகம்
பதிவு அலுவலகம் சென்னை.
9845050085, 7550001359, 7904278970,
9489993633, 9965577902, 8660446203
4. ம�ொழி : தமிழ்
5. பதிப்பு : 26-01-2022
6. பக்கங்கள் : 37
7. வெளியீடு எண் : 48/2028
8. குருதேவரின் கட்டுரைகளில் இருந்து த�ொகுத்தது
குறிப்பு:-
இதை அனைவரும் பகிர்ந்து நல்லருள் பெற குருவருளையும்
திருவருளையும் வேண்டுகிற�ோம். இந்து மதத்தின் உயிர்
மூச்சாக இருக்ககூடிய “சித்தர் நெறி” யை உலகம் முழுவதும்
பரப்பி, அனைவரும் தெரிந்து, புரிந்து க�ொள்ள வேண்டும்.
நாட்டுப்பற்று | 2
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நாட்டுப்பற்று இவ்வுலகுக்கே வழிகாட்டவும்,
வழித் துணையாக வாழ்ந்திடவும், வழிப் பயனாகத்
திகழ்ந்திடவும் இம் மண்ணுலகின் மூத்த முதல்
குடியான தமிழ்க் குடியே தயாராக வேண்டும்.
இன்றைக்கு நாட்டில் ம�ொழி உணர்ச்சி
மட்டும் காட்டாற்று வெள்ளமாக அவ்வப்போது
பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனை இனப்பற்று,
நாட்டுப்பற்று, சமய அறிவு, சமுதாயப் பிடிப்பு,
இன ஒற்றுமை முதலியவைகளால் அணைகட்டித்
தேக்கி நன்கு பயன்படுத்த வேண்டும் என்று
இந்த நாட்டுப்பற்று பகுதி தனிநூலாக
வெளியிடப்படுகின்றது.
| 3 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்ப�ொருளடக்கம்
1. முன்னுரை
2. நாட்டுப்பற்று என்பது வெறியுணர்ச்சியா?
3. பரம்பொருளுக்கே தாய்நாட்டுப்பற்று இருக்கின்றதா?
4. நாட்டுப்பற்றும் ்ப�ொருளாதார வளமும்.
5. நாட்டுப்பற்றே இயற்கைத் தன்மை.
6. திராவிடநாடே சித்தர்கள் தாய்நாடு.
7. நாட்டுப்பற்றே மறுமலர்ச்சிப் பணிக்கு அடிப்படை.
8. சமயப்பற்று ஏற்பட்டால் நாட்டுப்பற்று ஏற்பட்டுவிடும்.
9. தமிழரின் நாகரீகம் - தமிழர் சமயம்.
10. நாகரீகப் பிடிப்பும் சமயபற்றும்.
11. நாகரீக வீழ்ச்சியே நாட்டுப்பற்றுத் தளர்ச்சி.
12. சித்தர்நெறி வளர்த்த தமிழர் மதம்.
13. தூய தனித்தமிழ்ச் ச�ொற்களே ஆரிய மடமையை
ஒழிக்கும்
14. முடிவுரை
நாட்டுப்பற்று | 4
இந்துவேத முன்னேற்றக் கழகம்முன்னுரை
வணக்கம்!
நாட்டுப்பற்று என்ற ஓர் ச�ொல் தற்காலத்திலே,
அதாவது உலகமயமாதல் (The globalisation)
என்கின்ற தத்துவத்தை பலரும் பெரிதும் நம்பி
இருக்கின்ற இந்த வேளையிலே, நாட்டுப்பற்று என்ற
ச�ொல் ஒரு வெறி உணர்வைத் தூண்டக்கூடிய
ச�ொல்லாகவும், குறுகிய மனப்பான்மையை குறிக்கும்
ச�ொல்லாகவும்தான் நம்மிடையே உள்ள பல படித்த
அறிவாளிகளும், அறிஞர்களும் நினைக்கின்றார்கள்.
ஆனால் இத்தகைய மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்து
வேற�ொரு நாட்டில் வசிக்கும்போது தன்னுடைய
நாட்டினரைய�ோ அல்லது தன்னுடைய ம�ொழி பேசும்
ஒருவரை பார்க்கும் ப�ோது, உள்ளத்தில் உவகை
இயற்கையாகவே பீறிட்டு வருகிறது. ஒரு நேச
உணர்வும் அவர்களுடைய உள்ளத்திலே எழுகிறது.
இது ஏன் என்று அவர்களை கேட்டால், அது வெறியா
அல்லது குறுகிய மனப்பான்மையா என்ற கேள்விக்கு
அவர்களால் பதில் ச�ொல்ல முடியாது. மேலும் இத்தகைய
உவகை உணர்வு ஏன் மற்ற நாட்டினரைய�ோ, மற்ற
ம�ொழியினரைய�ோ பார்க்கும்பொழுது வருவதில்லை.?
| 5 நாட்டுப்பற்று
இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய
குடும்பத்தாரை, உற்றத்தாரை, சுற்றத்தாரை பார்க்கும்போது
அவர்களுடன் பழகும் ப�ோது ஏற்படுகின்ற கனிவான
உணர்வும், பற்றும், பாசமும் மற்ற மக்கள�ோடு கலந்து
பழகும் ப�ோது வருவதில்லையே ஏன்? இது எதனால்.?
ஆகவே, எவ்வாறு இத்தகைய உணர்வுகள்
ஒரு தனிமனித உள்ளத்திலே உருவாகின்றத�ோ
அதைப் ப�ோலத்தான் நாட்டுப்பற்றும்.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நாட்டுப்பற்று என்பது ஒரு அக உணர்வாக
மட்டுமில்லாமல் ப�ொருளாதார வாழ்க்கைக்கு,
ஒரு நாட்டின் ப�ொருளாதார வாழ்வியலுக்கு
ஒரு அச்சாணியாக இருக்கின்றது. எந்த ஒரு
நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டின் உற்பத்தி
ப�ொருள்களை, தங்களுடைய நாட்டிலேயே
விளைகின்ற ப�ொருள்களை வாங்குகின்றார்கள�ோ
அல்லது முன்னுரிமை தருகின்றார்கள�ோ அந்த
நாட்டின் ப�ொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் வலிமை
உடையதாக இருக்கின்றது. அன்னிய ப�ொருளாதார
தத்துவங்களால் அது எளிதில் வீழ்ச்சி அடைவதில்லை.
இதை, இன்றைய காலகட்டத்திலே
முதலாளித்துவத்தை முன்னிறுத்துகின்ற நாடுகளின்
வீழ்ச்சியிலிருந்து நாம் உணரமுடிகிறது,
தெரிந்துக�ொள்ள முடிகிறது.
நாட்டுப்பற்று | 6
இந்துவேத முன்னேற்றக் கழகம்ஆகவே ஒரு நாட்டின் தன்னிறைவு நிலை
ஏற்படுவதற்கு, நாட்டுப்பற்று என்பது ஒரு மிக
மிக முக்கியமானத�ொன்றாகும்.
நாட்டுப்பற்று என்ற உணர்வுதான் ஒவ்வொரு
நாட்டினுடைய இனப்பற்றுக்கும், ம�ொழிப்பற்றுக்கும்,
சமயப்பற்றுக்குமே அடிப்படையாக இருந்திருக்கின்றது
என்று நம்முடைய நாகரீகமும், மற்றும் பல நாடுகளின்
நாகரீகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
பதினெண்சித்தர்கள் நாட்டுப்பற்றை மையமாக
வைத்து ம�ொழிப்பற்றையும், இனப்பற்றையும் அதன�ோடு
பின்னிப்பிணையவைத்து மக்களிடையே ஒற்றுமையையும்,
சமத்துவத்தையும், சக�ோதரத்துவத்தையும் மக்களிடையே
பரப்பி உள்ளார்கள்.
