The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by 050kirtna.balu, 2022-06-19 14:22:57

தமிழ்ச்சிட்டு

தமிழ்ச்சிட்டு

BULETIN EDISI JUN 2022

ஜூன் மாத இதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2053

தோக் பெர்டானா இடைநிலைப்ப

ள்ளி

1இதழ் உயர்வோம், உயர்த்ததுவோம்!

Edisi தமிழ்மொழிக் கழகம்

டு



சி

த மி ழ் ச்

Jawatankuasa Penerbitan 'Tamil Chittu'

Penaung
PUAN ROSIAH BINTI MOHAMED ARIFF

Pengetua SMK Tok Perdana

Pengerusi I
ENCIK ABDUL HAKIM BIN MOHD ISA
Penolong Kanan Pentadbiran SMK Tok Perdana

Pengerusi II
PUAN SUZANA BINTI ABU BAKAR
Penolong Kanan Kokurikulum SMK Tok Perdana

Penasihat
PUAN PUSPAVALLI A/P SATHIVAL

PUAN DEVI A/P KERISNA
PUAN VENUSRI LATCHUMY A/P PUVANESVARAN

Ketua Editor Ketua Wartawan
KAVIPPRIYA A/P SHANMUGAM NEVISHA A/P VIMALAN

Penolong Ketua Editor Ketua Fortografi
KIRTNA A/P BALU PRAGASH RAJ A/L MURUGESAN

Ketua Artikel Ahli Jawatankuasa
VISWAM A/L MANOHARAN RENUGEN KUMAR A/L SIVA KUMAR
ARTHINA A/P MURUGAN
Ketua Grafik BAVISHNA A/P MURUGAN
THANUSH A/L MARIYAPPAN CHARIVIN A/L SHASIKUMAR
NAMUNESSWARAN A/L SIVA PERUMAL

சிட்டுகள் சிறகடித்துப் பறக்கட்டும்.....



தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்ச்சிட்டு

எனும் மாத இதழில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க

மகிழ்ச்சி அடைகிறேன். ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற

மகாகவி பாரதியாரின் வாக்கிற்கொப்ப கடந்த இரண்டு

வருடங்களாகக் கனவாக இருந்த தமிழ்ச்சிட்டு பல தடைகளைத்

தாண்டி இப்பொழுது நனவாகியுள்ளதை நினைக்கையில் உள்ளம்

பூரிக்கிறது. தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளியின்

பணித்தியமும் தமிழ்மொழிக் கழகமும் இணைந்து இத்தகு அரிய

முயற்சியை மேற்கொண்டுள்ளது பெருமைக்குரியது;

பாராட்டத்தக்கது.

நமது தாய்மொழியான தமிழ்மொழி செம்மொழி என்ற
பெருமைமிக்கது. அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது
ஒவ்வொரு தமிழ் மாணவனின் தலையாய கடமையாகும். தமிழைக்
கற்கும் அதே வேளையில் அன்னைத் தமிழுக்கு வளம் சேர்க்கும்
வண்ணம் மாணவர்கள் தமிழ்ப் படைப்புகளைத் தர ஊக்கம்
கொள்ள வேண்டும். தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளி
மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர
தமிழ்ச்சிட்டு எனும் இம்மாத இதழ் வடிகால் அமைத்துக்
கொடுத்துள்ளது. ஆகவே, நிறைய வாசியுங்கள்; கற்பனைக்குக்
கடிவாளமிடுங்கள். தயக்கம் கொள்ளாமல் உங்களுக்குள்
இலைமறைக்காய் போல் இருக்கும் எழுத்தாற்றலை உலகுக்குக்
காட்டுங்கள். முயற்சி உடையவன் என்றும் தோற்பதில்லை
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிறகடித்துப் பறக்கத் தயாராகுங்கள் சிட்டுகளே.....

நன்றி, வணக்கம்.

தமிழ்சிட்டு ஆலோசகர்,
திருமதி புஷ்பவள்ளி சத்திவேல்

பள்ளி வரலாறு நமது பள்ளியின் வரலாற்றை
அறிவோம் வாரீர் !

தோக் பெர்டானா தேசிய இடைநிலைப் பள்ளி சித்தியவான்
நகரில் தோக் பெர்டானா சாலையில் அமைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சித்தியவான் நகரின்
முன்னாள் தலைவர் (penghulu) அவர்களின் சேவையின்
நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

இப்பள்ளி 1965ஆம் ஆண்டு தொடக்கத்தில்
'செகொலா மெனெங்கா ரெண்டா' (SEKOLAH
MENENGAH RENDAH) அல்லது குறுகிய பெயரான
'எஸ்.எம்.ஆர்' (SMR) என்று அழைக்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் புகுமுக வகுப்பு முதல் படிவம் 3
வரை மட்டுமே மாணவர்கள் பயின்றனர்.

1967 - முதல் குழு மாணவர்கள் 'எல்.சி.இ' (LCE) தேர்வு
எழுதினர்.
20/6/1968 - மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு முகமது
கீர் ஜோஹாரி இந்தப் பள்ளியை அதிகாரப் பூர்வமாகத்
திறந்து வைத்தார்.
1975 - இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. படிவம் 4
மற்றும் 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
1981 - முதல் குழு மாணவர்கள் 'எஸ்.பி.எம்' (SPM) தேர்வை
எழுதினர்.
1983 - இப்பள்ளி செகொலா மெனெங்கா
ரென்டாவிலிருந்து தோக் பெர்டானா தேசிய
இடைநிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1986 - படிவம் 4 அறிவியல் வகுப்பு முதன்முறையாகத்
தொடங்கப்பட்டது. மொத்தம் 1051 மாணவர்கள் பயின்றனர்.
2022 - தற்பொழுது இப்பள்ளியில் ஏழு இணை கட்டிடங்கள்
உள்ளன.

