உவமைத்தொடர்
கு ழு உ று ப் பி ன ர்
1 ) க வி ல ன்
2 ) த ர் வி ன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
பொருள் :
துன்பத்துக்குமேல் துன்பம்
வாக்கியம :
குமரனின் முழுநேர வேலையாக இருந்த மின்னியல்
வணிகத்தில் அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டது . ஆதலால் ,
குமரன் சோகத்தில் ஆழ்ந்திருந்தான் . வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சியது போல அவனது மனைவியின் வேலையும்
பறிப்போனது . அதனால் , குமரன் மிகுந்த வருத்தத்தில்
ஆழ்ந்தான் .
இருதலைக் கொள்ளி எறும்பு போல
பொருள் :
எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை
வாக்கியம :
குணாளனின் அப்பா அவனது பிடிவாதத்தைக் கண்டித்துக்
கடுமையாகத் திட்டினார் . அவன் அழுது கொண்டே அறைக்குள்
நுழைந்தான் . அவனது அம்மா அவனைச் சமாதானப்படுத்த
முயன்றார் . ஆனால் , அவன் தனது அழுகையை நிறுத்தவில்லை .
அதனால் , அம்மா அப்பாவிடம் சென்று முறையிட்டார் . அவரும்
அம்மாவின் முறையீட்டைச் செவிமடுக்கவில்லை . இவர்கள்
இருவருக்கிடையே அம்மா இருதலைக் கொள்ளி எறும்பு
போல செய்வதறியாது தவித்தார் .
நீர்மேல் எழுத்துப் போல
பொருள் :
நிலையாமை
வாக்கியம :
சிவா ஒவ்வொரு தவணை தேர்விலும் சிறந்த
மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் எனத் தனது
பெற்றோரிடம் உறுதி கூறுவான் . ஆனால் , அவனின்
உறுதி நீர்மேல் எழுத்துப் போல நிறைவேறாமல்
போவதற்கு அவனது அலட்சியப் போக்கும் சோம்பலுமே
காரணிகளாகும் .
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
பொருள்:
ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை / பாதிப்பு
ஏற்படுவது உறுதி
வாக்கியம :
தன் குடும்பச் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு திரு .
குமரன் வட்டி முதலையிடம் கடன் வாங்கி இருந்தார் .
அந்தக் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை . அதனால் ,
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல அதிலிருந்து
மீள முடியாமல் தவித்தார் ; மன வேதனை அடைந்தார் .
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல
பொருள் :
நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு
விளைவித்தல்
வாக்கியம :
நல்ல தர்ம காரியங்களைச் செய்து வந்த சிவராமன் ,
தவறான நண்பர்களின் சேர்க்கையால் தனது மொத்த
பணத்தையும் சூதாட்டத்தில் இழக்க நேரிட்டது . நிலைக்குத்
மேலும் , சூதாட்டத்தில் அடிமையாகிக் கடன் வாங்கிச்
சூதாடும் தள்ளப்பட்டான் . நல்ல மரத்தில் புல்லுருவி
பாய்ந்தது போல அவனது வாழ்க்கை திசை
மாறிப்போனது .
நிலத்தினும் பெரிதே ; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
விளக்கம்
மலைச் சாரலில் உள்ள கரிய கிளைகளில் பூத்துக்குலுங்கும்
குறிஞ்சி மலர்களின் தேனைக் கொண்டு தேனீக்கள் பெரிய
தேனடைகளைக் கட்டும் சிறந்த நாட்டைச் சார்ந்தவன் என்
தலைவன் . அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப்
பெரியது , வானத்தைவிட உயரமானது ; கடலைவிட ஆழமானது .
பதவுரை
கருங்கோற் - கரிய கிளைகளில்
குறிஞ்சிப் பூக் கொண்டு - மலைச்சாரலில் மலரும் குறிஞ்சிப்பூ
பெருந்தேன் இழைக்கும் - தேனைக் கொண்டு தேனடைகளைக் கட்டும் தேனீக்கள்
நாடனொடு நட்பே - நல்லாட்சி நாட்டைச் சார்ந்தவனுடன் கொண்ட நட்பு
நிலத்தினும் பெரிதே - பூமியைவிடப் பெரியது
வானினும் உயர்ந்தன்று - வானத்தைவிட உயர்ந்தது
நீரினும் ஆர் அளவின்றே- கடலைவிட ஆழமானது
நன்றி