நாட்டுப்பற்றை பற்றி நமது குருதேவரின்
கருத்துக்களை இந்த புத்தக வடிவிலே வெளியிடுவதிலே
நாங்கள் மிகவும் மகிழ்வு அடைகின்றோம். நமது
இளைய தலைமுறை தமிழக மக்கள் அனைவரும் இந்த
நாட்டுப்பற்று உணர்வினை உணர்ந்து உலகெங்கும்
ஒற்றுமையை உருவாக்கிடவேண்டுகின்றோம்.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
| 7 நாட்டுப்பற்று
நாட்டுப்பற்று என்பது வெறியுணர்ச்சியா?
நண்பா! தெய்வீக உணர்வுகளை
இந்துவேத முன்னேற்றக் கழகம்
உடையவர்களுக்குக் கூட நாட்டுப்பற்று என்ற
வெறியுணர்ச்சி இருக்கலாமா? குறுகிய புத்தி
இருக்கலாமா? க�ோணல் ப�ோக்கு அமையலாமா?.....
என்றெல்லாம் பலரும் வினா எழுப்புகிறார்கள்.
அவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும், என்றாவது
ஒரு நாள் விடை ச�ொல்லித்தானே தீரவேண்டும்.
ஒருவேளை, என்னிடம் நேரடியாக இந்த வினாவை
எழுப்பாமலிருக்கின்றவர்கள்; உங்களிடம் இந்த
வினாவை எழுப்பலாம். அப்பொழுது, உங்களைப்
ப�ோன்றவர்கள், உடனடியாக இந்த வினாவுக்கு
என்ன விடை கூறுவது? என்று தயங்கவ�ோ!
மயங்கவ�ோ!.... கூடாது. திருவருளும் குருவருளும்
இரு கண்ணெனப் பெற்றுவிட்ட சித்தரடியான்களும்,
சித்தரடியார்களும் இறைக்க இறைக்கத் தண்ணீர்
ஊறும்(வற்றாது நீர�ோடும் காவிரியாற்று மணலில்
த�ோண்டப்பட்ட கேணி ப�ோல்)த�ொடு மணற்கேணி
நாட்டுப்பற்று | 8
ப�ோல் அறிவுடையார்களாக இருத்தல் வேண்டும்.
பரந்த நீல வானில் சிறகடித்துப் பறக்கும்
வானம்பாடியும், வல்லூறும், சிட்டுக்குருவியும்....
தாங்கள் வாழ்வதற்கென்று கூடு வைத்திருப்பது ப�ோல்;
எவ்வளவு உயர்ந்த பரந்த சிறந்த ப�ொதுவுடைமைத்
தத்துவக் கருத்துடையவர்களும், தாங்கள்
வாழ்வதற்கென்று தனி வீடு(குடும்பம்) வைத்திருப்பது
ப�ோல; அண்டப் பெருவெளியே தன் பிண்டமென
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நினைக்கும் அருட் செல்வர்கள், தங்களுடைய
தாய்நாடு என்று ஒன்றினை நினைத்துதான்
வாழ்வார்கள்; அது, தவறல்ல;
அதுவே இயற்கை.
எப்படிப் பற்றற்ற
துறவி; இறைவனிடத்தும்
பேரின்பமான வீடு பேற்றிடத்தும்
பற்றுக்கொள்வது தவறாகக்
க ரு தப்ப டு வ தி ல ் லைய�ோ !
அ ப்ப டி த ்தா ன் ,
தி ரு வ ரு ட ்செல்வர்க ள் ,
தங்களுடைய தாய் நாட்டிடத்துப்
பற்றும் பாசமும் க�ொண்டு விளங்குவது தவறாகக்
கருதப்படுதற்கில்லை.
| 9 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்பரம்பொருளுக்கே தாய்நாட்டுப்பற்று இருக்கின்றதா?
நண்பா! திருவருட்செல்வர்களுக்கு, அதாவது தெய்வீக
உணர்வு உடையவர்களுக்கு நாட்டுப்பற்று இருப்பது
சரியா? தவறா?... என்று வினாவெழுப்பிச் சிந்திக்கும்
முன்; இந்த உலகையும், உயிர்களையும், அண்டப்
பெருவெளியினையும், அதிலுள்ள அனைத்தையும்,
அண்டம் கடந்தனவற்றையும் படைத்துக் காத்துச்
செயலாக்கிடும் எல்லாம் வல்ல, எல்லாமாயுள்ள, எங்கும்
நீக்கமற நிறைந்த பரம்பொருளுக்கே தாய்நாட்டுப்பற்று
இருக்கின்றதே! அது சரியா? முறையா? என்ற வினாவை
எழுப்பிச் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான்,
‘நாட்டுப்பற்று’என்ற ச�ொல் உணர்த்தும் ப�ொருள் எவ்வளவு
அரியது, கூரியது, பெரியது, உயரியது, ஒவ்வொருவருக்கும்
உரியது..... என்ற பேருண்மை விளங்கிடும்.
உலகில் த�ோன்றியுள்ள எந்த மதமும் கடவுள் நேரடியாக
மனிதனின் துயர் துடைக்க வந்ததாகக் கூறவில்லை.
அப்படியே, வர நேரிட்டதாக ஒரு சில குறிப்புகள்
காணப்பட்டாலும் ஐந்தாறு தடவைகளுக்கு மேல்
வந்திட்டதாக எம்மதமும் குறிக்கவில்லை. ஆனால், நமது
தாய்திருநாடாம் செந்தமிழ் நாட்டிலே இறைவன் நேரடியாக
அறுபத்து நான்கு தடவைகள் வந்துள்ளார். அவர் மனிதப்
பிறப்பில் பிறந்து மனிதருக்கு உதவ ஒன்பது தடவைகள்
வந்திருக்கிறார். இனிய�ொரு தடவை, பத்தாவது
முறையாக மானுடனாகப் பிறப்பதாக அறிவித்துள்ளார்.
நாட்டுப்பற்று | 10
அறுபத்துமூன்று நாயன்மார்களும், பன்னிரண்டு
ஆழ்வார்களுக்கும் அருள் வழங்கி; அவர்கள் மூலம்
இத்திருநாட்டு மக்களுக்கு உதவியுள்ளார். இப்படி நூற்று
நாற்பத்தெட்டு முறைகள்(64+63+12+9=148) இறைவன்
அருள் விளையாடல் புரிந்த தவத்திரு நாடு நமது
தமிழ்நாடேயாகும். இந்த அருள் ஊற்றுக்கள் மிகுந்த நாட்டில்
பிறந்திட்டதற்காக ஒவ்வொருவரும் க�ோடிக்கணக்கான
பிறப்பெடுத்து இறைவனுக்கு நன்றி ச�ொல்ல வேண்டும்.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நாட்டுப்பற்றும் ப�ொருளாதார
வளமும்:-
நண்பா! மணல் நிறைந்த
பாலையான அரேபியாவில்
எண்ணெய் ஊற்றுக்கள் இருப்பதால்;
அந்நாடு நிலவளம் இல்லாவிட்டாலும்;
ப�ொருள் வளத்தைப்(Economical
Fertility) பெற்றுத் திகழ்கிறது.
இதேப�ோல் ஒரு சில நாடுகளில் வெறும் மரங்கள்
நிறைந்த காடுகளால் ப�ொருளாதார வளம் கிடைக்கிறது;
ஒரு சில நாடுகளில் கனி மரங்களால் ப�ொருளாதார
வளம் கிடைக்கிறது; ஒரு சில நாடுகளில் உல�ோகத்
தாதுக்கள் நிலத்தினுள் இருப்பதால் ப�ொருளாதார வளம்
கிடைக்கிறது; ஒரு சில நாடுகளில் ஆடு மாடுகள்
வளர்தற்குத் தேவையான பசிய புல்வெளிகள் இருப்பதன்
மூலமே ப�ொருளாதார வளம் கிடைக்கிறது; ஒரு சில
| 11 நாட்டுப்பற்று
நாடுகளில் வாழும் காட்டு விலங்குகள், பறவைகள்,
நீர்வாழ் மீன்கள்... முதலிய உயிரினங்கள் மூலமே
ப�ொருளாதார வளம் கிடைக்கிறது; ஒரு சில நாடுகளில்
ஓடும் வற்றாத ஆறுகளால் வளம் க�ொழித்துப் ப�ொருளாதார
வளம் கிடைக்கிறது; ஒரு சில நாடுகளில் மக்களின்
அறிவுநிறை த�ொழில் முன்னேற்றத்தால் ப�ொருளாதார
வளம் கிடைக்கிறது; ... ஆனால், நமது, தாய்த்திருநாட்டில்,
மேற்குறித்த எல்லாவகையான வளங்களுமே இருந்தும்
கூட; இன்னும், நமது தாய்நாட்டில் ப�ொருளாதார
வளமே ஏற்படவில்லை, இது ஏன்? எப்படி? எவ்வாறு?