71 ஆசிரியர்களும் 652 மாணவர்களும் 04
(மலாய் மாணவர்கள் 39% , இந்திய
மாணவர்கள் 61%) உள்ளனர்.
18வது பள்ளி முதல்வராக திருமதி ரோசியா
பிந்தி முகமது ஆரிவ் பணிபுரிகிறார்.

தொகுப்பு :
காயத்ரி மாதவன்,
படிவம் 3A2

நேர்காணல் வாங்க
பழகலாம்!

திருமதி தேவி த/பெ கிருஷ்ணன்,
தமிழ் ஆசிரியர்,
தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளி.

தாய் வாழ்க; தாய் தந்த தமிழ் வாழ்க.
வணக்கம் குழந்தைளே. நான் உங்கள் தேவியம்மா. ‘தமிழ்ச்சிட்டின்’ வழி
உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப்பற்றி சில வரிகள்.
நான் பதினொரு பேர் கொண்ட குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தை.
என்னுடைய ஆரம்பக்கல்வியை 1976ல் மகா கணேச வித்தியாசாலையில்
தொடங்கினேன். பின்பு படிவம் 5 வரை தோக் பெர்டானா
இடைநிலைப்பள்ளியில் பயின்றேன். என் ஆசிரியர் பயிற்சியை ராஜா
மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மேற்கொண்டேன். 2002ல்
மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இளங்கலைப் பட்டமும்
பெற்றேன்.

இருபத்தெட்டு ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றேன்.
தற்பொழுது தோக் பெர்டானா இடைநிலைபள்ளியில் 15 ஆண்டுகளாக
தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன்.

நான்தோக் பெர்டானா இடைநிலைப்பள்ளியில் பணி புரிந்த வரை
மாணவர்கள் அனைவரும் எனக்கு அன்பான மாணவர்களே.
இளைஞர்களுக்கே உரிய சுட்டித்தனமும் விளையாட்டுத்தனமும்
அதிகமாகவே காணலாம். இருப்பினும் புறப்பாட நடவடிக்கையிலும்
கல்வியிலும் முத்திரை பதிக்கின்றனர். சிறுபான்மையினரே கல்வியின் மீது
அக்கறை இல்லாமல் காணப்படுகின்றனர்.

எனக்குப் பிடித்த தலைவர் மகாத்மா காந்தி. அவரைப்போல் மக்களுக்குச்
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் தாதியாக வேண்டும் என்று
ஆசை கொண்டேன். ஆனால் இறைவன் எனக்குத் தேர்ந்தெடுத்துக்
கொடுத்தது இவ்வாசிரியர் பணி. அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
ஆகவே, இன்றுவரை இப்பணியை என் ஆத்ம திருப்தியோடு செவ்வனே
செய்து வருகிறேன்.

05

‘என் பள்ளியே என் வீடு ; ‘என் மாணவர்களே என் குழந்தைகள்’.
ஒவ்வொரு மாணவரும் என்னை ‘அம்மா’ என்று அழைக்கும் போது
மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கல்வி மட்டுமே உன்
வாழ்க்கையை உயர்த்தும்’ என்ற கொள்கை கொண்டவள் நான். நான்
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடி பல
சோதனைகளையும் சவால்களையும் கடந்து இன்று இந்நிலைக்கு
வருவதற்கு என் கல்வியே எனக்குத் துணை புரிந்தது.

எனவே, எனதருமை மாணவக் குழந்தைகளே! நீங்களும் சிறப்பாகக்
கல்வி கற்று நாடும் வீடும் போற்ற வாழ வேண்டும் என்று
வாழ்த்துகிறேன்.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு
எழுத்தறிவித்தல்’

(பாரதியார்)

06

கவிதை

வெற்றிவரும்
நாளை

அன்பை நாடிவரும் நெஞ்சுக்குள் நீந்தி

அழகான விடியலில் கரைசேரா ஆசைகள்

வாடிக்கையாக தடைகளைக் கடந்து

வந்துபோகும் இயற்கைகூட ஒருநாள் வெற்றியை

வேடிக்கை காட்டுகிறது... முத்தமிடும்

அந்நாள் வையகம்!!!!

பூத்திருக்கும் பொழுதில்

காத்திருப்பைத் தடைசெய்து

வீறுகொண்டு எழுந்திட

கதிரொளியின் பிரகாசம்

புன்னகையோடு

ஜொலிக்கின்றது...

விண்ணோடு உறவாடி
மண்ணிலே மணம் வீசும்
மலர்ந்தவை எல்லாம்
வாடிக்கிடக்கும்போது
இசைபாடும் தென்றலும்
சிலையானது சிலநொடி...

மனதில் மலர்ந்தவற்றை ஆக்கம் :
இறைவனிடம் வேண்டி பிரகாஸ்ராஜ் த/பெ முருகேசன்,
எதுவுமே நிறைவேறாதபோது படிவம் 5K2
வாடிடும் இதயம்
ஈரம் கசிந்திடும் விழிகள்....

07

கவிதை

எண்ணங்களால்
வாழ்கிறோம்

நாம் வாழ்வது ஆண்டுகளால் அல்ல,
நாம் துணிந்து செய்துள்ள நல்ல செயல்களால்
தான் வாழ்கிறோம்!
நாம் மூச்சு விடுவதால் வாழ்வதில்லை,
நம்முடைய சிந்தனைகளால்தான் வாழ்கிறோம்!
நம்மிடம் எவ்வளவு பொருள்கள் உள்ளன என்பதால்
வாழவில்லை,
நம்மிடம் எவ்வளவு தூரம்
உள்ளுணர்வான எழுச்சியூட்டும் நம்பிக்கை உள்ளதுவோ
அதற்கு ஏற்பவே வாழ்கிறோம்!.



