தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
பகாவ் தோட்டம்
அறிவியல் ஆண்டு 5
விண் மீன்
குழுமம்
தயாரித்தவர் ஆசிரியர்
திரு.சுமன்ராஜ் மனோகரன்
விண்மீன் குழுமம்
விண்வெளியில் கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள் உள்ளன.
இவை பூமியிலிருந்து வெகு
தொலைவில் உள்ளன.
இந்த விண்மீன்கள் சூரியனைப்
போல் சுயமாக ஒளி வீசக்கூடியவை.
விண்மீன் குழுமம் என்பது நட்சத்திரக்
கூட்டம் காட்டும் ஒரு குறிப்பிட்ட வடிவம்
ஆகும்.
விண்மீன் குழுமம்
இரவில் நாம் விண்மீன் குழுமங்களைக்
காண்கிறோம்.
அவற்றுள் பிரகாசமான விண்மீன்
குழுமங்களில் வேடன், தேள், படகு,
தென் சிலுவை போன்றவற்றைக்
குறிப்பிடலாம்.
எல்லா விண்மீன் குழுமங்களையும்
எல்லாக் காலங்களிலும் காண
இயலாது.
வேடன்
படகு
தேள்
தென் சிலுவை
வேடன்
கையில் கேடயம், கத்தி வைத்திருக்கும்
வேடனைப் போல் காட்சியளிக்கும்.
வேடன் இடைவார் அணிந்திருப்பது
போல் தெரியும்.
விண்வெளியில் வடக்குத் திசையில்
காணலாம்.
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை
காண முடியும்.
வேடனின் தலைப்பகுதியில் உள்ள மிகப்
பிரகாசமான நட்சத்திரம் வட திசையைக்
குறிக்கிறது.
படகு
ஏழு நட்சத்திரங்களைக் கொண்டதாகும்.
படகு போல் காட்சியளிக்கும்.
விண்வெளியில் வடக்கு திசையில்
காண முடியும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை
காணலாம்.
படகு விண்மீன் குழுமம் பெருங்கலப்பை
விண்மீன் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
படகின் முனைப்பகுதியில் உள்ள
பிரகாசமான நட்சத்திரம் வடக்கு
திசையைக் குறிக்கிறது.
தேள்
இந்த விண்மீன் குழுமம் தேளைப் போல்
காட்சியளிக்கும்.
விண்வெளியின் தென் திசையில்
இதனைக் காணலாம்.
ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை
காணலாம்.
தென் சிலுவை
சிறிய அளவிலான விண்மீன் குழுமம்
ஆகும்.
இரவு வேளையில் விண்வெளியில்
சுலபமாகக் காணலாம்.
நான்கு நட்சத்திரங்களைக் கொண்டு
பட்டம் போல் தெரியும்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை
காணலாம்.
சிலுவையின் கீழ்ப்பகுதியில் இருக்கும்
பிரகாசமான நட்சத்திரம் தென்
திசையைக் குறிக்கும்.