எதற்காக? எவரால்? இந்நிலை இன்னும் எவ்வளவு காலம்
நீடிக்கும்? இதை மாற்ற முடியுமா? மாற்ற முயல்பவர்
ஏமாற்றம் பெறுவாரா? அல்லது ஏற்றம் பெறுவாரா????...
இந்துவேத முன்னேற்றக் கழகம்
முதலிய வினாக்களை எழுப்புபவரே
இல்லையென்கின்ற ப�ோது; இவ்விடைகளுக்கு
வினாக்காணும் முயற்சி என்று பிறக்கும்?எவரால் பிறக்கும்?
அப்படி, எவராவது, என்றைக்காவது விடைதேடும்
முயற்சியில் ஈடுபட்டால் அவர் நிலை என்னவாகும்?...
என்பனவற்றை எண்ணும்போதுதான்; என் ப�ோன்றோர்
“நமக்கேன் இந்த வீண்வம்பு? ஏத�ோ! நாமுண்டு, நம்
வேலையுண்டு, நம் குடும்பம் உண்டு, நம் உறவினருண்டு...
என்று வாழ்ந்துவிட்டுப் ப�ோய் விடுவதுதான்
நல்லது”... என்று முடிவுக்குத்தான் வரமுடிகிறது.
நானும், பல தடவை இந்த முடிவுக்குத்தான் வந்தேன்.
நாட்டுப்பற்று | 12
ஆனால், எனது நாட்டுப்பற்று, உண்மையும், உயர்வும்,
உயிர்த்துடிப்பும் உள்ளதாக இருப்பதால்தான்; எது
வந்தாலும் வரட்டும்; என்றைக்கோ ஓர் நாள் ஏற்படப்போகும்
முடிவு விரைவிலேயே வந்துவிட்டுப் ப�ோகட்டும்... என்று
துணிந்துதான் செயல்படப் புறப்பட்டுவிட்டேன். இந்த அளவு
எனக்குத் துணிவும், செயல்படு ஆற்றலும், ஆர்வமும்
வழங்கிட்ட ‘நாட்டுப்பற்று’ பற்றி; உன் ப�ோன்றோர்க்காவது
ஒருசில கருத்துக்கள் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நாட்டுப்பற்றே இயற்கைத்தன்மை:-
நண்பா! நூற்றுக்கணக்கான
பசுக்களை நிறுத்தி; ஒரு
கன்றினை அவிழ்த்து விட்டால்;
அது, தனது தாய்ப்பசுவை
இனங் கண்டு பிடித்துச் சென்று
சேர்ந்துவிடும். அதுப�ோலத்தான்,
ஒவ்வொரு மனிதனும்; எத்தனைய�ோ
நாடுகளைச் சுற்றியலைந்தாலும்;
தன் தாய்த்திருநாட்டையே தேடி
வந்தடைந்து அமைதியும் நிறைவும் க�ொண்டிடுகின்றான்.
இதுதான், இயற்கை விதி, இயற்கை உண்மை,
இயற்கைத் தன்மை. இதனை வெல்ல எவராலும்
முடியாது. ஒரு மனிதனுக்கு அன்னிய நாட்டில்
எவ்வளவுதான் எல்லையற்ற ப�ொருளும், புகழும்,
மகிழ்ச்சியும்... கிடைத்திட்டாலும்; அவன், தன்னுடைய
| 13 நாட்டுப்பற்று
தாய்த்திருநாட்டுக்குத் திரும்பிவந்து வாழத்தான்
விரும்புவான். அதுதான், தாய்நாட்டுப்பற்று.
நண்பா! ஒருவருடைய தாய், எவ்வளவு தான்
க�ோரமாய் அல்லது க�ொடூரமாய் இருந்தாலும்; அவனால்,
அவனுடைய தாயை விரும்பாமல் இருக்கவே முடியாது.
அதுப�ோலத்தான், ஒருவனுடைய தாய்நாடு எவ்வளவுதான்
வறண்டதாயும், வறுமையுடையதாயும், எதிர்ப்புணர்வு
இந்துவேத முன்னேற்றக் கழகம்
உடையதாயும், பிற்போக்கு நிலையுடையதாயும்...
இருந்திட்டாலும்; அவனால், அவனுடைய தாய்நாட்டை
விரும்பாமல் இருக்கவே
முடியாது. இப்படி, இரத்தத்தோடு
இரத்தமாய், உணர்வோடு
உணர்வாய், உயிர�ோடு உயிராய்,
பிறப்பிறப்போடு கலந்ததாய்,
காரண காரியங்களுக்கு
அப்பாற்பட்டதாய் உள்ள
ஒன்றுதான் ‘தாய்நாட்டுப்பற்று’.
எனவே, தாய்நாட்டுப்பற்று
இல்லாதவன் ஐந்தறிவு உடைய விலங்கினங்களுக்கும்;
அவற்றைவிட இழிந்த அறிவு படைத்த
உயிரினங்களுக்குமே ஒப்பாவான். அதனால்,
தாய்நாட்டுப் பற்றைக் குறைத்தும், மறுத்தும், வெறுத்தும்
செயல்படுகின்ற துர�ோகிகளை, கைக்கூலிகளை,
தன்மானமற்ற அடிமைகளை.... என்னவென்று கருதுவது?
நாட்டுப்பற்று | 14
எவற்றோடு ஒப்பிடுவது? எப்படியவர்களைத் திருத்துவது?
திருந்தாதவர்களை எப்படித் தீர்த்துக் கட்டுவது?... என்பன
ப�ோன்ற சிந்தனைகளுக்கு முடிவே கிடைக்கவில்லை.
திராவிடநாடே – சித்தர்கள் தாய்நாடு:-
நண்பா! இத்திருநாட்டில்; இறைவன் நூற்று
நாற்பத்தெட்டுத் தடவை செயல்பட்டுள்ளார் என்றால்;
அவரது தாய்நாடு, நமது தமிழ்நாடுதான். இத் தமிழ்நாடே,
இந்துவேத முன்னேற்றக் கழகம்
இவ்வுலக நாடுகளில் தெய்வத் திருநாடு என்றும்
முனிவர்களும், இருடிகளும், தவசிகளும், ஞானிகளும்,
மகான்களும், கந்தர்வர்களும், இயக்கர்களும்,
தேவர்களும், அமரர்களும், தெய்வங்களும்,
ஆண்டவர்களும், கடவுள்களும், சித்தர்களும்..... வாழ்ந்து
க�ொண்டிருக்கும் மண்ணுலக தேவல�ோகம் நந்தமிழ்நாடே.
இந்த அளப்பரிய அருமை பெருமைகளுக்கு உரிமை
பூண்ட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இன்னுமிதை
உணராமல் இருப்பதே பெரும் சாபக்கேடேயாகும்.
நண்பா! விண்வெளியில் உள்ள உலகங்களிலிருந்து
பதினெண் சித்தர்களும்; நமது உலகத்துக்கு வந்தார்கள்
என்றும்; அப்படியவர்கள் வந்து இறங்கித் தங்கிய
இடமே கடலுள் மறைந்த குமரிக் கண்டம் (The Lost
Lemuria). அதன், எஞ்சிய பகுதியே இன்றைய
திராவிடநாடு. அன்று, சித்தர்கள் பேசிய ம�ொழியே
தமிழ் ம�ொழி. அவர்கள், உறவு க�ொண்டிட்ட மக்களே
| 15 நாட்டுப்பற்று
தமிழர்கள். அதனால்தான் சித்தர்கள், தமிழகத்தைத்
தாய்நாடாகவும்; தமிழர்களைத் தங்கள் இனத்தவராகவும்
கருதுகின்றனர். சித்தர்களுக்குரிய நாட்டுப்பற்றின்
மிகுதியால்தான் நூற்று நாற்பத்தெட்டு முறை இறைவனின்
அருள் வழங்கல் இத்திருநாட்டில் ஏற்பட்டிட்டது.