ஆக்கம் :
கவிப்பிரியா சண்முகம்,
படிவம் 5RC

08

கட்டுரை

ஆற்றுத் தூய்மைக்கேடு

இறைவனின் உன்னத படைப்புகளில் அடுத்து, நம் நாட்டில் பரவலாக

ஒன்றான ஆறு மனிதர்களுக்குப் பல நடைபெறும் வெட்டுமரத் தொழிலினாலும்

வகையில் உதவியாக இருக்கிறது. ஆற்று இந்த ஆற்றுத் தூய்மைக்கேடு

நீரைக்கொண்டு சிலர் தங்களது அன்றாட ஏற்படுகின்றது. மலைப்பிரதேசங்களில்

வேலைகளைப் பூர்த்திச் செய்கின்றனர். நடைபெறும் வெட்டுமரத் தொழிலினால்

எடுத்துக்காட்டாகத் துணி துவைத்தல், ஆற்றுத் தூய்மைக்கேடு மிகவும்

குளித்தல், குடித்தல் போன்றவையாகும். மோசமடைந்துள்ளது. இவ்விடங்களில்

இவ்வாறாகப் பலனளிக்கக்கூடிய நடைபெறும் துரித வெட்டுமரத்

ஆறுகள் இன்று பலவகையில் தொழிலினால் மண்சரிவு ஏற்படுகின்றது.

தூய்மைக்கேட்டை எதிர்நொக்கி குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த

வருகின்றன. இவையாவும் மனிதனின் மண்சரிவு மிகவும் மோசமடைகின்றது.

செயலால் விளைகின்றன என்பதை நாம் இந்த மண்சரிவு ஆற்றோடு கலப்பதினால்

மறுக்க இயலாது. ஆற்றுத் தூய்மைக்கேடு ஆறு தூய்மைக்கேட்டை அடைகின்றது.

பல காரணங்களால் விளைகின்றது. ஆற்றில் போய்ச் சேரும் மண்ணால்

ஆற்றின் ஆழம் குறைந்து, திடீர் வெள்ளம்

ஆற்றுத் தூய்மைக்கேட்டிற்கு ஏற்படுகிறது.

முதன்மை காரணம்

தொழிற்சாலைகளாகும். வீடமைப்புத் திட்டங்களினால் ஆறுகள்

இத்தொழிற்சாலைகள் கழிவுப்பொருளை தூய்மைக்கேட்டை அடைந்துள்ளதை நாம்

நேரடியாகவே ஆற்றில் கொட்டுகின்றன. பரவலாகக் காணலாம். அங்கு

குறிப்பாக, மூலப்பொருள் சுத்திகரிப்புத் நடைபெறும் இத்திட்டங்களினால்

தொழிற்சாலைகள், இரசாயனத் மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள்

தொழிற்சாலைகள் போன்றவை தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகின்றன.

கழிவுப்பொருளை அப்புறப்படுத்த எடுத்துக்காட்டிற்குப் பிரேசர் மலையில்

ஆற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கோல்ப் மைதானத் திட்டத்தினால் அதன்

இதற்கு எடுத்துக்காட்டாக, கிள்ளான் ஆறு அருகே உள்ள 'ஜிரியாவ்' நீர்வீழ்ச்சி

தூய்மைக்கேட்டை அடைவதற்கு மிகவும் மோசமான தூய்மைக்கேட்டிற்கு

இத்தகைய தொழிற்சாலைகளின் உள்ளாகியுள்ளதை நாம் நினைவில்

கழிவுப்பொருள்கள் பெருங்காரணமாக கொள்ள வேண்டும்.

விளங்குகின்றன.

09

இதன் தொடர்பாக நாட்டில் ஆங்காங்கே ஆகவே, சுற்றுப்புறத்தைப்

காட்டை அழித்து நெடுஞ்சாலைகள் பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒன்று

அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினாலும் திரண்டு பாடுபட வேண்டும். ஒன்று

மண்சரிவு ஏற்பட்டு ஆறுகள் தூய்மைக்கேடு பட்டால் உண்டு வாழ்வு என்பது போல

அடைகின்றன. பெரிய ஆறுகளுக்கிடையே நாம் வசிக்கும் இடத்தை அனைவரும்

பாலம் அமைக்கும் பொழுது சிறிய ஒன்று சேர்ந்து கூட்டுப்பணி முறையில்

கட்டைகள், மணல் மற்றும் அங்கே சுத்தப்படுத்தினால் நாம் சுகாதாரமாக

கட்டுமானத்திற்குப் பயன்படுத்தக்கூடிய நோய்நொடியின்றி வாழலாம். அதோடு

மீதப் பொருள்களை ஆற்றிலே அரசாங்கமும் இச்சிக்கலைக்

போட்டுவிடுகின்றனர். இதனால் ஆற்றில் களைவதில் தக்க நடவடிக்கைகளை

நீரோட்டம் தடைப்பட்டுத் தூய்மைக்கேடு எடுக்க வேண்டும் . எடுத்துக்காட்டாக,

ஏற்படுகிறது. ஆற்றோரங்களில் காணப்படும்

குடியேறிகளை மாற்று இடங்களூக்கு

இதனைத்தவிர, வீட்டுக் கழிவுகளும் மறுகுடியேற்றம் செய்ய ஆவனச் செய்ய

ஆற்றுத் தூய்மைக்கேட்டிற்குக் காரணமாக வேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட

அமைகின்றன. குறிப்பாகக். கிள்ளான், இடத்தில் மட்டுமே வெட்டுமரத்தொழில்

பென்சாலா, பகாங் ஆறு போன்ற நடைபெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல்

ஆற்றோரங்களில் நிறைய வீடுகள் வழங்க வேண்டும். நமது ஆற்றை

இருப்பதை நாம் காணலாம். இதனால், நேசிப்போம் என்னும் அரசாங்கத்தின்

தினமும் ஏராளமான குப்பைகளை இந்த சுலோகத்தை நாடு தழுவிய நிலையில்

ஆறுகள் சுமக்க சேரிடுகின்றன. செயல்படுத்தினால் ஆற்றின்

இதுமட்டுமில்லாமல் ஆற்றோரங்களில் தூய்மையைப் பேணிக் காக்க இயலும்.