அதுமட்டுமல்ல, சித்தர்களின் நாட்டுப்பற்றால்தான்,
‘நவக�ோடி சித்தர்கள்’, ‘பதினெண் சித்தர்கள்’,
இந்துவேத முன்னேற்றக் கழகம்
‘பதினெட்டாம்படிக் கருப்புகள்’, ‘நவநாத சித்தர்கள்’,
‘நான்மறைச் சித்தர்கள்’,
‘தவச் சித்தர்கள்’, ‘வேள்விச்
சித்தர்கள்’, ‘வேத சித்தர்கள்’,
‘ஞான சித்தர்கள்’, ‘பத்தர்கள்’,
‘புத்தர்கள்’, ப�ோத்தர்கள்’,
‘முத்தர்கள்’, ‘சீவன் ‘முத்தர்கள்’,
‘சித்தியார்கள்’,......... முதலிய
இன்னோரன்ன பிறத் தெய்வீக
நிலையினரில் பெரும்பாலானவர்கள்
இ த் தி ரு ந ா ட் டி லேயே
பி ற ந் தி ரு க் கி ற ா ர ்க ள் .
இவர்களனைவரும் பேசிய ம�ொழி அமிழ்தினுமினிய
பைந்தமிழ் ம�ொழியே. ஆனால், தமிழர்களுக்கு
நாட்டுப்பற்று இல்லாததால் தான் மதச்சடங்குகளும்,
க�ோயில் பூசைகளும், விழாக்களும் வடம�ொழியில்
நடைபெறும் இழிநிலை, அழி நிலை, பழி நிலை ஏற்பட்டது.
நாட்டுப்பற்று | 16
நாட்டுப்பற்றே மறுமலர்ச்சிப் பணிக்குஅடிப்படை:-
நண்பா! ‘நாட்டுப்பற்று’ எனும் சுவரை வைத்துத்தான்
‘ம�ொழிப்பற்று’, ‘இனப்பற்று’, ‘சமயப்பற்று’,
‘நாகரீகப்பற்று’,.. எனும் சித்திரங்களை வரைய
வேண்டும். அதனால்தான், நாட்டுப்பற்று எனும் சுவர்,
நல்ல ஆழமான அடிப்படைய�ோடு, அகலமும், உறுதியும்,
உயரமும், உடையதாக எழுப்பப்படல் வேண்டுமென்பதே
நமது முதலாய தலையாய பணியாயிற்று. நமது, நாட்டு
இந்துவேத முன்னேற்றக் கழகம்
மக்களில், பெரும்பாலான மக்கள், நாட்டுப்பற்று என்பதைச்
சட்டவிர�ோதமானதாக, தீயதாக, வேண்டாததாக,
விரும்பத்தகாததாக, தேவையற்றதாக, பயனற்றதாகக்
கருதுகிறார்கள். இவர்களை, ஓரளவாவது திருத்தினால்
தான் நாம் செய்யும் நாட்டுப் பணியெனும் பயிர்நன்கு
செழித்து வளர்ந்தாலும்; அறுவடைக்கு முன் ஆடு
மாடுகளால் அழிக்கப்பட்டுவிடும் நிலைமையே ஏற்படும்.
அதனால்தான், ‘வேலியில்லாத பயிர் பாழ்’ என்ற
மூதுரையை நினைவில் க�ொள்ளாத உழவனின் உழைப்பு
வீணாகிடும் என்ற கருத்து நாட்டு வழக்கில் உள்ளது.
இதனை, நாம், நினைவு கூர்வத�ோடு, ‘வேலியே
பயிரை மேய்ந்தால் என்னவாகும்?” என்ற ஒரு நாட்டுப்
பழம�ொழியையும் நாம் நினைவு கூற வேண்டும்.
ஏனெனில், நாட்டுப்பற்றே இல்லாதவர்கள்
மிகுந்திருக்கும் சூழலில்; அவர்களைத் திருத்த முற்படாமல்;
நாம், நமது ப�ோக்கில் நாட்டின் நல்வாழ்வுக்கான ‘புரட்சிப்
| 17 நாட்டுப்பற்று
பணியில்’, ‘சீர்திருத்தப்பணியில்’, ‘மறுமலர்ச்சிப் பணியில்’
... ஈடுபட்டிடல் மாபெருந் த�ோல்வியையும், அழிவையும்,
இழிவையும், பழியையுமே நல்கிடும். ஓட்டைக் குடத்தில்
தண்ணீர் க�ொண்டு வந்தால்; கிணற்று மேட்டிலிருந்து
வீடுவருதற்குள் அரைக்குடம் நீருக்கு மேல் வழிநெடுக
ஒழுகிடும். அதுப�ோலவே, நாட்டுப்பற்றில்லாத மக்களையும்
சேர்த்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கும்,
நல்வாழ்வுக்கும், உரிமைக்கும், ஒற்றுமைக்கும்
இந்துவேத முன்னேற்றக் கழகம்
பாடுபடுவது; பாதிக்குமேல் வீணாகிட நேரிடும்.
நண்பா! உலக வரலாற்றில், எந்த நாட்டு வரலாற்றை
புரட்டினாலும் சரி; நாட்டுப்பற்று இல்லாதவர்களால் தான்;
அந்த நாடு பிறர்க்குக் கூட்டிக் க�ொடுக்கப்பட்டும்!
த�ொடர்ந்து அடிமைநாடாகவே இருந்தும்; விடுதலைப்
புரட்சி வெற்றிபெற முடியாமல் நெடுங்காலம் நிகழ்ந்தும்;
விடுதலை பெற்ற நாடு விரைவில் வளம்பெற முடியாமல்
‘கள்ளக் கடத்தல்’, ‘பதுக்கல்’, ‘கள்ளச் சந்தை’,
‘க�ொள்ளை லாபம்’, ‘அகவிலை’... முதலிய தீமைகள்
வளர்ந்தும் நாடு தழுவிய சீர்கேடும், முறைகேடும்,
குறைபாடும் விளைந்ததாக அறியலாம். அதனால்தான்,
நமது தாய்த் திருநாட்டு மக்களுக்கு முதலில் ‘நாட்டுப்பற்று’
நாட்டுப்பற்று | 18
என்பதன் ப�ொருளையும், அதன் தேவையையும் பயனையும்
உடனடியாக முழுமையாக விளக்கிடும் பணியில்
யாவரும் முனைந்து ஈடுபடல் வேண்டுமென்று என்
ப�ோன்றோர் கருதுகின்றனர். ஆனால், யாருமே, தங்களது
கருத்தை வெளிப்படையாக, நேரிடையாகச் ச�ொல்லத்
தயாராக இல்லை என்கின்றப�ோது; இக்கருத்தை,
இத்திருநாட்டு மக்களிடையில் வளர்ப்பதற்கு
எவர் முன்வருவார்? என்றைக்கு முன்வருவார்?...
இந்துவேத முன்னேற்றக் கழகம்
‘சமயப்பற்று’ஏற்பட்டால்‘நாட்டுப்பற்று’ஏற்பட்டுவிடும்
நண்பா! உலகிலுள்ள வேறு எந்த நாட்டுக்கும்
இல்லாத ஓர் அறிய பிடிப்பும் வாய்ப்பும் இத்திருநாட்டு
மக்களுக்குச் சமயத்தின் பெயரால் த�ொன்றுத�ொட்டு
இருந்து வருகிறது. அதாவது, உலகிலுள்ள
பெரும்பாலான நாடுகள், தங்கள் நாட்டில் த�ோன்றாத
புத்தம், கிறித்தவம், முகம்மதியம்... முதலிய மதங்களைப்
புதிதாகத் தங்களின் மதங்களாக ஏற்றுத்தான்
வாழ்கின்றன. ஆனால், இத்திருநாடு, காலத்தைக்
கணக்கிட்டுக் காண முடியாத; மிகப்பழமையான ஒரு
மதத்தையே தனது வாழ்வாகக் க�ொண்டுள்ளது.
அதனால்தான், இத் திருநாட்டு மக்கள், பல்வேறு
காரணங்களால் புதிய மதங்களை ஏற்றுக்கொண்டாலும்;
தங்களுடைய பழைய மதநம்பிக்கைகளையும், பழக்க
வழக்கங்களையும், க�ொள்கைகளையும், தழுவித்தான்
வாழுகிறார்கள், இதனால்தான், இந்திருநாட்டைப்
| 19 நாட்டுப்பற்று
ப�ொறுத்தவரையில் ‘நாட்டுப்பற்று’, ‘சமயப்பற்று’ என்ற
இரண்டும் இணைந்த இரட்டைக் குழல் துப்பாக்கியே
நமது புரட்சிப்படையின் ப�ோர்க் கருவியாகப்
பயன்படுத்த வேண்டுமென்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திருநாட்டு மக்களில்,‘நாட்டுப் பற்று’இல்லாதவர்கள்
கூடச் ‘சமயப்பற்று’மிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அதாவது, இத்திருநாட்டில் ‘சமயப்பற்று’ இல்லாதவர்கள்
இந்துவேத முன்னேற்றக் கழகம்மிக மிகச் சிலரே. அந்த மிகச்
சிலரிலும் சரி பாதிக்கு மேல்; மனத்துள்
‘தெய்வம் உண்டு’, ‘கடவுளருள்
தேவை’, க�ோயில் பூசை விழா
முதலியவை பயனுடையவை’... என்று
நம்புகிறவர்களாகவே உள்ளனர்.
இதை உணர்ந்துதான் என் தந்தை
‘சமய மறுமலர்ச்சியே’; வீழ்ச்சியுற்று
கிடக்கும் தமிழரை எழுச்சி பெறச்
செய்யும்’என்ற கருத்தை வலியுறுத்திச்
சென்றார். அதனால்தான், நான்
‘தமிழர் வீழ்ச்சியும் எழுச்சியும்’ என்ற தலைப்பில்
த�ொகுக்கப்படும் கட்டுரைகளுக்குள் ‘சமய மறுமலர்ச்சி’
பற்றிய சிந்தனைகள் உடையவற்றைத் த�ொகுத்துள்ளேன்.
நம் நாட்டை ப�ொறுத்தவரையும் ‘சமயமும் நாடும்’
பிரிக்கப்பட முடியாத ‘உயிரும் உடலும்’ ப�ோன்றவையே.
அதனால் ஒன்று நலம் பெற்றால், மற்றொன்று தானாகவே
நாட்டுப்பற்று | 20
இந்துவேத முன்னேற்றக் கழகம்நலம் பெறும் என்பது வெளிப்படையான, முடிவான
பேருண்மையாகும். எனவேதான், இத்திருநாட்டில்
‘சமயப்பற்று’ ஏற்பட்டால் ‘நாட்டுப்பற்று’ தானாகவே
ஏற்பட்டுவிடும் என்பதறிந்து; நல்ல சமயமறுமலர்ச்சிச்
சிந்தனைகள் மூலம்; உடனடியாகச் சமயப்பற்று
ஊற்றெடுக்கப்படும்படி செய்யவேண்டுமென்று என்
ப�ோன்றோர் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றோம்.
அதாவது, வீழ்ச்சியுற்றுள்ள தமிழர் எழுச்சி பெறத்
தேவையான நாட்டுப்பற்றைச் சமயப்பற்றின் வளர்ச்சியின்
மூலம் வளர்க்க முயல்வதே என் ப�ோன்றோர் திட்டம்.
தமிழரின் நாகரீகம் - ‘தமிழர் சமயம்:-
நண்பா! தமிழர்களுக்கு நாட்டுப்பற்று, மிகப்பெரிய
அளவில் இல்லாவிட்டாலும்; உரிய அளவிலாவது
இருந்திருந்தால்; உலக அளவில் 1. ‘நைல் ஆற்று நாகரீகம்’
2. ‘யூப்பிரடிசு ஆற்று நாகரீகம்’ 3. ‘டைக்கிரிசு ஆற்று
நாகரீகம்’ 4.‘சிந்து ஆற்று நாகரீகம்’ 5. க�ோயாங்கோ
எனப்படும் “மஞ்சள் ஆற்று நாகரீகம்’ ஆகிய ஐந்து
நாகரீகங்களே பழம்பெரும் நாகரீகங்கள் என்று கூறும்
நிலைமாறி; இன்றுள்ள உள்ள காவிரியாறு, வைகை
ஆறு, தாமிரபரணி ஆறு ஆகிய மூன்று ஆறுகளே
உலக நாகரீகம் வளர்க்கப்பட்ட த�ொட்டில்கள்(Cradle
of Human Civilisation) என்ற பேருண்மையும்; கடலுள்
மறைந்திட்ட குமரிக் கண்டத்தில்(The Lost Lemuria)
இருந்திட்ட குமரியாறு, பஃறுளியாறு ஆகியவற்றின்
| 21 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்கரைகளில் தான் மனித நாகரீகமே பிறந்தது; வளர்ந்து
மிக உச்சநிலையை அடைந்தது என்ற பேருண்மைகளும்
உலக வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றிருக்கும்.
அதன் மூலம், உலக வரலாற்றுக்கு முறையான
ஆரம்பமும், தெளிவான வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும்.
நண்பா! உலகப் பழம்பெரும் நாகரீகங்களின்
வரலாற்றை உற்று ந�ோக்கும்போது; எல்லா நாகரீகங்களும்,
சமயத்தையே உயிராகவும்; நாட்டுப்பற்றையே உடலாகவும்
க�ொண்டிருந்தன என்ற பேருண்மையே மிகத்
தெளிவாக விளங்கிடும். அத்துடன், அந்தந்த நாட்டு
மக்களின் சமயவீழ்ச்சியும், நாட்டுப்பற்றுத் தளர்ச்சியுமே
நாகரீகச் சீரழிவுக்குக் காரணமாயிருந்தன என்ற
பேருண்மையும் மிக மிகத் தெளிவாக விளங்கிடும்.
தமிழர் நாகரீகம் முற்றிலும் சீரழிந்திடாததால்தான்;
இன்னும் ‘தமிழர் சமயம்’ ‘தமிழர் நாடு’ என்ற
ச�ொற்கள் இன்னும் ப�ொருளுடையவையாக உள்ளன.
நாட்டுப்பற்று | 22
இந்துவேத முன்னேற்றக் கழகம்நாகரீகப் பிடிப்பும் – சமயப்பற்றும்:-
தமிழரின் நாகரீகம் முழுக்க முழுக்கச் சமயத்தை
அடிப்படையாகக் க�ொண்ட ஒன்றாகும். அதனால்
தான் பெண்கள் கூந்தலை வெட்டி ஆண்கள் ப�ோல்
முடியலங்காரம் செய்து க�ொள்ளவ�ோ; மஞ்சள் பூசுவதை
விடுத்துப்(பவுடர்) வெண்சுண்ணம் ப�ொடி பூசவ�ோ;
நெற்றியில் குங்குமம், சாந்து, திருநீறு இட்டுக்
க�ொள்வதே விட்டுவிடவ�ோ; சேலையை விடுத்து
முழு அங்கி அணிந்து க�ொள்ளவ�ோ; அன்றாடம்
மாலை திருவிளக்கேற்றி வழிபடலை மறத்தல�ோ;
வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் க�ோயில் சென்று
வழிபடுவதைய�ோ, திருநாள்களில் விரதமிருப்பதைய�ோ...