காணப்படும் கால்நடை வளர்ப்புத்

திட்டத்தினாலும் நம் ஆறுகள் மிகவும் ஆகவே, இயற்கை அன்னை வரமாக

மோசமான தூய்மைக்கேட்டை நமக்குக் கொடுத்த ஆற்றைத்

அடைந்துள்ளன. தூய்மையாக வைத்திருப்போம்;

ஆக்கம் : ஆரோக்கியமாக வாழ்வோம்.
கார்த்திகா அருணாகிரி,
படிவம் 3A4

10

தொடர்கதை

?நிறைவேறுமா

மேகங்கள் ஒன்று கூடின. இடியும் மின்னலும் நம்மில் யார் பெரியவர் என்று
போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.

"டேய் நகுலன், மழை பெய்யுற மாதிரி இருக்கு, கண்டிப்பா இன்னைக்கு மழை
வெச்சி வாங்கப் போது ".

"ஆமாடா ஹரிஷ், பந்து விளையாடி ரொம்ப நாளாச்சு. உங்க கூட திடலில்
பந்து விளையாட போறேன்னு சொன்ன அப்பா விட மாட்டாரு, பத்தாதுக்கு
இந்த மழை வேற சதி பண்ணுது".

"என்ன ஆனாலும் சரி இன்னைக்கு சுனாமியே வந்தாலும் சரி பந்து
விளையாடுறோம்" என்று பள்ளி முடிந்து வீடு திரும்பாமல், பள்ளி
நுழைவாயிலில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

" விழிகளில் விழிகளில் விழுந்து விட்டேன் " என்று பாடியவாறே அவர்கள்
அருகில் கிஷண் சென்றான். "வாடா ஏ. ஆர் ரஹ்மான் தம்பி, மணியாச்சு,
வானம் வேற இருட்டுது, நீ பாடுறதப் பார்த்தா மழை வந்துரும் போல. சீக்கிரம்
வீட்டுக்கு போவோம் வா! " என்று மூவரும் பள்ளி நுழைவாயிலிருந்து நடக்க
ஆரம்பித்தனர்.

அவர்கள் மூவரும் என்னதான் சிரித்துப் பேசி சென்று கொண்டிருந்தாலும்,
நகுலனின் மனதிலோ ' இன்னைக்கு மழை பெய்யுமா? பந்து விளையாட
முடியுமா? அப்பா விடுவாறா? ' என்ற வினாக்களே ஓடிகொண்டிருந்தன. ஒரு
வழியாக நகுலன் வீட்டைச் சென்றடைந்தான்.

'வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி?
எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர்பாய்ச்சி
நெடுவயல் நிறைய கண்டாயா? நாற்று நட்டாயா? களைப் பறித்தாயா? களனி
வாழ் உழவர்க்குக் கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும்
எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அறைத்துப் பணி புரிந்தாயா? அல்லது நீ
மாமனா மச்சானா? மானம் கெட்டவனே? '. " ஐயோ, பாட்டி சவுண்டக்
குறைக்கிறிங்களா ஏரியா முழுக்க நம்ப டிவி சவுண்டுதான் கேக்குது" என்று
வந்த உடனே பாட்டியிடம் எரிந்து விழுந்தான் நகுலன்.

11

"வந்துட்டியா? டேய் இது வீரபாண்டிய கட்டபொம்பன் பட வசனம்.
உனக்கும் இந்த படம் பேரு தான் வைக்கலானு இருந்தோம் அப்புறம் தான்
நகுலன்னு வெச்சாங்க!" என்று கூறியவாறு சிரித்தார்.

"நானும் மழை வரபோது இன்னும் வரலைன்னு பார்த்துக்கிட்டு
இருந்தேன். நல்ல வேளை வந்துட்ட" என்றார். என்னத்தான் நகுலன் அவரிடம்
கடுப்பாகப் பேசினாலும் அவனின் மேல் அதிகப் பாசம் வைத்திருப்பவர்
அவனின் பாட்டித்தான்.

"சரி போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு" என்று அவர் கூற நகுலன்
அவனின் அறைக்குள் நுழைந்தான். அவனின் மனதிலோ ' இன்னைக்கு
என்ன சொல்லிட்டு பந்து விளையாட போறது. அப்பா என்ன சொல்லுவாரு'
என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது.

**********



அடுத்த இதழில் தொடரும்….!

ஆக்கம் :
புஷ்பரித்தா லோகேஸ்வரன்,

படிவம் 4STA

12

கட்டுரை

வாழ்வியல் போற்றும் அழியாச் செல்வம் கல்வியாகும். க
இவ்வுண்மையைக் 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு - ல்
மாடல்ல மற்றை யவை' என்னும் குறள் வழி வள்ளுவர்
உணர்த்துகின்றார். ஒரு மனிதன் செல்வங்கள் பல பெற்றிருந்தாலும்,
அவன் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை எனில், அச்செல்வத்தின்
நிலை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகிவிடும்.
அந்த அளவிற்கு நம் வாழ்க்கைக்குக் கல்வி மிகவும் முக்கியமானது.

உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. இருப்பினும், வி

சிறந்த உயிரினமாக ஆறறிவு பெற்ற மனிதனே

போற்றப்படுகின்றான். பிற உயிர்களைக் காட்டிலும் மனிதனே

உயர்ந்தவனாய், செம்மையானவனாய், முழுமையானவனாய்

மதிக்கப்படுகிறான். மதிப்பும் மரியாதையும் கல்வியின்கண் மனிதன்

பெற்ற பகுத்தறிவிற்குச் சான்றாகும். இந்தப் பகுத்தறிவின் காரணமாகவே எது

நல்லது, எது கெட்டது என மனிதனால் பகுத்தாய்ந்து செயலாற்ற முடிகிறது.