விட்டுவிடவில்லை. இந்த அடிப்படையான தமிழர்
நாகரீகம், முழுக்க முழுக்கச் சமயத்தையே அடிப்படையாக,
உயிராக, உள்ளீடாகப் பெற்றிருப்பதால் தான்; இன்றைக்கும்
உலக மக்களில், பார்த்ததும், புறநாகரிகத் த�ோற்றத்தால்
உடனடியாக "தமிழர்" என்ற இனம் ஒன்றிருப்பது
தெளிவாக விளக்கமாக உணர்த்தப்படுகிறது.
இப்படி ‘தமிழர்’ என்ற இனம், தனித்துப் பிரித்து
வேறுபடுத்திக் குறிப்பாகக் காட்டப்படும் ப�ோது;
‘தமிழ்நாடு’ என்ற ஒன்று; ஏட்டளவில் கூடத் தனித்துப்
பிரித்து வேறுபடுத்திக் குறிப்பாகக் காட்டப்படும் நிலை
மட்டும் ஏன் உருவாகவே இல்லை? என்பதைச் சிந்திக்க
வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் நாகரிகப் பிடிப்பு
| 23 நாட்டுப்பற்று
சமயப் பற்றாக மலரவில்லை; அப்படிச் சமயப்பற்று
மலராததால் தான் நாட்டுப்பற்று வளரவில்லை,
வளம்பெறவில்லை, வலிமை பெறவில்லை என்பது
தெளிவாக விளங்கிடும். எனவே தமிழர் வீழ்ச்சி எழுச்சியால்
மாற வேண்டுமென்றால்; தமிழர்களுக்கு மங்கிக்கிடக்கும்
நாட்டுப்பற்றுச் சுடர்விட்டு ஒளி பரப்பிடல் வேண்டும்;
அதற்குத் தமிழரின் முடங்கிக் கிடக்கும் சமயப்பற்று புது
வலிமை பெற்று வீறுநடை, வீரநடை ப�ோட வேண்டும்.
நாகரீக வீழ்ச்சியே - நாட்டுப்பற்றுத் தளர்ச்சி:-
இந்துவேத முன்னேற்றக் கழகம்
நண்பா! ‘நைல்’
ஆற்றங்கரையில் ‘அம�ோன்’
எனும் சூரியக் கடவுளும்,
‘ஆசிரிசு’ என்ற தண்ணீர்க்
கடவுளும் பல பெரிய க�ோயில்கள்
கட்டி வழிபடப்பட்டவரை தான்
‘எகிப்திய நாகரீகம்’தழைத்துச்
செ ழி த் தி ரு ந ்த து .
அக்கடவுள்கள் மறக்கப்பட
ஆரம்பித்ததும்; நாட்டுப்பற்று குறைந்தது; தனித்த
நாகரீகம் மறைந்தது.
‘யூப்பிரடிசு’, ‘டைக்ரிசு’ ஆற்றுக்கரைகளில்
‘என்லில்’ என்ற நிலக் கடவுளுக்கு ‘சிக்கிராத்து’
எனப்படும் பெரிய பெரிய க�ோயில்கள் கட்டி
நாட்டுப்பற்று | 24
வழிபடப்பட்ட வரைதான் ‘சுமேரிய நாகரீகம்’ தழைத்துச்
செழித்திருந்தது. அக்கடவுள் மறக்கப்பட ஆரம்பித்ததும்;
நாட்டுப்பற்று குறைந்தது; தனித்த நாகரீகம் மறைந்தது.
‘யாங்கோ’ (மஞ்சள் ஆறு) ஆற்றுக் கரையில்
என்னென்ன கடவுள்கள் வழிபடப்பட்டன; அவற்றிற்கு
எப்படியெப்படிப்பட்ட க�ோயில்கள் இருந்தன.
எவ்வெவ்வகையான வழிபாடுகள் நிகழ்ந்தன.... என்பதைக்
கூடக்கண்டறிய முடியாமல்; சீனத்துச் சிந்தனையாளன்
இந்துவேத முன்னேற்றக் கழகம்
‘லாவ�ோட்சு’(Laotsu) என்பவனும், ‘கன்பியூசியசு’
(Confucius)என்ற சிந்தனையாளனும் ‘புதுமை’
(Novelty), புரட்சி(Revolution), சீர்திருத்தம்(Reformation),
என்ற பெயரால் முழுக்க முழுக்கப் பழமையை அழித்ததால்
தான்; சீனரின் நாட்டுப்பற்று குறைந்தது; நாகரீகம்
மறையலாயிற்று...இருந்தாலும், ‘புத்தமதம்’ சீனத்துக்குள்
புகுந்து; புதிய சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதால்தான்;
சீன நாகரிகம் முற்றிலும் மறையவில்லை.
இப்படிச் சமயப்பற்று தான், சீன நாகரீகத்தைக்
காத்து நாட்டுப்பற்றை வளர்த்தது. ஆனால், சீனாவில்
புகுந்த ‘கிறித்தவ சமயம்’ முழுக்க முழுக்க ஐர�ோப்பிய
நாகரீகத்தையே(European Culture) வலியுறுத்திப்
பரப்பியதன் மூலம்; சீன நாகரீகத்தை வீழ்த்தியது;
சீன நாகரீக வீழ்ச்சி நாட்டுப்பற்றுத் தளர்ச்சியை
வளர்த்தது; அவ்வளர்ச்சியின் முதிர்ச்சியே சீனரின்
வீழ்ச்சியும் ஐர�ோப்பியரின் ஆட்சியுமாக ஆயிற்று.
| 25 நாட்டுப்பற்று
சிந்து ஆற்றங்கரைசான்றுகள் -
“சித்தர் நெறி’’ வளர்த்த ‘தமிழர் மதம்’:-
சிந்து ஆற்றங்கரையில் வழிபடப்பட்டுப் புதை
ப�ொருள்களாகக் கிடைத்துள்ள ‘சிவலிங்கம்’,
‘காளை மாடு’, ‘பசு மாடு’, ‘குரங்கு’, ‘நாகப்பாம்பு’,
நான்கு விலங்குகளால் சூழப்பட்ட மூன்று
தலைகளையுடைய மனித வடிவக் கடவுள்’... முதலியவை
இந்துவேத முன்னேற்றக் கழகம்
அனைத்தும்; உரிய தத்துவ விளக்கங்கள�ோடு,
முறையான பூசைகள�ோடு... இன்றைக்கும் தமிழர்களால்
வழிபடப்பட்டே வருகின்றன. மேற்குறித்த சிந்து
ஆற்றங்கரைப் புதைப�ொருள்களில் பெரும்பாலானவை...
உலகம் முழுதும் புதைப�ொருள்களாகக் கிடைத்துள்ளன.
அதாவது, சிந்து வெளியில் வாழ்ந்து மறைந்த மதமே;
ஒருகாலத்தில் உலகம் முழுதும் பரவியிருந்த உலகப்பெரும்
மதம், ஆனால், அந்த மதம் எந்த நாட்டுக்குரியது;
அந்த மதத்துக்குச் ச�ொந்தக்கார(உரிமையுடைய)
இனம் எந்த இனம் என்பது இன்றுவரை அறுதியிட்டு
உறுதியாகக் கூறமுடியாத நிலையே நீடிக்கிறது.
நாட்டுப்பற்று | 26
இந்துவேத முன்னேற்றக் கழகம் இதற்குக் காரணம் ‘ம�ொழிப்பற்று’, ‘இனப்பற்று’,
‘சமயப்பற்று’, ‘நாட்டுப்பற்று’, ‘நாகரீகப் பற்று’,
‘பண்பாட்டுப் பிடிப்பு’... முதலியவை இல்லாத தமிழர்களே
மிகுதியாக வெளியுலகத் த�ொடர்பும், செல்வாக்கும்,
அறிவுலக அறிமுகமும் உடையவர்களாக இருப்பதுதான்.