நீரிலிருந்து பாலைப் பிரித்து அருந்தும் அன்னப் பறவை போல, கல்வி கற்றவனால்

மட்டுமே குறையற்றப் போற்றத்தகுச் செயலாற்ற முடியும். 'செயற்கரிய செய்வார்

பெரியர் சிறியர்- செயற்கரிய செய்கலா தார்' என்று கற்றவர்தம் செயல்

திறனையே உயர்த்திக் கூறுகின்றார் திருக்குறளார்.

இப்பூவுலகில், பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பது போல கல்வி
இல்லார்க்கும் எவ்வுலகமும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வான்புகழ் வள்ளுவர், பொருட்பாலின் கல்வி அதிகாரத்தில், கல்வியின் சிறப்பைப்
பத்துக் குறட்பாக்கள் வழி மொழிந்துள்ளார். 'கல்லாதவன் முகத்தில் இருப்பது கண்கள்
அல்ல என்றும் அவை புண்கள் என்றும் அவர் இடித்துரைக்கின்றார். கல்லாதவன்
கண்ணிருந்தும் குருடன் போலாகிறான் என வள்ளுவர் உள்ளங்கை நெல்லிக்கனி
போல நமக்கு எடுத்துக்கூறுகிறார்.

நாம் கல்வியியைக் கற்பதன் வழி, நம் வாழ்க்கையில் செழிப்பையும் பசுமையையும்
செவ்வனே அனுபவிக்க முடியும். அதனால், நாம் இளமையிலிருந்தே கல்வியைக் கற்று
வந்தோமானால் அதன் சிறப்புகளையும் பயன்களையும் மிக விரைவில் உணரலாம்.
நாம் இளமைப்பருவத்தில் கற்கும் கல்வி சிலை மேல் எழுத்துப் போல மனதில்
அழியாமல் நீடித்து ஆழமாகப் பதியும்.

கல்வி அழியாச் செல்வம் எனக் கண்டோம். அந்த அழியாச் செல்வத்தைப்
பெறுவதென்பது எளிய செயலன்று. இருப்பினும், முழு மூச்சுடன் கல்வியைக் கற்றால்
உலகம் நம் வசப்படும் என்பது ஆணித்தரமாகும். கல்வி கற்பது என்பது வெறும் பட்டம்
பெறுவதற்கும் பேரும் புகழும் சேர்ப்பதற்காகவும் மட்டுமல்ல. மாறாக, கற்றதன் வழி
ஒழுகவும் வேண்டும்.

13

'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்
மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு'

என்று விவேகசிந்தாமணி கற்றோரின் புகழ் பாடுகிறது. ஆகவே, மனிதப் பிறப்பை
மேன்மை படுத்தும் கல்வியைக் கண்ணும் கருத்துமாய்க் கற்போமாக. அத்தோடு,
விழலுக்கு இறைத்த நீர் போலக் கல்வி பயனற்றுப் போய்விடாமல் வாழ்க்கையில்
கற்றனவற்றைக் கடைப்பிடித்து மற்றவர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து கற்ற
கல்விக்குப் பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் கண்களையொத்தக்
கல்வியை முயன்று கற்று வெற்றியின் உச்சத்தை நோக்கிப் பீடுநடை போடுவோமாக!

ஆக்கம் :
ரிவிதா மோகன்டாஸ்,

படிவம் 4

செய்யுளும் மொழியணிகளும் அறிந்திடுக!!!

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை (400)
- ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்; மற்ற பொருள்கள்
செல்வமாகக் கருதப்படாது.

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல - அழிவு

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)
- செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்யவல்லவரே பெரியோர்.
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர் சிறியோர்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு

சிலை மேல் எழுத்துப் போல - மனத்தில்அழியாமல் பதிந்திருப்பது

முழு மூச்சு - முழு முயற்சியுடன்/ மிகத் தீவிரமாக

பேரும் புகழும் - கீர்த்தி/ புகழ்/ மாண்பு

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்
மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- ஒரு நாட்டின் மன்னனைவிடக் கற்றறிந்தவனே சிறந்தவனாகக்
கருதப்படுகின்றான். ஏனெனில், அம்மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே
சிறப்புக் கிட்டும். ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம்
சிறப்புப் பெறுவர்.

கண்ணும் கருத்தும் - முழுக் கவனத்துடன்

விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற உழைப்பு

14

பொது அறிவு

உங்களுக்குத் தெரியுமா?
பூனையின் பார்வை மனிதர்களை விட 8 மடங்கு கூர்மையானது

காடுகளை அழிப்பதைத் தடை செய்த முதல் நாடு நோர்வே ஆகும்
நெருப்புக்கு நிழல் இல்லை. ஏனெனில், நெருப்பு ஒளியின் மூலமாகும்

அனைத்துப் பாம்புகளின் பற்களும் எப்போதும் பின்னோக்கியே
வளைந்திருக்கும்

தென் அமெரிக்காவில் உள்ள கோல்டன் பாய்சன் டார்ட் தவளை
உலகில் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட முதுகெலும்பி ஆகும்

30 - 50 நிமிடங்கள் மாணவர்களின் செயல்திறன் இடைவேளை இடைவேளை
தொடர்ந்து படித்தப்
நேரம்
பிறகு, 10 நிமிடம் 50 நிமிடம்
இடைவேளை
15
எடுத்துக்கொள்வது
முக்கியம்.ஏனெனில்,

அந்த இடைவேளை
படித்ததைத் திரும்பக்
கொண்டுவர சிறந்த

வழியாகும்

மாணவர் கைவண்ணம் பெயர் : படிவம் :

என்
வாழ்க்கையை
விதைத்தவர்....

அப்பா

வர்ணம் தீட்டும் போட்டி

மாணவச் செல்வங்களே, உங்கள் திறமையை வெளிபடுத்த இவ்வரிய
வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்ப்பாரா பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள் !!!




மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு அழகுபட வர்ணம் தீட்டி உங்களின்
பெயரையும் படிவத்தையும் பூர்த்தி செய்து வரும் ஜூன் 24ஆம் திகதிக்குள்

தமிழ்ச்சிட்டு செயலவை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கவும்.

16

கவிதைச் சோலை

கக கல்லால் முள்ளை எடுக்க
லல்் முடியாது,
வவிி
முள்ளால் கல்லை எடுக்க
முடியாது !

செல்வத்தால் கல்வியை வெல்ல
முடியாது,

கல்வியால் செல்வத்தை வெல்ல
முடியும் !

ஆக்கம் :
அழகேஸ் த/பெ அசோக்குமார்,
படிவம் 2A1

செம்மொழி

தமிழின் இனிமை, ஆக்கம் :
தனிமை தராது... சர்வின் த/பெ சசிக்குமார்,

தமிழின் பெருமை, படிவம் 2A1
தற்பெருமை அடையாது...

தமிழின் புலமை,
புகழ்ச்சியில் மயங்காது...

தமிழின் புதுமை,
பழமை அடையாது...

தமிழின் தனித்துவம்,
என்றும் மறையாது.

17

பத்துத்திங்கள் சுமந்து பெற்றெடுத்த தாயைப் போல,
தமிழ்மொழிக்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையை மதிக்க
வேண்டும், அரண்மனையைக் காக்கும் காவலர்களைப் போல,
இவ்வுலகம் அழிந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியைக்
காக்க வேண்டும்.

ஆக்கம் :
பவிஷ்னா த/பெ முருகன்,
படிவம் 2A1

கல்வி

பெருமைக்காகத் தேடிப் பெறுவது கல்வி அல்ல !
பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்வதே கல்வி ....

ஆக்கம் :
அழகேஸ் த/பெ அசோக்குமார்
படிவம் 2A1

என் அன்பு தாயே

பத்து மாதம் சுமந்தாய்!
வலிதாங்கி ஈன்றாய்!
அன்பைப் பாலாக்கி ஊட்டினாய்!
ஒழுக்கத்தைச் சோறாக்கிக் கொடுத்தாய்!

பணத்தை நீர்போல எனக்காகச் செலவழித்தாய்!

இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தாய்!

கல்வி எனும் கண்ணைத் தர முயன்றாய்!

வானின் உச்சிக்குக் கொண்டு சேர்க்க நினைத்தாய்!

இரவும் பகலும் கண்ணாய் காத்தாய்!

என்றும் இமை போல் உன்னைக் காப்பேன்! ஆக்கம் :
என் அன்பு தாயே ! திவியா த/பெ குமார்,

படிவம் 3A2 18

அம்மா

அம்மாவுக்கு என்று தனியாகக் கவிதை
வேண்டாம்…. அன்பாகப் பழகிப் பார்
அம்மாவே கவிதை தான்.

ஆக்கம் :
மொகேந்தநாயுடு த/பெ லோகநாயுடு,

படிவம் 3A2

கடல் தமிழே வா!

உப்பு விளையும் கடல். தளர்வில்லா தமிழே வா!
கப்பல் உலவும் கடல். தணியாத இன்பம் தா!
கண்ணில் நிறையும் கடல். நாவினிலே தேன்சுவை தா!
உலகில் பெரிய கடல். நலந்தரனர் தமிழே வா!
அலைகள் எழும்பும் கடல். மலர்போல மணமே தா!
ஆர்ப்பரித்து நிற்கும் கடல். மனதுக்குள் மகிழ்வைத் தா!
வலைகளிலே மீன் கிடைக்கும். கண்ணுக்குள் எளிமை தா!
வற்றாத தங்கக் கடல். காலத்தில் புகழைத் தா!
பறந்து விரிந்த கடல். மண்மேலே மழையாய் வா!
படகு மிதக்கும் கடல். மறந்தமிழே மகிழ்ந்தே வா!
நிறைந்து நிலைத்த கடல். புன்னகையில் தவழ்ந்தே வா!
நீல நிற ஆழ்கடல். புலமைக்கு வளமை தா!
சங்கு விளையும் கடல். என் நினைவில் கவிதை தா!
சந்தம் வாழும் கடல். எப்போதும் நீயே வா!
பொங்கி எழும் கடல்.
புதிய புதிய கடலே. தொகுப்பு :
ரினிஷா த/பெ முத்துகுமார்,
தொகுப்பு : படிவம் 2A3
ரனிஷா த/பெ குமரையா,
படிவம் 2A1

19

வாசித்து மகிழ்க

அரிசியில் ஒரு கல்

ஒரு பெண்மணி தாம், அரிசி வாங்கிய கடை உரிமையாளர் திருமதி
வாணியிடம் சென்றார். "இந்தக் கல்லைப் பாருங்கள்! இது உங்கள்
கடையில் வாங்கிய அரிசியில் இருந்தது இவ்வளவு பெரிய கல்லை ஒரு
மாட்டின் மேல் எறிந்தால், மாட்டுக்குக் கண்டிப்பாக காயப்படும்!" என்றார்.
மேலும், அவர் "இந்தக் கல்லைக் கடித்ததால், எனக்கு ஒரு பல்
உடைந்துவிட்டது", என்றார். "ஆமாம் உண்மை தான் ",
என்று திருமதி வாணி கூறினார். "அம்மா! இது பெரிய
கல்தான். அப்படியிருக்க எப்படி உங்கள் கண்ணில்
படவில்லை! அரிசியைக் கிளரும்போது இந்தக் கல்லை
எடுத்திருக்கலாமே! இதைப் போய் ஏன் கடித்தீர்கள் ?",
என்று கேட்டார் . அப்பெண்மணி வாயடைத்து நின்றார்.