தமிழரின் நாட்டுப்பற்று மெலிந்து நலிந்ததற்குக்
காரணமே சமயப்பற்றின் வீழ்ச்சிதான். சமயப்பற்றின்
வீழ்ச்சி ‘ம�ொழிப்பற்று’, ‘இனப்பற்று’, ‘நாகரீகப்பற்று’,
‘பண்பாட்டுப் பிடிப்பு’... முதலியவை வீழ்ச்சியுற்றுத்
தாழ்ச்சி பெற்றிட்டதால் தான். இன்றைக்கும், சிந்து
ஆற்றங்கரையில் புதையுண்டு கிடக்கும் சான்றுகள்
விளக்கும் மதமே; தமிழர்களின் "சித்தர் நெறி" வளர்த்த
‘தமிழர் மதம்’(Siddha Philosophy is the Religion
of The Tamils). இப் பேருண்மையினை அறிந்தவர்
பலர்; ஆனால், வெளியில் ச�ொன்னவர் இலர்.
தூய தனித் தமிழ்ச் ச�ொற்களே
ஆரிய மடமையை ஒழிக்கும்:-
இன்னும் ச�ொல்லப் ப�ோனால் ‘லிங்கம்’ என்று எழுதி
‘ல’ம�ொழிக்கு முதலில் வராது என்பதால் இது வடம�ொழிச்
ச�ொல் என்று கூறும் தமிழர்கள் கூட மிகுதியாக
உள்ளனர். ‘இலங்கு’ என்ற ச�ொல் ஒளியுடையதைக்
குறிக்கும்; வளர்ச்சியும், நன்மையும் தரக்கூடியது என்ற
ப�ொருளையும் உடையது. ‘இலக்கம்’ என்ற ச�ொல்
| 27 நாட்டுப்பற்று
“எண்ணிக்கை” என்ற ப�ொருளுடையது. ‘இலக்கு’
என்ற ச�ொல் ‘குறிக்கோள்’ என்ற ப�ொருளுடையது.
இந்த அடிச்சொற்கள்(Root words) அடிப்படையில் தான்
‘இலிங்கம்’என்ற ச�ொல் வாழ்வின் குறிக்கோள், உயிரின்
குறிக்கோள்; பிறவிப் பயனின் எல்லை. வாழ்வுக்கு
ஒளிதரக்கூடியது; வாழ்வுக்கு விளக்கம் தரக்கூடியது...
முதலிய உயர்ந்த தத்துவப் ப�ொருளை விளக்கும் ‘அறிகுறி’
(Symbol) அல்லது ‘அடையாளம்’ என்று த�ோன்றியது.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
இந்தத் தூய தனித்தமிழ்ச் ச�ொல் ஆண் தன்மையைக்
குறிக்கும் ப�ோது ‘சிவ + இலிங்கம் = சிவலிங்கம்’என்றும்,
பெண் தன்மையைக் குறிக்கும் ப�ோது ‘சத்தி + இலிங்கம்
= சத்திலிங்கம்’ என்று இரு
வடிவங்களைப் பெற்றது. இதை
இன்னும் எண்ணற்ற தமிழர்கள்
புரிந்து க�ொள்ளாமல் தமிழர்
மதமே ஆரியரின் வேதத்தில்
பிறந்தது என்று கருதுகின்றனர்.
தமிழர் க�ோயில் பூசை முறைகள்
அனைத்தும் இன்றைக்கு
‘வடம�ொழியில்’(The Saskrit)
இருப்பதால் தமிழரின்
திருக்கோயில் பூசை முறைகள்
அனைத்தும் ஆரியர்க்கே உரியது; அதனால்தான்,
ஆரிய ம�ொழியில் உள்ளன என்று தவறாகக் கருதும்
தமிழர்கள் மிகுதியாக உள்ளனர்.
நாட்டுப்பற்று | 28
இந்துவேத முன்னேற்றக் கழகம் இதனால் தான், இன்று, பகுத்தறிவுக் க�ொள்கையின்
பெயரால்; தமிழருக்கு உரியதல்லாத ஆரிய மதத்தை
எதிர்த்தழிக்கும் முயற்சி ப�ோல நினைத்துத் தமிழர்களின்
முன்னோர்களான சித்தர்களின் பகுத்தறிவு நிறைந்த
மதத்தையே (Siddharism is a Religion of Rationalism
and it propagates a philosophy for necessary radical
changes in the society - by Mr.M.Palaniswami
Pillai - taken from his letter) தவறுதலாகத்
தாக்குகிறார்கள். அதாவது, ‘சித்தர் நெறி’ யான தமிழர்
மதம் மடமை நிறைந்ததாகக் கருதப்பட்டுத் தாக்கப்படும்
நிலையை உடனடியாக நிறுத்த, மாற்றத் தமிழர்கள்
தன்னுணர்வும், சமய வரலாறும், இன வரலாறும், ம�ொழி
வரலாறும், நாட்டு வரலாறும் படித்துணரல் வேண்டும்.
நமது படிப்பறிவில்லாத மக்களும் சரி! படித்த
மக்களும் சரி! ப�ோதிய வரலாற்றறிவு(Historical
Knowledge) இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அதனால் தான், கணக்குத் தெரியாதவன் வீட்டில்
நித்தம் நித்தம்(அன்றாடம்)சண்டை என்ற பழம�ொழிப்படி;
தமிழர் சமுதாயத்தில் யார் மேடையேறினாலும் புராண
இதிகாசங்களை, க�ோயில்களை, சமய இலக்கியங்களை,
சாத்திரங்களை, சமய வாழ்வை... கண்ணை
மூடிக்கொண்டு வசைபாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இங்கு குறிப்பாகக் கூற வேண்டியது; ஆரியர்
வருகைக்கு முன்பே இந்தியத் துணைக்கண்டத்தில்
| 29 நாட்டுப்பற்று
நிகழ்ந்துவிட்ட உண்மை வரலாறுதான் ‘பாரதம்’,
‘இராமாயணம்’, என்பதை பழம்பெரும் பாரம்பரியத்தை
உடைய ‘பாண்டியரின்’ அரச குடும்ப வரலாறே
‘பாரதம்’; த�ொன்மைமிகு “ச�ோழ” அரச குடும்ப
வரலாறே ‘இராமாயணம்’. இரண்டு கடல் க�ோள்களால்
‘குமரிக்கண்டம்’ முழுக்க அழிந்த பிறகு; தமிழர் இமயம்
வரை குடியேறினர். அப்படிக் குடியேறியவர்களில்
கங்கைக் கரையை ஆண்ட ‘ச�ோழ’, ‘பாண்டிய’
அரச குடும்பங்களில் நிகழ்ந்திட்ட மிகப்பெரிய
வரலாறுகளே ‘இராமாயணம்’ ‘பாரதம்’ என்ற
காப்பியங்களாயின. ஆரியர்கள் இங்கு வந்தப�ோது;
இந்த இரண்டு காப்பியங்களும்
தமிழில் இருந்தன.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
அந்த ஆரியர்களுக்குத்
தமிழர் வரலாறு கூற; வடம�ொழி
கற்ற தமிழர்களே வடம�ொழியில்
இரண்டு காப்பியங்களையும்
பாடினர். ‘வியாசர்’, ‘வால்மீகி’
என்ற இருவரும் ‘நவநாத
சித்தர்கள்’என்று ‘குரு பாரம்பரியம்’
எனும் நூல் கூறுகிறது. இவர்கள் தமிழில் எழுதிய பல
சாத்திரங்கள் இன்றும் எழுதாக்கிளவிகளாக உள்ளன...
இவை பற்றித் தனிநூலே நான் எழுதியிருப்பதால்;
தமிழர்க்கு நாட்டுப் பற்று இல்லாததால், சமயப் பற்று
நாட்டுப்பற்று | 30
இந்துவேத முன்னேற்றக் கழகம்இல்லாத நிலை ஏற்பட்டிட்டது. அதனால் தான், தமிழர்கள்
தங்களுடைய புகழ் கூறும் வரலாற்றை ஆரியருடையது
என்று வெறுத்தொதுக்கும் நிலையேற்பட்டுவிட்டது.
இது உடனடியாக மாற்றப்படல் வேண்டும்.
நண்பா! உலக வரலாற்றை உற்று ந�ோக்கும்போது;
‘சமயப்பற்று’ (Religious Opportunity) தான்
ஒவ்வொரு காலக்கட்டத்தில் மக்களை ஒற்றுமைப்
படுத்தவும், நாட்டுப்பற்றுக் க�ொள்ளவும் செய்துள்ளது
என்ற பேருண்மை மிகத் தெளிவாக விளங்கிடும்.
கிறித்து மதப்பற்றுதான், ஐர�ோப்பாவைத் தட்டியெழுப்பி
நாட்டுப்பற்றும் பெறச்செய்தது. கி.பி.1072 இல்
பாலசுத்தீனத்துள்ள கிறித்து பிறந்த புனித இடமான
செருசேலம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டதால்;
ஐர�ோப்பா முழுதும் ஒற்றுமைப்பட்டுச் சிலுவைப் ப�ோர்
புரியப்பட்டது. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள்
இப்போர் நடந்தது. இப்போரால், வெற்றி த�ோல்வி
முழுமையாக முடிவாக நிர்ணயிக்கப்படாவிட்டாலும்;
‘கிறித்துவ மதத்துக்கு முழு முதல் தலைவர் உர�ோமபுரிப்
ப�ோப்பாண்டவர்? என்ற க�ொள்கை முழுமையாகச்
செயலுக்கு வந்தது. அதனால்தான், மதத்தின்
பெயரால், ஐர�ோப்பாவின் பெரும்பகுதியை இணைத்து
‘புனித உர�ோமானியப் பேரரசு’ உருவாக்கப்பட்டது.
கி.பி 962 இல் செர்மனியில் உள்ள “சாக்சனி”
பகுதியைச் சார்ந்த “மகா ஆட்டோ” ப�ோப்பாண்டவரால்
| 31 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்உர�ோமானியப் பேரரசாக நியமிக்கப்பட்டார். இது
கி.பி 1806 வரை நீடித்தது. இப்படி, சமயப்பற்றால்,
உருவான அரசால் விளைந்த நாட்டுப்பற்றுதான்
ஐர�ோப்பியரை உலக அளவில் புகழ் பெறச் செய்தது.
முகம்மது நபி அவர்கள் கி.பி. 622 இல்
மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு ஓடியப�ோது இருந்த
அராபிய நாட்டின் நிலை; அவரது ‘இசுலாமிய’ மதத்தால்;
அவர் இறந்த கி.பி. 632 க்குள் பல பெரும் மாற்றத்தைப்
பெற்றது. அவரைத் த�ொடர்ந்து மதத்தலைவர்களாகக்
‘கலீபாக்கள்’ செயல்பட்டதால் தான்; அராபிய நாட்டில்
ஒற்றுமை ஏற்பட்டு; நாட்டுப்பற்று ஏற்பட்டு உலகின் பல
பகுதிகளில் அராபியர் வெற்றிபெற்றுப் புகழும் ப�ொருளும்
பெற்ற நிலையினை அராபிய நாட்டுக்கு ஏற்படுத்தினர்.
இன்னும் ச�ொல்லப்போனால்; ‘இசுலாமிய’ மதப்பற்றுதான்
அராபியர்க்கு நாட்டுப்பற்றை வளர்த்து, நாட்டின்
உரிமைக்காகவும் பெருமைக்காகவும் பாடுபடச்செய்தது.
நாட்டுப்பற்று | 32
முடிவுரைஇந்துவேத முன்னேற்றக் கழகம்
பன்னெடுங் காலமாகப் பகைவரால் வீழ்த்தப்பட்டுத்
தாழ்த்தப்பட்டு அடிமைச் சேற்றில் ஆழ்த்தப்பட்டு
அறியாமை இருளில் அவதிப்பட்டுக் க�ொண்டிருக்கும்
ஓர் இனத்தின் மீட்சிக்குப் ப�ோராட வேண்டிய மாபெரும்
ப�ொறுப்பை ஏற்றுள்ள என் ப�ோன்றோர், வாழ்நாள் முழுதும்
தங்கள் கடமையுணர்வை ஊமையனின் கனவாக
ஆக்கிச் சென்றிட முடியுமா? அதுவும், தனது சமுதாய
அமைப்புக்கும், அரசியல் வாழ்வுக்கும், சமய நெறிக்கும்
உயிர்நாடியான உயரிய மாபெரும் தத்துவத்தை மறந்து;
அன்னிய இனத்தின் தத்துவத்தை மதித்தும், ப�ோற்றியும்,
பேணியும் தன்மானமிழந்து, தன்னம்பிக்கையற்று,
ஒற்றுமையிழந்து, சுரண்டலுக்கு உள்ளாகி, வறட்சி
மீக்குற்று, வாடி வதங்கி அடிமைப்பட்டுக் கிடக்கும்
இனத்திற்கு மீண்டும் தனது தத்துவத்தை நினைத்துப்
பார்க்கும்படி செய்யும் கடுமையான அரும்பெரும் பணியை
ஏற்றுள்ள என் ப�ோன்றோர்; காலத்தை வீணாக்காது,
பிஞ்சுப் பருவத்திலேயே அஞ்சா நெஞ்சுடன் தன்
இனத்தின் மீட்சிப் பணியைத் துவக்கிடல் வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் குருபாரம்பரியம்
கூறுகின்ற மூன்று வகையான அமைப்புக்களின்
கீழ் செயல் படத் தயாராக இருக்க வேண்டுகிறேன்.
| 33 நாட்டுப்பற்று
1. தமிழ்ப் பண்பாட்டு விடுதலை இயக்கம்.
2. தமிழ்மொழி விடுதலை இயக்கம்.
3. தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
இந்த மூன்று இயக்கங்கள் உருவாக்கும் முக்கோண
அரணுடைய நகர்தான் அருளாட்சித் திருநகராக
இருக்கும். அந்நகர்தான், ‘அரசியலுக்கு உட்பட்டது
மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா? என்பதை
நிர்ணயிக்கும். இந்த நிர்ணயிப்பின் கருத்தலைகள்,
செயலலைகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும்
பரவியே தீரும்; பிறகு உலகு முழுவதும் பரவியே தீரும்.
இந்துவேத முன்னேற்றக் கழகம்
சமய பற்றே!! நாகரீக பற்று!!
நாகரீக பற்றே!! சமுதாய பற்று!!
சமயமே!! சமுதாய மறுமலர்ச்சிக்கு அடிப்படை!!
சமயம் வளர்ப்போம்!! சமுதாயம் வளர்ப்போம்!!
“தமிழ் ம�ொழி விடுதலையே உலக ம�ொழிகளின் விடுதலை”
“ தமி ழ் ம �ொ ழியி ன் ம று மல ர்ச்சி யே உலக ஆன ்மமறீுகமலர்ச்சி”
“தமிழ் ம�ொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள
வளர்ச்சி”
“தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின்
விடுதலை”
நாட்டுப்பற்று | 34
‘‘தமிழின விழிச்சியே உலகச் சக�ோதரத்தத்துவ விழிச்சி”
“தமிழின எழுச்சியே உலக மானுட உரிமை எழுச்சி”
“தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி”
“தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை”
“தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி”
“தமிழர் மத எழுச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”
“தமிழர் மதச் செழிச்சியே உலக மானுடர் உரிமை மீட்சி”
“தமிழர் மத மீட்சியே உலக அருளாட்சி உயர்ச்சி”
இந்துவேத முன்னேற்றக் கழகம்
“தமிழா விழித்தெழு!
உன் வரலாறுகளைத் தெரிய முற்படு!
உன் வளமிகு ம�ொழிச் செல்வங்களை அறிய முற்படு!
உன் சமுதாயப் பண்பாடுகளைப் புரிய முற்படு!
உன் அரசியல் நாகரீகங்களை உணர முற்படு!
உனக்கு வழி காட்ட உன்னுடைய சமயம்
காத்திருக்கிறது!”
வழி காட்ட உன்னுடைய சமயம் காத்திருக்கிறது…..!”
- ஞாலகுரு சித்தர் “அரசய�ோகிக் கருவூறார்”
| 35 நாட்டுப்பற்று
நாட்டுப்பற்று | 36 இந்துவேத முன்னேற்றக் கழகம்
| 37 நாட்டுப்பற்று
இந்துவேத முன்னேற்றக் கழகம்