தொகுப்பு :
அழகேஸ் த/பெ அசோக்குமார்
படிவம் 2A1

தமிழின் சிறப்பு

சீன மொழியில் அம்மொழியைப் பேசுபவர்கள் மட்டுமே கடவுள்கள்
என்றும் மற்றவர்கள் பேய்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும்,
கிரீக்க மொழியைப் பேசுபவர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள் என்றும்,
மற்றவர்கள் வேற்றுகிரக வாசிகள் என்றும் கருதினர். ஆனால், உலக
செம்மொழிகளில் தமிழ் மட்டுமே "யாதும் ஊரே யாவரும் கேளீர்"
என்று இன, மத வேறுபாடின்றி அனைவரையும் திறந்த கரங்களோடு
அனைத்துக் கொண்டது. இதுவே நமது தமிழ்மொழியின் மிகப்
பெரியச் சிறப்பாகும்.

தொகுப்பு :
ஜெயஅழகன் த/பெ கலைவாணன்,
படிவம் 2A1

யாதும் ஊரே
யாவரும் கேளீர்

20

வாசிப்பு நமது சுவாசிப்பு ஒவியம்

நாம் நமது சிந்தனைகளைச் சொற்களாக
வெளிப்படுத்துகிறோம். பிறரோடு பேசுவதன் மூலம்
அதனைச் செய்கின்றோம். பாடலாகப் பாடுகின்றோம்.
கதையாகச் சொல்லுகின்றோம். கட்டுரையாக
எழுதுகின்றோம். அதுபோலவே கோடுகளாலும்
வண்ணங்களாலுமான ஓவியங்களும் நமது
எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகின்றன.

ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளில் அவர்கள்
வரைந்த ஓவியங்கள்அவர்களது வாழ்க்கை முறையை
நாம் அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. எகிப்து
நாட்டிலே பிரமிடுகளின் சுவர்களில் காணப்படும்
ஓவியங்களைக் கொண்டு அந்தக் காலத்தில் எவ்வாறு திராட்சையைப்
பிழிந்து பழரசம் செய்து பருகினர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்திலும் குகை ஓவியங்கள் பண்டைத் தமிழரின் வாழ்க்கை பற்றி
நமக்கு எடுத்துச் சொல்வதாக அறியப்படுகின்றன.

பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் ஒருவரை அமர்த்தி நமக்கு ஓவிய வகுப்பு
நடத்துகிறார்கள். வார்த்தைகளின்றி எண்ணங்களை
வெளிப்படுத்தும் அற்புதம்தான் ஓவியம். கண்டுகளிக்கின்ற காட்சிகளை
மற்றும் கனவான கற்பனைகளை ஓவியங்களாகத் தீட்டுவோம்.வாழ்க்கைக்கு
வண்ணம் கூட்டுவோம்.

தொகுப்பு :
ரோஜினி த/பெ நவேந்திரன்,
படிவம் 3A4

21

புதிர்

மூளைக்குக் கொஞ்சம்
வேலை!

6.ii

2
3
1

7

6.iii

6.i 6.v
6.iv 4

5

இடமிருந்து வலம்
3. கோவலன் கண்ணகியை யாரிடம் அடைக்கலமாக விட்டுச் சென்றார்?
4. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
5. சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கால் சிலம்பில் உள்ளவை யாவை?
6. ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை? (6.i, 6.iii)
7. வள்ளலாரின் இயற்பெயர் என்ன?

மேலிருந்து கீழ்
1.திருக்குறளில் இடம்பெறாத சொல்
2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
6. ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை? (6.ii, 6.iv, 6.v)

22

வாசிப்பு நமது சுவாசிப்பு

என் மொழி என் அடையாளம்

உலகில் முதன் முதலாகத் தமிழ் மக்கள் தோன்றிய நாடு
தமிழ்நாடாகும். மனிதனிடம் மனிதம் நிறைந்திடச் செய்வதில்
தாய்மொழியின் பங்கு அளப்பரியது.

என் மொழி தமிழ்மொழியாகும். தமிழே என் தாய்மொழி ஆகும்.
தமிழ் இனத்தில் பல கவிஞர்களும் கவிவேந்தர்களும் உள்ளனர்.
கவிஞர் கண்ணதாசன, கவிஞர் பாரதிதாசன், கவிஞர் பாரதியார்,
கவிபேரரசு வைரமுத்து போன்றவர்கள் தமிழ் மொழியைப் போற்றி
தமிழுக்காக உயிர்தியாகம் செய்தவர்கள்.

மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம் ஆகும். அதை
யாராலும் மாற்ற இயலாது. தமிழ் என்றால் இனிமை;
இவ்வினிமையான மொழியைக் கற்க வாய்ப்பளித்த
இறைவனுக்குக் கோடான கோடி நன்றி. தமிழர்கள் மட்டும் கற்கும்
மொழியானது தமிழ் மொழி அல்ல. அனைத்து இனத்தவர்களும்
கற்கலாம். இதற்கு அரசாங்கம் எவ்வித கட்டளையும்
விதிக்கவில்லை. இன்று ஜப்பானிலும், சீனாவிலும் பல கோடி
மக்கள் தமிழினைக் கற்கின்றனர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)

என்பதற்கேற்ப எழுத்துகள் அனைத்தும் 'அ' என்ற எழுத்தில்
தொடங்குகின்றன.அதுபோல், தமிழ்மொழி அனைத்துக்கும்
முதன்மையாகத் திகழ்கிறது.தமிழின் சிறப்பை இன்று முழுவதும்
பேசிக் கொண்டே போகலாம். போர்களுக்கிடையே மதம் மாற்றம்
எனும் மத வெறி போர் நடைபெற்றது. இதற்கிடையே பல மக்கள்
உயிருக்குப் பயந்து மதம் மாறி சென்றனர். என்னதான் மதம்
மாறினாலும் அவனின் அஸ்திவாரம் தமிழே. எத்தனை
போராட்டங்களை எதிர்கொண்டாலும் தமிழன் இன்றும் அவனின்
தனித்துவத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றான்.

23

இன்று உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் அவர்கள்
வாழும் நாடுகளின் சுதேச மொழிகளில் தலைமுறையினரைப்
பரிச்சயப்படுத்தி வருகிறார்கள். எனினும், தமிழ்மொழியாம்
தாய்மொழியையும் பண்பாட்டையும் மறவாமல் தொடர்ந்து போற்றிப் பேணிக்
காப்பவர்களும் எண்ணிலடங்காமல் உள்ளனர். இவ்வாறு உலகின்
வித்தியாசமான மொழிகளின் ஆளுமைகளும் வளரும் தலைமுறைக்கான
தொடர்பு இதுவாகும். இருப்பினும், கன்னித்தமிழானது தன் தனித்துவத்தை
இழக்காமல் இன்றும் நிலைத்திருக்கிறது என்பது வெள்ளிடைமலை .

எனவே, நமது மொழியான தாய் மொழியைப் போற்றுவோம்;
பாதுகாப்போம். நம் மொழியை நாம் வலுப்படுத்த வேண்டும். நம்மை இந்தத்
தமிழ் இனத்தில் பிறக்க வைத்து, தமிழ் மொழியை அடையாளமாக அளித்த
இறைவனுக்கு நன்றி கூறுவோமாக.

ஆக்கம் :
திவ்யதர்ஷினி த/பெ தங்கராஜன்,
2A1

தமிழ்

அவமானம் அல்ல

அடையாளம்

மூளைக்குக் கொஞ்சம் வேலை 6. i) உதயண குமார காவியம்
1. தமிழ் ii) நாககுமார காவியம்
2. கனக சுப்புரத்தினம் iii) யசோதர காவியம்
3. கவுந்தி அடிகள் iv) சூளாமணி
4. திருமூலர் v) நீலகேசி
5. மாணிக்கம்
7. ராமலிங்க சுவாமிகள்

24

விடுகதை

விடுகதைகள்



1. ஆயிரம் பேர் கட்டிய மண்டபம், சின்னக் கல்
பட்டுச் சிதறியது.அது என்ன ?



2. பகலில் வரும் அண்ணனுக்குப் பக்கதுணை
யாருமில்லை. இரவில் வரும் தம்பிக்கோ
ஆயிரம் தோழிகள். அவர்கள் யார் ?



3.எத்தனை முறை திறந்து மூடினாலும் சின்னச்
சத்தம் கூடத் தராத கதவுகள்.அது என்ன ?



4. பாட்டுப்பாடி வந்தவன் பணம் வாங்கமலேயே
ஊசி போட்டுத் திரும்பினான்.அவன் யார் ?



5. பாலைவனத்தில் ஒரு படகு தண்ணீர் சுமந்து
ஓடுது. அது என்ன ?



6. எண்ணெய் தேவையில்லை. ஆனால்,
எரிவான். அவன் யார் ?



விடுகதை விடைகள்
மாறியுள்ளன :

ஒட்டகம், தேன்கூடு, கண்ணிமை, சூரியன், சந்திரன்,
மெழுகுவர்த்தி, கொசு

25

சாதனையாளர்கள்

நமது பள்ளியின்
சாதனைச்சிட்டுகள்

மாவட்ட நிலையிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி
அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன்
முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக

அமையும்

26

27

புவனேஸ்வரி த/பெ ஜீவித்தா லாநிஷா
கருணாகரன் த/பெ சிவகுமார்

10 A 9A

தெய்வமணி தேசிகா த/பெ
த/பெ சந்திரன் தேவிந்திரன்

7A 7A

28

மாணவர் படைப்புகள்

மாணவர் கைவண்ணம்

ரோஷ்னி த/பெ செல்வராஜ்,
படிவம் 3A1

நெகின் குமார் த/பெ கலையரசன்
படிவம் 2A4

ஜெயஅழகன் த/பெ கலைவாணன்,
படிவம் 2A1

ரனிஷா த/பெ குமரையா,
படிவம் 2A1

நிவனேஸ் த/பெ சிவக்குமார்,
படிவம் 2A1

29

பிரயா,
படிவம் 4K1
த. ருத்ராக் ஷி,
படிவம் 2A2
லீலாவதி த/பெ தாயளன்,

30

நகைச்சுவை துணுக்கு வாய்விட்டு
சிரித்தால்
ஒரு மன்னர் போருக்கு போகும் போது அழிப்பனை நோய்விட்டு
(eraser) எடுத்துக்கொண்டு சென்றாராம்.
ஏன்? போகும்
ஏனென்றால், எதிர் நாட்டு மன்னரை அழிக்கவாம்.

நமது கூட்டிக்கொண்டு
மருத்துவமனக்கு வாருங்கள்,
ஒரு நல்ல தூக்கிக்கொண்டு
சுலோகத்தைக் போங்கள், பணம்
கூறு? எங்களுக்கு,
பிணம்
உங்களுக்கு !

டாக்டர் : அருவை சிகிச்சை முடிந்த பிறகு
நீங்கள் வீட்டிற்கு நடந்தே
செல்லலாம்.

நோயாளி : பேருந்தில் செல்லக் கூட
பணம் இருக்காதா, டாக்டர்?

பேருந்து நிலையத்தில் மனைவி :
அங்கே பாருங்கள்... அந்தப் பிள்ளைக்குத் திடீரென்று
வலதுகை மார்பின் அருகே இழுத்துக்கொண்டது; வாய்
கோணிக்கொண்டது; இடது கை நீண்டுக்கொண்டே
போகிறது... வலிப்பு....

கணவன் : பேசாமல் இரு... அந்த பிள்ளை 'செல்ஃபி" (selfie)
எடுக்கிறது.

31

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
நிலைபெற நீ வாழியவே !
நிலைபெற நீ வாழியவே !



எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்

இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்

சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!



குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!


Click to View FlipBook Version